சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

German finance minister demands unconditional surrender from Greece

ஜேர்மன் நிதி மந்திரி கிரீஸிடமிருந்து நிபந்தனையற்ற சரணடைவை கோருகிறார்

By Christoph Dreier
20 February 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் முந்தைய கடன் உடன்படிக்கையை நீடிப்பதற்கு வியாழனன்று கிரேக்க அரசாங்கத்தால் எழுத்துபூர்வமாக கோரப்பட்ட முறையீடுகளை, ஒரு சில மணிநேர அவகாசத்திற்குள், ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள (CDU) முற்றிலுமாக நிராகரித்தார். சிரிசா அரசாங்கத்தை முழுமையாக அவமானப்படுத்துவதன் மூலமாக, சொய்பிள ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் ஒரு முன்மாதிரியை உருவாக்க விரும்புகிறார்.

ஏதென்ஸிடமிருந்து வந்துள்ள கடிதம் போதுமானளவிற்கு ஒரு தீர்வை நோக்கிய முன்மொழிவாக இல்லை,” என்று வியாழனன்று பேர்லினில் சொய்பிள இன் செய்தி தொடர்பாளர் அறிவித்தார். அந்த விண்ணப்பம், கடனைத் தொடர்வதற்கு ஒரு கோரிக்கை வடிவத்தை எடுத்திருப்பதாகவும், அது அத்திட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக இல்லையென்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “திங்களன்று யூரோ குழுமத்திடம் ஒப்புக்கொள்ளப்பட்ட தகுதிவகைகளை அக்கடிதம் பூர்த்தி செய்யவில்லை,” என்றார்.

உண்மையில் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ், யூரோ மண்டல நிதி மந்திரிகளின் யூரோ குழும தலைவர் ஜெரோன் திஜிஸ்செல்ப்லோமுக்கு எழுதிய அவரது கடிதத்தில் நீண்டகால விட்டுக்கொடுப்புகளைக் கோரியிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கடுமையான சிக்கன திட்டத்தை "பொருளாதார சீரமைப்பில் குறிப்பிடத்தக்க முயற்சிகளாக" விவரிக்கும் அக்கடிதம், அவை "வெற்றிகரமாக முடிவுக்குக்" கொண்டு வரப்பட வேண்டுமென்று கோருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் உடன்படிக்கையின் "நிதியியல் மற்றும் நிர்வாக நிபந்தனைகளை" ஏற்றுக் கொண்டு, வாரௌஃபாகிஸ், ஆறு மாத காலம் அதை நீடிக்குமாறு விண்ணப்பித்தார். புரிந்துணர்வு என்றழைக்கப்பட்டது அக்கடிதத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லையே தவிர, இவ்விதமாக உடன்படுவதன் பாகமாகவே உள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), ஐரோப்பிய கமிஷன் மற்றும் சர்வதேச நாணய நிதிய பயிலகங்களால், அதாவது கிரேக்க மக்களால் மிகவும் ஆழமாக வெறுக்கப்படும் "முக்கூட்டினால்" (troika), நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதையும் அந்த கடிதம் எழுத்துபூர்வமாக வரவேற்கிறது. சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அது இந்த அமைப்புடன் வேலை செய்யாது என்று அறிவித்திருந்தது.

இறுதியாக அவர், "ஐரோப்பிய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமாக" வேலை செய்ய தயாராக இருப்பதாகவும், கிரீஸின் "நிதிய இலக்குகள், பொருளாதார மீட்சி மற்றும் நிதியியல் ஸ்திரப்பாட்டைப் பலவீனப்படுத்தும் தன்னிச்சையான நடவடிக்கையை" விலக்கிக் கொள்வதாகவும் வாரௌஃபாகிஸ் தெரிவித்தார்.

அக்கடிதத்தின்படி நீண்டகால விளைவைக் கொண்ட தேசிய இறையாண்மையின் கைதுறப்பானது, “தற்போதிருக்கும் ஒழுங்கமைப்பில் வளைந்து கொடுக்கும்தன்மையைப்" பரிந்துரைப்பது, "முக்கூட்டு" “புரிந்துணர்வு" போன்ற எவ்வித நேரடியான குறிப்பையும் தவிர்த்துக் கொள்வது போன்ற வெறுமனே ஒருசில வெற்று சூத்திரமாக்கல்களால் மட்டுமே மறைக்கப்பட்டிருந்தது.

ஆனால் சொய்பிள பொறுத்த வரையில், சிரிசாவின் இந்த விட்டுக்கொடுப்புகள் கூட போதுமானதாக இல்லை. அவர் நிபந்தனையற்ற சரணடைவை கோரி வருகிறார். ஏதென்ஸ் வெளிப்படையாக புரிந்துணர்வை அங்கீகரித்து, அதன் நிபந்தனைகளின் கீழ் திணிக்கப்பட்ட முந்தைய வெட்டுக்கள் மற்றும் பாரிய வேலை நீக்கங்களில் எதையும் திரும்ப பெறக்கூடாது என்பதற்கு வாக்குறுதி அளிக்க வேண்டுமென ஏற்கனவே செவ்வாயன்று சொய்பிள கோரியிருந்தார். கிரீஸிற்கு வழங்கப்படும் விட்டுக்கொடுப்புகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளிடமிருந்துகுறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயினிடம் இருந்துஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளை மிதப்படுத்துவதற்கான முறையீடுகளை நியாயப்படுத்த சேவை செய்யுமென சொய்பிள நம்புகிறார்.

இந்த சூழலில், சரணடைவதற்கு வாரௌஃபாகிஸ் பேரம்பேசி வருகின்ற நிலையில், ஏதேனும் சிறிய அளவில் அரசியல் நம்பகத்தன்மையைப் பேணுவதற்காக, சிரியாவிற்கு அவசியப்படும் மிகச்சிறிய வார்த்தையளவிலான விட்டுக்கொடுப்புகள் கூட அவருக்கு வழங்கப்படுவதாக இல்லை. வாரௌஃபாகிஸ் மற்றும் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் எதிர்கொண்டிருக்கும் நிலைமையானது, காலஞ்சென்ற பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஒருகாலத்தில் முகங்கொடுத்த சூழலுக்கு ஒத்திருக்கிறது. 1988இல், அவரது அமைப்புகளின் மைய கோட்பாடுகளை ஏற்கனவே கைதுறந்திருந்த நிலையில், அராபத் இன்னும் கூடுதலாக அவமரியாதைப்படும் விட்டுக்கொடுப்புகளை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்காவினால் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டார். “நான் உடைகலைந்து நிற்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அவர் வினவினார்.

ஜேர்மனி அதன் இறுதி எச்சரிக்கையிலிருந்து சற்றே பின்வாங்க முடிவெடுக்கக்கூடும் என்பதற்கு அங்கே சில சாத்தியக்கூறு இருக்கிறது. ஏதென்ஸ் மீதான சொய்பிள இன் முறையீடுகள், யூரோ குழும பிரதிநிதிகளின் திங்களன்று கூட்டத்தில் ஒருமனதாக ஆதரிக்கப்பட்டது. ஆனால் வியாழனன்று சில பிரதிநிதிகள் கிரேக்க அரசாங்கத்துடன் கூடுதல் பேரங்களை நடத்த வலியுறுத்தினர்.

வாரௌஃபாகிஸ் கடிதம் "பேரம்பேசுவதற்கான ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய, முற்றிலும் பகிரங்கமாக நிராகரிக்கப்பட கூடாது,” என்று முறையிட்டு, ஜேர்மனியின் சமூக-ஜனநாயக பொருளாதார மந்திரி சிக்மர் கேப்ரியல் மந்திரிசபையில் அவரது சகாக்களை விமர்சித்தார். அதே நேரத்தில், "அக்கடிதத்தில் உள்ளவை ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு போதுமானவை அல்ல" என்பதில் அவர் சொய்பிளயுடன் உடன்பட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கர் கூறுகையில், ஏதென்ஸில் இருந்து வந்த கடிதம் "ஒட்டுமொத்தமாக யூரோ பகுதியின் நிதியியல் ஸ்திரப்பாட்டு நலனுக்காக, ஒரு நியாயமான சமரசத்திற்குப்" பாதையை வழங்கக்கூடுமென தெரிவித்தார். ஆனால் அந்த பரிந்துரைகளின் மீது மேற்கொண்டு கருத்துக்களை வழங்க அவர் தயாராக இல்லை.

இத்தாலிய நிதி மந்திரி பியர் கார்லோ பாடோன், ஏதென்ஸின் முன்மொழிவுகள் "கவனத்துடன் எடுத்து" கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார்.

சிரிசாவின் திட்டங்கள் "மிகவும் ஊக்கப்படுத்துகின்றன" என்று குறிப்பிட்ட பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், விரைவில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார். சொய்பிள இன் சொந்த நிலைப்பாடு பின்லாந்து மற்றும் லாட்விய அரசாங்கங்களால் ஆதரிக்கப்பட்டன.

சிப்ராஸூம் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் வியாழனன்று 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதாக கிரேக்க அரசாங்க ஆதாரங்கள் தெரிவித்தன. அந்த தொலைபேசி உரையாடல் ஒரு சாதகமான சூழலில் நடந்தது என்று ஜேர்மன் தொலைக்காட்சி சேனல் n-tv அறிவித்தது.

கிரேக்க விண்ணப்பம் குறித்து விவாதிக்க, யூரோ குழுமம் வெள்ளியன்று ஒன்றுகூட உள்ளது. ஒரு கிரேக்க அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிதி மந்திரிகள் கிரேக்க முறையீட்டை "ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்", ஆனால் வேறெந்த சாத்தியக்கூறும் அங்கே இல்லை. “யார் ஒரு தீர்வை விரும்புகிறார்கள், யார் விரும்பவில்லை" என்பதை அக்கூட்டம் எடுத்துக்காட்டுமென அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த வார்த்தைகள் சாராம்சமின்றி உள்ளன. யூரோ குழுமம் வெள்ளியன்று மேற்கொண்டு பேரம்பேசுவதில் ஈடுபட்டாலும் கூட, சிரிசா சரணடைவதற்கான நிபந்தனைகளின் வார்த்தைகளை எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதில் மட்டும் தான் அங்கே பிரச்சினை இருக்கும். சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு வாரங்களுக்கும் குறைந்த நாட்களில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அற்ப சூழ்ச்சிகளைக் கொண்ட அதன் மூலோபாயம் கிழிந்து தொங்குகிறது.

ஏதேனும் அரசியல் போக்கைப் பெறுவதற்காக, ஐரோப்பிய அதிகாரங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளையும், ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கொள்கை வேறுபாடுகளையும் சுரண்டலாமென்ற நம்பிக்கையில் சிரிசா இருந்தது.

மற்றொரு அபிவிருத்தியிலும், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்ததில், சிரிசா கிரீஸிற்குள் உள்ள ஆளும் மேற்தட்டுக்களுக்கு மண்டியிட்டதை உறுதிப்படுத்தியது.

அந்த அரசாங்கம் வலதுசாரியாளர் Prokopis Pavlopoulos வேட்பாளராக நிறுத்தியது, அவர் கிரேக்க நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் 233 வாக்குகளைப் பெற்றார். Pavlopoulos தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்த பாரிய பெரும்பான்மை அவசியமில்லை; வெறும் 151 வாக்குகளே இறுதி சுற்று வாக்கெடுப்பில் போதுமானதாகும்.

61 வயதான Pavlopoulos NDஇன் மத்திய குழுவில் இருக்கிறார். அவர் மிக சமீபத்தில் 2004இல் இருந்து 2009 வரையில் உள்துறை மந்திரி பதவி உட்பட, தொடர்ந்து உயர்மட்ட அரசு மற்றும் அரசாங்க பதவிகளை வகித்துள்ளார்.

அவர் பிந்தைய பதவியில் இருந்த போது, 15 வயதான Alexandros Grigoropoulos பொலிஸ் சுட்டதற்குப் பின்னர், போராட்டக்காரர்கள் மீது மூர்க்கமாக தாக்குதல் நடத்த 2008இல் பொலிஸை அனுப்பினார். அடுத்தடுத்து நடந்த அந்த பொலிஸ் ஒடுக்குமுறையில் நூற்றுக் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்.

Pavlopoulos தேர்ந்தெடுக்கப்பட்டமை ஏற்கனவே சிரிசாவிற்குள் கருத்து முரண்பாடுகளை தூண்டிவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Manolis Glezos கூறுகையில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை மக்கள் விருப்பத்தை அப்பட்டமாக மதிக்காததன்மை என்று வர்ணித்தார். நாடாளுமன்றத்தின் ஓர் உறுப்பினர், Pavlopoulosக்கு வாக்களிக்க மறுத்தார். சொய்பிளவினால் கோரப்பட்ட நிபந்தனைகளின் மீது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்பாடு எட்டுவதென்பது, வேகமாகவே ஒரு மிகப்பெரிய அரசாங்க நெருக்கடியைத் தூண்டிவிடும்.