சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama refuses to rule out arming Kiev following talks with Merkel

மேர்க்கெல் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும், ஒபாமா கியேவிற்கு ஆயுதங்கள் வழங்குவதைக் கைவிட மறுக்கிறார்

By Patrick Martin and Barry Grey
10 February 2015

Use this version to printSend feedback

திங்களன்று ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடனான வெள்ளை மாளிகை கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஜனாதிபதி பராக் ஒபாமா கிழக்கு உக்ரேனிய ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக, கியேவில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவிலான ஆட்சிக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளிப்பது குறித்து அவர் பரிசீலித்து வருவதைத் தெளிவுபடுத்தினார்.

கியேவிற்கு அமெரிக்கா ஆயுதங்கள் அனுப்புவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக, புதனன்று பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் மேர்க்கெலுக்கு இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளின் முடிவைக் காண காத்திருப்பதாக ஒபாமா சுட்டிக்காட்டினார். இந்த பேச்சுவார்த்தைகள், கடந்த செப்டம்பரில் எட்டப்பட்ட ஓர் உடன்படிக்கை பொறிந்து போனதைத் தொடர்ந்து, உக்ரேனிய அரசாங்க படைகளுக்கும் மற்றும் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஒரு புதிய போர்நிறுத்த உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்வதை நோக்கமாக கொண்டதாகும்.

மேர்க்கெல் உடனான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ஒபாமா கூறினார்: “உண்மையில் இராஜாங்க நடவடிக்கைகள் தோல்வி அடைந்தால், எல்லா சாத்தியக்கூறுகளையும் கவனிக்குமாறு நான் எனது குழுவைக் கேட்டு கொண்டுள்ளேன். திருவாளர் புட்டினின் கணக்கீடுகளை மாற்ற நம்மால் வேறு என்ன வழிவகையைக் கொண்டு வர முடியும்? அத்தகைய சாத்தியக்கூறுகளில் ஒன்றாக உயிர்பறிக்கும் தற்காப்பு ஆயுதங்களின் சாத்தியக்கூறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது,” என்றார்.

ஒபாமா பின்னர் தொடர்ந்து கூறுகையில், “இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்,” என்றார்.

கியேவிற்கு ஆயுதம் வழங்குவது மோதலை வேகமாக தீவிரப்படுத்தும் என்பதுடன் ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போரின் சாத்தியக்கூறுடன் நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் இராணுவ மோதலைத் தூண்டிவிடும் என்பதை சர்வதேச அளவில் முக்கிய அதிகாரிகளும் மற்றும் சில பத்திரிகைகளும் எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு இடையிலும், சமீபத்திய வாரங்களில் அந்நாட்டின் கிழக்கு பிராந்தியங்களை இழந்துள்ள கியேவ் ஆட்சிக்கு, டாங்கி-தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்கள் போன்ற ஆயுதங்களை அனுப்பும் சாத்தியக்கூறை அமெரிக்க ஜனாதிபதி திறந்து வைத்திருக்கிறார்.

மேர்க்கெலும், பிரிட்டன் மற்றும் பிரான்சின் தலைவர்களும் கியேவிற்கு நேரடியாக ஆயுதம் வழங்கும் அமெரிக்க நகர்வை அவர்கள் எதிர்ப்பதாக சமீபத்திய நாட்களில் தெளிவுபடுத்தி உள்ளனர். அதற்கு மாறாக அவர்கள், ஒரு முன்னாள் சோவியத் குடியரசான உக்ரேனை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நகர்வுகளுக்கான ஒரு அரங்கமாக மாற்றுவதை மாஸ்கோ ஏற்றுக்கொள்ள வேண்டுமென அதை நிர்பந்திக்க, ரஷ்யாவை ஓர் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு குறைக்கக் கூடிய வகையில், கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக் அரசுகளில் அதிகரிக்கப்படும் நேட்டோ இராணுவப் படைகளுடன் சேர்ந்து அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அழைப்புவிடுக்கின்றனர்.

அவரது கருத்துக்களில் மேர்க்கெல், “இந்த முரண்பாட்டிற்கு ஓர் இராணுவ தீர்வை நான் பார்க்கவில்லை,” என்று கூறி, உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதற்கு அவரது எதிர்ப்பைச் சுட்டிக்காட்டினார். ஆனால் உக்ரேன் ஆட்சியை (இது கடந்த பெப்ரவரியில் பாசிசவாத போராளிகள் குழுவின் தலைமையில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தான் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டது) ஆதரிப்பதிலும், டொனெட்ஸ்க், லூஹன்ஸ்க் மற்றும் ஏனைய ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு அதன் ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறு ரஷ்யாவை நிர்பந்திப்பதிலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஒன்றிணைந்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் நாங்கள் எப்போதும் உடன்படாமலும் இருக்கலாம்,” என்று தெரிவித்த அவர், கியேவ் அரசாங்கத்திற்கு ஆயுதம் வழங்க வாஷிங்டன் முடிவெடுத்தாலும் கூட, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான தாக்குதலுக்கு ஆதரவளிப்பதை ஜேர்மன் தொடரும் என்று தெரிவித்தார்.

ஒபாமா, அவரது பங்கிற்கு, மேர்க்கெலையே எதிரொலிப்பதைப் போல் இருந்தது. அங்கே "சில விடயங்களில் தந்திரோபாயரீதியில் வேறுபாடுகள் இருக்கலாம்” என்றபோதினும், அடிப்படை மூலோபாயம் மற்றும் நோக்கங்களில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒருங்கிணைந்துள்ளன என்றார்.

ஒபாமா நிர்வாகத்திற்குள் உள்ள சிலர் உட்பட, அமெரிக்க இராணுவம் மற்றும் படைத்துறைசாரா அதிகாரிகளும் கியேவிற்கு கனரக ஆயுதங்கள் அனுப்பும் முடிவுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர். கடந்த சனியன்று முனீச் பாதுகாப்பு மாநாட்டில் நேட்டோவின் இராணுவ தளபதியான அமெரிக்க ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ் கூறுகையில், பிரிவினைவாதிகளை நசுக்குவதற்கு உக்ரேனிய படைகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் அனுப்புவதை கைவிடக்கூடாது என்றார்.

கடந்த வாரம் செனட் உறுதிப்படுத்தும் விசாரணையில், அடுத்த பாதுகாப்பு செயலருக்கான ஒபாமாவின் தேர்வாக இருக்கும் ஆஷ்டன் கார்ட்டர் கூறுகையில், அவர் அமெரிக்க ஆயுதங்களுடன் உக்ரேனை ஆதரிக்க மிகவும் நாட்டம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

நவபாசிசவாத "சுய ஆர்வலர்களின்" சில படைப்பிரிவுகள் உட்பட, உக்ரேனிய இராணுவப் படைகளின் ஒரு தாக்குதலுக்கு உத்தரவிட்டு உக்ரேனிய ஜனாதிபதி பொறோஷென்கோ கிழக்கு உக்ரேனின் சமீபத்திய நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளார். அவர் வாஷிங்டனின் ஒப்புதல் இல்லாமல் அவ்வாறு அதை செய்திருந்தார் என எண்ணிப் பார்க்க முடியாது.

ரஷ்ய-ஆதரவிலான படைகள் டொனெட்ஸ்க் விமான நிலையத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பாளர்களை விரட்டிவிட்டு, லூஹன்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் இடையே பிரதான சாலையில் அமைந்துள்ள டெபால்ட்செவ் நகரை அச்சுறுத்தும் வகையில் அப்பகுதியில் கூடுதலாக 500 சதுர கிலோமீட்டர்களைக் கட்டுப்பாட்டில் எடுத்து, ஒரு எதிர்தாக்குதலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஏறத்தாழ 3,000 உக்ரேனிய துருப்புகள் அந்நகரில் சிக்கி உள்ளனர்; அவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்படலாம்.

கியேவில் உள்ள அரசாங்கம் பரந்தளவில் வெறுக்கப்படுகின்ற போதினும் மற்றும் பெரும் பெரும்பான்மை சண்டையிடும் துருப்புகள் ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மை மக்களைக் கொண்ட டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கின்ற போதினும், வாஷிங்டன், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஊடகங்கள் கிழக்கு உக்ரேனில் நடந்துவரும் சண்டையை ஒரு ரஷ்ய படையெடுப்பாகவே சித்தரிக்கின்றன.

உக்ரேனில் “ரஷ்ய படைகள் தொடர்ந்து செயல்படுகின்றன", “பிரிவினைவாதிகளுக்கு உதவி வருவதுடன் தாக்குதல்களை ஒருங்கிணைக்க உதவுகின்றன" என்று கூறி, மேர்க்கெல் உடனான அவரது கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தின் தொடக்கத்தில் ஒபாமா "ரஷ்யாவே ஆக்ரோஷமாக உள்ளது" என்ற வாதங்களை மீண்டும் வலியுறுத்தினார்.

கியேவ் மற்றும் மாஸ்கோவிற்கு ஹோலாண்ட் மற்றும் மேர்க்கெலினது கடந்த வார திடீர் பயணம், புதனன்று மின்ஸ்க் சந்திப்புக்கு களம் அமைத்துள்ள நிலையில், பில்லியன் கணக்கில் மதிப்புடைய ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவு பெரியளவில் நெருக்கடியைத் தூண்டும் என்பதோடு, அது உடனே நிகழக் கூடியதாக இருந்ததன் மீதான கவலைகளால் உந்தப்பட்டதாக தெரிந்தது. ஹோலாண்ட் அவரே, உக்ரேன் நெருக்கடி மீது எழும் "முழு போர்" அபாயம் குறித்து திங்களன்று எச்சரித்தார். “ஏறத்தாழ நாம் ஏற்கனவே திரும்ப முடியாத புள்ளியில் இருக்கிறோமோ?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஐரோப்பாவில் உள்ள ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பின் (OSCE) உயர்மட்ட அதிகாரி முனீச் மாநாட்டில் இதழாளர்களுக்கு கூறுகையில், ஆயுதங்கள் வழங்கப்பட்டால் அது நெருக்கடியை "நேட்டோவிற்கு எதிராக ரஷ்யாவின் உயிர்பிழைப்புக்குரிய மோதலாக" திருப்பும் என்று அவர் அஞ்சுவதாக தெரிவித்தார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தின் ஒரு சிறிய சிறுபான்மையாலும், அமெரிக்க ஊடகங்களாலும் இதேபோன்ற கவலைகள் வெளியிடப்பட்டன. “உக்ரேனுக்கு ஆயுதம் வழங்காதீர்" என்று தலைப்பிட்டு பேராசிரியர் ஜோன் மெர்ஷெமைரால் எழுதப்பட்ட ஒரு தலையங்கம் நியூ யோர்க் டைம்ஸில் திங்களன்று பிரசுரமானது. கனடாவும் மெக்சிகோவும் ஒரு எதிர்ப்பு இராணுவ கூட்டணியில் இணைந்தால் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா என்று அக்கட்டுரை வீராவேசமாக கேள்வி எழுப்பியது.

வாஷிங்டன் போஸ்டின் ஒரு கட்டுரையாளரான வெறிப்பிடித்த ரஷ்ய-விரோத எழுத்தாளர் அன்னி ஆப்பிள்போம் கூட, உக்ரேன் நெருக்கடியிலிருந்து எழுகின்ற "ஒரு புதிய உலகப் போர்" பற்றிய கவலையை வெளியிட்டார், இருந்தபோதினும் அப்பெண்மணி "ஒரு புதிய பனிப் போரின்" குறைந்த தீமையைக் குறித்து எடுத்துரைத்தார். அதில் நேட்டோ "ஒரு இராணுவமயப்படாத மண்டலத்தின் வடிவில் டொனெட்ஸ்கைச் சுற்றி ஒரு பேர்லின் சுவரைக் கட்டியெழுப்பி, மேற்கு ஜேர்மனியைப் போல உக்ரேனின் மீதிப்பகுதியைக் கையாளும்,” என்றார்.

கட்டுரையாளரின் பரிந்துரை:

உக்ரேனை அமெரிக்கா ஆயுதபாணியாக்குவதும், மூன்றாம் உலக போருக்கான அபாயமும்