சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

German Left Party backs Merkel on Ukraine crisis

உக்ரேன் நெருக்கடியில் ஜேர்மன் இடது கட்சி மேர்கெல்லுக்கு ஆதரவளிக்கிறது

By Ulrich Rippert
12 February 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கொள்கைக்கு ஆதரவளிப்பதன் மூலமாக இடது கட்சி உக்ரேனிய நெருக்கடிக்கும் மற்றும் ரஷ்யாவுடன் அதிகரித்துவரும் ஒரு போர் ஆபத்திற்கும் விடையிறுத்துள்ளது.

அக்கட்சி தலைவர் பேர்ன்ட் ரிக்ஸிங்கர், “நாங்கள் சான்சிலர் மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்டின் இராஜாங்க முயற்சிகளை வெளிப்படையாக வரவேற்கிறோம்,” என்று குறிப்பிட்டு திங்களன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை தொடக்கி வைத்தார்.

அங்கே பேச்சுவார்த்தைகளை தவிர வேறு மாற்றீடு இல்லை என்ற மேர்க்கெலின் கருத்தையே அவரும் திரும்ப உரைத்த போது, அவர் சான்சிலரின் உத்தியோகபூர்வ செய்தி தொடர்பாளரோ என்று ஒருவர் அவரைத் தவறாக புரிந்து கொண்டிருக்கக்கூடும். பேச்சுவார்த்தைகளினூடாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை அடைவதற்கு அனைத்தும் செய்யப்பட்டிருந்தது என்று அவர் வலியுறுத்தினார்.

ஆயுதங்கள் வினியோகிப்பதன் மீது சான்சிலரின் தெளிவான அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று கூறிய ரிக்ஸிங்கர், “உக்ரேனிய மோதலை இராணுவரீதியில் தீர்க்கமுடியாது என்பதை மேர்க்கெல் மிகச் சரியாக குறிப்பிட்டு காட்டினார்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ரிக்ஸிங்கர் நான்கு முறையீடுகளை முன்வைத்தார்: உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்க கூடாது, உக்ரேனிய அரசாங்கப் படைகள் மற்றும் கிழக்கில் உள்ள போராளிகளுக்கு இடையே ஒரு போர்நிறுத்தம், உக்ரேனிய பிராந்தியங்களுக்கு கூடுதல் சுயாட்சி உரிமை, OSCE இன் (ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பு) கூடுதல் தலையீடு.

இடது கட்சியின் முறையீடுகள் முற்றிலுமாக உத்தியோகபூர்வ ஜேர்மன் அரசாங்க கொள்கையின் கட்டமைப்பிற்குள் உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, ரிக்ஸிங்கர், உக்ரேனுக்கு இராணுவ ஆயுதங்கள் வழங்க கூடாது என்ற முறையீடு ஒருதலைப்பட்சமாக மட்டுப்பட்டதல்ல என்பதை வலியுறுத்தினார். “பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆயுதங்கள் வழங்குவதும் நிறுத்தப்பட வேண்டும். அதை நான் வெளிப்படையாக வலியுறுத்துகிறேன்,” என்றார்.

அமெரிக்கா உக்ரேனுக்கு ஆயுதங்கள் வினியோகிப்பதற்கு ஜேர்மன் அரசாங்கத்தினது எதிர்ப்பை, ஒரு சமாதான கொள்கையாக எடுத்துக்காட்ட முனையும் ரிக்ஸிங்கரின் முயற்சி, உண்மைகளை நகைப்பிற்கிடமான வகையில் பொய்மைப்படுத்துவதாக உள்ளது.

நேட்டோ சக்திகள் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே, சாத்தியமானால் அணுஆயுதங்களையும் பயன்படுத்தி, ஒரு போராக உக்கிரமடைய அச்சுறுத்துகின்ற தற்போதைய நெருக்கடிக்கு, அமெரிக்காவுடன் சேர்ந்து, ஜேர்மன் அரசாங்கமும் பிரதான பொறுப்பாகும்.

17ஆம் நூற்றாண்டிலிருந்து உக்ரேன் ரஷ்யாவின் பாகமாக மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பாகமாக இருந்துள்ளபோதினும் கூட, அதை பொருளாதாரரீதியிலும் மூலோபாயரீதியிலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் செல்வாக்கு எல்லைக்குள் ஒருங்கிணைக்கும் கூட்டு உடன்படிக்கைக்கு பின்னால் இருந்த உந்துசக்தி பேர்லின் ஆகும். அப்போதைய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்தபோது, ஜேர்மன் அரசாங்கம் பாசிச சக்திகளின் ஆதரவுடன் மேற்கத்திய-ஆதரவு ஆட்சி ஒன்றை அதிகாரத்திற்கு கொண்டு வந்த ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைக்க உதவியது. இது மாஸ்கோவிடமிருந்தும் மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள கிழக்கு உக்ரேனிய மக்களிடமிருந்தும், முற்றிலும் நிகழுமென்று அனுமானிக்கக்கூடிய ஒரு எதிர்வினையைத் தூண்டிவிட்டது.

அப்போதிருந்து சான்சிலர் மேர்க்கெலும் வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றிவளைப்பதை ஊக்குவித்துள்ளனர். அவர்கள் பொருளாதார தடைகளைத் திணித்துள்ளதுடன், ரஷ்ய எல்லையோரங்களை ஒட்டி நேட்டோ படைகளைப் பலப்படுத்துவதை ஆதரித்தனர். ரஷ்யாவிற்கு எதிராக பத்தாயிரக் கணக்கான சிப்பாய்களை ஒருசில நாட்களுக்குள்ளேயே ஒன்றுதிரட்ட நேட்டோவிற்கு உதவும் வகையில், துரிதமாக நிலைநிறுத்தும் ஒரு புதிய படையின் தாக்குமுகப்பு, இந்த ஆண்டு ஜேர்மன் இராணுவத்தின் தலைமையில் இருக்கும்.

எவ்வாறிருந்த போதினும் அமெரிக்கா பெரும் பிரயத்தனத்தோடு ஓர் இராணுவ மோதலை நோக்கி வேலை செய்யுமென மேர்க்கெலும் ஸ்ரைன்மையரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கியால் (Zbigniew Brzezinski) கூறப்பட்டதைப் போல, வாஷிங்டன் உக்ரேனை ஒரு நீண்ட மற்றும் பெரும் செலவுடைய போரில் ஈடுபடுத்த நோக்கம் கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தின் போது, பிரிஜேஜென்ஸ்கி ஆப்கானிஸ்தானுக்காக அதே கொள்கையை அபிவிருத்தி செய்தார், அங்கு சோவியத் ஒன்றியத்திற்கெதிரான ஒரு பினாமிப் போரில் அமெரிக்கர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆயுதபாணியாக்கினர்.

அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள தனியார் பாதுகாப்புத்துறை வலைத்தளம் Stratfor எழுதியது: “ஜேர்மன் மூலோபாயத்தில் அங்கே உள்ளார்ந்த ஒரு முரண்பாடு உள்ளது உக்ரேனில், தற்போதைய அரசாங்கத்தை மேலே கொண்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு முந்தைய ஆதரவாளராக ஜேர்மனி இருந்தது. ரஷ்ய அல்லது அமெரிக்க விடையிறுப்புகளை ஜேர்மனியர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை, ரஷ்யாவுக்கு எதிரான எந்த இராணுவ எதிர்நடவடிக்கையிலும் அவர்கள் பங்கு கொள்ள விரும்பவில்லை. அதேநேரத்தில் ஜேர்மனி உக்ரேனிய அரசாங்கத்திற்கான அதன் ஆதரவைத் திரும்ப பெறவும் விரும்பவில்லை.”

கீயேவ் ஆட்சிக்கு ஆயுதங்கள் வினியோகிப்பதில் ஜேர்மனின் தயக்கமானது, எண்ணற்றவர்களைப் பலிகொடுக்கும் ஒரு நீண்டகால யுத்தத்திற்குள் உக்ரேனை மூழ்கடித்துவிடும் மற்றும் ஜேர்மனியின் மீதாக எதிர்மறைப் பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பதால் இந்த தயக்கமானது, அதனை ஒரு சமாதானத்துக்கான சக்தி என்று அர்த்தப்படுத்தாது. ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தீவிரப்படுத்தப்பட்ட தடைகளை அவர் ஆதரிக்கிறார் என்பதிலோ அல்லது மோதலைத் தீவிரப்படுத்துவதில் வாஷிங்டனுடன் அணி சேர்வதைத் தொடர்வார் என்பதிலோ மேர்க்கெல் எந்த சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.

வாஷிங்டனிடமிருந்து இன்னும் விலகுமாறு அழைப்புவிடுக்கும் ஜேர்மன் ஆளும் மேற்தட்டின் குரல்கள் எந்தவிதத்தில் இருக்கிறதென்றால், அவர்கள் ஜேர்மனியை இராணுவரீதியில் பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் அதை ஒரு ஆக்ரோஷ வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு செய்து வருகின்றனர்.

ஜேர்மன் ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி வொன் டெர் லெயனும் ஓராண்டுக்கு முன்னர், ஜேர்மனி அதன் பரப்பெல்லை மற்றும் செல்வாக்குக்கு ஏற்ப அது "ஐரோப்பாவிலும் உலகளவிலும்" ஒரு பாத்திரம் வகிக்க வேண்டி உள்ளது, மற்றும் "முற்றிலும் நெருக்கடிகள் மற்றும் கிளர்ச்சிகளின் ஓர் உலகில்" ஜேர்மனிக்கு ஒரு செயலூக்கமான இராணுவ வெளியுறவு கொள்கை அவசியமாகிறது என்று பிரகடனப்படுத்திய போதே இந்த நோக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி இந்த கொள்கையை நடைமுறையில் செயல்படுத்தியதாகும்.

பேர்லின் மற்றும் வாஷிங்டனுக்கும் இடையே பதட்டங்கள் எழுகின்ற நிலையில், முற்றிலும் உத்தியோகபூர்வமாக ஜேர்மன் ஏகாதிபத்திய கொள்கைகளிலிருந்து விலகி இருப்பதைக் கூட இடது கட்சி கைவிட்டுள்ளது. அது தான், உக்ரேனில் மேர்க்கெல் மற்றும் ஜேர்மனியின் நடவடிக்கைகளை பாராட்டும் ரிக்ஸிங்கர் வார்த்தைகளின் நிஜமான முக்கியத்துவமாகும்.

இடது கட்சியின் பிரதிநிதிகள் தற்போது நீரில் மீன் நகர்வதைப் போல ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளிடையே நகர்ந்து வருகின்றனர். அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளில் நால்வர், உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாற சமீபத்திய முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றினர். நாடாளுமன்ற வெளியுறவுத்துறை விவகார குழுவின் இடது கட்சி பிரதிநிதி வொல்ஃப்காங் கேஹ்ர்க்க, இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகள் உட்பட எல்லா துறைகளுடனும் அவர் நன்கு இணைந்துள்ளதாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்டார்.

அட்லாண்டிக் கடந்து பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு இடையே, இடது கட்சி தன்னைத்தானே ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஒரு பாதுகாவலராக நிலைநிறுத்தி வருகிறது. பனிப்போர் ஆண்டுகளின் போது, இடது கட்சியின் முன்னோடிக் கட்சி மட்டுமே ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பதவியிலிருந்த கட்சிகளில் இரும்பு திரையின் மறுபுறம் நின்றது. இப்போதோ அவர்கள் நேட்டோ மற்றும் அமெரிக்க போர் கொள்கை மீதான அவர்களது விமர்சனங்களை, ஜேர்மனி வல்லரசு அரசியலுக்கு திரும்புவதற்கு ஆதரவளிப்பதுடன் சேர்ந்து இணைக்கின்றனர்.

இது தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் முன்னாள் கட்சி தலைவர் ஆஸ்கர் லஃபோன்டைனின் கருத்துக்களின் அர்த்தமாக உள்ளது. Junge Welt பத்திரிகையின் ரோசா லூக்சம்பேர்க் மாநாட்டில் அவர் கூறுகையில், ஜேர்மனி நேட்டோ உறுப்பினராக இருக்கும் வரையில் மற்றும் நேட்டோவின் உள்கட்டமைப்பு அமெரிக்காவினால் மேலாளுமை செலுத்தப்படும் வரையில், ஜேர்மனி ஒரு உண்மையான இறையாண்மை கொண்ட அரசாக இருக்காது. நேட்டோ அங்கத்துவத்துடன் இணைந்துள்ள அடிமை ஊழியம் மற்றும் " “பங்களிப்புக்கு கடமைப்பாடுடையதாய் இருத்தல் ஆகியவற்றைக் கடந்து வர வேண்டுமென அவர் அறிவித்தார்.

லஃபோன்டைன் தொடர்ந்து குறிப்பிட்டார்: “அமெரிக்க அரசு தலைமையிலான ஒவ்வொரு போரிலும், நடைமுறையில் ஜேர்மனி பங்கெடுத்துள்ளது ஏனென்றால் அவர்கள் தலைமையிலான எல்லா போர்களும் மத்திய ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்களை சார்ந்திருந்தன. நாம் ஒவ்வொரு விடயத்திலும் பங்கெடுப்பவர்களாகத்தான் இருந்தோம். இந்த விடயம் அவ்வாறு நீடிக்கும் வரையில், நாம் ஒரு இறையாண்மை கொண்ட நாடே அல்ல,” என்றார்.

ஜேர்மன் இறையாண்மைக்கான முறையீடு வலதுசாரி வட்டாரங்களின் ஒரு முக்கிய முறையீடாக உள்ளது. அமெரிக்க இராணுவக் கொள்கை மீதான இடது கட்சியின் விமர்சனங்கள், ஜேர்மன் தேசியவாத நிலைப்பாட்டின் மீது அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்பதை அது தெளிவுபடுத்துகிறது.