சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

German, French leaders fly to Russia amidst warnings of total war over Ukraine

உக்ரேன் மீது "முழு போர்" எச்சரிக்கைகளுக்கு இடையே ஜேர்மன், பிரெஞ்சு தலைவர்கள் ரஷ்யாவிற்கு பறக்கின்றனர்

By Alex Lantier
6 February 2015

Use this version to printSend feedback

ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் நேட்டோ ஆதரவிலான கியேவ் ஆட்சிக்கும் இடையே கிழக்கு உக்ரேனில் சண்டை தீவிரமடைந்து வருகையில், மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் பாரியளவில் துருப்புகளின் ஆயத்தப்படுத்தலை நேட்டோ வெளியுறவு மந்திரிகள் அறிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஒரு புதிய "சமாதான திட்டத்தைப்" பரிந்துரைக்க திடீரென ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளன.   

உண்மையில் கியேவ் ஆட்சியை நேரடியாக ஆயுதமேந்த செய்வதற்கான அமெரிக்க திட்டங்களை விவாதிக்கும் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியை சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவை சந்திக்க நேற்று, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் கியேவுக்கு விஜயம் செய்தனர். ஓராண்டுக்கு முன்னர் நேட்டோ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் கிழக்கு உக்ரேனில் கட்டவிழ்த்துவிடப்பட்ட உள்நாட்டு போரில் பிரிவினைவாதிகளை ஆதரித்துள்ள மாஸ்கோ உடன் பேச்சுவார்த்தைகள் நடத்த மேர்க்கெலும் ஹோலாண்டும் இன்று விஜயம் செய்ய உள்ளனர்.

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவை பின்வாங்குமாறு நிர்பந்திக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் முயற்சிகள், கணக்கிடவியலா விளைவுகளைக் கொண்ட ஒரு போரைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகின்ற நிலையில், இந்த இராஜாங்க உபாயங்கள் நடந்து வருகின்றன. கிழக்கு உக்ரேனில் ஒரு பெருமளவிலான தாக்குதலுக்கு வாஷிங்டன் கியேவிற்கு ஆயுதங்களை வழங்கினால், கியேவால் பிரிவினைவாதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க ரஷ்ய இராணுவம் தலையீடு செய்யுமென ரஷ்யா அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இது ஐரோப்பாவில் ஒரு பிரதான பெருநில போருக்கும் மற்றும் சாத்தியமான விதத்தில் அணுஆயுத சக்திகள் சம்பந்தப்படும் ஒரு உலக போருக்குமே கூட இட்டுச் செல்லக்கூடும்.

நேற்று எலிசே மாளிகையின் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கியேவிற்கு மேர்க்கெலுடன் இணைந்த அவரது பயணத்தைக் குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு அறிவித்தார். "ஒருசில மாத கால இடைவெளியில் நாம் கருத்து முரண்பாடுகள் என்பதிலிருந்து மோதல் வரையில், போர் வரையில் சென்றுள்ளோம் ... நாம் போர் எனும் கட்டத்தில் உள்ளோம், அதுவும் அது முழு போராக இருக்கக்கூடும்," என்று அவர் எச்சரித்தார்.

ஒபாமா நிர்வாகம் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான "தற்காப்பு" ஆயுதங்களை கியேவிற்கு வழங்க பரிசீலித்து வருகிறது என்று திங்களன்று வெளியான அறிக்கைகளை வெளிப்படையாக குறிப்பிட்டுக் காட்டி, இந்த வார தொடக்கத்தில் மேர்க்கெல் வெளியிட்ட அறிக்கைகளையே எதிரொலிக்கும் விதமாக, கியேவ் ஆட்சிக்கு ஆயுதம் வழங்கும் நேட்டோவின் திட்டங்களை அவர் எதிர்ப்பதாக ஹோலாண்ட் தெரிவித்தார். "தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறதென்று எனக்கு கூறப்படும் என்பதை நான் அறிவேன், ஆனால் அது வார்த்தை பயன்பாடு சார்ந்த ஒரு விடயமாகும்," என்று ஹோலாண்ட் தெரிவித்தார். உக்ரேன் நேட்டோவில் இணைவதை பிரான்ஸ் ஆதரிக்காது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரான்ஸ் ரஷ்யாவின் "நண்பன்" என்று கூறி, ஹோலாண்ட் தெரிவித்தார்: "காலம் வெகு குறைவாக உள்ளது, பிரான்ஸூம் ஜேர்மனியும் ஒன்று சேர்ந்து சமாதானம் பேணுவதற்கு எந்தவொரு முயற்சியையும், ஒன்றையும் செய்யவில்லை என்று கூறக் கூடாது."

போலாந்து மற்றும் லாட்வியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்ற ஜேர்மன் வெளியுறவு மந்திரி பிரான்ங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கூறுகையில், தீவிரமடைந்து வரும் சண்டை மீது "முழு கட்டுப்பாடும் இழந்து போகாமல்" தடுக்க முடியுமென பேர்லினும் பாரீஸூம் நம்புவதாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையை ஸ்தாபிக்கவும், கியேவ் மற்றும் கிழக்கு பிரிவினைவாதிகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை ஸ்தாபிக்கவும் ரஷ்யா "ஒரு ஆக்கபூர்வமான உரையாடலுக்குத் தயாராக" இருப்பதாக கிரெம்ளின் ஆலோசகர் யூரி உஷாகொவ் பதிலிறுத்தார்.

எவ்வாறிருந்த போதினும் பேர்லினும் பாரீஸூம் என்ன பரிந்துரைத்து வருகின்ற என்பதன் மீது சில விபரங்கள் வெளியாயின. நேற்று மாலை ஜேர்மன் தினசரி Süddeutsche Zeitung, "உக்ரேனில் புதிய சமாதான திட்டம்: பிரிவினைவாதிகளுக்கு அதிக பிராந்தியம்" என்ற தலைப்பில் அந்த திட்டத்தைக் குறித்த ஒரு கட்டுரை பிரசுரித்தது. கடந்த ஆண்டின் மின்ஸ்க் உடன்படிக்கைகளின் அடிப்படையில் அத்திட்டத்தை வரையறுத்து, அது அறிவித்தது, "அந்த பரிந்துரையின் சாராம்சம், உடனடியாக ஒரு போர்நிறுத்தம் கொண்டு வருவது மற்றும் கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கு முன்னர் ஒப்புக் கொண்டதையும் விட ஒரு கூடுதல் பகுதிகளைக் கொண்ட பரந்த சுயாட்சி வழங்குவது என்பதாகும்."  

ஆனால் ஜேர்மன் அரசாங்க செய்தி தொடர்பாளர்கள் அந்த செய்தியை மறுத்தனர். Süddeutsche Zeitung அந்த கட்டுரையை மாற்றியதுடன், பின்வருமாறு விளக்கமளித்து ஒரு குறிப்பைப் பிரசுரித்தது: "பிராந்திய பிரச்சினைகள் குறித்து மேர்க்கெல், ஹோலாண்ட் மற்றும் பொறோஷென்கோவிற்கு இடையே பேச்சுவார்த்தைகள் இருக்காது. ஆனால் கடந்த செப்டம்பரில் மின்ஸ்க் உடன்படிக்கையில் வரையப்பட்ட எல்லை கோடுகள் போலில்லாமல், பிரிவினைவாதிகளின் சமீபத்திய பிராந்திய வெற்றிகளின் வெளிச்சத்தில் வேறொன்று பேணப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்."

அதற்கு பதிலாக பிரான்கோ-ஜேர்மன் முனைவானது, ரஷ்யாவை உலக நிதியியல் அமைப்புமுறையிலிருந்து முற்றிலுமாக வெட்டிவிட அச்சுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக உள்ளது என்று வாதிட்டு பிரிட்டிஷ் Guardian பத்திரிகை ஒரு தலையங்கம் வெளியிட்டது.

அது எழுதியது, "ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் இதுவரையில் தோற்றப்பாட்டளவில் ஒரு அடையாள தாக்கமாகவே இருந்துள்ளன. பெல்ஜியத்தை மையமாக கொண்ட ஸ்விஃப்ட் (Swift) சர்வதேச பரிவர்த்தனை முறையிலிருந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் நிறுவனங்களை வெட்டுவது, அதற்கு முரணாக, இன்னும் கடுமையாக இறுக்கிப்பிடியாக இருக்கும். அதை வேகமாக செய்துவிடவும் முடியும், அதேபோல பின்னர் வேகமாக திரும்ப பெற்றுக் கொள்ளவும் முடியும். அது இதற்கு முன்னர் ஈரானுக்கு எதிராக வேலை செய்துள்ளது, 2012இல் ஸ்விஃப்ட்டில் இருந்து தடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஈரான் அணுஆயுத பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைந்தது. ... திருமதி. மேர்க்கெல் மற்றும் திரு. ஹோலாண்ட் மாஸ்கோவிற்கு செல்கையில், அவர்கள் ஸ்விஃப்ட் விடயத்தை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும்."

கியேவிற்கு அமெரிக்க ஆயுதங்களை அனுப்புவது மீது பொறோஷென்கோவுடன் விவாதிக்க திட்டமிட்டிருக்கும் கெர்ரி கூறுகையில், "உக்ரேனுக்கு தற்காப்பு [ஆயுத] உபகரணங்களை வழங்குவது" உட்பட, ஜனாதிபதி ஒபாமா அனைத்து சாத்தியக்கூறுகளையும் மீளாய்வு செய்து வருகிறார். இருந்தபோதினும், ரஷ்யா அமெரிக்க கொள்கை உடன் அதே வரிசையில் வர வேண்டும் மற்றும் "ஒவ்வொருவரின் முகத்தில் எதிர்நோக்கப்படும் ஒரு இராஜாங்க தீர்வை" ஏற்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளை ரஷ்யா நிராகரிக்க வேண்டுமென அவர் முறையிட்டார்: "இரத்தக்களரியை உடனடியாகவும் மற்றும் ஒட்டுமொத்தமாகவும் முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா அதன் பொறுப்புறுதியை எடுத்துக்காட்ட வேண்டி உள்ளது. அது கையெழுத்திட்ட உடன்படிக்கையை, மின்ஸ்க் உடன்படிக்கையை மதித்து அது அவ்வாறு செய்ய வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்வோம் ... இப்போது ஒரு நிஜமான போர்நிறுத்தத்திற்கு ஓர் உடனடியான பொறுப்புறுதி அங்கே இருக்க வேண்டும், அது வெறுமனே காகிதத்திலோ அல்லது வார்த்தைகளிலோ அல்ல, மாறாக குறிப்பிட்ட நடவடிக்கைகளை அது பின்தொடர வேண்டும்," என்றார்.

அந்த மோதலைக் கடந்து வர முடியுமென உறுதிப்படுத்தி, கெர்ரி, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸிற்கு இடையிலான "ஐக்கியத்தை" புகழ்ந்துரைத்தார்.

வெற்றுத்தனமான மற்றும் முரண்பட்ட பரிந்துரைகளுடன் குழப்பிவிடுவதற்கு இடையே, எவ்வாறிருந்த போதினும், வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் எந்தளவிற்கு அவற்றின் முனைவுகளில் ஒருங்கிணைந்துள்ளன, அல்லது அவற்றிற்கு இடையே நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கைகள் இருக்கிறதா என்பது தெளிவில்லாமல் உள்ளது. மேர்க்கெல் மற்றும் ஹோலாண்டின் பயணம் முன்னதாக வாஷிங்டனுடன் விவாதிக்கப்படவில்லை என்றும்; இருந்தபோதினும் பிரான்கோ-ஜேர்மன் நகர்வு உண்மையில் அமெரிக்க அரசாங்கம் என்னதான் கொள்கையை இறுதியாக பின்பற்றினாலும் அதனுடன் மோதலில் உள்ளதா என்பது இன்னும் தெளிவாக இல்லை என்றும் பிரெஞ்சு அதிகாரிகள் Le Nouvel Observateur க்குத் தெரிவித்தனர்.

அங்கே அமெரிக்காவிற்குள்ளேயே கூட கருத்து முரண்பாடுகள் உள்ளன. குடியரசு கட்சி செனட்டர் ஜோன் மக்கெயின் நேற்று கேபிட்டல் ஹில்லில் 12 அமெரிக்க செனட்டர்களின் ஒரு இருகட்சி குழுவை ஒன்று சேர்த்து, வெள்ளை மாளிகை கியேவிற்கு ஆயுதம் வழங்கவில்லை என்றால், அமெரிக்க அரசாங்கம் அவ்வாறு செய்யுமாறு கோரும் சட்டமசோதாவைத் தாக்கல் செய்யவிருப்பதாக அறிவித்தார்

ஒபாமா நிர்வாகம், வாஷிங்டனுக்கு விஜயம் செய்யவிருக்கின்ற மேர்க்கெலின் விஜயத்திற்குப் பின்னர், அடுத்த வார வாக்கில் இதில் முடிவெடுக்குமென கெர்ரி சுட்டிக் காட்டினார். ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளைப் பரிசீலிக்க உள்ளது.

என்ன தெளிவாக இருக்கிறதென்றால் உக்ரேனிய உள்நாட்டு போர், உலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தி உள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதியின் கருத்துப்படி மற்றும் "முழுப் போர்" குறித்த அவரது எச்சரிக்கையின்படி, 1939இல் இரண்டாம் உலக போர் வெடித்த பின்னரில் இருந்து எந்தவொரு காலத்தில் இருந்ததை விட ஐரோப்பா உலக போருக்கு நெருக்கமாக உள்ளது.

உலக மக்கள் முகங்கொடுக்கும் இந்த ஆழ்ந்த ஆபத்துக்களுக்கான பொறுப்பு, பிரதானமாக அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் அனைத்து நேட்டோ அதிகாரங்களின் மீதும் தங்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியானது உக்ரேனில் Right Sector கிளர்ச்சி குழு போன்ற நாஜி ஆதரவிலான, ரஷ்ய-விரோத படைகள் தலைமையில் ஒரு பதவிக்கவிழ்ப்பு மூலமாக எவ்வித மக்கள் ஆதரவும் இல்லாமல் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை நிறுவி, கடந்த ஆண்டு அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைப்பதென்ற வாஷிங்டன் மற்றும் பேர்லினின் முடிவால் தூண்டிவிடப்பட்டதாகும்.

வாஷிங்டனோ அல்லது அதன் ஐரோப்பிய கூட்டாளிகளோ கூறும் எதையும் முகமதிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. ஹோலாண்ட் அவரே ரஷ்யாவின் "நண்பன்" என்று கூறியுள்ள போதினும், கியேவில் கெர்ரி அறிவிக்கையில், "இதை நாங்கள் ஒரு பூஜ்ஜிய-பலன் விவகாரமாக பார்க்கவில்லை. நாங்கள் ஒருபோதும் அவ்விதத்தில் பார்க்கவில்லை. இது கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே ஒரு பிளவை அர்த்தப்படுத்தாது அல்லது அவ்வாறு இருக்கவும் கூடாது," என்றார்.

உண்மையில் ஹோலாண்டும் கெர்ரியும் இவ்வித வார்த்தைகளை பேசுகின்ற அதேவேளையில், நேட்டோ அதிகாரங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு மிகப் பரந்த இராணுவ மோதலுக்கான தயாரிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. புருசெல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் ஒரு மாநாடு ரஷ்யாவின் மேற்கு எல்லையோரங்களை ஒட்டிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பத்து ஆயிரக் கணக்கான துருப்புகளை ஆயத்தப்படுத்த நேட்டோவின் துரித எதிர்நடவடிக்கை படைகளுக்கான உள்கட்டமைப்பை அமைத்து வருகின்றன. (பார்க்கவும்: "நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் போர் படைகளை இரட்டிப்பாக்குகிறது")

பாரீஸூம் பேர்லினும் அவை திடீரென ஒரு சமாதானத்தைப் பரிந்துரைக்கின்ற போதினும், அவற்றின் கணக்கீடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஒரு பிரதான காரணி, கியேவ் ஆட்சியின் வேகமாக சீரழிந்துவரும் நிலைமையாகும். வேறு இடங்களில் இராணுவ தீவிரப்பாட்டை அவை பின்தொடர்கின்ற அதேவேளையில், பாரீஸூம் பேர்லினும் கியேவ் ஆட்சியை ஆயுதமேந்த செய்வது ஒரு நம்பகமான கொள்கையல்ல என்ற தந்திரோபாய ஆட்சேபனைகளைக் கொண்டுள்ளன. பிரெஞ்சு இராஜாங்க விவகார ஆதாரநபர்கள் தினசரி Le Mondeக்கு கூறுகையில், "உக்ரேனியர்களால் இராணுவரீதியில் [கிழக்கு உக்ரேனிய பிராந்தியம்] டொன்பாஸை மீண்டும் எடுக்க முடியாது, இந்த மூலோபாயம் தோல்வியடைக் கூடியது," என்றனர்.

டொனெட்ஸ்க் விமானநிலையத்தில் அதன் ஸ்திரபாடு மீதான கட்டுப்பாட்டை இழந்து, கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆதரவிலான போராளிகள் குழு சுற்றி வளைக்கப்பட்டுள்ளன என்பதுடன், மூலோபாய போக்குவரத்து மையமான டெபால்ட்செவ் கடுமையான துப்பாக்கிசூட்டின் கீழ் உள்ளது.    

அதேநேரத்தில் கிழக்கில் முக்கிய தொழில்துறை பிராந்தியங்களில் சண்டை நடந்து வருவதாலும், மற்றும் ரஷ்யாவில் உள்ள முக்கிய உக்ரேனிய ஏற்றுமதி சந்தைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாலும் உக்ரேனிய பொருளாதாரம் பொறிந்து போயுள்ளது. நேற்று, உக்ரேனுக்கான 17 பில்லியன் டாலர் IMF கடனின் அடுத்த நிலுவைத்தொகையை பேரம்பேச கியேவ் விழைந்திருந்த நிலையில், அது அமெரிக்க டாலருக்கு எதிரான ஹர்வ்னியாவின் (உக்ரேனிய செலாவணி) 46 சதவீத வீழ்ச்சியை நிறுத்தும் ஒரு முயற்சியாக, அதன் வட்டிவிகிதங்களை முழுமையாக 5 சதவீதம் உயர்த்தி 19.5 சதவீதத்திற்குக் கொண்டு வந்தது.