சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The drive to dismantle pensions in the United States

அமெரிக்காவில் ஓய்வூதியங்களை அகற்றுவதற்கான முனைவு

Andre Damon
14 February 2015

Use this version to printSend feedback

அமெரிக்காவெங்கிலும் உள்ள மாகாணங்கள் மற்றும் உள்ளாட்சிகள் தற்போதைய மற்றும் ஓய்வூபெற்ற பொதுத்துறை பணியாளர்களது ஓய்வூதிய உதவிகள் மீது ஒரு நேரடி தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் முற்றிலுமாக சட்டத்தை மீறி நடந்து வருகின்றன என்பதுடன், பணியாளர்கள் பல தசாப்தங்களாக கடுமையாக போராடி ஈற்றியுள்ள ஓய்வூதிய உதவிகளைக் காப்பாற்றி வைத்திருக்கும் மாநில அரசியலமைப்பு பாதுகாப்புகளை அவை ஒழித்துக்கட்ட முயன்று வருகின்றன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நீதிபதி கிறிஸ்டோபர் க்லென் (Christopher Klein), திவால்நிலைமையிலிருந்து மீள்வதற்கான ஓர் உடன்படிக்கையின் பாகமாக கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரம், அதன் தொழிலாளர்களது ஓய்வூதிய உதவிகளை வெட்டும் திட்டத்தை முன்னெடுத்து செல்ல அனுமதிக்கும் வகையில் ஒரு அனுமதி உத்தரவில் கையெழுத்திட்டார். அந்த உடன்படிக்கை உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ நல உதவிகளை அகற்றும் அதேவேளையில், புதிதாக நியமிக்கப்படுபவர்களின் ஓய்வூதிய உதவிகளை வெட்டும், மற்றும் பணியாளர்களின் ஓய்வூதிய பிடிப்புதொகைகளை அதிகரிக்கும்.

நடப்பு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியங்களை வெட்ட திவால்நிலையை கண்காணிக்கும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிடுவதில், க்லெனினால் அவரது உத்வேகத்தை மறைக்க முடியவில்லை. மாநில பொதுத்துறை தொழிலாளர் ஓய்வூதிய முறை CalPERS, “இந்த விடயத்தில் இரும்பு கரம் கொண்டு அதன் வழியில் இறுக்கியுள்ளது,” என்று அறிவித்தார். ஆகவே ஓய்வூதிய நிதி தான் "எளிதில் தாக்க கூடியதாக உள்ளது” என்றவர் குரூர திருப்தியுடன் கூறினார்.

இலினோயில், மாநில தொழிலாளர்களுக்கான ஓய்வூதியங்களை வெட்டும் ஒரு 2013 சட்டத்தைக் கடந்த ஆண்டு வட்டமேசை நீதிபதி ஜோன் பெல்ஜ் இரத்து செய்திருந்த நிலையில், மாநில அதிகாரிகளால் அது மீண்டும் ஒருமுறை தாக்குதல் பாதைக்கு கொண்டு வரப்படுகிறது. பொதுத்துறை தொழிலாளர் ஓய்வூதியங்களைக் "குறைக்கவோ அல்லது முடக்கவோ கூடாதென" வெளிப்படையாக மாநில அரசியலமைப்பு அறிவிக்கின்ற போதினும் கூட, ஒரு ஜனநாயகக் கட்சியாளரான அட்டார்னி ஜெனரல் லிசா மாடிகன், “பொதுமக்கள் பாதுகாப்பிற்காக" என்ற பெயரில் நடப்பு ஓய்வூதியதாரர்களின் ஆதாயங்களை வெட்ட மாநிலத்தின் "பொலிஸ் அதிகாரங்கள்" அனுமதிக்கிறதென வாதிட, இலினோய் உச்சநீதிமன்றத்தின் முன்னால் வருவதற்கு தயாரிப்பு செய்து வருகிறார்.

இந்த வாதம், அமெரிக்க அரசியலமைப்பின் பத்தாவது திருத்தத்தைச் எதேச்சதிகார முறையில் மற்றும் அர்த்தமற்ற விதத்தில் வாசிப்பதன் அடிப்படையில் உள்ளது. அந்த திருத்தம் குறிப்பிடுகிறது, “அரசியலமைப்பின்படி அந்த அதிகாரங்கள் அமெரிக்காவுக்காக வழங்கப்பட்டவையோ, அல்லது மாநிலங்களால் தடைவிதிக்க கூடியவையோ அல்ல, அவை அந்தந்த மாநிலங்களுக்கு, அல்லது அந்த மக்களுக்கு உரியதாகும்.” ஒரு திவால்நிலைமைக்கான நீதிமன்றம் வழியாக செல்லாமலேயே, அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட ஓய்வூதியத்தை வெட்ட இந்த திருத்தம் அரசை அனுமதிக்கிறது என்று இலினோய் ஜனநாயகக் கட்சியினர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த வாதம் இலினோய் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பொதுத்துறை தொழிலாளர்களின் ஓய்வூதியங்களுக்குப் பின்னால் செல்ல ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும்.

பென்சில்வேனியாவில், நடப்பு மற்றும் எதிர்கால ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உதவிகளை முடக்க மற்றும் புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கான ஓய்வூதியங்களை 401(k)-பாணியிலான ஓய்வூதிய திட்டங்களைக் கொண்டு பிரதியீடு செய்ய அம்மாநில சட்டமன்றம் ஒரு சட்டமசோதா மீது விவாதம் நடத்தி வருகிறது. புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் அம்மாநிலம் எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியங்களில் பிரதான வெட்டுக்களைத் திட்டமிட்டு வருகிறது.

இந்நகர்வுகளும்—ஏனைய மாநிலங்கள் மற்றும் நகரங்களின் இதேபோன்ற நடவடிக்கைகளும்—ஜூலை 2013இல் தொடங்கி, கடந்த நவம்பரில் முடிவுற்ற டெட்ராய்ட் திவால்நிலைமையால் அமைக்கப்பட்ட முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து வந்துள்ளன. இவை அந்த திவால்நிலைமை தாக்கல் செய்யப்பட்ட அந்நேரத்திலேயே உலக சோசலிச வலைத் தளத்தால் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை முற்றிலுமாக நிரூபணம் செய்கின்றன.

ஜூலை 20, 2013இல், அந்நகரம் திவால்நிலைமையைத் தாக்கல் செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் WSWS எழுதியது:

திவால்நிலை அறிவிப்பு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தாக்கங்களைக் கொண்டதாகும். நாடெங்கிலும் பொருளாதார நெருக்கடியால் நிதியியல்ரீதியாக முடக்கப்பட்டிருக்கும் மற்ற நகரங்களுக்கு டெட்ராயிட் ஒரு முன்னுதாரணமாக ஆக்கப்படும். ஓய்வூதியங்களையும் சுகாதார நல உதவிகளையும் உடைப்பதற்கு திவால்நிலை நீதிமன்றத்தை பயன்படுத்துவதென்பது, மில்லியன் கணக்கான ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் பிற நகராட்சி  ஊழியர்கள் மீதும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு மடைதிறந்து விடும்.

ஐரோப்பாவெங்கிலும் மற்றும் அதனைக் கடந்தும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கிரீஸ் எவ்வாறு ஒரு முன்மாதிரி ஆக்கப்பட்டதோ, அதைப் போல கிரீஸில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களையும் கடந்ததாக இருக்கின்ற, டெட்ராயிட் திவால்நிலையானது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அடுத்த கட்டத் தாக்குதலுக்கு பாணியை அமைத்து தரும். ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தொழிலாள வர்க்கம் கடுமையான,  மற்றும் பல சமயங்களில் குருதி தோய்ந்த போராட்டத்தின் மூலமும் தியாகத்தின் மூலமும் வென்றெடுத்த ஒவ்வொரு வெற்றியும் இப்போது பணயத்தில் உள்ளது.

மாநில மற்றும் உள்ளாட்சி மட்டத்தில் பொதுத்துறை பணியாளர்களது ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல், தனியார்துறை ஓய்வூதியங்களில் என்ன மிஞ்சியிருக்கிறதோ அவற்றை கலைப்பதற்கும் ஒரு உந்துதலை உள்ளடக்கி உள்ளது. நடப்பு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியங்களை வெட்ட முடியாது என்று ஆணையிட்ட தசாப்தகால பெடரல் முன்மாதிரிகளை மாற்றி, பலதுறை-முதலாளிகளின் ஓய்வூதிய நிதியிலிருந்து நடப்பு ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகைகளை வெட்ட அனுமதிக்கும் ஒரு சட்டத்தை காங்கிரஸ் டிசம்பரில் நிறைவேற்றியது.

தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவதில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பாகுபாடற்ற இரக்கமின்மையுடன், ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் முற்றிலும் இருகட்சியைச் சார்ந்ததாகும். அது டெட்ராய்ட் திவால்நிலைமையில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஒபாமா நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் உதவிகளின் மீதான ஒபாமா நிர்வாக தாக்குதலில் ஓய்வூதியங்களை நீக்கும் முனைவானது ஒரேயொரு உட்கூறாகும். கட்டுபடியாகின்ற மருத்துவ சட்டத்தின் நன்னிமித்தங்களின் கீழ் தொழிலதிபர்கள்-வழங்கிய மருத்துவ உதவிகளை அகற்றியமை மற்றும் 2009இல் வாகனத்துறையின் மறுசீர்திருத்தத்துடன் தொடங்கப்பட்ட ஊதியங்கள் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகியவையும் அதில் உள்ளடங்குகின்றன.

ஓய்வூதியங்கள் வழங்குவதற்கு அங்கே "பணமில்லை" என்ற வாதமே வழங்கம் போல திரும்ப கூறப்படுகிறது. இதுவொரு பொய்யாகும்.

முதலாளிகள், தனியார் தொழில்வழங்குனர்கள் அத்துடன் அரசாங்கங்கள் என இவை அதிகரித்துவரும் ஓய்வூதிய செலவுகளை அதிகளவில் தாங்கொணாதவையாக பார்ப்பதை "சமூக ஒப்பந்தத்தின் மாற்றம்" என்று குறிப்பிட்ட வாஷிங்டன் போஸ்ட் கூட, “இந்த ஓய்வூதிய உதவிகளைக் குறைக்கும் அழுத்தம், ஒரு நீண்டகாலமாக பங்குச் சந்தை வருவாய்கள் அதிகரித்திருப்பதற்கு இடையில் மட்டும் வரவில்லை, மாறாக பலமான நகர வருவாய் வளர்ச்சியைத் தூண்டிவிடுமென்ற எதிர்பார்ப்பில் கட்டிட-நில வணிகத்துறையின் மீளுயர்விற்கு இடையிலும் வருகிறது" என்று குறிப்பிட கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தது.

பங்கு விலைகளின் மலைப்பூட்டும் உயர்வு வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் கையளிக்கப்பட்டதால் தூண்டிவிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு தோற்றப்பாட்டளவில் இலவச பணத்தின் ஒரு முடிவில்லா ஓட்டம் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கம் இரக்கமற்ற விதத்தில் மற்றும் பொறுப்பற்ற விதத்தில் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தேடிச் செல்வதற்காக, உலகமெங்கிலுமான இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க நூற்றுக்கணக்கான பில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளன. இவை தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளில் ஒரு வரலாற்று திருப்பத்தின் மூலமாக திருப்பி செலுத்தப்பட உள்ளன.

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், இளைஞர்களுக்கு எதிர்காலமே இல்லை, தொழிலாளர்கள் வறுமை ஊதியங்களில் வாழ வேண்டும், வேலைவாய்ப்பற்றோர் பட்டினியில் விடப்பட வேண்டும், முதியவர்கள் முன்கூட்டியே சவக்குழிக்குள் புதைக்கப்பட வேண்டும்.

எது மிகவும் அசாதாரணமானதாக இருக்கிறதென்றால், ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இல்லாதிருப்பதே ஆகும். இங்கே நீண்ட காலத்திற்கு முன்னரே வணிக பெருநிறுவனங்களுக்காக தங்களைத்தாங்களே மாற்றிக் கொண்ட தொழிற்சங்கங்கள், ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், அவை ஓய்வூதியங்களைக் குறைப்பதிலும், தாக்குவதிலும் ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினருடன் கூடி வேலை செய்துள்ளன. சான்றாக ஓய்வூதிய நிதி உதவிகளைக் குறைக்க அனுமதிக்கும் பெடரல் சட்டத்திற்கு Teamsters அவர்களின் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இலினொய்ஸில் உள்ள பல தொழிற்சங்கங்கள், ஓய்வூதிய உதவிகளைக் குறைக்க ஜனநாயக கட்சியினரின் முறையீடுகளை ஆதரித்து வருகின்றன. டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு எழுந்த எதிர்ப்பை ஒடுக்குவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பாத்திரம் வகித்தன.

இத்தகைய வலதுசாரி அமைப்புகளும், அவற்றை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஊழல்மிகுந்த செயலதிகாரிகளும் ஏதோ ஓய்வூதிய நிதி நிர்வாகிகளைப் போல, அவர்களின் நிதிய நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறைக் கொண்டுள்ளனர். அவர்கள் அந்த நிதிகளை மிதக்க விடுவதற்காக தொழிற்சங்க உறுப்பினர்களின் உதவிகளைக் குறைக்கவே கூட அதிகமாக விருப்பமுற்றுள்ளனர்.

சமூக பதட்டங்கள் உடையும் கட்டத்திற்கு கட்டமைந்து வருகின்றன. அமெரிக்க எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்த மற்றும் காட்டிக்கொடுக்க ஒருங்கிணைந்த எஃகுத்துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் முயற்சிகளுக்கு இடையிலும் அது, வேலைகள், ஊதியங்கள் மற்றும் உதவிகளில் தசாப்தகாலமாக வெட்டுக்களைக் கண்டுள்ள அமெரிக்க தொழிலாளர்களின் அதிகரித்துவரும் போர்குணம் மற்றும் போராடும் தீவிரத்தன்மையைக் குறிக்கிறது. இதையும் மற்றும் வரவிருக்கும் ஏனைய பல போராட்டங்களையும் முன்னெடுத்து செல்வதற்கு தொழிலாளர்கள், பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனப்பட்டு, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் இருகட்சி முறையிலிருந்து உடைத்துக் கொண்டு, மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.