சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

European Union gives no quarter in war against Greek workers

ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க தொழிலாளர்களுக்கு எதிரான போரில் சிறிதும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை

Christoph Dreier and Barry Grey
18 February 2015

Use this version to printSend feedback

திங்களன்று புரூசெல்ஸில் நடந்த யூரோ குழுமத்தின் நிதி மந்திரிமார்களின் கூட்டம், கிரீஸை முன்னொருபோதும் இல்லாத சமூக பேரழிவிற்குள் மூழ்கடித்துள்ள கடுமையான சிக்கன கொள்கைகளிலிருந்து அசைந்து கொடுக்கப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியது.

ஜேர்மனியிடமிருந்து அவர்களின் வழியைத் தேர்ந்தெடுத்து, அந்த நிதி மந்திரிகள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் பெரிதும் அடையாளபூர்வ மாற்றங்களைக் கோரும், சிரிசா தலைமையிலான கிரேக்க அரசாங்கத்திடம் இருந்து வந்த பரிந்துரைகளை ஒருமித்த கருத்துடன் நிராகரித்தன. யூரோ குழும நிதி மந்திரிகளின் தலைவர், நெதர்லாந்தின் ஜெரோன் திஜிஸ்செல்ப்லோம் அக்கூட்டத்தின் தொடக்கத்தில் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் வசம் ஒரு வரைவு அறிக்கையை சமர்பித்தார். அது, கையெழுத்திடுங்கள் அல்லது கடன்களில் வெட்டுக்களை மற்றும் அரசு திவால்நிலைமையை முகங்கொடுங்கள்! என்பதற்கு ஓர் இறுதி எச்சரிக்கையாக இருந்தது.

வேலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக சேவைகளில் புதிய மற்றும் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களையும், வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களுக்கு பொதுச் சொத்துக்களை அடிமட்ட விலையில் விற்பதையும் கொண்ட வகைமுறைகள் உட்பட, கடனைத் திருப்பிச் செலுத்தும் நடப்பு திட்டத்தைக் கிரீஸ் கடமையுணர்வோடு நடைமுறைப்படுத்துமென அந்த அறிக்கை அறிவித்தது.

ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள, ஐரோப்பிய மற்றும் சர்வதேச ஆளும் மேற்தட்டுக்களின் இறுமாப்பை, மற்றும் கிரேக்க மக்களினது அவல நிலைமை மீதான அவர்களின் வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்தில், உதவி முறைமைகளுக்கான கிரேக்க அரசாங்கத்தின் முறையீடுகள் "பொறுப்பற்றவையும்" “கால விரயமும்" ஆகும் என்று கூறினார். “கடந்த சில ஆண்டுகளில் கிரேக்கத்திற்கு உதவியுள்ளவர்களை அவமானப்படுத்துவதாக" சிரிசா தலைவரும் கிரேக்க பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸை அவர் குற்றஞ்சாட்டினார்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களால் வழங்கப்பட்ட "உதவியானது", மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்களை வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையில் தள்ளுவதையும், அந்நாட்டின் மருத்துவ பராமரிப்பு முறையை அகற்றுவதையும், வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பல ட்ரில்லியன் யூரோ பிணையெடுப்புகளுக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்வதற்காக வீடற்றநிலைமை மற்றும் பசியெனும் தொற்றுநோயை உருவாக்குவதையும் உள்ளடக்கி உள்ளது. அத்தகைய "உதவி" அதேபோன்ற பேரழிவுகரமான சமூக விளைவுகளோடு, ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் அயர்லாந்து போன்ற ஏனைய பெரிதும் கடன்பட்ட நாடுகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது.

இந்த நாடுகளுக்கு எதிரான சிக்கன தாக்குதல், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக சேவைகள் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதற்கு ஒரு முன்மாதிரியை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் கிரீஸை ஒரு முன்மாதிரியாக அமைக்க, திங்களன்று கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதென்று மிக வெளிப்படையாகவே முடிவெடுத்திருந்தன. சிரிசாவை அவர்கள் அவமதிப்போடு கையாண்ட விதம், மூலதனத்தின் சக்தியை தங்களால் எதிர்க்க முடியுமென ஏனையவர்கள் நினைக்காதவாறு ஒரு பொருள் பொதிந்த பாடத்தை அர்த்தப்படுத்துவதாக இருந்தது.

பெருந்திரளான கிளர்ச்சிகர மக்களை சிரிசா பிரதிநிதித்துவம் செய்வதாக அவை பார்க்கவில்லை, மாறாக தோல்வியடைந்து வரும் கிரேக்க முதலாளித்துவவாதிகளின் சார்பாக பேசும் ஒரு விண்ணப்பதாரராக பார்த்து, சிரிசா மீது அவை நடவடிக்கை எடுத்துள்ளன. திங்கட்கிழமை ஆத்திரமூட்டல்களுக்கு முற்றிலும் அனுமானிக்கக்கூடிய சிரிசாவின் விடையிறுப்பால் இந்த மதிப்பீடு உருவாகி இருந்தது.

சற்றே வேறுபட்ட வாசகங்களைக் கொண்ட ஒன்றில் அவர் கையெழுத்திட உடன்பட்டு இருந்ததாக கடிந்துரைத்து, வாரௌஃபாகிஸ் அந்த வரைவு அறிக்கையில் கையெழுத்திடுவதிலிருந்து பின்வாங்கினார். குறிப்பிட்டு இதுதான் என்றில்லாமல் வார்த்தையளவில் வேறுபட்ட ஒன்றை, ஆனால் கடனைத் திருப்பி செலுத்தும் நடப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அது சமிக்ஞை காட்டுவதாக இருந்தது.

அது அதன் பிரச்சார வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவும் மற்றும் சிக்கன திட்டத்தை நடைமுறைப்படுத்துமளவிற்கு வந்துவிட்ட போதும், நிதி மந்திரிகள் சிரிசா தலைமையிலான அரசாங்கத்திற்கு சிறிதும் வளைந்து கொடுக்க மறுப்பதற்கு எதிராக அவர் போராடினார். எவ்வாறிருந்த போதினும் அவர் அந்த குறைப்பிரசவ கூட்டத்திற்குப் பின்னர் கூறுகையில், “இறுதியில் அங்கே ஓர் உடன்படிக்கை எட்டப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.

அந்த கூட்டத்திற்கு முந்தைய நாள், அவர் Guardian பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், “நாங்கள் இடது கட்சி தான், ஆனால் நாங்கள் இன்றியமையாத விதத்தில் இலண்டன் நகரின் ஒரு சீர்திருத்தவாத திவால்நிலை வழக்கறிஞரின் நிகழ்ச்சிநிரலைத் தான் முன்வைக்கிறோம்,” என்றார். அவர் சொய்பிளவை "புத்திஜீவித கருப்பொருள் கொண்ட ஒரே ஐரோப்பிய அரசியல்வாதி" என்று அழைக்கும் அளவிற்குச் சென்றார். அத்துடன் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை "ஐரோப்பாவின் மிகப்பெரிய இராஜதந்திரியாக" பாராட்டினார்.

அது சரணடைவதை முழுமைப்படுத்திக் கொள்ள, சிரிசாவிற்கு வெளிப்படையாக 24 மணி நேரத்திற்கு சற்று கூடுதலான நேரம் மட்டும் எடுத்தது. கடனைத் திரும்ப செலுத்தும் நடப்பு திட்டத்தின் ஒரு நீட்சியைக் கிரேக்க அதிகாரிகள் புதனன்று கோருவார்களென வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று மதியமே அறிவித்தது.

சிரிசாவின் ஒட்டுமொத்த அணுகுமுறையும், எவ்வாறேனும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களை அவற்றின் கொள்கையைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ள செய்வதற்கு நெருக்கத்திற்கு அதனால் கொண்டு வரும் முடியும் என்ற கருத்தின் அடித்தளத்தில் உள்ளது. ஜேர்மனியுடன் குறிப்பிட்ட கருத்துவேறுபாடுகளை வெளிப்படுத்தி உள்ள ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரிவுகளிடையே ஆதரவைப் பெற முடியுமென சிப்ராஸ் நம்பியிருந்தார். அவர் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு இடையே பொருளாதார கொள்கை வேறுபாடுகளுக்கு முட்டுக்கொடுப்பதையும் சார்ந்திருந்தார்.

கடந்த மாதம் சிரிசாவின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய தலைநகரங்களில் சிப்ராஸூம் வாரௌஃபாகிஸூம் மேற்கொண்ட பூசிமொழுகிய தாக்குதல், முற்றிலுமாக பொருளாதார மற்றும் அரசியல் மேற்தட்டுக்களை எதிர்த்து நிற்க வைப்பதாக இருந்தது. அங்கே தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முறையீடும் இருக்கவில்லை.

சிரிசா தலைமை ஒருபோதும் முதலாளித்துவ அமைப்புமுறையின் நியாயத்தன்மையை மீது கேள்வி எழுப்பியதில்லை. அதற்கு முரண்பட்ட விதத்தில், வங்கியியல் அமைப்புமுறைக்கான அவர்களின் ஆதரவையும், நிதியியல் மேற்தட்டிற்கு கிரீஸின் கடன்களை முழுவதுமாக திருப்பி செலுத்துவதற்கு அவர்கள் தீர்மானமாக இருப்பதையுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வங்கியாளர்களது தாக்குதலுக்கு அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான கட்டமைப்பாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவளிப்பதே அவர்களது திட்டத்தின் மையக்கருவாக உள்ளது.

ஏனைய குட்டி-முதலாளித்துவ கட்சிகளைப் போலவே, சிரிசாவின் அரசியலும் மழுப்பல்கள், சூழ்ச்சிகள் மற்றும் புத்திசாலித்தனமான உத்திகளைக் கொண்டு மிகப்பெரிய வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் கையாள முடியுமென்ற கருத்தில் ஒருங்கிணைந்துள்ளது. சிரிசா விடயத்தில், இது, ஒரு வலதுசாரி பேரினவாத கட்சியான சுதந்திர கிரேக்கர் கட்சியுடன் ஒரு கூட்டணி உருவாக்கியதில் உள்ளடங்கி உள்ளது.

புரட்சியா அல்லது எதிர்ப்புரட்சியா என்ற ஒரு காலகட்டத்தில் மத்தியதர வர்க்க சீர்திருத்த கண்ணோட்டத்தின் திவால்நிலையை முற்றிலுமாக அம்பலப்படுத்த, சிரிசா தலைமையிலான அரசாங்கத்திற்கு வெறும் நான்கு வாரங்களுக்கும் குறைந்த காலமே எடுத்துள்ளது.

ஆளும் வர்க்கத்தின் தாக்குதலைப் புரட்சிகர வழிவகைகள் மூலமாக, அதாவது, முதலாளித்துவத்திற்கு எதிராக ஐரோப்பாவெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலமாக மட்டுமே தோற்கடிக்கப்பட முடியும். சிரிசா மற்றும் அதை ஆதரிக்கும் பல்வேறு போலி-இடது கட்சிகள் இந்த போராட்டத்திற்கு தடைகளாக உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதென்பது அவற்றிற்கு எதிரான ஒரு போராட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.