சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany to send troops into northern Iraq

ஜேர்மனி வடக்கு ஈராக்கிற்குள் துருப்புகளை அனுப்ப உள்ளது

By Johannes Stern
31 January 2015

Use this version to printSend feedback

வியாழனன்று, ஜேர்மனியின் நாடாளுமன்றம் (Bundestag) வடக்கு ஈராக்கிற்குள் ஆயுதமேந்திய துருப்புகளை அனுப்ப ஒப்புதல் அளித்தது. பெப்ரவரியில் ஜேர்மன் இராணுவப் படை (Bundeswehr) துருப்புகள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு, இஸ்லாமிக் அரசுக்கு (IS) எதிராக போராட குர்திஷ் பெஷ்மெர்காவிற்குப் பயிற்சியளிக்குமென கருதப்படுகிறது. ஒரு பெரும் பெரும்பான்மையுடன் துருப்புகளை அனுப்பும் உத்தரவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது; 590 நாடாளுமன்ற பிரதிநிதிகளில் 457 பேர் துருப்புகளை அனுப்புவதற்கு ஆதரவாக வாக்களித்தனர், 79 பேர் "வேண்டாமென்று" வாக்களித்தனர், மற்றும் 54 பேர் வாக்களிப்பைப் புறக்கணித்தனர்.

சமூக ஜனநாயக கட்சி (SPD) நாடாளுமன்ற குழுவிற்கான வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் ரோல்ஃப் முட்ஷ்னிச், ISக்கு எதிரான போராட்டத்தை ஓர் "இராணுவ சவால்" என்று குறிப்பிட்டு, அரசாங்கத்தின் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தினார். இந்த போராட்டம் இராணுவரீதியில் நடத்தப்பட வேண்டுமென்பதை கோபைனின் விடுதலை [எடுத்துக்காட்டுகிறது] என்றார். ISISக்கு எதிராக சண்டையிடுவது "வெறுமனே ஓர் இராணுவ அணுகுமுறை என்பதையும் விட, மாறாக இராணுவ அணுகுமுறை இல்லாமல் அங்கே அரசியல் தீர்வுகளுக்கு எந்த அடித்தளமும் இல்லை" என்பதை உள்ளடக்கி இருப்பதாக முட்ஷ்னிச் தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் (CDU, கிறிஸ்துவ ஜனநாயக சங்கம்) ஆகியோர் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் வெளியுறவு கொள்கை மீதிருந்த கட்டுப்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக அறிவித்து ஓராண்டுக்குப் பின்னர், ஜேர்மன் இராணுவ கொள்கை முன்பினும் கூடுதலாக இராணுவமயமாகி உள்ளது.

ஆபிரிக்காவில் ஜேர்மன் ஈடுபாடுகள் விஸ்தரிக்கப்படுமென்றும், போக்கோ ஹரம் பயங்கரவாத போராளிகள் குழுவிற்கு எதிரான ஒரு பிராந்திய தலையீட்டு படைக்கு ஆதரவு வழங்கப்படுமென்றும், கடந்த வாரம் அங்கேலா மேர்க்கெல் (CDU) அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வொன் டெர் லெயன், குர்திஷ்களுக்கு புதிய இராணுவ தளவாடங்களை வினியோகிப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை எழுப்பினார். நேற்றும் கூட ஜேர்மன் நாடாளுமன்றம், துருக்கிக்கு ஜேர்மன் நாட்டு ஏவுகணை குண்டுகளது வினியோகத்தை நீடிப்பதென்று முடிவெடுத்தது.        

ஈராக்கில் நடவடிக்கை என்பது, ஜேர்மன் இராணுவவாத மீள்வருகையில் ஒரு புதிய கட்டத்தை முன்னறிவிக்கிறது. இரண்டு உலகப் போர்கள் மற்றும் நாஜி ஜேர்மனியின் தோல்வி ஆகியவற்றில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் நடத்திய அதிபயங்கர குற்றங்களுக்குப் பின்னர், பேர்லின் முதல்முறையாக ஒரு சர்வதேச தீர்மானம் இல்லாமல் ஒரு போர் பகுதிக்குள் அதன் துருப்புகளை அனுப்புகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் ஜேர்மன் அரசியலமைப்பின் கீழ் வராது என்பதுடன், உலகளாவிய அளவில் நெருக்கடி பகுதிகளுக்குள் ஜேர்மன் இராணுவப் படைகளை அனுப்புவதற்கு இவையொரு முன்னுதாரணத்தை அமைக்கின்றன. துல்லியமாக கூறுவதானால், தேசிய பாதுகாப்பு விடயங்களில் மட்டுமே ஆயுதமேந்திய படைகளைப் பிரயோகிக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. 1990இல் ஜேர்மன் மறு-ஐக்கியத்திற்குப் பின்னர், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அச்சட்டத்திற்கு மறுவிளக்கம் அளித்து, அன்னியநாட்டு நடவடிக்கைகள் "பரஸ்பர கூட்டு பாதுகாப்பின்" பாகமாக இருந்தால், அவை அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகுமென பிரகடனம் செய்தது. அதன் விளைவாக, ஐநா மற்றும் நேட்டோவினால் ஒப்புக்கொள்ளப்பட்ட தலையீடுகள் சட்டத்திற்குட்பட்டு இருந்தன.

ஈராக்கிற்குத் துருப்புகளை அனுப்புவதென்பது மற்றொரு பெரும் சட்ட பாய்ச்சலாகும். அது ஐக்கிய நாடுகள் சபையின் அல்லது நோட்டோவின் தீர்மானத்திற்கு உட்பட்டதல்ல. உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள பிரிவுகளில் ஒன்றுக்கு ஆயுதமளிக்கஇந்த விடயத்தில் குர்திஷ் பெஷ்மெர்காவிற்குமற்றும் அவர்களுக்கு பயிற்சியளிக்க மற்றும், சாத்தியமானால், போர் நடவடிக்கைகளில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஜேர்மனி ஒரு போர் பகுதிக்குள் ஒருதலைபட்சமாக நடைமுறையில் தலையிட்டு வருகிறது.

சமீபத்தில் தான், IS போராளிகளால் சிறுபீரங்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகளை கொண்டு கனேடிய சிப்பாய்கள் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களும் உத்தியோகபூர்வமாக அங்கே "பயிற்சியாளர்களாக" தான் அனுப்பப்பட்டு இருந்தனர், ஆனால் யதார்த்தத்தில் உடனடியாக அவர்கள் IS உடன் சண்டையிடுவதில் ஈடுபடுத்தப்பட்டனர். கனேடிய சிறப்பு நடவடிக்கை படைகளின் தளபதி மைக் ரௌலீ ஒப்புக்கொண்டதைப் போல, அந்த "பயிற்சியாளர்கள்" வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் ISக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான வான்வழி போருக்கு இலக்குகளை வரையறுத்து அளித்தனர்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள பசுமை கட்சியின் வெளியுறவு கொள்கை செய்திதொடர்பாளர் ஒமிட் நௌரிபோர் அவரது உரையில், அவ்விதமாக அனுப்புவதென்பது, யதார்த்தத்தில், சண்டையிடுவதற்கான ஒரு திட்டமே ஆகும் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். அவர் தெரிவித்தார், அது விசித்திரமாக உள்ளது. நாங்கள் கட்டளைக்குட்பட்ட சிப்பாய்களை அனுப்பி வருகிறோம். அவர்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டி இருக்கலாம்; அவ்வாறில்லை என்றால் அவர்களுக்கு நாங்கள் கட்டளையிட்டு அனுப்ப மாட்டோமே.   

1999 கொசோவோ போரை ஆதரித்ததிலிருந்தே அன்னிய நாடுகளில் ஜேர்மன் இராணுவ படைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரித்துள்ள பசுமைக் கட்சியின் முன்னாள் சமரசவாதிகள், பெருமளவிற்கு அந்த வாக்களிப்பைப் புறக்கணித்தனர். ஆனால் கோட்பாட்டுரீதியில் அவர்கள் அந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர் என்பதற்கு அவர்கள் அங்கே எந்த சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை. நாம் பயிற்சி அளிப்பதற்காக தான் அங்கே செல்கிறோம், நௌரிபோர் தெரிவித்தார். ஒரு நடவடிக்கையில் “ஈடுபடுவதற்குரிய விதிமுறைகள் இல்லாமல்" சிப்பாய்களை அங்கே அனுப்புவது "பொறுப்பற்ற தன்மையாகும்" என்பது மட்டுமே அவரது ஆட்சேபனையாக உள்ளது.

குர்திஷ் பெஷ்மெர்காவை ஆதரிப்பதன் மூலமாக, ஜேர்மன் ஏகாதிபத்தியம் பண்டைய காலனித்துவ அரசியல் வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது. முதலாம் உலக போரின் போதே கூட, பேர்லின் வெளியுறவு அமைச்சகத்தில் "மாற்றீட்டு போர் நடவடிக்கைக்கான" திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அதேநேரத்தில் ஜேர்மன் ஆளும் வர்க்கம், மத்திய கிழக்கில் அதன் புவிசார்-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர, ஒரு "இஸ்லாமிய கிளர்ச்சியைத்" தூண்டிவிட்டு அதன் எதிராளிகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் நோக்கில், ஒட்டோமன் பேரரசு மற்றும் அரபிய கிராமப்புற நாடோடி இனத்தவருடன் நெருக்கமாக வேலை செய்து வந்தது.

மிக முக்கியமாக அப்போதைய ஜேர்மன் பத்திரிகைகள், கோபைன் என்ற பெயரில் உள்ள நகரம் குர்திஷ்களுடையது அல்ல, மாறாக ஜேர்மன் தோற்றுவாயைக் கொண்டது என்பதுடன், அது ஜேர்மன்-துர்கிஷ் கூட்டுறவின் அடிப்படையில் இருந்தது. 1912இல் பாக்தாத் இரயில்வே கட்டமைக்கப்பட்ட போது, ஒரு சிறிய இரயில் நிலையம் கட்டப்பட்டது, அதற்குப் பொறுப்பான ஜேர்மனி "கம்பெனியைக்" குறிக்கும் வகையில், குர்திஷ்யர்கள் அதை கோபைன் என்று அழைத்தனர். காலப்போக்கில், அது குர்திஷ் "கோபைனி" என்றானது, என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்தன.

கோபைனில் ஜேர்மன் என்பது என்ன? என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்றில் Süddeutsche Zeitung எழுதியது: அங்கே ஏகாதிபத்திய ஜேர்மன் இரயில்பாதை ஆட்சிப்பரப்பும், படைப்பிரிவுகளைத் தலைமை கொடுத்து இட்டுச் செல்ல வந்த மோதல் கொண்ட தலைமைகளும் இருந்தன; அந்த இரயில் பாதை கட்டமைப்பு பேர்லினையும் பாக்தாத்தையும் இணைக்கும் அவர்களின் ஏகாதிபத்திய கனவை நிறைவேற்றி இருந்தால், அந்த திட்டமிட்ட பாதை அலெப்போ மற்றும் மாசூல் வழியாக சென்றிருக்கும். அது தொடர்ந்து எழுதுகிறது, முன்னாள் பாக்தாத் இரயில் தடத்தின் அப்பாதை இன்று சிரியா மற்றும் துருக்கிக்கு இடையே உள்ளது. முதலாம் உலக போர் வெற்றியாளர்கள், பிரிட்டனும் மற்றும் பிரான்ஸூம், ஒட்டாமன் பேரரசைப் பிரித்துக் கொண்டபோது அவை இதைத்தான் விரும்பின.

ஈராக்கில் பேர்லினின் தலையீடு ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வரலாற்று நலன்களைச் சார்ந்ததாகும். ஏகாதிபத்திய சக்திகள், ஒரு நூற்றாண்டுக்கு முன்னரை போலவே, ஒன்றோடொன்று இராணுவ சண்டையில் (இதுவரையில்) ஈடுபடவில்லை என்றபோதினும், அவற்றிற்கு இடையிலான பதட்டங்கள் ISக்கு எதிரான கூட்டு சண்டையின் மேற்பாகத்தின் அடியில் நிலவி வருகிறது. நாம் ஒரு ஐரோப்பிய கட்டமைப்பை முயற்சிக்க வேண்டுமென சில பரிந்துரைகள் கூறுகின்றன. அது தேவையாக இருக்கலாம். ஆனால் நேற்று வெளியுறவு விவகார குழு கூட்டத்தில், வெளியுறவு மந்திரி ஐரோப்பிய பங்காளிகளுக்குள் அந்த நிகழ்ச்சிப்போக்கு எத்துணை சிக்கலானது என்பதை குறிப்பிட்டு காட்டினார்நாம் அதை தெளிவாக வெளிப்படுத்திக் கூற வேண்டும். அதைக் குறிப்பிடுவது நேர்மையாக இருப்பதன் பாகமாகும்; ஏனென்றால் வெவ்வேறு அரசாங்கங்கள் வெவ்வேறு குறிக்கோள்களைப் பின்தொடர்கின்றன, என்று கூறி முட்ஷ்னிச் ஜேர்மனியின் பிரத்யேக முயற்சியை நியாயப்படுத்த முயற்சித்தார்.

இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஒருமனதாக வாக்களித்த இடது கட்சி, ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்காக அப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. அது ஏகாதிபத்திய கொள்கையை ஒழுங்குமுறைப்படுத்தவும், மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் கதவுகளைத் திறந்துவிடவும் உதவுவதில் இரண்டிற்கும் ஓர் "ஆலோசகராக" செயல்படுகிறது.

அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பசுமை கட்சியின் பிரதிநிதிகளைப் போலவே, இடது கட்சியின் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் ஜேன் வான் ஏகெனும் ISISக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை பாராட்டினார். அனைத்திற்கும் முதலாக, இந்த வாரம் கோபைன் விடுவிக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் பாராட்டியாக வேண்டும், என்று குறிப்பிட்டு அவர் உரையை ஆரம்பித்த அவர், தொடர்ந்து கூறுகையில், ISISஇன் மனிதகுல வெறுப்பாளர்களுக்கு எதிராக, தங்களின் உயிரைப் பணயம் வைத்தும், அதில் சிலர் அவர்களது உயிரை இழந்தும், சமீபத்திய மாதங்களில் சண்டையிட்டுள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது நன்றியையும், ஆழ்ந்த மரியாதையையும் செலுத்துகிறேன், என்றார்.

ஆனால் இராணுவ நடவடிக்கை மீதான இடது கட்சியின் விமர்சனம் முற்றிலும் தந்திரோபாயமாகும். அப்பிராந்தியத்திற்கு வழக்கமாக விஜயம் செய்து வருகின்ற வான் ஏகென் கூறுகையில், பெஷ்மெர்காவிற்கு பேர்லினின் ஒருதலைபட்சமான ஆதரவானது, "நீண்டகால அடிப்படையில், [ISIS] பலவீனப்படுத்தாமல், பலப்படுத்தக் கூடும்", ஏனென்றால் அது "ஈராக் பிளவை முன்னோக்கி உந்துகிறது, என்றார். ஒருவர் ஆயுத வினியோகங்கள் மற்றும் இராணுவ படைகளின் தலையீட்டை ஆதரித்தாலும் கூட, வான் ஏகென் கூறினார், இந்த தலையீடு துல்லியமாக தவறான ஒன்றாகும்.. அது "தவறான குறிக்கோளுக்காக தவறானவர்களுக்கு" பயிற்சி அளிப்பதை உள்ளடக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குர்திஷ்களுக்கு ஆயுதங்கள் வினியோகிக்கவும் மற்றும் ISISக்கு எதிரான ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையைக் கோரவும் அழைப்புவிடுத்தவர்களில் இடது கட்சியின் பிரதிநிதிகளே முதலாவதாக இருந்தனர். IS உடன் இராணுவரீதியில் எவ்விதத்தில் சிறப்பாக சண்டையிடுவது என்பது குறித்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்தி, அவரது உரையில் வான் ஏகென் இந்த ஆக்ரோஷ போக்கை எடுத்திருந்தார். அவர் தெரிவிக்கையில், பேர்லின் இடது கட்சியின் யோசனைகளைப் பின்பற்றினால், ஜேர்மனி குர்திஷ்களை ஆயுதபாணி ஆக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக அப்பிராந்தியம் எங்கிலும் புதிய கைப்பாவை அரசாங்கங்களையும் நிறுவ முடியும் என்றார்.

ISISக்கு எதிராக இராணுவரீதியில் சண்டையிட விரும்பினால், பின் நீங்கள் குர்திஷ்கள், ஷியைட்கள் மற்றும் சுன்னிகளுக்கு இடையே செல்வ வளத்தை நியாயமாக பங்கிடும் ஒரு பரந்த, ஒரு நியாயமான அரசாங்கத்தை பாக்தாத்தில் நிறுவுவதன் மூலமாக மட்டுமே பெரும்பகையிலிருந்து வெளியேற முடியும். அது தான் அரசியல் குறிக்கோளாக இருக்க வேண்டும், என்று கூறியதுடன், தொடர்ந்து கூறுகையில், நீங்கள் ISISக்கு எதிராக திறமையாக இராணுவரீதியில் செயல்பட விரும்பினால், பின் நீங்கள் எல்லையை சுற்றி வளைத்து மூடிவிட்டு, துருக்கிக்கு அழுத்தம் அளியுங்கள், என்றார்.