சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Oppose the threat against Front Line Socialist Party!

முன்னிலை சோசலிசக் கட்சி மீதான அச்சுறுத்தலை எதிர்த்திடு!

Socialist Equality Party (Sri Lanka)
6 February 2015

Use this version to printSend feedback

முன்னிலை சோசலிசக் கட்சியின் (முசோக) மத்திய குழு உறுப்பினரான குமார் குணரட்ணத்தை கைது செய்வதற்கான முயற்சி உட்பட அந்த கட்சி மீது தொடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை சோசலிச சமத்துவக் கட்சி கடுமையாக கண்டனம் செய்கின்றது. அது குணரட்ணத்தினதும் அவர் சார்ந்த முசோக யினதும் ஜனநாயக உரிமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.

ஜனவரி 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் பிரேம்குமார் குணரத்தினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதோடு ஜனவரி 29 அன்று அவரை கைது செய்வதற்கு திணைக்கள அதிகாரிகள் முயற்சித்திருந்தாலும் அவரது சட்டத்தரணியின் தலையீட்டினால் அது தடுக்கப்பட்டுள்ளது. முசோக விடுத்துள்ள அறிக்கைகளில், சுற்றுலா வீசாவில் வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குணரத்தினத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என குறிப்பிடப்ட்டுள்ளது. வீசா பெற்றுக்கொள்ளும் போது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அதிகாரிகளிடம் தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த போதிலும், சுற்றுலா வீசாவே குணரத்தினத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக முசோக சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், சுற்றுலா வீசாவில் வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கட்டளையிடுவது பிற்போக்கானதாகும். அது சகல முதலாளித்துவ அரசுகளாலும், அரசியல் எதிரிகளை நசுக்குவதற்காக திணிக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறை சட்டமாகும். குணரத்தினத்துக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் குடியகல்வு-குடிவரவு நிர்வாகிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை ஆயுதமே வெளிப்பட்டுள்ளது.

பொலிஸ் விதிமுறைகளின் மூலம் எதேச்சதிகார ஆட்சி முறையை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேனவின் கீழ், இலங்கை ஜனநாயக ஆட்சிக்கு மாறியுள்ளது அல்லது மாறிவருகிறது என்ற பொய் பரந்தளவில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. சிறிசேனவினதும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) அரசாங்கத்தினதும் ஜனநாயக விரோத ஆட்சி பற்றிய ஒரு அறிகுறியே முசோக மீது தொடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னணியுடன் அதற்குச் சார்பான அரசாங்கத்திற்கு உறுதியளித்து ஆட்சிக்கு வந்த சிறிசேன, ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் கொடூரமாக வெட்டித் தள்ளுவார் என சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஜனாதிபதி சேர்தலில் சுட்டிக் காட்டியது. உலக முதலாளித்துவ நெருக்கடியினால் மேலும் ஆழமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை சுமத்துவதற்கும் உலக யுத்தத்தை நோக்கி நகரும் புவிசார் அரசியல் பதட்ட நிலைமைகளின் மத்தியில் இலங்கையை அமெரிக்க போர் வண்டியுடன் பிணைத்து விடுவதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள சிறிசேனவின் அரசாங்கம், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட முக்களின் ஜனநயாக உரிமைகளை நசுக்கித் தள்ளுவதற்கு நிச்சயமாக செயற்படும். இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அற்ப விலை குறைப்புக்கள் உட்பட மிகைப்படுத்தலின் கீழ் உள்ள உண்மையான யதார்த்தம் இதுவே.

சிறிசேன வந்தவுடன் ஜனநயாகமாற்றம் இடம்பெறுவது பற்றி வாய்ச்சவடால் விடுக்கும் நவ சம சமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடதுகளினதும்இடைவேளை ஒன்று கிடைத்துள்ளதாக கருத்தை உளறும் முசோக வினதும் அரசியலை சோசலிச சமத்துவக் கட்சி முற்றுலும் நிராகரிக்கின்றது. இந்த மாயைகளின் மூலம் சிறிசேனவின் அரசாங்கமே பலமடைகின்றது. நவ சம சமாஜக் கட்சி வெளிப்படையாகவே அரசாங்கத்தின் தேசிய நிர்வாக சபையில் இணைந்துகொண்டுள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் 25 மாவட்டங்களிலும் பொலிஸ் அதிகாரம் உட்பட இராணுவத்தை தயார் நிலையில் வைப்பதை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன பெப்பிரவரி 2 அன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்தமை தற்செயலானது அல்ல. அவசரகால சட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கி இராஜபக்ஷ அரசாங்கத்தால் கூர்மைப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமும் பிரமாண்டமான இராணுவமும் சிறிசேன அரசாங்கத்தின் கையில் உள்ளது. வர்க்கப் போராட்டம் வெடிக்கும் நிலையில், இராஜபக்ஷவுக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் செயற்படுவர்.

குணரத்தினம் மற்றும் அவரது கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அரசாங்கத்தால் தயார்படுத்தப்படும் பரந்த தாக்குதலின் பாகமாக இருப்பதனால், அதனை எதிர்க்குமாறும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சகல தட்டினரில் இருந்தும் சுயாதீனமாக சோசலிச கொள்கையின் அடிப்படையில் தயாராகுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.