சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Gorbachev warns Ukraine could ignite World War III

உக்ரேன் விவகாரம் மூன்றாம் உலகப் போரை தூண்டிவிடக்கூடுமென கோர்பச்சேவ் எச்சரிக்கிறார் 

By Niles Williamson
31 January 2015

Use this version to printSend feedback

சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதி மிக்கைல் கோர்பச்சேவ், ரஷ்யாவுடன் ஒரு புதிய பனிப்போரைத் தொடங்குவதற்காக வியாழனன்று அமெரிக்காவைக் குறை கூறியதுடன், அந்த மோதல் ஒரு அணுஆயுத மூன்றாம் உலகப் போரை தூண்டிவிடக்கூடுமென அச்சங்களை வெளிப்படுத்தினார்.

கியேவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவிலான அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் படைகளுக்கும் மற்றும் கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான சண்டை உக்ரேனில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கோர்பச்சேவ் அவரது கருத்துக்களை வெளியிட்டார்.

மூடிமறைக்காமல் கூறுவதானால், அமெரிக்கா அதன் வெற்றியாரவார சிந்தனையைப் பகிரங்கமாக நடைமுறைப்படுத்த முயன்று, அது ஏற்கனவே ஒரு புதிய பனிப்போருக்குள் எங்களை இழுத்துள்ளது, என்று அந்த முன்னாள் சோவியத் தலைவர் Interfaxக்கு தெரிவித்தார். அடுத்து என்ன? துரதிருஷ்டவசமாக, பனிப்போர் ஒரு "கடுமையான" போக்கைக் கொண்டு வராது என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது. [அமெரிக்கா] அந்த அபாயத்தை எடுக்கக்கூடுமென நான் அஞ்சுகிறேன், என்றார்.

ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளைக் கொண்டு தொடர்ந்து அழுத்தம் அளித்து வருவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் விமர்சித்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இப்போதெல்லாம் ரஷ்யாவுக்கு எதிரான தடையாணைகளைத் தான் நாம் கேள்வியுறுகிறோம், என்று தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், அவர்கள் முற்றிலுமாக மனக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்களா? அமெரிக்கா மொத்தத்தில் 'திசை தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறது', அது எங்களையும் அங்கே இழுத்து வந்து கொண்டிருக்கிறது, என்றார்

உக்ரேன் குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நடந்துவரும் மோதல் குறித்து இந்த மாத தொடக்கத்தில் கோர்பச்சேவ் ஜேர்மன் பத்திரிகை Der Spiegel க்கு ஒரு பேட்டியளித்தார். ஓர் அணுஆயுதப் போரைக் “கருத்தில் கொள்ளவும் கூட கூடாது" என்று அவர் குறிப்பிட்ட போதினும், ஐரோப்பாவில் ஒரு பிரதான போர் என்பது "தவிர்க்கவியலாமல் ஓர் அணுஆயுத போருக்கு இட்டுச்" செல்லும் என்று கோர்பச்சேவ் எச்சரித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இந்த எரியூட்டப்பட்ட சூழலில் ஒரு தரப்பு அதன் கட்டுப்பாட்டை இழந்தாலும் சரி, பின் நாம் வரவிருக்கும் ஆண்டுகளில் உயிர்பிழைக்க முடியாது, என்றார்.

இத்தகைய அபிவிருத்திகள், சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப் பிந்தைய வாஷிங்டனின் ஒரு "மாபெரும் சாம்ராஜ்ஜிய" கட்டமைப்பின் விளைபொருள்களென அதே பேட்டியில் கோர்பச்சேவ் புலம்பினார்.

"பெரெஸ்துரோய்கா" (மறுசீரமைப்பு) மற்றும் "கிளாஸ்நோஸ்ட்" (வெளிப்படைத்தன்மை) ஆகிய கொள்கைகளின் வடிவத்தில், 1980களின் இறுதியில் முதலாளித்துவ மீட்சி நிகழ்ச்சிப்போக்கை தொடங்கி வைத்தவரான கோர்பச்சேவ், உக்ரேனின் தற்போதைய நெருக்கடிக்கும் மற்றும் நேட்டோ விரிவாக்கத்திற்கும் பெரும் பொறுப்பைத் தாங்கியுள்ளார். அதேநேரத்தில் அவர், போரை நோக்கிய இரக்கமற்ற ஏகாதிபத்திய முனைவை உலகந்தழுவிய "மனித மதிப்புகளை" பின்தொடர்வதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டுமென வாதிட்டார்.

ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்திற்கு முடிவு கட்டி, முதலாளித்துவத்தை புனருத்தாரணம் செய்ததன் மூலமாக அதன் சொந்த நலன்களைக் காப்பாற்ற அது எடுத்த முடிவே, ரஷ்யாவின் மேற்கத்திய எல்லைக்கு நேட்டோவின் விஸ்தரிப்பை அனுமதித்தது.

உக்ரேன் மோதலில் சம்பந்தப்பட்ட அபாயங்கள் குறித்து கோர்பச்சேவ் மட்டுமே எச்சரிக்கை விடுக்கவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எண்ணிலடங்கா குற்றங்களோடு சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிசிஞ்சர், அமெரிக்க செனட்டின் இராணுவ சேவைகள் கமிட்டியின் முன் வியாழனன்று பேசுகையில், அது நம்மை எங்கே கொண்டு செல்லும், அதை தக்க வைக்க நாம் என்ன செய்யவிருக்கிறோம் என்று தெரியாமல் [உக்ரேனில்] இராணுவத்தை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிப்போக்கை குறித்து பதட்டமாக உணர்வதாக" அவரே அறிவித்தார்.  

91 வயது நிரம்பிய கிசிஞ்சர் தொடர்ந்து கூறினார், நாம் எந்தளவுக்கு செல்ல விரும்புகிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னேரே முன்னோக்கி அடிகள் எடுத்து வைப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென நான் கருதுகிறேன். அது மாஸ்கோவிலிருந்து 300 மைல் தொலைவில் உள்ள ஒரு பிரதேசமாகும், ஆகவே சிறப்பு பாதுகாப்பு தாக்கங்களைக் கொண்டுள்ளது, என்றார்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் கடந்த ஆண்டின் பாசிசவாத-தலைமையில் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து, டோன்பாஸில் நடந்துவரும் சண்டை வரையில், அத்துடன் ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய தடையாணை நடைமுறைகள் வரையில், உக்ரேனில் நடத்தப்பட்டு வரும் ஏகாதிபத்திய நடவடிக்கைகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அனைத்து நாடுகள் மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதுவதையும் மற்றும் இறுதியாக ரஷ்ய கூட்டமைப்பின் பரந்த இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு வழியைத் திறந்துவிடும் வகையில், அதை உடைத்து பல தொடர்ச்சியான அரை-காலனிகளாக ஆக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளது.

சில ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் பாகத்தில், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் தரப்பில், ரஷ்யாவுடன் இராஜாங்க உறவுகளைத் தொடங்குவதற்கு விருப்பம் இருப்பதற்கான அறிகுறிகள் சில வாரங்களாக இருந்த போதினும், கடந்த வாரயிறுதியில் உக்ரேனிய நகரமான மரியோபோலில் நடந்த ஒரு மரணகதியிலான ராக்கெட் தாக்குதல், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை மீண்டும் தடையாணை நடைமுறைக்குப் பின்னால் அணிதிரள செய்தது

வியாழனன்று ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகளின் ஒரு அவசர கூட்டம், இந்த ஆண்டின் செப்டம்பர் வரையில் 132 ரஷ்ய பிரஜைகள் மற்றும் 28 அமைப்புகளுக்கு எதிராக பயண தடைகளையும் மற்றும் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீடிக்க முடிவெடுத்தது. தற்போது நிலுவையில் உள்ள ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளைத் தீவிரப்படுத்துவதைக் குறித்து விவாதிக்க வெளியுறவு மந்திரிகள் பெப்ரவரி 12இல் மீண்டும் கூட உள்ளனர்.

அக்கூட்டத்திற்குப் பின்னர் பேசுகையில், ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் அச்சுறுத்தும் விதத்தில் குறிப்பிட்டார், மரியோபோல் அல்லது ஏனைய பிராந்தியங்களை நோக்கி அங்கே ஒரு தாக்குதல் இருக்குமென்றால், ஒருவர் தெளிவான மற்றும் கடுமையான முறைமைகளுடன் விடையிறுக்க வேண்டியதிருக்கும், என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்த அதேபோது, டொனெட்ஸ் ஒரு புதிய சுற்று பீரங்கி குண்டுவீச்சுக்கு உள்ளானது. நிவாரண உதவி பெறுவதற்காக ஒரு சமூகநல கூடத்தின் வெளியே காத்திருந்த பல நூறு மக்களின் ஒரு கூட்டத்தை சிறுபீரங்கி குண்டுகள் வந்து தாக்கியதில், குறைந்தபட்சம் ஐந்து அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

ஒரு பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு சிறுபீரங்கி குண்டு தாக்கியதில், மேலும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டது. வெள்ளியன்று மேற்கு டொனெட்ஸில் அந்நாள் முழுவதும் பொழிந்த குண்டுகளில், குறைந்தபட்சம் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

தற்போது குறைந்தபட்சம் 8,000 உக்ரேனிய படைகள் நிறுத்தப்பட்டுள்ள டெபால்ட்செவ் நகரத்திற்கு சற்றே மேற்கில் உள்ள Vuhlehirsk கிராமத்தைக் கட்டுபாட்டில் எடுத்து, டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் இடையிலான ஒரு முக்கிய இரயில்வே மையம் மீது ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து அவர்களது தாக்குதலை நடத்தினர். அந்நகரில் இருந்த 25,000 பொதுமக்கள் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றபோதினும், வெள்ளியன்று குறைந்தபட்சம் ஏழு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன

உக்ரேனிய தேசிய பாதுகாப்பு படையுடன் இணைக்கப்பட்டுள்ள உக்ரேனிய தேசியவாத டோன்பாஸ் இராணுவப்பிரிவு போராளிகள் குழுவின் ஸ்தாபகர் சிமென் சிமென்சென்கோ தெரிவிக்கையில், டெபால்ட்செவ்வில் உள்ள கியேவ் ஆதரவு படைகள் மீது ஏவுகணை குண்டுகள் (artillery shells), சிறுபீரங்கி குண்டுகள் (mortar) மற்றும் சரம்சரமாக பாயும் ராக்கெட்டுகள் (grad rockets) ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

வெள்ளியன்று மீண்டும் தொடங்கவிருந்த, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள், தொடங்கக்கூட முடியாமல் போனது. கியேவின் பிரதிநிதி முன்னாள் ஜனாதிபதி லியோனிட் குச்மா சந்திக்க முன்வர தவறிய பின்னர், ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளினது பிரதிநிதிகள் விளாடிஸ்லாவ் மற்றும் டெனிஸ் புஷ்ஷிலின், அவர்கள் மின்ஸ்கிலிருந்து மாஸ்கோவிற்குப் புறப்படுவதாக அறிவித்தனர்.

உக்ரேனிய அரசாங்கமும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் ஆதரவாளர்களும் போராளிகளுடன் ஒரு சமரசத்தை எட்ட சிறிதே ஆர்வம் காட்டியுள்ளன. கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசுகையில், அமெரிக்க தூதர் சமந்தா பௌவர் ரஷ்யாவின் சமீபத்திய சமாதான திட்டத்தை "ஆக்கிரமிப்பதற்கான ஒரு திட்டமாக" கூறி புறக்கணித்தார்.

வெள்ளியன்று அதன் பொருளாதாரத்திற்கு ஊக்கங்கொடுக்கவும் மற்றும் ஒரு பேரழிவுகரமான பின்னடைவைத் தவிர்க்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில், ரஷ்ய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதங்களில் இரண்டு சதவீத புள்ளிகளை வெட்டி, 15 சதவீதத்திற்கு குறைத்து, ஓர் ஆச்சரியமூட்டும் அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 17 சதவீதத்திற்கும் கூடுதலாக அதன் மதிப்பை இழந்துள்ள ரூபிளின் வீழ்ச்சியைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, அது இதே வட்டிவிகிதங்களை 6.5 சதவீத புள்ளிகள் அதிகரித்து, 17 சதவீதத்திற்கு உயர்த்திய இரண்டு மாதங்களுக்கு சற்று அதிகமான காலத்தில் இந்த முடிவு வந்தது.

பேங்க் ஆஃப் ரஷ்யாவின் இந்த திடீர் நகர்வானது, ரஷ்யாவிற்குள் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எண்ணெய் விலைகளின் வீழ்ச்சியுடன் இணைந்து, தடையாணை நடைமுறைகளும் பங்களிப்பு செய்து வருகின்றன என்பதற்கு ஓர் அறிகுறியாகும். ரஷ்யாவினது புள்ளிவிபர சேவைகளின் ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, அந்நாட்டின் பொருளாதாரம் 2014இல் வெறுமனே 0.6 சதவீதமே அதிகரித்தது. கச்சா எண்ணெய்யின் சராசரி விலை தொடர்ந்து சரிந்தே இருந்தால், ரஷ்ய பொருளாதாரம் 2015இல் 3 சதவீத அளவுக்கு சுருங்குமென சிட்டி குழுமம் அனுமானிக்கிறது.