சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

NATO meeting in Brussels heightens danger of war with Russia

புருசெல்ஸின் நேட்டோ கூட்டம் ரஷ்யா உடனான போர் அபாயத்தை உயர்த்துகிறது

By Johannes Stern
5 February 2015

Use this version to printSend feedback

அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி இராணுவ மோதல் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய வகையில், ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ கூட்டணியைப் பலப்படுத்த, நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் இன்று புருசெல்ஸில் கூடுகின்றனர்.

Frankfurter Allgemeine Sonntagszeitung (FAS) இல் வெளியான ஓர் செய்தியின்படி, கிழக்கு ஐரோப்பாவில் ஒரு நீண்டகால பிரசன்னத்தை ஸ்தாபிக்க நேட்டோ வட்டாரங்கள் திட்டங்களை வெளியிட்டுள்ளன. நேட்டோவின் "படை ஒருங்கிணைப்பு பிரிவுகள்" என்றழைக்கப்படுவது, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலாந்து, ரோமானியா மற்றும் பல்கேரியாவில் ஸ்தாபிக்கப்படும். பின்னாளில் அதுபோன்றவொரு பிரிவை ஹங்கேரியில் நிலைநிறுத்தவும் அங்கே திட்டங்கள் உள்ளன.

அந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் 40 சிப்பாய்களைக் கொண்டிருக்கும். நேட்டோவின் ஒரு புதிய துரித விடையிறுப்பு படைக்குப் பயிற்சிகளை தயாரிப்பது மற்றும் அவசரகால நேரங்களில் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் அவை பணிக்கப்படும். இந்த ஆண்டின் நடவடிக்கையைத் தலைமையேற்று நடத்தி வருகின்ற ஜேர்மனி, இந்த பிரிவுகளுக்குள் மொத்தம் 25 சிப்பாய்களை நிலைநிறுத்த விரும்புகிறது.

துரித விடையிறுப்பு படையின் தரைப்படை துருப்புகள் சுமார் 5,000 சிப்பாய்களின் ஒரு படைப்பகுதியைக் கொண்டிருக்கும். அவர்களது பலதிறப் பயிற்சி பெற்ற இந்த பிரிவுகளுக்கான இலக்கு என்னவென்றால் 48 மணிநேரத்திற்குள் ஒரு புதிய இடத்திற்கு நகரும் தகைமையைக் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த படைப்பகுதியும் ஒரு வாரத்திற்குள் ஒரு புதிய இடத்திற்கு நகரக்கூடிய அளவுக்கு பயிற்சி அளிக்கப்படும் மற்றும் ஆயத்தப்படுத்தப்படும். இந்நடவடிக்கையின் தலைமை நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே ஆண்டுக்கொரு முறை சுழற்சி முறையில் மாற்றிக் கொள்ளப்படும்.

FAS செய்தியின்படி, அடுத்த ஆண்டு ஆரம்பம் வரையில் நீடிக்க உள்ள "சோதனைரீதியிலான கட்டத்தின்" போது அதற்கு வழங்குவதற்குரிய உபகரணங்களை நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். ஜேர்மன் துணை இராணுவப்படை துருப்புகளின் ஒரு படைப்பிரிவு, ஏப்ரலில் இருந்து தொடங்கி, பால்டிக் அரசுகள் மற்றும் போலாந்தில் கடந்த ஆண்டிலிருந்து நிலைநிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க பிரிவுகளுடன் சேர்ந்து கொள்ளும்.

கடந்த சில மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து வரும் அணுஆயுத அபாய சூழல்" குறித்து விவாதிக்க நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில் அணுஆயுத திட்ட குழுவையும் (NPG) கூட்ட இருக்கிறார்கள் என்பதை இரண்டு வாரங்களுக்கு முன்னர் FAS வெளியிட்டது.

FAS செய்தியின்படி, கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இது வெறுமனே ஒரு வழக்கமான கூட்டமாக இருக்காது. நேட்டோ தலைமையகத்தில் தயாரிக்கப்பட்ட அச்சுறுத்தல் சூழலைக் குறித்த ஓர் ஆய்வறிக்கை பாதுகாப்பு மந்திரிகளுக்கு சமர்பிக்கப்படும். அதன்பின்னர், அந்த மந்திரிமார்கள் "கூட்டணியின் அணுஆயுத மூலோபாய விளைவுகளை முதல்முறையாக விவாதிப்பார்கள்.” NPGஇல் ஓர் உறுப்பினர் அல்லாத பிரான்சுடன், பிரத்தியேக கலந்தாய்வு அமர்வு ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவை அவற்றின் பாதங்களில் மண்டியிடச் செய்ய நிர்பந்திப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் அணுஆயுத போர் அபாயத்தை ஏற்கவும் தயாராக உள்ளன என்ற உண்மையையே நேட்டோவின் அணுஆயுத உருவகங்கள் அடிக்கோடிடுகின்றன. கடந்த வாரத்தில், முன்னாள் சோவியத் அரசு தலைவர் மிக்கைல் கோர்பசேவ் உட்பட பல பிரபல முக்கியஸ்தர்கள், அமெரிக்க தலைமையிலான நேட்டோ ரஷ்யாவிற்கு எதிராக ஆக்ரோஷமான நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அதுவொரு மூன்றாம் உலக போர் அபாயம் ஆகும் என்பதை எச்சரித்துள்ளனர்.

மேற்கத்திய ஆதரவிலான கியேவ் ஆட்சியின் துருப்புகளுக்கும் மற்றும் கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் சண்டை தீவிரமடைந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், "தவிர்க்கவியலாமல் ஓர் அணுஆயுத போராக திரும்பக்கூடிய" ஒரு "கடும் போர்" குறித்து கோர்பசேவ் எச்சரித்திருந்தார்.

கியேவினது டான்பாஸிற்கு எதிரான ஒரு தாக்குதலுக்கு விடையிறுப்பாக, “ரஷ்யா தலையிட வேண்டி வரும், பின், அப்பட்டமாக கூறுவதானால், கியேவைக் கைப்பற்ற வேண்டி வரும். பின் நேட்டோ ஒரு சிக்கலான சூழலில் இருக்க வேண்டியதிருக்கும். பின்னர் யாரும் விரும்பாத மூன்றாம் உலக போரை நீங்கள் தொடங்க வேண்டியதிருக்கும்,” என்று எச்சரித்த ரஷ்ய இராணுவ வல்லுனர் யெவ்ஜென் புசின்ஸ்கி குறிப்பிட்டதை ஞாயிறன்று Süddeutsche Zeitung மேற்கோளிட்டு காட்டியது.

அதுபோன்ற எச்சரிக்கைகளுக்கு இடையிலும், ஏகாதிபத்திய சக்திகளும் மற்றும் கியேவில் உள்ள அவற்றின் பினாமிகளும் இந்த மோதலை தீவிரப்படுத்தி வருகின்றன. கியேவிற்கு நவீன ஆயுதங்களை அனுப்ப ஒபாமா நிர்வாகம் பரிசீலித்து வருவதாக திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதுபோன்ற நகர்விற்கு அழுத்தம் அளித்து வருகின்ற, தற்போது உயர்பதவியில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை அந்த பத்திரிகை பட்டியலிட்டது.

டைம்ஸ் செய்தி ஐரோப்பிய மேற்தட்டின் பிரிவுகளிடையே எதிர்ப்பை தூண்டிவிட்டது. போர் ஆயுதங்களுடன் கியேவ் ஆட்சிக்கு ஆயுதமேந்த செய்வதென்ற வாஷிங்டனின் ஒரு தீர்மானம் ரஷ்யாவினால் ஒரு போர் பிரகடனத்திற்கு சமாந்தரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று Süddeutsche Zeitung எழுதியது. ரஷ்ய அதிகாரிகளும் மற்றும் ஹங்கேரி விஜயத்தின் போது ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் அதுபோன்றவொரு நகர்விற்கு எதிராக பேசி இருந்தனர்.

வாஷிங்டன் அதன் ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற போக்கின் பின்னால் உறுப்பு நாடுகளை அணிதிரட்டி கொண்டு வர, இன்றைய நேட்டோ கூட்டத்தைப் பயன்படுத்துவதற்கு உத்தேசித்திருக்கிறது. ரஷ்யாவிற்கான ஒரு முன்னாள் அமெரிக்க தூதரும் நேட்டோவின் தற்போதைய துணை பொது செயலாளருமான அலெக்சாண்டர் வெர்ஷ்பாவ், இந்த வார தொடக்கத்தில், உக்ரேனில் "ரஷ்ய ஆக்கிரமிப்பை" “ஐரோப்பிய பாதுகாப்பில் ஆட்டத்தின் மாற்றமாக" குறிப்பிட்டார்.

கிழக்கில் நேட்டோவின் பரப்பெல்லையை நீட்டித்தும், மற்றும் உக்ரேனிய இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கியும், கிழக்கு ஐரோப்பாவில் துரித விடையிறுப்பு துருப்புகளை நிலைநிறுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் மோல்டோவா, அனைத்து முன்னாள் சோவியத் குடியரசுகளையும் குறிப்பிட்டு, அவர் கூறினார், “அவை எந்தளவுக்கு ஸ்திரமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு நாம் பாதுகாப்பாக இருப்போம். ஆகவே உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் மோல்டோவாவிற்கு உதவுவதென்பதுஅதாவது அவற்றின் இராணுவ படைகளைப் பலப்படுத்துவது, அவற்றின் அமைப்புகளைச் சீர்திருத்துவது மற்றும் அவற்றின் பொருளாதாரங்களை நவீனப்படுத்துவது ஆகியவைஒரு பெருந்தன்மை சார்ந்த நடவடிக்கை அல்ல, அது நமது அடிப்படை மூலோபாய நலன்களாகும்,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார், “நேட்டோ அதன் பங்கை செய்து வருகிறது. உக்ரேனின் ஆயுத படைகளை நவீனமாக்க மற்றும் சீர்திருத்த உதவுவதில், நாம் கட்டளை மற்றும் கட்டுப்பாடு, ஆயுததளவாடங்கள் கையாளுகை, இணைய வழி பாதுகாப்பு மற்றும் இராணுவ மருந்து பொருட்கள் போன்ற பகுதிகளில் உதவ ஐந்து அறக்கட்டளை நிதியங்களைத் தொடங்கி உள்ளோம். நாம் கியேவிற்கு நிறைய ஆலோசகர்களை அனுப்பி வருகிறோம் என்பதோடு, அவர்கள் உக்ரேனிய ஆயுத படைகளுடன் பயிற்சி மேற்கொள்வார்கள். மேலும் இதே வழியில் மோல்டோவா மற்றும் ஜோர்ஜியா அவற்றின் பாதுகாப்பு திறனைப் பலப்படுத்தவும் நாம் உதவி வருகிறோம். ஜோர்ஜியா விடயத்தில், இந்த கூட்டணியில் அது எதிர்கால உறுப்பினராக இணையும் வகையில் அது தயாராவதற்கு உதவுகிறோம்,” என்றார்.

அவரது உரையின் இறுதியில், வெர்ஷ்போவ் இவ்வாறு எச்சரித்தார்: “நமது போக்கை நாம் தேர்ந்தெடுத்துள்ள இந்த முறை, அதில் நாம் விடாப்பிடியோடு இருக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து, உறுதியோடு நிற்க வேண்டும், ரஷ்யாவிற்கு அதன் ஆக்கிரமிப்புக்கான விலையை அதிகரிக்க வேண்டும்,” என்றார்.

இதற்கிடையே உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதற்கு ஆதரவான குரல்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சிக்கான பாதுகாப்பு கொள்கை செய்தி தொடர்பாளராக உள்ள ஜேர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU) மைக்கேல் காஹ்லெர், Deutschlandfunk வானொலிக்கு அளித்த ஒரு நேர்காணலில் உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதற்கு ஆதரவாக பேசினார்.

இந்த வாரயிறுதியில் நடைபெற உள்ள முனீச் பாதுகாப்பு மாநாட்டின் தலைவர் வொல்ஃப்காங் இஸ்சின்கரும் அதே போக்கை ஏற்றுள்ளார். உக்ரேனுக்கு "சாத்தியமான ஆயுதங்கள் வினியோகிப்பது குறித்த அறிவிப்புக்கு" ஆதரவாக ZDF தொலைக்காட்சியில் அவர் பேசினார். “சில வேளைகளில் சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒருவர் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டி இருக்கிறது,” என்று அவர் அறிவித்தார். ஜேர்மனி ஆயுதங்களை அனுப்பக் கூடாது என்று அவர் எச்சரித்த போதினும், அவர் "கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களும் இதை செய்ய விரும்புவார்கள் என்று ஊகிப்பதாக" தெரிவித்தார்.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஆதரிக்கப்பட்ட பாசிசவாத தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டவரும், அப்போதிருந்து கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான போரை நடத்தி வருபவருமான உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ, ரஷ்யாவின் எல்லைக்கருகில் உள்ளதும், போட்டியிலுள்ள பகுதிகளுமான கிஹார்கிருக்கு நேற்று சென்றார். “நமக்கு உயிர்பறிக்கும் ஆயுதங்கள் தேவைப்படும், வெளிநாட்டு ஆயுதங்கள் உக்ரேனுக்கு அனுப்பப்படும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “உக்ரேன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவும் மற்றும் ஏனைய பங்காளிகளும் உயிர்பறிக்கும் ஆயுதங்களை அளித்து உதவுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.

போறோஷென்கோ ஏனைய 20 அரசு தலைவர்களுடன் மற்றும் 60 வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு மந்திரிகளுடன் சேர்ந்து முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பார். அவர் இன்று கியேவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியைச் சந்திக்கிறார்.