சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP presidential candidate addressed the university students at Peradeniya

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன பேராதனை பல்கலைக்கழக மாணவர் மத்தியில் உரையாற்றினார்

Our correspondent
6 January 2015

Use this version to printSend feedback

2015 சனவரி 8 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்ட விவாதம் ஒன்று, டிசம்பர் 29 மாலை பேராதனை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவும் பங்குபற்றினார். அவர்களுடன் முன்னிலை சோசலிச கட்சி (முசோக) வேட்பாளரது பிரதிநிதியான சமீர கொஸ்வத்தவும் ஐக்கிய சோசலிச கட்சி (யூஎஸ்பீ) அபேட்சகரது பிரதிநிதி சிறிநாத் பெரேராவும் கலந்துகொண்டனர்.

வேட்பாளர்களது கல்விக் கொள்கை பற்றி நிகழ்த்தப்பட்ட இந்த விவாதத்தை அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் தவிர ஸ்ரீ ஜயவரதனபுர, ரஜரட்ட மற்றும் ஏனைய சில பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு சமூகமளித்திருந்தனர்.

அங்கு முதலாவதாக உரையாற்றிய பெரேரா, “கல்வியை அடிப்படை மனித உரிமையாக சட்ட நூலில் இடம் பெறசெய்தல் தமது  கட்சியின்இறுதி கொள்கையாகும் என தெரிவித்தார். “அது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். எனினும் அரசாங்கத்திடம் கல்வி பற்றி எந்தவொரு கொள்கையுமே கிடையாது,” என அவர் தெரிவித்தார்.

1988 - 1989 காலகட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யப்பட்ட, பேராதனை பல்கலைக் கழக பீ. குணபால, வெலிமடையை சேர்ந்த ஆர். பிட்டவல ஆகிய தோழர்கள் இருவரையும் நினைவு கூர்ந்து, விஜேசிறிவர்தன தனது உரையை ஆரம்பித்தார். அனத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இலவசக் கல்விகாக போராடிய குணபால, பிட்டவல ஆகிய இருவரும், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களாவர்.

அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் அரசியலுடன் தமது கட்சிக்கு ஆழமான வேறுபாடுகள் இருப்பினும், இந்த விவாதத்திற்கு தம்மையும் அழைத்தமைக்காக சிறிவர்தன நன்றியை தெரிவித்தார்.

கல்வியை அடிப்படை சமூக உரிமைகளில் ஒனறாகக் கருதும் தனது கட்சி, சகலருக்கும் சமத்துவமான உயர்தர மட்டத்திலான கல்வி இலவசமாக கிடைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இலங்கையில் உள்ள அரச கல்வி கூட, 1940ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியானது தொழிலாளர்களை முதலாளித்துவத்தில் இருந்து சுயாதீனமாக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்காக நடத்திய போராட்டத்தின் ஓர் பிரதி விளைவாகவே ஸ்தாபிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

முதலாளித்துவம் இன்று வளர்ச்சியை நோக்கி அன்றி பொறிவை நோக்கியே பயணிப்பதால், அந்த மட்டுப்படுத்தப்பட்ட இலவசக் கல்வியை கூட அழித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். “முதலாளித்துவம் மரண ஓலமிடும் இக்கால கட்டத்தில் கூட, கல்வி உரிமையை பாதுகாக்க முடியும் என எனக்கு முன் பேசிய பெரேரா தெரிவித்தார். அவர் போன்ற போலி இடதுகளுக்கு எதிராக, முதலாளித்துவத்தை தூக்கிவீசி கட்டியெழுப்பப்படும் சோசலிச அமைப்பினுள் மட்டுமே கல்வி உரிமையை காக்க முடியும் என எமது கட்சி தெரிவிக்கின்றது என்று அவர் கூறினார்.

இதன் பின் உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் சமீர கொஸ்வத்த, தமது கட்சியின் போலி இடது கொள்கையை பிரசித்திப்படுத்தியவாறு, மாணவர் இயக்கம் எனப்படுவதை உயர்த்திப்பேசியதன் மூலம், இலவசக் கல்வி உரிமையை பேணிக் காக்கும் போராட்டதில் தொழிலாள வர்க்கத்திற்குள்ள வரலாற்று பாத்திரத்தை ஒதுக்கித் தள்ளினார்.

இரண்டாம் சுற்றில் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஏன் இடதுசாரி கட்சிகளல் ஒன்றிணைய முடியாது, என்று ஒரு மாணவர் வினவினார்.

விஜேசிறிவர்தன பின்வருமாறு பதிலளித்தார். “இடதுகள் எனப்படுவது, முதலாளித்துவத்துக்கு எதிராக சோசலிசத்துக்காக போராடிய அமைப்புகளுக்கு பொதுவில் குறிப்பிடப்படும் பெயராகும். இந்த இடதுகள் ஒரு கால கட்டத்தில் தொழிலாள வர்கத்தின் நலன்களுக்காகவும் அந்த வர்க்கத்தின் சுயாதீனத்திற்காகவும் போராடின. உள்நாட்டிலோ அல்லது உலகத்திலோ இன்று அத்தைகைய இயக்கமொன்று இல்லை. இன்று இடதுகள் என்ற பெயரில் உள்ளவர்கள், தொழிலாள வர்க்க போராட்டத்தையும் வர்க்க சுயாதீனத்தையும் காட்டிகொடுத்து, முதாளித்துவ அமைப்பை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ள போலி இடது அமைப்புகளே ஆவர். ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சியும் இத்தைகைய போலி இடது அமைப்புகளாகும். அதனால், அவர்களுடன் எமக்கு கிஞ்சித்தளவும்  தொடர்பு கிடையாது.

முதலாளித்துவ வர்க்க கட்சிகள் மற்றும் அவற்றுக்குப் பின்னால் செல்லும் அமைப்புகளிடமிருந்து தொழிலாளர வர்கத்தை சுயாதீனப்படுத்திக் கொள்ளாமல் முதலாளித்துவத்துக்கு எதிராக போராட முடியாது. ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் இந்த மாணவர் ஒன்றியத்துக்கு தலைமை வகிக்கும் முன்னிலை சோசலிச கட்சியும் அதற்கு முழு எதிரிகளாகும்.”

மாணவர்கள், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும், அதன் அர்த்தம் யாதெனில், தொழிலாள வர்க்கத்தினதும் மார்க்சிசத்தினதும் பாரம்பரிய மரபுகளை பிரதிநிதித்துவம் செய்யும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கில் கவனம் செலுத்தி, சோசலிச சமத்துவக் கட்சியையும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துகான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புபையும் கட்டியெழுப்புவதாகும் என கூறி அவர் தனது பதிலை முடித்தார்.

அதன் பின் மாணவர் மத்தியில் இருந்து எழுப்பப்பட்ட ஏறத்தாழ அனைத்துக் கேள்விகளும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரையே இலக்கு வைத்தன. அந்த கேள்விகள் மாணவர் ஒன்றியத்தின் முக்கிய செயற்பாட்டாளர்கள் அல்லது முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையிலான மாணவர் ஒன்றியத்தினால் தவறாக வழிநடத்தப்பட்டவர்களால் தொடுக்கப்பட்டன என்பது தெளிவாக தெரிந்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் இயக்கம் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது, மாணவர் இயக்கத்துக்குள் அவர்கள் எவ்வாறு தலையீடு செய்கின்றனர்?” என ஒரு பார்வையாளர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த விஜேசிறிவர்தன கூறியதாவது: “கல்வி உள்ளடங்கலான சமூக உரிமைகள் மீதான தாக்குதலின் ஆணிவேர்களையும், அவற்றை தோற்கடிப்பதற்கான விஞ்ஞான பூர்வமான முன்னோக்கையும் தெளிவுபடுத்துவது ஒரு புரட்சிகர இயக்கத்தின் முக்கிய பொறுப்பாகும். சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்புக்கு எதிராக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்  ஏற்படுத்தும் ஜனநாயக விரோத தடைகள் மற்றும் தாக்குதல்களையும் எதிர்கொண்டவாறு ஐவைஎஸ்எஸ்இ அத்தகைய வேலைத் திட்டத்துக்காக தொடர்ந்தும் செயற்படுகின்றது. உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியாகும் எமது பகுப்பாய்வுகளின் ஆயிரக்கணக்கான பிரதிகள் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்படுகின்றன. உலக யுத்தம் மற்றும் சமூக  எதிர்புரட்சிக்கு எதிராக சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப ஐவைஎஸ்எஸ்இ முன்னெடுக்கும் போராட்டம் பிரபலமானதாகும்.”

ஜேர்மனியில் ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில், ஜேர்மனியில் பாசிசம் தலைதூக்குதல் மற்றும் உலக யுத்த அச்சுறுத்தல் பற்றி ஐவைஎஸ்எஸ்இ ஒழுங்குசெய்த கூட்டத்தை நிர்வாகம் தலையிட்டு குழப்ப முயற்சித்தாலும், மாணவரது பலத்த ஆதரவினால் அதனை தோற்கடிக்க முடிந்தது என்றும் விஜேசிறிவர்தன தெரிவித்தார்.

கல்வி உட்பட ஏனைய சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைத் திட்டத்திற்குள் சிறைப்படுத்தி, அவர்களது போர்க் குணத்தை கரைத்துவிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவமும் போலி இடதுகளும், தொழிலாளர்களுக்கு எதிராக அவதூறு சுமத்திவருகின்றன. அவர்களைப் பின்பற்றும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், தொழிலாள வர்க்கம் போராடி ஸ்தாபித்த, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு சவால் விடுக்கும் வழிமுறைகளில் இருந்து மேலும் மேலும் தூர விலகி, சத்தியாக்கிரகம் போன்ற அமைதிவாத மற்றும் காந்தியவாத வழிமுறைகளுக்குள் மாணவரை சிறைப்படுத்தியுள்ளது. இத்தைகைய அரசியலால் ஊக்குவிக்கப்பட்டுள்ள ஒரு பார்வையாளர் இப்படி ஒரு கேள்வியை கேட்டார். “அண்மைக் காலங்களில் தொழிலாளர்கள் கல்வி உரிமைக்காக போராட்டம் நடத்தாத நிலைமைக்குள், மாணவர்கள் தனித்து போராடி வெற்றி பெறவில்லையா?” என அவர் வினவினார்.

கடந்த காலங்களில் தொழிலாள வர்க்கத்தினை சூழ ஒருங்கிணைந்து சோசலிசத்துக்காக நடத்திய போராட்டத்தின் போதே மாணவர்கள் போராட்டத்தில் வென்றுள்ளனர். அரசாங்கம்  சிலசமயம் மாணவர்களின் பிரசாரத்தினால் ஒரு அடி பின்வாங்க கூடும். எடுத்துக்காட்டாக 1980 ஆரம்பத்தில் யூஎன்பீ அரசாங்கம் கொண்டுவந்த கல்வி வெள்ளை அறிக்கைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பின் மத்தியில் பின் வாங்கியது. ஆயினும் தற்போது கல்வி அந்த இலக்கையும் விஞ்சும் பிரமாண்டமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றிருந்தால் அவ்வாறு நடந்திருக்குமா?”

இக் கேள்விகளுக்கு பதிலளித்த மற்ற இருவரும், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்த போதிலும், தாக்குதல்களின் தோற்றுவாயை தெளிவுபடுத்தவில்லை. பொதுமக்கள் மத்தியில்  மாணவர் போராட்டத்தை எடுத்துச்செல்வதன் மூலம் அதை வெற்றிபெறச் செய்யலாம் என்று கொஸ்வத்த குறிப்பிட்டார். அவர் வர்க்க கோட்டை அழித்து மாணவர் போராட்டத்தை மிகைப்படுத்தி பேசினார்.

2008ல் வெடித்த பூகோள நிதி நெருக்கடியின் பின், பொறிந்து விழுந்த வங்கிகளை காப்பாற்றுவதற்காக பல மில்லியன் டாலர்களை செலவழிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அனைத்து நாடுகளது ஆளும் வர்கங்களும், தொழிலாள வர்கம் பல தசாப்தங்ளாக போராடி பெற்ற கல்வி உரிமைகள் உட்பட சகல சமூக உரிமைகளையும் அழித்தொழித்து வருகின்றன.

நாட்டினுள் சமூக எதிர்ப் புரட்சியின் மூலமும் வெளிநாடுகளில் தமது எதிரிகளது செலவிலும் தமது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஏகாதிபதியம் மேற்கொள்ளும் முயற்சி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வவையில் முழு மனித குலத்தையுமே அழிவுக்குட்படுத்தும் அணுவாயுத உலக யுத்த அபாயத்தை முன்கொணர்ந்துள்ளது.

அமெரிக்கா தனது வீழ்ச்சி கண்டுவரும் உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முற்படுகையில், மென்மேலும் வன்முறையான வகையில் தனது இராணுவ பலத்தை கட்டவிழ்த்து விடுகிறது. சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதை இலக்காக கொண்ட ஒபாமா ஆட்சியின் மூலோபாயமானஆசியாவில் முன்நிலை என்பதன் கீழ், இலங்கை உட்பட முழு ஆசிய கண்டமும் யுத்த நீர்ச்சுழிக்குள் இழுபட்டுச் செல்கின்றது. யுத்த விரோத தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்பி, இலாப அடிப்படையிலான முதலாளித்துவத்தை உலக பூராகவும் தூக்கி வீசி, அனைத்துலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே, உலக யுத்த அச்சுறுத்தலை தோற்கடிக்கவும் கல்வி உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும், என விஜேசிறிவர்த்தன தெளிவுபடுத்தினார்.

சோசலிச சமூகம், புதிய மனிதர், நவீன நாட்டுக்காக நாம் ஒரு இடைமருவு காலத்தின் பேரில் பொருளாதாரத்தை தேசிய அவசியத்தின் அடிப்படையில் பேணப்படும் பொருளாதாரமாக மாற்றுவதாக பெரேரா கூறிக்கொண்டார்.

ஒருங்கிணைந்த பூகோள பொருளாதாரம் உருவாகியுள்ள நிலைமைக்குள், தேசிய பொருளாதாரம் என்ற கோட்பாட்டின் வரலாற்று ரீதியான பொருந்தாமையை விஜேசிறிவர்த்தன சுட்டிக்காட்டினார். “தனிநாட்டில் சோசலிசம்என்ற ஸ்ராலினின் எதிர்ப் புரட்கர கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சோவியத் ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவின் ஸ்ராலினிச அரசுகள் பொறிந்து வீழ்ந்ததும், இந்தியாவின் தேசிய பொருளாதார கொள்கை முதலாளித்துவ சந்தை பொருளாதாரமாக மாற்றமெடுத்தமையும் உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டதன் அழுத்தத்தின் கீழேயே ஆகும்.

தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனதுக்கு இந்தபோலி இடதுகள் பங்கம் விளைவிக்கும் விதத்தையிட்டு விஜேசிறிவர்த்தன விளக்கியதை உறுதிப்படுத்தும் வகையில், மாணவர் உட்பட்ட தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தாம் சகல அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுவதாக பெரேரா கூறினார். இதற்காகவே அவர்கள் வலதுசாரி யூஎன்பீயுடனும் ஒரே மேடையில் அமர்ந்துகொண்டார்.

பெரேரா, கொஸ்வத்த ஆகியோரை போலி இடதுகளாக வகைப்படுத்தி விஜேசிறிவர்த்தன விளக்கியமையை இட்டு ஆத்திமுற்ற பெரேரா உரத்து கூச்சலிட்டார். மார்க்சிச ஆய்வுதொடர்பாக இந்த போலி இடதுகளின் பரம விரோதத்தை காட்சிப்படுத்திய பெரேரா, தான் வளிமண்டலத்தில் அன்றி வேலைத்தளங்கள், வீதிகள், தொழிலாளர் மற்றும் மாணவர் போராட்டங்களில் பங்குபற்றுவதாக கூறி, சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் பகுப்பாய்வுகள் மீது உறுமினார்.

இந்தளவு பிரமாண்டமான உலக யுத்த அச்சுறுத்தலை மனித இனத்திடமிருந்து மறைத்து இருட்டடிப்புச் செய்வதில் உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகமும் வர்த்தக ஊடகங்களும் ஏனைய போலி இடதுகளும் வகிக்கும் பாத்திரத்துடன் ஒரே அணியில் சேர்ந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் பிற்போக்கு கொள்கைகளை முன்கொணர்ந்த கொஸ்வத்த, உலக யுத்தம் பற்றிய பிரச்சனை மிகச் சிறிய, மனம் கொள்ளைகொள்ளும் கதையாகும் என கொடூரமாகத் தெரிவித்தார்.

1990களில் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளராக இருந்த கொஸ்வத்த, ஜேவிபீயின் தொழிலாள விரோத, பேரினவாத அரசியலுக்குள் மாணவர்களை மூழ்கடிப்பதற்காக பிரதான பாத்திரம் வகித்தவராவார். தமிழ் மக்களுக்கு எதிராக கொழும்பு ஆளும் வர்க்கம் முன்னடுத்த கொடிய இனவாத யுத்தத்தின் பிரதான ஊதுகுழலாக செயற்பட்ட ஜேவிபீயின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த கொஸ்வத்தவுக்கு, உலக யுத்தம்இரசனை மிக்கதாக இருப்பது ஒன்றும் ஆச்சியமானதல்ல.