சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Russian central bank cuts interest rate amid growing economic chaos

அதிகரித்துவரும் பொருளாதார குழப்பங்களுக்கு இடையே ரஷ்ய மத்திய வங்கி வட்டி விகிதங்களை வெட்டுகிறது

By Nick Beams
2 February 2015

Use this version to printSend feedback

ரஷ்யாவின் மத்திய வங்கியால் கடந்த வாரம் செய்யப்பட்ட ஆச்சரியமூட்டும் வட்டிவிகித குறைப்பு என்பது, உக்ரேன் மீது வாஷிங்டனின் கட்டளைகளைத் திணிப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை நிர்பந்திக்கும் நோக்கத்துடன், அந்நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் மூழ்கடிக்க, அமெரிக்காவினால் மீண்டும் மீண்டும் செய்யப்படும் குறுக்கீடுகளின் தயாரிப்புக்கும் மற்றும் மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார கண்ணோட்டங்களுக்கும் என இரண்டுக்குமான ஒரு விடையிறுப்பாக உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முடிவின் மீது கருத்துரைத்த வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் செயலர் ஜோஸ் ஏர்ன்ஸ்ட், அந்த 2 சதவீத வட்டிவிகித வெட்டு என்பது அமெரிக்க நடவடிக்கைகளின் விளைவாக ரஷ்ய பொருளாதாரத்தில் எழும்பியுள்ள குழப்பங்களை எடுத்துக்காட்டுவதாக கூறி குரூரமாக திருப்திப்பட்டு கொண்டார்.

கிழக்கு உக்ரேனுக்குள் ஜனாதிபதி புட்டினின் படையெடுப்பானது, அங்கே குறிப்பிட்ட மற்றும் தெளிவான பொருளாதார இழப்புகளை விலையாக கொடுப்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது, என்றார். இத்தகைய விலைகள் கொடுக்கப்படுகையில், அது ஜனாதிபதி புட்டினை அவரது மூலோபாயத்தை மறு-மதிப்பீடு செய்ய செய்யுமென நாங்கள் நம்புகிறோம், என்றார்.

புட்டின் அவ்வாறு செய்யவில்லையென்றால், அதிகரிக்கும் பொருளாதார பிரச்சினைகள் ஆட்சி-மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா மேற்கொண்டும் அழுத்தத்தை அதிகரிக்கும்.

மத்திய வங்கியின் இந்த ஆற்றொணா நகர்வு, 1991இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சி மூலமாக அரசு சொத்துக்களைக் களவாடியதிலிருந்து செல்வ வளமையைப் பெற்ற குற்றகரமான செல்வந்த மேற்தட்டுக்களின் ஒரு உருவாக்கமாக உள்ள புட்டின் அரசாங்கத்தின் திவால்நிலையை அடிக்கோடிடுகிறது.

புட்டின் ஆட்சி சர்வதேச மூலதனத்திலிருந்து சுதந்திரமாக இருக்கவில்லை. அது அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் பொருளாதார, இராஜாங்க மற்றும் இராணுவ தாக்குதலை எதிர்கொள்ள, ரஷ்ய பேரினவாதத்தைத் தூண்டிவிட முனைந்துள்ளது. ஆனால் ரூபிளுக்கு எதிரான ஊகங்களாலும் மற்றும் எண்ணெய் விலைகளின் பொறிவினாலும் சீரழிக்கப்பட்டுள்ள ரஷ்ய பொருளாதாரம் பின்னடைவுக்குள் மூழ்கி வருகின்ற நிலையில், அது தற்போது தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்துவரும் அதிருப்தி மற்றும் சமூக எதிர்ப்பை முகங்கொடுக்கிறது.

கடந்த எட்டு மாதங்களில், எண்ணெய் விலையில் ஏற்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியாலும் மற்றும் உலகளாவிய நிதியியல் சந்தைகளை அணுகுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டு வரப்பட்ட நிதியியல் மற்றும் பொருளாதார தடைகளின் தாக்கத்தாலும், ரஷ்ய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு ரூபிள் மதிப்பில் ஒரு கீழ்நோக்கிய வீழ்ச்சியாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் ஒரு கூர்மையான வீழ்ச்சியுடன் சேர்ந்து, கடந்த ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபிள் 50 சதவீதத்திற்கும் கூடுதலாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

டிசம்பரில் ரஷ்ய மத்திய வங்கி இரவோடு இரவாக வியத்தகு முறையில் 6.5 சதவீத அளவுக்கு வட்டிவிகித புள்ளிகளை உயர்த்தி, அதை 17 சதவீதத்திற்குக் கொண்டு வந்ததன் மூலமாக, ரூபிளின் ஓட்டத்தைத் தடுக்க முனைந்தது. அது ஒரே ஆண்டில் ஆறாவது வட்டி விகித உயர்வாகும். புட்டின் அரசாங்கத்தினதும் ரஷ்ய பெருநிறுவன மற்றும் நிதியியல் நலன்களுக்களினதும் இரண்டினது அழுத்தங்களுக்கும் மத்திய வங்கி விடையிறுத்துள்ளது என்பதற்கு ஓர் அறிகுறியாக, வெள்ளியன்று எடுக்கப்பட்ட முடிவு வட்டி விகிதத்தை 15 சதவீதத்திற்குக் குறைத்துள்ளது.

வட்டி விகிதங்களைக் குறைக்க மத்திய வங்கியின் மீது தெளிவாக ஏறத்தாழ ஆக்ரோஷமான அழுத்தத்துடன், வங்கியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது, என்று மாஸ்கோவை மையமாக கொண்ட Renaissance Capitalஇன் ஆய்வுத்துறை தலைவர் டேவிட் நான்கெல் ஒரு மின்னஞ்சலில் கருத்துரைத்தார்.

புட்டினின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆண்ட்ரெ பெலௌசொவ்வால் ஜனவரி 15இல் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்திடமிருந்து வந்த அழுத்தத்தைப் பிரதிபலித்தன. 17 சதவீத வட்டி விகிதங்களுடன் வணிகம் செய்வது "சாத்தியமே இல்லை" என்று அவர் தெரிவித்தார். வட்டி விகிதங்களைக் குறைக்குமாறு வங்கியாளர்களிடமிருந்து வந்த அழைப்புகளுக்கு மிகவும் அனுசரணையாளராக பார்க்கப்படும் மத்திய வங்கியின் நீண்டகால மூத்த உறுப்பினர் டிமிட்ரி துலின் நாணய கட்டுப்பாட்டு கொள்கையின் பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், ஆண்ட்ரேயின் கருத்துக்கள் வந்திருந்தன.

வட்டி விகித குறைப்பு தீர்மானத்தை அறிவித்து மத்திய வங்கி கூறுகையில், "பொருளாதாரம் குளிர்ந்து" வருவதற்குரிய சான்றுகளால் அது ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டது. பணவீக்க அழுத்த அபாயம் "பொருளாதார செயல்பாடு குறைவால்" கட்டுப்படுத்தப்படும் என்று அது வாதிட்டது.

வங்கியாளர்களது பேச்சுக்களின் இந்த ரஷ்ய வடிவம், வேகமாக மோசமடைந்து வரும் நிலைமையை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் முதல் பாதியில் 3 சதவீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சி அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது, அதற்குப் பின்னர் இன்னும் மோசமடைவதற்குரிய அறிகுறிகளும் உள்ளன. இந்த ஆண்டின் டிசம்பர் வரையில் நிஜமான ஊதியங்கள் 4.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன என்பதையும், அத்துடன் நிஜமான செலவின வருவாய் 7.3 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதென்றும் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின.

ரஷ்ய பொருளாதார நெருக்கடியில், புட்டின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவின் ஆக்ரோஷமான அழுத்தத்திலிருந்து எழுகின்ற குறிப்பிட்ட காரணிகள் வேலை செய்து வருகின்ற போதினும், அந்த பொருளாதார கொந்தளிப்பானது அபிவிருத்தி அடைந்துவரும் உலகளாவிய போக்குகளின் ஒரு வெளிப்பாடாகவும் உள்ளது. தீவிரமடைந்துவரும் பணச்சுருக்க அழுத்தங்களை முகங்கொடுப்பதற்காக அவற்றின் செலவாவணி மதிப்பைக் குறைக்கும் நோக்கில் செலாவணி கொள்கையை தளர்த்துவதென்ற, டென்மார்க், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் கனடா உட்பட ஏனைய நாடுகளின் தொடர்ச்சியான நகர்வுகளை ஒட்டி, வட்டி விகிதங்களைக் குறைப்பதென்று அந்த மத்திய வங்கியின் முடிவும் வந்தது.

ஜனவரி வரையிலான இந்த ஆண்டில் யூரோ மண்டலத்தில் விலைகள் 0.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது என்பதை எடுத்துக்காட்டி கடந்த வாரம் வெளியான புள்ளிவிபரங்கள், அத்தகைய அழுத்தங்களின் வலிமையை அடிக்கோடிட்டன. இது நிதியியல் நெருக்கடி ஆழமடைந்திருந்த ஜூலை 2009இன் போது எட்டியளவுக்கு சமமாக குறைந்து போயிருந்தது. வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகளும் இந்த வீழ்ச்சிக்கு சற்று பொறுப்பாகும் என்றபோதினும், உணவு பண்டங்கள் மற்றும் எரிபொருள் போன்ற ஓயாது மாறுபடுகின்ற பண்டங்கள் அல்லாதவற்றின் முக்கிய பணவீக்க முறைமை என்றழைக்கப்பட்டதும், வெறும் 0.6 சதவீதத்திற்கு சாதனையளவிற்கு குறைந்து போனது.

நாணய கட்டுப்பாட்டு கொள்கையைத் தளர்த்துவது மற்றும் அதைத் தொடர்ந்து செலாவணி மதிப்புகளைக் குறைப்பது ஆகிய இவை, இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளன: ஒன்று பணச்சுருக்க அழுத்தங்களைக் குறைப்பது, அடுத்தது சர்வதேச சந்தைகளில் ஏற்றுமதி விலைகளை கூடுதலாக போட்டித்தன்மையில் வைப்பது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் பரந்தளவில் மாறுகையில், ஒரு தனிப்பட்ட நாடு தப்பிப்பதற்குரிய வழியாக எது பார்க்கப்படுகிறதோ அதுவே ஒரு பொதுவான செலாவணி போராக மாற்றமடைகிறது.

இதுவரையில் இந்த மோதல் முழுமையாக அபிவிருத்தி அடையவில்லை தான், ஏனென்றால் அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தைகளில் உயர்ந்துள்ளது. பச்சைநோட்டு ஏனைய நாடுகளின் மதிப்பிறக்கத்தின் தாக்கத்தை உறிஞ்சிவிடுகிறது. ஆனால் ஒரு பலமான டாலர் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், அமெரிக்க ஏற்றுமதிகள் மற்றும் பிரதான அமெரிக்க பெருநிறுவனங்களின் அடித்தள போக்குகள் என இரண்டின் மீதும் எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டிருக்கும்.

அத்தகைய தாக்கங்கள் சிலவற்றை தான் கடந்த வெள்ளியன்று வெளியான அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. நான்காம் காலாண்டில் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் இருந்த 5 சதவீதத்திலிருந்து சரிந்து, 2.6 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. இது ஏற்றுமதிகள் வீழ்ச்சியில் ஒரு பிரதான பங்களிப்பு காரணியாக இருந்துள்ளது. அது மட்டுமே 1 சதவீத புள்ளி வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்தது.

பெப்ரவரி 1இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் லுஸ் "டாலர் வலிமை பெறுவதன் ஆபத்துக்கள்" என்று அவர் எதை குறிப்பிட்டாரோ அதன் மீது கவனத்தைக் கொண்டு வந்தார். நாம் 1930களை மீண்டும் அரங்கேற்றுவதற்காக இல்லை", உலகின் பிரதான பொருளாதாரங்கள் "அண்டை நாடுகளிடம் பிச்சையெடுக்கும்" கொள்கைகளிலும் மற்றும் "பெரு மந்தநிலைமை பாணியிலான மறுமதிப்பீடுகளிலும்" ஈடுபட்டு இல்லை என்று அவரது வாசகர்களுக்கு அவசரகதியில் உத்தரவாதமளித்தார். ஆனால் அங்கே கணிசமான அளவிற்கு "தடங்கள்" இருந்தன என்பதை அவர் எச்சரித்தார்.

ஐரோப்பியர்களும் ஏனையவர்களும் வளர்ச்சியை மீட்டமைக்கவே பணப்புழக்க கொள்கையை அதிகரித்தனர், அமெரிக்காவைப் பலவீனப்படுத்துவதற்கு அல்ல, என்று அவர் எழுதினார். மதிப்புயர்ந்த டாலர் "அதிகளவில் பெருநிறுவன அடித்தள போக்கில் பலமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் ஏனென்றால் எஸ்&பி 500 நிறுவனங்களின் ஏறத்தாழ பாதி வருவாய்கள் வெளிநாடுகளிலிருந்து வருகின்றன என்பதோடு, ஏன் நிகர இலாபங்களிலேயே அதிக பங்கு அங்கிருந்து வருகின்றது. மதிப்புயர்ந்த டாலரின் தாக்கம் என்பது இந்த வருவாய்களை குறைப்பதாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட புள்ளியில், உலகளாவிய மதிப்பிறக்க அலையை எதிர்கொள்ள அமெரிக்கா எதிர்நடவடிக்கை எடுக்கும், அவ்விதத்தில் அது பொருளாதார மோதல்களைத் தீவிரப்படுத்தும்.

இந்த உள்ளடக்கத்தில் பார்த்தால், உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ள ரஷ்யாவில், பொருளாதார மற்றும் நிதியியல் குழப்பங்களை உருவாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள், அரசியல் மற்றும் இராணுவ மோதல் மீதான அதன் அடாவடித்தனத்திற்கு சமாந்தரமாக உள்ளது.