சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese PM pushes for new military powers

ஜப்பானிய பிரதம மந்திரி புதிய இராணுவ அதிகாரங்களுக்கு அழுத்தம் அளிக்கிறார்

By Peter Symonds
4 February 2015

Use this version to printSend feedback

ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசால் (ISIS) இரண்டு பிரஜைகள்—கென்ஸி கோடோ மற்றும் ஹருனா யுகாவா—கொடூரமாக கொல்லப்பட்டதை, அன்னிய நாடுகளுக்கு இராணுவ படைகளை அனுப்பும் வகையில் அரசாங்கத்தின் அதிகாரங்களை மேற்கொண்டும் விரிவாக்கும் புதிய சட்டங்களுக்கு அழுத்தம் அளிக்க கைப்பற்றி உள்ளார்.

திங்களன்று ஒரு நாடாளுமன்ற கூட்டத்தில் அபே உரையாற்றுகையில், எதிர்காலத்தில் ஜப்பானிய தற்காப்பு படைகளை (SDF) மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்குரிய வழிவகைகளை அவர் விவாதிக்க விரும்புவதாக அறிவித்தார். “அரசுசாரா அமைப்புகளின் அங்கத்தவர்கள் உட்பட ஜப்பானிய குடிமக்கள் வெளிநாடுகளில் ஆபத்தில் இருக்கையில், இப்போதைய நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் சம்மதம் இருந்தாலும் கூட, [SDFஆல்] அவர்களை மீட்க முடியாது,” என்றார்.

அவர் இராணுவ படைகளைப் பயன்படுத்துவதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை அபே தெளிவுபடுத்தினார். “நாம் அபாயங்களைத் தவிர்க்கவும் மற்றும் [பிணைக்கைதிகளை] மீட்கவும் ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய சாத்தியக்கூறுகளைப் பரிசீலிப்போம்,” என்றார். “கூட்டு தற்காப்பை" அனுமதிப்பதற்காக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசியலமைப்பு "மறுவிளக்கத்திற்கு" செறிவூட்டும் வகையில், அந்த அரசாங்கம் ஏற்கனவே ஜப்பானிய டயட் அல்லது நாடாளுமன்றத்தின் இந்த அமர்வில் ஒரு சட்டத்தொகுப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்முறையில் ஈடுபட்டுள்ளது.

ஜப்பானிய போருக்குப் பிந்தைய அரசியலமைப்பின் ஷரத்து 9 உத்தியோகப்பூர்வமாக போரை நீக்கியதோடு, தரைப்படை, வான்படை மற்றும் கடற்படைகள் ஒருபோதும் பேணப்படக் கூடாது என்று அறிவித்தது. ஆனால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஜப்பானிய அரசாங்கங்கள் மிகப்பெரிய, பெரிதும்-ஆயத்தப்படுத்தப்பட்ட "தற்காப்பு" படைகளை அனுமதிக்கும் வகையில் அந்த வகைமுறைகளைக் கணிசமான அளவிற்கு பலவீனப்படுத்தி உள்ளன என்பதோடு, அத்தகைய படைகள் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் அமெரிக்க படையெடுப்புகளுக்கு இராணுவ ஒத்துழைப்பை வழங்கி உள்ளன.

அபே அரசாங்கம் இன்னமும் மேற்கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார். ஷரத்து 9ஐ நீக்குவதற்கு அரசியலமைப்பைத் திருத்தி எழுதுவதற்கு அவர் ஆதரவளிப்பதாக அபே தெளிவுபடுத்தி உள்ளார், ஆனால் அதுபோன்றவொரு திருத்தத்திற்கு அழுத்தம் அளிக்கும் எந்த முயற்சியும் பரந்தளவில் பொதுமக்கள் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. எந்தவொரு அரசியலமைப்பு திருத்தத்திற்கும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆனால் அதுவொரு வெகுஜன வாக்கெடுப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.

ஷரத்து 9 உடன் நேரடியாக முரண்படும் கடந்த ஆண்டின் அரசியலமைப்பு மறுவிளக்கம், “ஜப்பானுடன் நெருக்கமான உறவில் உள்ள ஒரு வெளிநாட்டுக்கு எதிரான ஓர் ஆயுதமேந்திய தாக்குதலுக்கு விடையிறுக்க" ஜப்பானிய இராணுவ படைகளை அனுப்புவதற்கு அனுமதிக்கிறது. ஒபாமா நிர்வாகத்தால் பலமாக ஊக்குவிக்கப்பட்ட அந்த நகர்வு, ஒரு கூட்டாளியை பாதுகாப்பதற்காக என்ற சாக்கில், அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு போர்களில் பங்கெடுக்கவும், மற்றும் குறிப்பாக, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் முழுவதுமான இராணுவ கட்டமைப்புக்குள் ஜப்பானிய இராணுவத்தை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கவும் ஜப்பானுக்கு கதவுகளைத் திறந்து விடுகிறது.

கோடோ மற்றும் யுகாவாவைக் கொன்ற ISISஇன் குற்றகரமான நடவடிக்கைகள், நேரடியாக அபே அரசாங்கத்தின் கரங்களுக்குள் விளையாடுகின்றன. 2012இல் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அது ஜப்பானின் மீள்இராணுவமயமாக்கலை வேகமாக தீவிரப்படுத்தி உள்ளது. மீட்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு SDFஐ அனுமதிப்பதென்ற அபேயின் சமீபத்திய முன்மொழிவு, “கூட்டு தற்காப்பு" என்பதையும் கடந்து செல்கிறது. பிணைக்கைதிகள் நெருக்கடிக்கு (hostage crisis) இடையே, அரசாங்க முறையீட்டின் பேரில் உயர்மட்ட அதிகாரிகளால் வரையப்பட்ட ஒரு விளக்கவுரை, முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் கூட, ஓர் இராணுவ மீட்சி நடவடிக்கை சட்டப்பூர்வமாக வராது என்று குறிப்பிட்டது.

அதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கும் சட்டங்கள், உலகின் எவ்விடத்திற்கும் அதன் ஆயுதமேந்திய படைகளை ஒருதலைபட்சமாக அனுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டுவதாக அமையும். அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் வெளிநாடுகளுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு குடிமக்களைப் பாதுகாப்பதற்காக என்ற சாக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உள்ளன. ஜப்பானிய ஏகாதிபத்தியமும் அதையே தான் செய்யும்.

அன்னிய நாட்டு போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஜப்பான் சம்பந்தப்படுவதற்கு பொதுமக்களின் எதிர்ப்பு அந்தளவிற்கு ஆழமாக இருப்பதால், அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையோடு நகர்ந்து வருகிறது. முன்னாள் பிரதம மந்திரி ஜூனிசிரோ கொய்ஜுமி அமெரிக்க ஆக்கிரமிப்பின் பாகமாக 2004இல் பிரதானமாக பொறியாளர்களின் ஒரு குழுவை ஈராக்கிற்கு அனுப்பிய போது, அவர் பரந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை எதிர்கொண்டார்.

பிணைக்கைதிகளை மீட்பதன் மீது ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்த போது, அபே, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான போரில் எந்தவிதத்திலும் இராணுவரீதியில் தலையிடுவதை நிராகரித்தார். “[ISISக்கு எதிரான கூட்டணியில்] பங்கேற்பது சாத்தியமில்லை என்பதோடு ஏதோ வகையில் பின்புறத்திலிருந்து ஆதரவளிப்பதைக் குறித்தும் கூட நாங்கள் சிந்திக்கவில்லை,” என்றார்.

அதே நேரத்தில், "செயல்திறனுள்ள அமைதிவாதம்" (proactive pacifism) என்ற முழக்கத்தின் கீழ் அபே அவரது இராணுவவாத நிகழ்ச்சிநிரலை முன்கொணர அழுத்தம் அளிப்பதில் தீர்மானமாக உள்ளார். ISIS உடன் சண்டையிட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இராணுவ உதவியல்லாத நிதியுதவியாக 200 மில்லியன் டாலர் வழங்க அவர் உறுதியளித்தது உட்பட அவரது ஆக்ரோஷமான இராஜாங்க நடவடிக்கைகள் ஜப்பானியர் வாழ்வை ஆபத்திற்குட்படுத்தி வருகிறது என்ற எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை, திங்களன்று நாடாளுமன்றத்தில், அபே உதறித்தள்ளினார். எதிர்கட்சியான ஜப்பானிய ஜனநாயக கட்சியோ அந்த அரசாங்கத்தின் "கூட்டு தற்காப்பு" மற்றும் இராணுவ கட்டியமைப்பு ஆகியவற்றுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தந்திரோபாய கருத்துவேறுபாடுகளை மட்டுமே வெளிப்படுத்தி உள்ளது.

வெளியுறவு கொள்கை மீது அபேவிற்கு ஆலோசனை வழங்கியுள்ள முன்னாள் தூதர் குனிஹிகோ மியாகி, அந்த பிணைக்கைதிகள் நெருக்கடியை அரசாங்கம் முழுமையாக சுரண்டிக் கொள்ள வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்தினார். “இது ஜப்பானுக்கு 9/11 ஆகும்,” என்று அவர் நியூ யோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார். “அங்கே வெளியே உள்ள அபாயகரமான உலகிலிருந்து அதை பாதுகாத்துக் கொள்ளவதற்கு அதன் நல்லெண்ணங்களும் மேன்மை தாங்கிய நோக்கங்களுமே போதுமானதென்ற பகற்கனவை ஜப்பான் நிறுத்திக் கொள்வதற்கு இதுவே சரியான தருணமாகும். இந்த கடுமையான யதார்த்ததை அமெரிக்கர்கள் முகங்கொடுத்துள்ளனர், பிரெஞ்ச்வாசிகள் முகங்கொடுத்துள்ளனர், தற்போது நாமும் முகங்கொடுத்து வருகிறோம்,” என்றார்.

கோடோ கொல்லப்பட்டதற்கு அவரின் ஆரம்ப விடையிறுப்பில், அபே ஒரு ஜப்பானிய அரசியல்வாதியின் அசாதாரண நயமற்ற மொழியைப் பயன்படுத்தினார். “பயங்கரவாதிகள் அதற்குரிய விலையைக் கொடுக்கமாறு" செய்வேன் என்றவர் அறிவித்தார். ISISக்கு எதிராக சண்டையிட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இராணுவ உதவியல்லாத உதவிகளை விரிவாக்கவும், தொடரவும் அவர் உறுதியளித்தார்.

அமெரிக்காவைப் போலவே ஜப்பானிய ஏகாதிபத்தியமும், மத்திய கிழக்கில் "பயங்கரவாதத்திற்கு" எதிராக சண்டையிடுவதற்காக அல்ல, மாறாக அந்த எண்ணெய்-வளமிக்க பிராந்தியத்தில் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையீடு செய்கிறது. 2012 நிதியியல் ஆண்டில் ஜப்பானின் கச்சா எண்ணெய்யில் 80 சதவீதத்திற்கு அதிகமாக ஏழு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதியானது, அதில் பாதி சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கணக்கில் வந்தது. ஜப்பானின் இயற்கை எரிவாயு இறக்குமதிகளில் 28.6 சதவீதத்தை நான்கு மத்திய கிழக்கு நாடுகள் வழங்கின.

பெரும் அரசியல் செல்வாக்குக்காக அபே அரசாங்கம் பின்தொடர்ந்து வரும் உலகின் பகுதிகளில், மத்திய கிழக்கும் ஒன்றாகும். பதவிக்கு வந்து வெறும் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அபே ஆசியா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். ஆசியாவில் அவரது இராஜாங்க நடவடிக்கைகள், சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் அத்துடன் அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" உடன், அதே வரிசையில் உள்ளது.

எவ்வாறிருப்பினும் மீள்இராணுவமாக்கும் அவரது முயற்சிகளைப் போலவே, அபேயின் வெளியுறவு கொள்கையும் வாஷிங்டனின் கொள்கைகளுடன் அவை முரண்பாட்டிற்கு வந்தாலும் கூட, அனைத்திற்கும் மேலாக ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை ஊக்குவிப்பதை நோக்கி திரும்பி உள்ளது.