சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

US historians criticize Tokyos efforts to whitewash war crimes

போர் குற்றங்களை மூடிமறைப்பதற்கான டோக்கியோவின் முயற்சிகளை அமெரிக்க வரலாற்றாளர்கள் விமர்சிக்கின்றனர்

By Ben McGrath
16 February 2015

Use this version to printSend feedback

1930கள் மற்றும் 1940களின் போது "ஆற்றுப்படுத்தும் பெண்களை" (comfort women) ஜப்பானிய இராணுவம் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்தது பற்றிய பாடப்புத்தக வரிகளை மாற்றுவதற்காக ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அமெரிக்க பதிப்பகம் McGraw-Hill க்கு அழுத்தமளிக்க செய்த சமீபத்திய முயற்சிகளை தொடர்ந்து, அமெரிக்க வரலாற்றாளர்களின் 19 பேர் கொண்ட ஒரு குழு, வரலாற்று செய்திகளை மூடிமறைப்பதற்கான அவரது முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய வரலாற்றாளர்களுடன் இணைந்து நிற்பது" என்று தலைப்பிட்ட பெப்ரவரி 5 ஆம் தேதி அறிக்கையில் அமெரிக்க கல்வியாளர்கள், வரலாற்றை மூடிமறைக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் முயற்சிகளை மட்டும் விமர்சிக்கவில்லை, மாறாக கடந்த காலத்தைத் தணிக்கை செய்யும் ஏனைய அரசாங்கங்களின் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த தலைப்பே தெளிவுபடுத்துவதைப் போல, ஆற்றுப்படுத்தும் பெண்கள்" அல்லது ஜப்பானிய சிப்பாய்களுக்கு பாலியல் அடிமைகளாக "ஆற்றுப்படுத்தும் மையங்களுக்கு" பலவந்தமாக கொண்டு வரப்பட்ட பெண்கள் குறித்த உண்மையை புலனாய்வு செய்ய வேலை செய்துள்ள அவர்களது சக ஜப்பானிய நண்பர்களுக்கு இந்த வரலாற்றாளர்கள் அவர்களது ஆதரவை வழங்கி உள்ளனர்.

அந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் அமெரிக்க வரலாற்றுத்துறை கூட்டமைப்பின் தலைவராக பரிசீலிக்கப்பட்டு வரும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழ பேராசிரியர் பேட்ரிக் மேனிங், மற்றும் அபே விமர்சித்த McGraw-Hill பாடப்புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான ஹவாய் பல்கலைக்கழத்தின் ஹேபெர்ட் ஜிக்லெர் ஆகியோரும் உள்ளடங்குவர்.

நியூ யோர்க்கில் உள்ள ஜப்பானிய தூதரக ஜெனரல் கடந்த ஆண்டின் இறுதியில், McGraw-Hill பதிப்பகத்தின் பாடப்புத்தகத்தை திருத்தி எழுதுவதற்கு அழைப்பு விடுக்க அப் பதிப்பகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். ஆனால் அந்நிறுவனம் அதற்கு மறுத்துவிட்டது. அந்த புத்தகங்களை வாசித்தபோது அவர் "அதிர்ச்சி அடைந்ததாக" ஜனவரி இறுதியில் அறிவித்த அபே, அதுபோன்ற விடயங்களை "திருத்துவதற்கு" பெரும் முயற்சிகள் எடுக்குமாறு அழைப்புவிடுத்தார்.

அமெரிக்க கல்வியாளர்களது அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, வரலாற்றாளர்களாக, நாங்கள் இரண்டாம் உலக போரின் போது ஜப்பானிய ஏகாதிபத்திய சேவையில் ஒரு கொடூரமான பாலியல் பிரயோக முறையின் கீழ் பாதிக்கப்பட்ட, 'ஆற்றுப்படுத்தும் பெண்கள்' என்று நாசூக்காக குறிப்பிடப்பட்டவர்களைக் குறித்து, ஜப்பானிலும் சரி வேறெங்கேனும் சரி வரலாற்று பாடநூல்களில் உள்ள கருத்துக்களை ஒடுக்குவதற்கான ஜப்பானிய அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகளுக்கு எங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். ஆகவே நாங்கள் அரசுகளினது முயற்சிகளை, அல்லது அரசியல் காரணங்களுக்காக தங்களின் ஆய்வின் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமாறு வரலாற்றாளர்களையோ அல்லது பதிப்பாசிரியர்களையோ அழுத்தம் அளிப்பதற்கான சிறப்பு நலன்களை எதிர்க்கிறோம்.

வரலாற்றாளர்களின் அந்த அறிக்கை, ஜப்பானின் சுவோ (Chuo) பல்கலைக்கழக பேராசிரியர் யோஷிமி யோஷியாகி போன்ற ஜப்பானிய வரலாற்றாளர்களுக்கும் ஆதரவை வெளியிட்டது. அது தொடர்ந்து குறிப்பிட்டது, ஜப்பானிய அரசாங்கத்தின் ஆவணக்கிடங்குகளில் மற்றும் ஆசியா முழுவதிலும் உயிர்பிழைத்திருப்பவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் வரலாற்றாளர் யோஷிமி யோஷியாகியின் மிக கவனமான ஆய்வு, சர்ச்சைக்கு இடமின்றி அரசால்-நடத்தப்பட்ட பாலியல் அடிமைமுறையைப் போன்றவொரு முறையின் இன்றியமையா அம்சங்களைத் தருவித்துள்ளது.

யோஷியாகி நவீன வரலாற்றின் பேராசிரியரும், 1995இல் முதலில் ஜப்பானிய மொழியிலும் பின்னர் 2002இல் ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்பட்ட "ஆற்றுப்படுத்தும் பெண்கள்" என்ற நூலின் ஆசிரியரும் ஆவார். 1992இல் பாதிக்கப்பட்டவர்கள் முதன்முதலில் முன்னுக்கு வரத் தொடங்கிய போது, யோஷியாகி ஆற்றுப்படுத்தும் பெண்களின் பாலியல் அடிமைமுறை குறித்து ஆய்வு செய்ய தொடங்கினார். அவர் பாதுகாப்புத்துறை நூலகத்தில் (அப்போது அது பாதுகாப்புத்துறை முகமை என்று அறியப்பட்டது) காணக் கிடைத்த, 1930களிலிருந்து தொடங்கி பரந்துபட்ட ஆவணங்களை பயன்படுத்தி இருந்தார். போர் குற்றங்களுக்கு ஆதாரமாக இருந்தவை உட்பட பல ஜப்பானிய பத்திரிகைகள் இரண்டாம் உலக போரின் இறுதி நாட்களில் அழிக்கப்பட்டதால், இந்த வகையிலான தகவல் விலைமதிப்பற்றதாக உள்ளது.

விபச்சாரத்தைக் கொண்டு சென்றதில் இராணுவம் வகித்த பாத்திரத்தைக் காட்டும் இத்தகைய ஆவணங்களை பயன்படுத்தி இருந்த அதேவேளையில், யோஷியாகி 2007இல் நியூ யோர்க் டைம்ஸிற்கு குறிப்பிடுகையில், பல விடயங்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் ஒருபோதும் எழுதப்படவில்லை. அதாவது அவர்கள் [ஆற்றுப்படுத்தும் பெண்களை] பலவந்தமாக நியமித்தார்கள் அதுபோன்ற விடயம் ஒருபோதும் முதல் இடத்தில் எழுதப்படவில்லை, என்பதையும் குறிப்பிட்டார்.

இராணுவத்தால் நடத்தப்பட்ட "ஆற்றுப்படுத்தும் மையங்களுக்குள்" பலவந்தபடுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 200,000 ஆக இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. அவர்களில் பலர் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏனைய ஆசிய நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். அந்த பெண்கள், பெரும்பாலும் பருவ வயது பெண்கள், ஜப்பானிய இராணுவ விபச்சாரத்தில் கொடூரமான நிலைமைகளை அனுபவித்தனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

சில பெண்கள் நேரடியாக பாலியல் அடிமைமுறைக்குள் பலவந்தபடுத்தப்பட்டதுடன், ஏனையவர்கள் ஏமாற்றப்பட்டு, பின்னர் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அங்கே வைக்கப்பட்டிருந்தனர். சான்றாக கொரியாவில், பெரும்பாலும் தொழிற்சாலையில் நல்ல வேலைகள் அல்லது இதர வேலை கிடைக்கும் என்ற போலி வாக்குறுதிகளுடன், பெண்களை வளைத்து பிடிக்க ஜப்பானிய இராணுவம் கொரிய தரகர்களைச் சார்ந்திருந்தது. இத்தகைய பெண்களில் பெரும்பாலானவர்கள் வறிய குடும்பங்களில் இருந்து வந்தார்கள். வலதுசாரி ஜப்பானிய தேசியவாதிகள் பொதுவாக, ஆற்றுப்படுத்தும் பெண்கள்" ஏற்கனவே விபச்சாரத்தில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் விருப்பத்துடன் தான் ஆற்றுப்படுத்தும் மையங்களில் வேலை செய்தனர் என்றும் வாதிடுகின்றனர். ஆரம்ப கட்டங்களில் இது உண்மையாக இருந்திருக்கலாம் என்பதற்கு அங்கே சில ஆதாரங்கள் இருக்கின்ற போதினும், ஜப்பானிய ஏகாதிபத்திய போர் முனைவு விரிவடைந்தபோது, இளம் பெண்களை "ஆற்றுப்படுத்தும் பெண்களாக" மாற்றுவதில் கட்டாயப்படுத்தும் மற்றும் மிரட்டும் நடைமுறைகள் அதிகரித்தன.

இந்த முறையை ஜப்பானிய இராணுவம் தான் புதிதாக கட்டமைத்தது, இந்த முறையை உருவாக்க முன்முயற்சி எடுத்தது, அதை பேணியதுடன், அதை விரிவாக்கியது, அதன் விளைவாக மனித உரிமைகளை மீறியது, என்று 2007இல் யோஷியாகி நியூ யோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார். அது [விபச்சாரத்திலிருந்து] முற்றிலும் வேறுப்பட்டதாகும், என்றார்.

ஆற்றுப்படுத்தும் பெண்கள்" மீதான வரலாற்று செய்திகளைத் திருத்தி எழுதுவதற்கான அபேயின் முயற்சி, ஒரு பரந்த நிகழ்ச்சிநிரலில் அமைந்த வெறும் ஒரேயொரு அம்சமாகும். அந்த அரசாங்கம் "ஜப்பானின் கௌரவத்தை மீட்டமைக்க" ஒரு இராஜாங்க மற்றும் பிரச்சார தாக்குதலுக்காக அரை பில்லியன் டாலருக்கும் கூடுதலாக ஒதுக்கி உள்ளது. அது அந்நாட்டின் பிம்பத்தைப் பெருமைப்படுத்த மற்றும் கடந்த கால போர் குற்றங்களை மூடிமறைக்க, உலகெங்கிலும் "ஜப்பானிய மையங்களை" (Japan Houses) ஸ்தாபிக்குமென்று சமீபத்தில் அறிவித்தது.

முதல் "ஜப்பானிய மையங்கள்" 2016இன் இறுதி வாக்கில் இலண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், மற்றும் சோ பாவ்லோவில் அமைக்கப்படும், ஆனால் அத்திட்டம் அத்துடன் முடிந்துவிடாது. நாம் முழு திருப்தி அடையவில்லை. அனைத்து வழிவகைகளையும் ஒன்றுதிரட்டி, நாம் ஜப்பானின் செய்தி பரப்பும் மூலோபாயத்தைப் பலப்படுத்த வேண்டும் ஒரு நிஜமான அர்த்தத்தில், அதன் மூலமாக ஜப்பானுக்கு எது நல்லது என்பது குறித்து (மற்றவர்கள்) முறையாக புரிந்துகொள்ள முடியும், என்று அபேயின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் (LDP) ஒரு சட்டவல்லுனர் யோஷியாகி ஹராதா தெரிவித்தார்.

ஜப்பான் ஆய்வுகள் முறைக்காக சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு ஜப்பான் 5 மில்லியன் டாலர் வழங்கியது. ஜப்பான் இதுபோன்றவொரு நிதியுதவியை வழங்கி இருப்பது, நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் இது தான் முதல்முறை. தென் கொரியா மற்றும் சீனா உடனான ஒரு செய்தி பரப்பும் போரில் ஜப்பான் தோல்வி அடைந்து வருவதாக அங்கே ஓர் அச்சம் நிலவுகிறது, நாம் அவற்றை எட்டிப் பிடித்தாக வேண்டும், என்று கோபே பல்கலைக்கழகத்தின் கன் கிமுரா தெரிவித்தார்.

இந்த திட்டமிட்ட சித்தாந்த பிரச்சாரம் அபே அரசாங்கத்தின் ஜப்பானிய மீள்இராணுவமயமாக்கல் மற்றும் போருக்கான தயாரிப்பின் பாகமாகும். அது புதிய தலைமுறை இளைஞர்களை போருக்குள் இழுக்க அழுத்தம் அளிப்பதற்காக நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டிவிடுவதையும், அதேவேளையில் கடந்த காலத்தின் குற்றங்களை மட்டுமல்ல, மாறாக ஜப்பானிய அரசாங்கத்தின் தற்போதைய இராணுவ ஆயத்தப்படுத்தல் மீதான அன்னியநாட்டு விமர்சனங்களை மழுங்கடிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

இவை அனைத்தும் சீனாவை பொருளாதாரரீதியில் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைத்து பலவீனப்படுத்த வடிவமைக்கப்பட்ட, அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்படுகிறது. அந்த "முன்னெடுப்புக்கு" அபே அரசாங்கம் முழுவதுமாக ஒத்துழைக்கிறது என்ற போதினும், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் அமெரிக்காவின் அத்தகைய நலன்களுடன் மோதலுக்கு வந்தாலும் கூட, அவற்றை முன்னெடுத்து செல்வதற்காக அது மீள்இராணுவமயமாக்கல் செய்யவும் முனைந்து வருகிறது.