சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation union pressures workers to end strike

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு தொழிலாளர்களை நெருக்குகின்றது

By M. Devarajah and W.A. Sunil
13 February 2015

Use this version to printSend feedback

அரசாங்க சார்பு தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), தங்கள் வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக போராடிய இலங்கையின் மத்திய மலையகப் பகுதியான மஸ்கெலியாவில் கிளனியூஜ் தோட்டத்தை (Glenuige Estate) சேர்ந்த 600 தொழிலாளர்களின் உறுதியான வேலை நிறுத்தத்திற்கு குழி பறித்தது. தொழிலாளர்கள் இன்று வேலைக்கு திரும்ப உள்ளனர்.


வேலைநிறுத்தத்தில் உள்ள தொழிலாளர்கள்

டீசைட் பெருந்தோட்டத்தின் (Deeside plantation) கிளனியூஜ் பிரிவு தொழிலாளர்கள் இரு கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தை தொடங்கினர்: கடந்த ஏப்ரல் மாதம் 16 கிலோகிராமில் இருந்து 18 கிலோகிராம் வரை அதிகரிக்கப்பட்ட கொழுந்து பறிக்கும் அளவை மீண்டும் 16 கிலோவுக்கே குறைக்க வேண்டும்; மற்றும் ஏப்ரல் முதல் கூடுதலாக பறித்த இரண்டு கிலோவுக்கு கொடுப்பவு வேண்டும்.

தோட்டத்தின் உரிமையாளரான மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, தோட்ட நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே இந்த அதிகரிப்பைச் செய்வதாக தொழிலாளர்களுக்கு கூறியிருந்தது. அதிகரிக்கப்பட்ட உற்பத்திக்கு பணம் செலுத்தப்படவில்லை. மேலும், நிறுவனம் இப்போது அதிகரித்த இலக்கை நிரந்தரமாக்க முயன்று வருகிறது.

தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் நிர்வாகத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற நிலையில், தொழிலாளர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா), மலையக மக்கள் முன்னணி (மமமு) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் தலைமையில் இருந்து புறம்பாக வேலைநிறுத்தத்தை தொடங்கினர். "நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் கைகோர்த்து வேலைசெய்கின்றன. அதனாலேயே நாம் சுயாதீனமாக வேலை நிறுத்தத்தை தொடங்க முடிவெடுத்தோம்," என ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்துக்கு கூறினார்.

தொழிலாளர் தேசிய சங்க பிரதேச தலைவர் நகுலேஸ்வரன், நேற்று நிர்வாகம் கொழுந்து பறிக்கும் அளைவை முந்தைய நிலைக்கு குறைக்க உடன்பட்டதாக தொழிலாளர்களிடம் கூறினார். மேலதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துக்கு ஊதிய நிலுவையை தொழில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். எனினும், இலக்கைக் குறைக்க எந்தவொரு எழுத்துமூல உறுதிமொழியும் கிடையாது. அத்துடன், தொழில் நீதிமன்றம் வழக்குகளுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதோடு அடிக்கடி நிர்வாகத்தின் பக்கம் சாய்ந்துகொள்ளும்.

தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கம்பனியின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க முடியும் என்ற உறுதியளித்தார். எனினும், ஒரு தொழிலாளி எமது நிருபரிடம் கூறியது போல், "இது தொழிற்சங்கங்களின் மற்றொரு காட்டிக்கொடுப்பாகும். இப்போது எந்த மாற்றீடும் இல்லாததால் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும்."

அனைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களை போலவே, தொழிலாளர் தேசிய சங்கமும் ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது. அதன் தலைவர் ஆர். திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக உள்ளார். வேலைநிறுத்தம் தொடர்ந்தால், வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டு அதே பிரச்சினையை எதிர்கொள்ளும் ஏனைய தோட்டங்களுக்கும் அது பரவும் சாத்தியம் இருப்பதனால், தொழிலாளர் தேசிய சங்கம் உடனடியாக இந்த வேலை நிறுத்தத்துக்கு முடிவு கட்ட தலையிட்டது.

முற்றிலும் ஊழல் மிகு தொழிலாளர் தேசிய சங்கம், தோட்ட கம்பனிகளின் பக்கம் சார்ந்துள்ளதோடு தனது சலுகைகளை அதிகரித்துக்கொள்ள கேடுகெட்ட அரசியல் தந்திரங்களில் மூழ்கிப் போயுள்ளது. திகாம்பரம் ஐக்கிய தேசியக் கட்சியில் (யூஎன்பி) போட்டியிட்டு 2010 தேர்தலில் வெற்றிபெற்றாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குத் தாவினார்.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலுக்கு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர், இராஜபக்ஷ ஆளும் கூட்டணியில் தொழிலாளர் தேசிய சங்கத்தை வைத்துக்கொள்வதற்காக திகாம்பரத்துக்கு அமைச்சர் பதிவி கொடுத்தார். எனினும், சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து விலகி இரண்டு வாரங்களின் பின்னர், மற்றொரு அரசியல் குட்டிக்கரணம் அடித்த திகாம்பரம், சிறிசேன முகாமில் சேர்ந்துகொண்டார்.

ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களும் இவ்வாறு விலைபோகின்றவை ஆகும். மமமு தலைவர் வி. ராதாகிருஷ்ணன் ஒரு அமைச்சரவை அமைச்சராவார். இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமான் முன்னைய இராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போதிலும், சமீபத்தில் புதிய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து புதிய அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

மறுபுறம், தோட்டத் தொழிலாளர்கள், அனைத்து கொடுப்பனவுகளுடன் 620 ரூபா (5 அமெரிக்க டாலருக்கும் குறைவான) வறுமை நிலை ஊதியத்தையே தொடர்ந்து பெறுகின்றனர். அவர்களது மாத வருமானம் சுமார் 25 நாட்கள் அல்லது அதற்கு குறைவான வேலை நாட்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். வாழ்க்கைச் செலவு கூர்மையாக அதிகரிக்கும் நிலையில், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூட அந்த சம்பளம் போதுமானதாக இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் மீது உற்பத்தி அதிகரிப்பை சுமத்துவதற்காக கம்பனிகளுடன் இரகசிய உடன்பாடுகளை எட்டுவதில் ஒத்துழைத்துள்ளன. 2012ல், வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டங்களின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வேகப்படுத்தலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஆனாலும், தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்து கம்பனிகள் தங்கள் நோக்கங்களை திணிக்க அனுமதித்தன.

ஊதியங்கள் மற்றும் நிலைமைகளுக்கு குழி பறிப்பதானது கென்யா, சீனா, வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற ஏனைய தேயிலை உற்பத்தியாளர்களிடம் இருந்து இலங்கை எதிர்கொள்ளும் சந்தைகளுக்காக கழுத்தறுக்கும் சர்வதேச போட்டியினால் இயக்கப்படுகிறது. சமீபத்தில், பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோஷன் இராஜதுரை, உற்பத்தி செலவின் 70 சதவீதம் உழைப்புக்கே செலவிடப்படுகிறது என சுட்டிக்காட்டி, செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இராஜதுரை கடந்த அக்டோபரில் டெயிலி எப்டீ இணையத்துக்கு கூறியதாவது: "நாம் கேட்டுக்கொள்வது என்னவெனில், தொழிலாளி நாள் ஒன்றுக்கு பறிக்கும் கொழுந்தின் அளவை மிக நியாயமான முறையில் குறைந்தது 2 கிலோவாவது அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இது கம்பனியின் வரவு-செலவை சமப்படுத்த நீண்ட காலத்துக்கு உதவும். இத்தகைய ஒரு இலக்கு ஒரு அலகின் உற்பத்தி செலவுகளை 7 சதவீதத்தால் குறைக்கும், ஆனால் தொழிலாளர்களுக்கோ இது முதுகெலும்பை முறிப்பதையே அர்த்தப்படுத்துகிறது.

தேயிலை தோட்டங்களுக்கு உரிமையாளராக இருந்து நடத்திச்சென்ற அரச கூட்டுத்தாபனங்களை தனியார் மயமாக்கியதில் இருந்து இரண்டு தசாப்தங்களாக, தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 345.000ல் இருந்து 208.000 வரை குறைத்துவிட்டன. தோட்டத்தில் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதால் பல தொழிலாளர்கள் வேறு வேலைகள் தேடத் தள்ள்பட்டனர. தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஜனத் தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும். பலர் வேலையின்றி உள்ளனர் அல்லது நிரந்தர தொழில் இன்றி உள்ளனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியினாலேயே தோட்டக் கம்பனிகளால் வேலை வேகத்தை அதிகரிக்கவும், நிலைமைகளை குறைக்கவும் முடிகிறது. சுதந்திர வர்த்தக வலயங்கள் உட்பட ஏனைய தனியார் துறை நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் ஒரே பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர்.

சிறிசேன அரசாங்கம் சமீபத்தில் அதன் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பொதுத்துறை ஊழியர்களின் மாத ஊதியத்தை இரண்டு தவணைகளில் 10,000 ரூபாவால் அதிகரிப்பதாக அறிவித்தது. அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இந்த உயர்வானது 2006ல் இருந்து இராஜபக்ஷ அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை முடக்கி வைத்திருந்தமை தொடர்பான சீற்றத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு வஞ்சகமான நாடகமாகும்.

எனினும், அரசாங்கம் தனியார் துறை தொழிலாளர்களுக்கு அத்தகைய அதிகரிப்பை முன்மொழியவில்லை. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனியார் துறை சம்பளத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், "அவர்கள் நிறுவனங்களை மூட வேண்டும்" என்று கூறினார். நிறுவனங்களுக்கு அரை மனதான வேண்டுகோள் விடுத்த அவர், எதிர்காலத்தில் 2,500 ரூபாய் மாத சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்றார்.


சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் தோட்டத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றுகிறார்

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) உறுப்பினர்கள், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி பற்றி கலந்துரையாட கிளனியூஜ் வேலைநிறுத்தத்தில் தலையிட்டனர். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை காக்க முடியும்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமாக தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவை அமைத்து அதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய துறை தொழிலாளர்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்ற முன்மொழிவை ஏற்றுக்கொண்டனர். மாத ஊதியம், எதேச்சதிகாரமாக வேலைச் சுமையை அதிகரிப்பதை எதிர்ப்பது, உத்தரவாதப்படுத்தப்பட்ட விடுமுறை, அதே போல் தோட்டங்களில் முறையான மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் வீட்டுவசதிகளை உருவாக்குவது பற்றிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

ஒருசில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அவசர சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை அறிவு பூர்வமாக திட்டமிடும் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தரமான வாழ்க்கைத் தரம் மற்றும் வேலை நிலைமைகளை ஸ்தாபிக்க முடியும்.