சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US arming of Ukraine and the danger of World War III

உக்ரேனை அமெரிக்கா ஆயுதபாணியாக்குவதும், மூன்றாம் உலக போருக்கான அபாயமும்

Alex Lantier
3 February 2015

Use this version to printSend feedback

அதிநவீன ஆயுத தளவாடங்களுக்காக பில்லியன் கணக்கான டாலருடன் உக்ரேனிய வலதுசாரி ஆட்சியை ஆயுதபாணியாக்க ஒபாமா நிர்வாகத்தால் செய்யப்பட்டுவரும் திட்டங்களை உலக சோசலிச வலைத் தளம் சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. இத்தைகய நடவடிக்கைகள், இரண்டு அணுஆயுதமேந்திய சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு நேரடி மோதலைத் தூண்டிவிட மற்றும் ஒரு மூன்றாம் உலக போருக்கு எரியூட்ட அச்சுறுத்துகின்றன.

கியேவில் மேற்கத்திய ஆதரவிலான அரசாங்கத்தை ஆயுதபாணியாக்குவது மீதான விவாதங்கள், கடந்த மாதம் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவால் தொடங்கப்பட்ட கிழக்கு உக்ரேனுக்கு எதிரான தாக்குதலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு இடையே வருகின்றன. திங்கட்கிழமை நியூ யோர்க் டைம்ஸின் செய்திப்படி, “உக்ரேனிய படைகள் சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டதும், ஒபாமா நிர்வாகம் இராணுவ உதவி பற்றிய பிரச்சினையில் ஒரு புதிய பார்வையை எடுத்து வருகிறது.”

உக்ரேனுக்கு ஏற்கனவே இராணுவ பயிற்சியாளர்களை அனுப்பி உள்ள வாஷிங்டன், “உயிர்பறிக்காத" இராணுவ தளவாடங்களுக்காக கியேவிற்கு 350 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உறுதியளித்தது. உக்ரேனுக்கு அமெரிக்கா 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை அனுப்ப வலியுறுத்தி வருகின்ற "எட்டு மூத்த முன்னாள் அமெரிக்க அதிகாரிகளின் … ஒரு சுதந்திரமான அறிக்கை" மீது, உயர்மட்ட ஒபாமா நிர்வாக அதிகாரிகள் தற்போது அதிகளவில் ஒன்றுபட்டிருப்பதாக டைம்ஸ் எழுதுகிறது. இத்தகைய நிதியுதவிகள், "திறந்தவெளி குண்டுவீசிகள், உளவுபார்க்கும் டிரோன்கள், குண்டு-துளைக்காத இராணுவ வாகனங்கள், மற்றும் ராக்கெட்கள், பீரங்கி குண்டுகள் வீசும் எதிரிகளது இடங்களைக் கண்டறியக்கூடிய ராடார்கள்" ஆகியவற்றை கியேவ் ஆட்சிக்கு வழங்கும்.

இந்த பொறுப்பற்ற தீவிரப்படுத்தலானது, அரசாங்க அதிகாரிகள், இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கையினர் மற்றும் புரூகிங்க்ஸ் பயிலகம் உட்பட அவர்களுடன் தொடர்புபட்ட சிந்தனை குழாம்களின் ஒரு குற்றகரமான சதிக்கூட்டத்தால் திட்டமிடப்பட்டு வருகிறது. அது பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த மேற்தட்டின் நலன்களுக்காகவும், அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்காகவும் கட்டளையிடப்படுகின்றன என்பதுடன், அது மனிதகுல நாகரீகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகின்றது.

நடைமுறையில் கொண்டு வரப்பட்டு வருகின்ற இத்திட்டங்களின் தாக்கங்கள், அமெரிக்க மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து மூடிமறைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியின் Sueddeutsche Zeitung இருந்து மிதமான சில சுயஆய்வுகளில் ஒன்று வெளியானது, திங்களன்று பிரசுரிக்கப்பட்ட அக்கட்டுரையில் அப்பத்திரிகை எச்சரித்தது: “உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வினியோகிப்பதென்பது மாஸ்கோவிற்கு எதிரான ஒரு போர் பிரகடனமாக அமையும் — அதன் அர்த்தத்தில் ஏறத்தாழ அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள முடியும்.”

அந்த பத்திரிகை ஒரு ரஷ்ய இராணுவ வல்லுனர் எவ்கேனி புசின்ஸ்கியின் (Yevgeny Buchinsky) கருத்தை மேற்கோளிட்டுக் காட்டியது. அவர் டான்பாஸிற்கு எதிரான கியேவின் ஒரு தாக்குதலுக்கு வரும் விடையிறுப்பைக் குறித்து எச்சரித்தார். “ரஷ்யா தலையீடு செய்ய வேண்டியதிருக்கும், அப்பட்டமாக கூறுவதானால், கியேவை அது கைப்பற்றும். பின்னர் நேட்டோ ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருக்க வேண்டியதிருக்கும். பின்னர், யாரும் விரும்பாத மூன்றாம் உலகப் போரை, நீங்கள் தொடங்க வேண்டியதிருக்கும்,” என்றார்.

இத்தகைய அறிக்கைகள், சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதியான மிக்கைல் கோர்பச்சேவ்விடமிருந்து வந்த எச்சரிக்கைகளை பின்தொடர்ந்து வந்தன. அவர் உக்ரேன் விவகாரத்தில் ஒரு ஐரோப்பிய போர் என்பது "தவிர்க்கவியலாமல் ஓர் அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லக்கூடுமென" சமீபத்தில் தெரிவித்தார்.

எப்போதையும் போல, அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் போர் திட்டங்கள் தற்பாதுகாப்பு தொனியில் — இவ்விடயத்தில், “ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக" என்றரீதியில் — கூறப்படுகின்றன. உண்மையில் உக்ரேன் விவகாரத்தில் தீவிரமடைந்துவரும் மோதலானது, கியேவைக் கைப்பற்றவும் மற்றும் ஐரோப்பிய ரஷ்யாவின் இதயதானத்தைக் குறி வைக்கும் நேட்டோ கூட்டாளிகளின் ஓர் இராணுவ புறச்சாவடியாக உக்ரேனை மாற்றவும் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினது நடவடிக்கைகளின் விளைபொருளாகும்.

இந்த மாதத்திலிருந்து ஓராண்டுக்கு முன்னர், வாஷிங்டன் மற்றும் பேர்லினால் ஆதரிக்கப்பட்ட பாசிச Right Sector போராளிகள் குழு தலைமையிலான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி, ரஷ்யாவை ஆதரித்த உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை பதவியிலிருந்து வெளியேற்றியது. ரஷ்யாவிற்கு எதிராக அவர்களின் வன்முறைரீதியிலான விரோதத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உள்ள வலதுசாரி கட்சிகளினது ஒரு ஸ்திரமற்ற, மக்களிடையே மதிப்பிழந்த ஒரு கூட்டணியைக் கொண்டு அவர் பிரதியீடு செய்யப்பட்டார்.

மே 2014 ஒடெசா படுகொலை போன்று, ரஷ்யாவை ஆதரிக்கும் போராட்டக்காரர்களை பாரியளவில் படுகொலை செய்தமை உட்பட, புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இனரீதியில் பெருமளவில் ரஷ்ய மக்களைக் கொண்ட கிழக்கு உக்ரேன் பகுதிகளில் ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தூண்டிவிட்டது. டொனெட்ஸ்க், லூஹன்ஸ்க், மரியோபோல் மற்றும் ஸ்லவ்யான்ஸ்க் போன்ற நகரங்களுக்கு எதிராக பாசிச போராளிகள் குழுக்களது இரத்தந்தோய்ந்த தாக்குதல்களைக் கொண்டு அந்த ஆட்சி அதற்கு விடையிறுப்பு காட்டியது. சிஐஏ உடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட கடந்த ஆண்டு தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னர் உக்ரேனுக்கு இரகசியமாக விஜயம் செய்திருந்தார்.

செல்வந்த மேற்தட்டுக்கள் மற்றும் பாசிச குண்டர்களின் ஒரு சிறிய அடுக்கிற்கு அப்பாற்பட்டு எந்த சமூக அடித்தளமும் இல்லாததால், கியேவ் ஆட்சி, மாஸ்கோவ் ஆயுத உதவி வழங்கி ஆதரித்துள்ள கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளைத் தோற்கடிப்பதில் தோல்வி அடைந்துள்ளது. கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிராக இன்னும் பெரியளவிலான இரத்த ஆறை உருவாக்குவதற்கு தயாரிப்பு செய்வதன் மூலமாக வாஷிங்டன் விடையிறுப்பு காட்டி வருகிறது, இது நேரடியாக ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போர் அபாயத்தை முன்னிறுத்துகிறது.

1991இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சியின் பேரழிவுகரமான புவிசார்-மூலோபாய விளைவுகளைச் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வருகிறது. ஸ்ராலினிஸ்டுகளின் இந்த இறுதி காட்டிக்கொடுப்பு, முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் இனரீதியிலான பதட்டங்களுக்கு எரியூட்டவும் மற்றும் சூழ்ச்சிகள் செய்யவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உதவியுள்ளது.

ரஷ்யாவை ஒரு வறிய மற்றும் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு சிறுமைப்படுத்துவதே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது இறுதி நோக்கமாகும். அதுபோன்றவொரு மூலோபாயத்தைத் தான், காட்டர் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski), மீண்டும் பகிரங்கமாக ஊக்குவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு வில்சன் மையத்தில் அளித்த உரையில் பிரிஜேஜென்ஸ்கி, “குறிப்பாக உக்ரேனியர்கள் நகர்புற எதிர்ப்பு போர்முறையில் திறமையாக ஈடுபடுவதற்கு உதவும் வகையிலான ஆயுதங்களைக்" கியேவிற்கு வழங்குமாறு வாஷிங்டனுக்கு அழைப்புவிடுத்தார். கியேவ் ஆட்சிக்கு அமெரிக்க ஆயுதங்கள் வழங்க அழைப்புவிடுத்து புருகிங்க்ஸ் பயிலகத்தால் மற்றும் ஏனைய சிந்தனை குழாம்களால் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளுக்குப் பொருந்திய விதத்தில், பிரிஜேஜென்ஸ்கி "டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள்…நகர்புறங்களில் குறுகிய தூர சண்டைகளில் பயன்படுத்துவதற்கு உரிய ஆயுதங்கள்" ஆகியவற்றை வழங்க அழைப்புவிடுத்தார்.

பில்லியன் கணக்கான மக்கள் இல்லையென்றாலும் உக்ரேனில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதை அச்சுறுத்தும் ஒரு இனரீதியிலான நகர்புற போர்முறையில் ரஷ்யாவை உள்ளிழுக்கக்கூடிய, பிரிஜேஜென்ஸ்கியால் வரைந்து காட்டப்பட்ட மூலோபாயம், அரசியல்ரீதியில் குற்றகரமானது என்றபோதினும், அது பல தசாப்தங்களாக ரஷ்யாவிற்கு எதிராக அவர் ஊக்குவித்து வந்துள்ள கொள்கைகளுக்கு முற்றிலும் பொருந்திய விதத்தில் உள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, ஜோர்ஜியா, உக்ரேன் மற்றும் பெலாரஸ் உட்பட முன்னாள்-சோவியத் குடியரசுகளில் ரஷ்ய-விரோத, அமெரிக்க-ஆதரவிலான ஆட்சிகளை நிறுவ "வண்ணப் புரட்சிகளை" ஒழுங்கமைத்ததன் மூலமாக, வாஷிங்டன் இந்த மூலோபாயத்தைப் பின்பற்றியது.

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், உலகளாவிய முதலாளித்துவத்தின் மிகவும் ஆழமடைந்துள்ள பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நெருக்கடிக்கு இடையே, வாஷிங்டன் இன்னும் கூடுதலாக பொறுப்பற்றதன்மையோடு நகர்ந்து வருகிறது. புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளுடன் சேர்ந்து, கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளைப் பாரியளவில் விரிவாக்குவதற்கு, உக்ரேனிய நெருக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேரழிவுக்கு ஒரே மாற்றீடு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு சோசலிச அடித்தளத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதாகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து எழுச்சிபெற்ற முதலாளித்துவ செல்வந்த மேற்தட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான ரஷ்ய தேசியவாதம், திவாலாகிவிட்டது. போர் எதிர்ப்பிற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்திடையே எவ்வித முறையிடும் செய்ய தகைமையற்றுள்ள, புட்டின் அரசாங்கம் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் இனரீதியிலான பதட்டங்களைத் தூண்டிவிடுகிறது. நேட்டோ ஆக்கிரமிப்பை எதிர்க்க எந்தளவிற்கு அது ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் முயற்சிக்கிறதோ, அந்தளவிற்கு அது அணுஆயுத போருக்கு மட்டுமே வழிகோலுகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக தீவிரமடைந்துவரும் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த ஜூலையிலேயே WSWS எழுதியது: “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் பின்தொடரப்பட்டு வருகின்ற நிகழ்ச்சி நிரலின் குறுகிய கால விளைவு என்னவாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சி நிரலின் நீண்டகால தாக்கம், தவிர்க்கவியலாமல் பிரளயகரமான விளைவுகளோடு போரை நோக்கிய திசையில் இட்டுச் செல்கிறது. உலக மக்கள் தொகை முகங்கொடுத்து வரும் அபாயங்கள் குறித்து பெரிதும் பரந்தளவிலான மக்களுக்கு தெரியாமல், தீர்மானங்கள் திரைக்குப் பின்னால் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வருகின்ற மிகப் பெரும் அபாயமாகும் …

“1914இல் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களைப் போலில்லாமல், இன்றைய நவீன அரசாங்கங்கள் பேரழிவிற்கு துணியமாட்டாது என்பதால், ஒரு அணுஆயுத போர் சாத்தியமில்லை என்று யாராவது நம்பினால் அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றார். எந்தவிடயத்திலும், இன்று இருக்கின்ற ஆட்சிகள் முன்பிருந்தவை விட அதிகமாக பொறுப்பில்லாமல் இருக்கின்றன. அதிகரித்துவரும் பொருளாதார, சமூக பிரச்சினைகளால் சூழப்பட்டு, அந்த பிரச்சினைகளுக்கு அவற்றிடம் எந்தவொரு முற்போக்கான தீர்வும் இல்லாமல், அவை யுத்த ஆபத்தை கையிலெடுப்பது பிரயோசனமானது என கருதி அதைநோக்கி முன்னொருபோதும் இல்லாதளவிற்கு நாட்டம்கொண்டுள்ளன.”

ஏகாதிபத்தியம் உலகை ஓர் அணுஆயுத மோதலை நோக்கி உந்திச் சென்று கொண்டிருக்கையில், இந்த எச்சரிக்கை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய உலகளாவிய போர்-விரோத, ஏகாதிபத்திய-விரோத மற்றும் முதலாளித்துவ-விரோத இயக்கத்திற்கு தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவதே மிக மிக அவசர விடயமாகி உள்ளது.