சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Pseudo-left embrace Syriza’s alliance with the Independent Greeks

சுதந்திர கிரேக்கர் கட்சியுடனான சிரிசாவின் கூட்டணியை போலி-இடது அரவணைக்கிறது

By Chris Marsden
16 February 2015

Use this version to printSend feedback

சுதந்திர கிரேக்கர்கள் (Independent Greeks - Anel) உடன் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கம் உருவாக்குவதென்ற சிரிசாவின் முடிவு, அக்கட்சியின் எண்ணற்ற போலி-இடது அனுதாபிகளிடையே முதலில் அரசியல் சங்கடத்தை தூண்டியது.

ஒருவிதமான "பரந்த", “ஒருங்கிணைந்த" ஒரு முன்மாதிரியாக மற்றும் எங்கெங்கினும் பின்பற்றக்கூடிய ஒரு "இடது" கட்சியாக, சிரிசா பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் கிரீஸின் முதலாளித்துவ வர்க்க வலதின் பிரதான கட்சியான புதிய ஜனநாயகத்துடனான, ஒரு மூர்க்கமான தேசியவாத வலதுசாரி உடைவிலிருந்து உருவான ஒரு கட்சியின் கூட்டணியுடன் சிரிசா பதவி ஏற்றது.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு அழைப்புவிடுப்பதுடன், Anel, இரண்டாம் தலைமுறை புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவதையும் எதிர்க்கிறது. அனைத்திற்கும் மேலாக அக்கட்சி கிரேக்க பாரம்பரிய தேவாலயங்களை அங்கீகரிப்பதையும் மற்றும் ஆயுத படைகளையும் தாங்கி பிடிக்கிறது. “சிரிசாவிற்குள் இருக்கும் சில வேறுபட்ட மனோபாவங்களிடமிருந்து ஆயுத படைகளைப் பாதுகாக்க" சூளுரைத்துள்ள அக்கட்சியின் தலைவர் பேனொஸ் கமெனொஸிற்கு பாதுகாப்பு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இவை அனைத்திற்கு இடையிலும், போலி-இடதானது முதலில் சிரிசாவின் நடவடிக்கைகளுக்கு அரசியல் அனுதாபங்கள் வழங்குவதிலிருந்து தொடங்கி, Anel கட்சி உடனான கூட்டணியை ஒரு முன்மாதிரியாக ஏற்கத்தக்கதென மனமுவந்து வரவேற்பது வரையில் நகர்வதற்கு வெகு காலம் பிடிக்கவில்லை.

இங்கிலாந்து சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் அலெக்ஸ் கலினிகோஸ், "நகர்புற தொழிலாள வர்க்கத்தின் பிரதான கட்சியாக" சிரிசாவை வர்ணித்து தேவையற்ற" ஒரு கூட்டணியை உருவாக்கியதற்காக நட்புரீதியில் அதை விமர்சித்தார்.

இடது ஐக்கியம் (Left Unity) இப்போது அதன் வலைத் தளத்தில்இங்கேயும் ஒரு சிரிசாவை உருவாக்குவோம்" என்ற முழக்கத்துடன் முன்நகர்கிறது. "சிக்கன நடவடிக்கைக்கு எதிரான கிரேக்க போராட்டத்திற்கு நிபந்தனையற்ற நண்பர்களாக மற்றும் ஆதரவாளர்களாக" இருந்தே எந்தவொரு விமர்சனமும் வழங்கப்படுவதாக முன்னதாக வலியுறுத்திவிட்டு, அது கருத்துரைக்கையில், அந்த கூட்டணி "அனேகமாக குறுகிய ஆயுள் கொண்டதாக இருக்கலாம்,” என்றது.

சர்வதேச தொழிலாளர் கமிட்டியுடன் (Committee for a Workers International) இணைந்த கிரேக்க அங்கமான Xekinimaஇல் இருந்து ஒரு குறிப்பை சோசலிஸ்ட் கட்சி மறுபிரசுரம் செய்தது. கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) கூட்டணியில் சேர மறுத்ததன் மூலமாக சிரிசாவை இந்த "அபாயகரமான வலையில்" தள்ளவிட்டதற்காக அக்குறிப்பு அதை குற்றஞ்சாட்டி இருந்தது.

அவர்களது அரசியல் கூட்டாளிகள் முகங்கொடுக்கும் சிரமங்களை ஒப்புக்கொண்டு, சிரிசாவின் Haris Triandafilidou ஒரு அறிக்கை எழுதினார். அது Links International Journal of Socialist Renewal இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது. "ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள எண்ணற்ற சிரிசா ஆதரவாளர்களின் மனக்குறைகளை" சமாதானப்படுத்துவதற்காக, அப்பெண்மணி வெட்கமில்லாமல் Anel க்கு ஒப்புதல் வழங்கினார். Anel “மக்கள்நல இறையாண்மைக்கும், அரசியலமைப்பு பாதுகாப்பிற்கும், தேச கௌரவம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும்" உறுதியளித்திருப்பதுடன், “சமஉரிமைகள் (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), ஒருமைப்பாடு, நீதி, தகுதி அடிப்படையில் முன்னுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கும் பொறுப்பேற்றுள்ளது" என்ற வாதமும் அதில் உள்ளடங்கும்அவர் குறிப்பிட்ட இந்த நிலைப்பாடுகள் "அக்கட்சியுடன் பிணைந்துள்ள வலதுசாரி அதிதீவிர விபரக்குறிப்புகளுடன் அரிதாகவே பொருந்தி இருந்தன.”

குறிப்பாக போலி-இடதின் முக்கியத்துவம் குறித்து அவரது வலியுறுத்தல் என்னவென்றால், "ஒப்பந்தங்களுக்கு-ஆதரவான மற்றும் ஒப்பந்தங்களுக்கு-விரோதமான மனோபாவங்கள், வலது மற்றும் இடதிற்கு இடையே இருந்த அரசியல் பிளவைக் கடந்துவிட்டன விடுதலை அளிக்கும் நிகழ்முறையை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக, செயல்பாடுகளின் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்காக, கீழ்நிலை பணியாளர் சமூகத்திற்கு ஒரு குரலை மற்றும் அரசியல் புகலிடத்தை வழங்குவதற்காக இடது சேவை செய்ய விரும்பினாலோ அல்லது விடாமுயற்சி செய்ய விரும்பினாலோ, அது அதன் மூலோபாய இலட்சியங்களுக்கு நெருக்கமாக செல்வதற்காக குறிப்பிட்ட தந்திரோபாய படிகளை எடுப்பதிலிருந்து பின்வாங்க கூடாது,” என்றார்.

ஒப்பந்தங்கள்" மீது அமைப்புகளின் மனோபாவம், கிரீஸ் மற்றும் முக்கூட்டுக்கு (சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) இடையிலான சிக்கன உடன்படிக்கைகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, “இடது" மற்றும் "வலதிற்கு" இடையிலான பிளவுகள் இப்போது அர்த்தமற்று போய்விட்டதாக கூறப்படும் வாதம், அவர்களது சொந்த கூட்டணிகளையும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் உள்ள தேசியவாத மற்றும் அதிவலது குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் முன்மொழியப்பட்ட அவர்களது கூட்டணியையும் நியாயப்படுத்த போலி-இடது குழுக்களால் கையிலெடுக்கப்பட்டுள்ளது.

சிரிசா/சுதந்திர கிரேக்கர்கள் கூட்டணியின் பரந்த முக்கியத்துவம் மீதான விளக்கம், SWPஇல் இருந்து உடைந்து வந்தவரான கெவின் ஓவென்டெனால் Counterfire வலைத் தளத்தில் முன்வைக்கப்பட்டது. சிரிசா மற்றும் Anelக்கு இடையிலான கூட்டணிக்குப் பின்னால் உள்ள "அரசியல் தர்க்கத்தை" மேற்கோளிட்டுக் காட்டி, அவர் வினவினார், “தீவிர இடதின் ஒரு கட்சி எவ்வாறு கிரேக்க Ukip [இங்கிலாந்தின் சுதந்திர கட்சி] உடன் கூட்டணி வைக்க முடியும்?—அந்த ஒப்பந்தம் கிரீஸ் அரசியலை இடது/வலது பிளவைச் செங்குத்தாக இல்லாதாக்குகிறது,” என்றார்.

Anel “ஒரு தேசியவாத, வெளிநாட்டவர் விரோத, ஜேர்மன்-எதிர்ப்பு கட்சியாகும்" என்பதை ஒப்புக் கொள்ளும் அவர், ஆனால் "Panayiotis Lafazanis இன் தலைமையில் இடது தளத்தில் இருக்கும் பெரும்பாலானவை" Anel உடனான கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றன, “ஏனென்றால் அவை முக்கூட்டிற்கு எதிரான 'தேசிய போராட்டமாக' சித்தரித்து, பரந்த 'மக்கள் கூட்டணிகளைக்' கட்டமைக்கும் மூலோபாயத்தை பகிர்ந்து கொள்கின்றன,” என்றார்.

நாம் இந்த நிகழ்முறையின் முடிவில் அல்ல, தொடக்கத்தில் இருக்கிறோம்,” என்று அவர் அனுமானிக்கிறார். “அங்கே இனி இதுபோன்று நிறைய விடயங்கள் நடக்கலாம் சிலவை உண்மையிலேயே இதுவொரு சரியான கொள்கை என்று நம்பக்கூடும்,” என்றார்.

Anel நேரடியாக UKIP உடன் ஒப்பிடுவது, போலி-இடது அரசியலின் ஒரு சீரழிந்த வெளிப்பாடாகும். பிரிட்டனில் உள்ள அதுபோன்ற குழுக்கள் அனைத்துமே பல ஆண்டுகளாக, தொழிலாளர்களை பெரியளவில் இடது கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பின்னால் அணித்திரட்டுவதற்கு ஒரு வழிவகையாக, UKIP தீவிரவலது என்றும், இனவாதம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் அறிவித்து வந்துள்ளன. இப்போதோ அவையே அதேபோன்றவொரு உருவாக்கத்தின் பக்கம் கூட்டு சேர்ந்து கொண்டு, சிரிசாவிற்கு வாக்காலத்து வாங்குபவையாக மட்டுமல்ல, மாறாக UKIP உடனே அவர்களின் சொந்த கூட்டணியை உருவாக்க அவற்றின் ஆதரவை அறிவிக்கின்றனஇது நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை மற்றும் தனிச்சலுகைகள் மற்றும் செல்வவளத்தைப் பெறுவதை அர்த்தப்படுத்துமென்பதால், இந்நடவடிக்கையைக் கௌரவிக்கின்றன.

கிட்டத்தட்ட முழுமையாக செயலற்று போன போர் எதிர்ப்பு கூட்டணியில், பிரிட்டனின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி உடன் Counterfire உற்ற கூட்டாளியாக உள்ளது, மேலும் அதன் எழுத்தாளர்கள் அடிக்கடி CPBஇன் Morning Starஇல் எழுதி வருகின்றனர். Counterfireஇன் கிளேர் சாலமனால் தொடங்கப்பட்ட ஒரு விவாத தொடரில், உலக சோசலிச வலைத் தள வாசகர் ஒருவர் அப்பெண்மணியிடம் இவ்வாறு வினவினார்:

UKIP பாணியிலான சுதந்திர கிரேக்கர்களுடனான அரசாங்கத்தில் சிரிசா உள்ளது. இங்கிலாந்தில் Counterfireஉம் அதேபோன்றவொரு கூட்டணியை, சான்றாக இடது ஐக்கியத்திற்கும் (அல்லது counterfire உட்பட தன்னைத்தானே இடது என்று வர்ணிக்கும் உண்மையில் எந்தவொரு போக்குக்கும்) மற்றும் UKIPக்கும் இடையிலான ஒரு கூட்டணியை ஒரு "அவசியமான எதிர்சக்தியாக" பரிந்துரைக்குமா?

முதலில் "இல்லை" என்று பதிலளித்த சாலமன், அதை "ஒரு பயங்கரமான திட்டம்" என்றழைத்தார்.

இது மத்தேயு வில்கிரசுக்கு மிகவும் அதிகமாகும். “இதுவொரு 'பயங்கரமான திட்டம்' என்பது உண்மையிலேயே [Counterfireஇன்] நிலைப்பாடா,” என்றவர் வினவினார். “நிச்சயமாக இந்த பிரிட்டன் ஒப்பீடானது, வார்த்தையளவிற்கு என்பதை விட சற்று கூடுதலானது,” என்றார்.

முன்னாள் SWP நபரும் Guardian எழுத்தாளருமான சாலமன் ஹக்ஸ் பதிலுரைக்கையில், “சுதந்திர கிரேக்கர்கள் உடனான சிரிசாவின் உடன்படிக்கை போதுமானளவிற்கு நியாயமாக இருப்பதாக தனிப்பட்டரீதியில் நான் நினைக்கிறேன்,” என்றுரைத்த பின்னர், அதேபோன்ற விடையிறுப்பைக் காட்ட செய்யும் பிரிட்டனுக்கான அதேபோன்ற சூழலை வர்ணித்தார்:

உண்மையில் இங்கிலாந்தின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் ஒரு யூரோ கடன் குறித்து மறுபேரம் செய்வதையோ அல்லது அதை இரத்து செய்வதையோ பிரதான பிரச்சினையாக கொண்ட ஒரு தீவிர இடது அரசாங்கம் அந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களுக்கு கூடுதலாக இடங்கள் அவசியமானால் அதற்காக அங்கே இருக்கும் வாய்ப்புகள் என்னவாக இருக்குமென்றால், கடனுக்கு எதிராக அல்லாத ஓர் அரசாங்கம், அல்லது UKIPக்கு ஒரு மந்திரி பதவி, அல்லது அதே இடது சாரி அரசாங்கம் என்பதாக இருக்கும், பின் அது சிறிது விசித்திரமாக [பலவீனமாக] இருந்தாலும் கூட, அதுவொரு காரணமற்ற தேர்ந்தெடுப்பாக இருக்காது,” என்றார்.

இங்கே வில்கிரஸூடன் அவர் ஒத்துப் போகிறார்.

மிகவும் சர்வாதிகார ஒரு வலதுசாரி மந்திரியை பாதுகாப்புதுறையின் பொறுப்பில் வைத்துக் கொண்டு, அத்தகைய சூழலில் கிரீஸ் தளபதிகளுடன் பேசுவதென்பது ஒரு சிறிய பிரச்சினையாக இருக்காது,” என்று கூறி ஜோஸ் கிளார்க் மனக்கவலையை வெளியிட்டார்.

அதற்கு ஹக்ஸ் பதிலுரைக்கையில், “உண்மையில் அதுவொரு மோசமான அமைச்சகமென்று நான் கருதவில்லை... சுதந்திர கிரேக்கர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருப்பதில் இருக்கும் நிஜமான பிரச்சினையே, அவர்கள் திடீரென துருக்கியுடன் ஒரு போரைஅல்லது நான் நினைக்கிறேன் மாசிடோனியாவுடன் ஒரு மோதலைதொடங்கிவிடலாம் என்பது தான். இந்த விளையாட்டில் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு பிரச்சினை இருக்குமென்று நான் நினைக்கவில்லை...” என்றார்.

அது வேலைக்காக கூடும், ஒரு பேச்சுக்கு கூறுவதானால், எல்லா விதமான விடயங்களைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை,” என்று குறிப்பிட்டு, சாலமன் அந்த விவாதத்தை முடித்து வைத்தார்.

போலி-இடது குழுக்கள் தொட்டு செல்லாத எந்த அரசியல் போக்கும் அங்கே இல்லை. எந்தவொரு நிஜமான அர்த்தத்திலும், அவர்கள் சோசலிஸ்டுகளும் கிடையாது, "இடதும்" கிடையாது. அதற்கு பதிலாக அவை, தங்களின் சொந்த பைகளில் இன்னும் அதிகமாக சேரும் வகையில் செல்வத்தை சிறிது மறுபகிர்வு செய்வதற்கு மேலதிகமாக ஒன்றையும் விரும்பாத ஒரு தனிச்சலுகை கொண்ட மத்தியதர அடுக்கின் வர்க்க நலன்களை எடுத்துக்காட்டுகின்றன. அதற்கு பதிலாக, அவை பதவியேற்கவும் தயாராக இருக்கின்றன மற்றும் அவர்களிடம் என்ன கோரப்படுகிறதோ அதை செய்வதற்கும் தயாராக இருக்கின்றன. கிரீஸில் செய்ததைப் போலவே, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவ தலையீட்டிற்கு பாதையைத் திறந்து விடும் வலதுசாரி சக்திகளுடன் ஒரு கூட்டணி ஜோடிப்பதும் அதில் உள்ளடங்கும்.

வலதுசாரி தேசியவாத சக்திகளுடன் கூட்டணிகளுக்கு திருப்பியமை கிரீஸில் தொடங்கவில்லை. அது உக்ரேனில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடனான கூட்டணியில் பாசிச Right Sector தலைமையிலான ஓர் இயக்கத்தை போலி-இடது அரவணைத்த போதே, மைதான் போராட்டங்களிலேயே அங்கே நடந்திருந்தது. பப்லோவாத ரஷ்ய சோசலிஸ்ட் இயக்கத்தின் (RSM) தலைவர் Ilya Budraitskis, “உக்ரேன் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, மாறாக எதிர்காலத்திற்கும் முக்கியமானது..." என்பதால் தீவிர வலதுடன் சேர்ந்து வேலை செய்வது குறித்து ஒரு "உரையாடலை" நடத்த அழைப்புவிடுத்தார்.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து விடுதலைக்கான வெகுஜன பிரச்சாரத்தின் போது, ஸ்காட்லாந்தில் பிரதான முதலாளித்துவ கட்சியுடன் ஒரு நீண்டகால அரசியல் கூட்டணிக்கு அடித்தளமாக, "தேசிய சுய-நிர்ணயத்திற்கு" ஒரு பொதுவான பொறுப்புறுதி என்ற அடிப்படையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்குப் பின்னால் போலி-இடது அணிவகுத்தது.

இந்த நிலைப்பாட்டின் முக்கியத்துவம் மீது கருத்துரைத்து பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி (SEP-Britain) குறிப்பிடுகையில், இந்த கூட்டணியின் அரசியல் தர்க்கம் விரைவிலேயே இங்கிலாந்தின் மீதப்பகுதியில் கையிலெடுக்கப்படும் என்று குறிப்பிட்டது. அக்டோபர் 28, 2014இல் நாம் நமது காங்கிரஸ் தீர்மானத்தில் எழுதினோம்:

தேசியவாதம் மீதான இந்த அனுதாபத்திற்கு மார்க்சிசம், சோசலிசம் அல்லது தொழிலாள வர்க்கத்துடன் எந்த சம்பந்தமும் கிடையாது. அது போலி-இடதை எண்ணற்ற தீவிர-வலது குழுக்களின் அதே அரசியல் முகாமிற்குள் நிறுத்துகிறது. அந்த வெகுஜன வாக்கெடுப்பிற்குப் பின்னர், அவை, 2015 பொது தேர்தலானது [ஸ்காட்டிஷ்] பிரிவினை மீதான ஒரு மக்கள் தீர்ப்பாக மாற வேண்டுமெனக் கோரி வருகின்றன. இதற்கிடையே, இடது ஐக்கியம், 'இங்கிலாந்திற்கான ஒரு புதிய அரசியலமைப்பு தீர்வை அறிவுறுத்த; நாம் ஓர் ஆங்கில குடியரசிற்காக பிரச்சாரம் செய்ய' வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது.”

சுதந்திர கிரேக்கர்கள் உடனான கூட்டணியை வரவேற்றிருப்பதும் மற்றும் UKIP உடன் அதேபோன்ற ஒன்றை ஏற்பாடு செய்வது மீதான ஊகங்களும் துல்லியமாக, சிரிசாவிற்கு சமாந்தரமான ஒன்றை இங்கிலாந்தில் உருவாக்க அழைப்புவிடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. அது, "ஒற்றுமைக்கான" தேசியவாத முறையீடுகளுடன், வெற்று சமூக வாய்ஜம்பங்களுடன் சேர்ந்து, முதலாளித்துவ ஒழுங்கமைப்பை பாதுகாக்கும் நோக்கத்தில் தொழிலாள வர்க்க கட்சிக்கு விரோதமான உருவாக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும்.