சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Study shows inequality much higher in Germany than previously estimated

ஜேர்மனியில் சமத்துவமின்மை முன்னர் மதிப்பிடப்பட்டதை விட பெரிதும் அதிகமாக இருப்பதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது

By Denis Krassnin
19 February 2015

Use this version to printSend feedback

நவீன சமூகத்தில் செல்வ வளத்தின் பகிர்மானம், ஒரு தலைகீழ் பிரமிட்டை (pyramid) ஒத்திருக்கிறது. மொத்த செல்வ வளத்தைப் பங்கு போட்டிருக்கும் மிகச் சிலரே அந்த பிரமிடின் மேலே உள்ளனர். சமூகத்தின் மேலே உள்ள அடுக்கு அதன் சொத்துக்களை மூடி மறைப்பதுடன், அவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதைத் துல்லியமாக கூறுவதைக் கடினமாக்கும் வகையில், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களோ அரிதாக தான் வெளிவருகின்றன. தொழிற்சங்கத்தால் நடத்தப்படும் ஹான்ஸ் போக்லெர் அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, "புள்ளிவிபரங்களின் இந்த பெரிதும் துல்லியமற்றதன்மையைத்" தெளிவுபடுத்த முயல்கிறது.

ஒட்டுமொத்த சொத்துக்களின் கிட்டத்தட்ட மதிப்பின் அடிப்படையில், பொருளாதார ஆய்வுக்கான ஜேர்மன் பயிலகத்தின் (DIW) ஆய்வாளர்கள் என்ன கண்டறிந்தார்களோ அதுஅதை எழுதியவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், அந்த மறுமதிப்பீடு "துல்லியமற்று இருந்தாலும்" கூடஜேர்மனியில் சமூக சமத்துவமின்மை குறித்த முந்தைய மதிப்பீடுகளைப் பெரிதும் கடந்து செல்கிறது. துரதிருஷ்டவசமாக ஆய்வாளர்களால் மூன்று ஆண்டு பழைய தரவுகளை மட்டுமே பெற முடிந்தது.

அந்த ஆய்வின்படி, தனிநபர் குடும்பங்களின் ஒட்டுமொத்த செல்வவளத்தில் 63 இல் இருந்து 74 சதவீதத்திற்கு அதிகமானதை மிகப் பெரிய பணக்காரர்கள் கொண்டுள்ளனர். ஆய்வாளர்களின் மதிப்பீட்டில் அது 8.6 இல் இருந்து 9.3 பில்லியன் யூரோ மதிப்பிலானது. அதாவது அண்ணளவாக 400,000 குடும்பங்கள் எஞ்சிய 3.5 மில்லியன் குடும்பங்களை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளன என்று அர்த்தமாகிறது. முந்தைய புள்ளிவிபரங்கள் வெறும் 60 சதவீத பங்கைக் குறிப்பிட்டுக் காட்டி இருந்தன.

மிகப்பெரிய பணக்காரர்கள் விடயத்தில், அந்த எழுத்தாளர்கள் முந்தைய புள்ளிவிபரங்களில் இன்னும் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. மிகப்பெரிய ஒரு சதவீத செல்வந்தர்கள், மொத்த செல்வவளத்தில் முன்னர் கருதப்பட்டதைப் போல வெறும் 18 சதவீதம் கொண்டிருக்கவில்லை, மாறாக 31 இல் இருந்து 34 சதவீதம்ஏறத்தாழ இரண்டு மடங்குசெல்வ வளத்தைக் கொண்டிருந்தனர். மிகப்பெரிய பத்து பணக்காரர்களில் பத்தில் ஒரு சதவீதத்தினர், முன்னர் கருதப்பட்டதை விட மூன்று மடங்கிற்கு அதிகமான செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்அதாவது ஐந்து சதவீதத்திற்கு பதிலாக, 14இல் இருந்து 16 சதவீதம் கொண்டிருந்தனர். அதாவது சுமார் 80,000 பேர், அண்ணளவாக 40 மில்லியன் ஜேர்மன் மக்கள்தொகையில் வறிய பாதியளவினரை விட அதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர்.

செல்வ வளத்தின் பகிர்மானம் குறித்து தீர்மானிக்க முன்னர் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகள், பெரும் பலவீனத்தை எடுத்துக்காட்டுகின்றன. 1983இல் ஜேர்மன் சமூக-பொருளாதார குழுவால் (SOEP) ஸ்தாபிக்கப்பட்ட அதே அமைப்பு, ஆயிரக் கணக்கான பிரதிநிதித்துவ குடும்பங்களின் செல்வ வளத்தை ஆய்வு செய்தது. சமீபத்திய DIW ஆய்வின் எழுத்தாளர்களின் கருத்துப்படி, தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட அதுபோன்றவொரு கருத்துக்கணிப்பில் ஒரு மில்லியனரோ அல்லது ஒரு பில்லியனரோ கூட கலந்து கொண்டிருப்பார் என்பது பெரிதும் சாத்தியமில்லை. SOEPஇன் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், பெரும்பாலும், பத்து மில்லியன் கணக்கான யூரோக்களைக் கொண்ட செல்வ செழிப்பான குடும்பங்களும் கணக்கீடுகளில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. அந்த முடிவுகள் துல்லியமற்றவையாக இருந்தன.

செல்வ வளத்தின் பகிர்மானம் குறித்த மதிப்பீட்டிற்குள் பெரும் பணக்காரர்களை உள்ளடக்குவதற்காக, ஆய்வாளர்கள், ஏனைய விடயங்களோடு சேர்ந்து, Forbes இதழின் பணக்காரர்களின் பட்டியலையும் பயன்படுத்தினர். அவ்விதழ் ஒரு பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துக்களைக் கொண்டவர்களை மட்டுமே உள்ளடக்கி இருந்தது.

அவர்களின் செல்வம் மற்றும் அந்த தொகை, கடந்த ஆண்டில் கூர்மையாக அதிகரித்துள்ளது. நிதியியல் நெருக்கடிக்கு இடையிலும், அல்லது நிதியியல் நெருக்கடிக்கு நன்றி கூற வேண்டியிருக்கும் என்ற விதத்தில், 2002இல் 34 ஆக இருந்த ஜேர்மனிய பில்லியனர்களின் எண்ணிக்கை 2012இல் 55 ஆக உயர்ந்தது. 2003இல் 130 பில்லியனாக இருந்த இந்த சிறிய அடுக்கின் மொத்த செல்வம், 2013இல் ஏறத்தாழ 230 பில்லியனுக்கு அதிகரித்தது.

அதுபோன்ற பரந்த சமத்துவமின்மையால் ஆதாயமடைந்தவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இடையிலேயே கூட கவலைகளை உயர்த்தும் அளவிற்கு, அந்த தொகைகள் மிக மிக அதிகமாகும். ஜனவரியின் மத்தியில் அறக்கட்டளை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் குறிப்பிட்டதைப் போல, உலக மக்கள்தொகையில் மேலே உள்ள ஒரு சதவீதம், மிஞ்சியுள்ள 99 சதவீதத்தை விட அதிக செல்வவளத்தை அடுத்த ஆண்டு கொண்டிருக்கும். “சமூக சமத்துவமின்மையின் வெடிப்பார்ந்த சக்தியைக்" குறித்து Süddeutsche Zeitung எழுதி இருந்தது.

சமூகத்தின் மேல்மட்டத்தில் செல்வம் தொடர்ந்து திரண்டு கொண்டிருப்பதென்பது, ஜேர்மனியில் மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலும் காணக்கூடியதாக உள்ளது. சமூக சமத்துவமின்மையின் அளவு உலகளாவிய அளவில் இன்னும் கூடுதலாக கூர்மையுடன் வெளிப்படுகிறது.

2010இல், சுமார் 380 பில்லியனர்கள் துல்லியமாக மனிதயினத்தின் பாதியளவிலான வறியவர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவுக்கு கொண்டிருந்தனர். வெறும் மூன்று ஆண்டுகால போக்கில், இந்த எண்ணிக்கை 92 பில்லியனரர்களாக சுருங்கியது. ஓராண்டுக்குப் பின்னர், வெறும் 80 பில்லியனர்கள் மூன்றரை பில்லியன் மக்களை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை வெளியானதற்குப் பின்னர் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது, “சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி, 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் ஆளும் வர்க்கத்தால் கொண்டு வரப்பட்ட கொள்கைகளின் விளைவுகளாகும். … சொத்து மதிப்புகளின் வீழ்ச்சி மற்றும் பிரதான வங்கிகளின் நொடிந்து போகும் நிலைமைக்கு, அரசாங்கங்கள் வங்கி பிணையெடுப்புகள், பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டிவிகிதங்கள், மற்றும் மத்திய வங்கியின் பணத்தை-அச்சிடும் கொள்கை (Quantitative Easing) ஆகிய வழிவகைகளைக் கொண்டு சுமார் 12 ட்ரில்லியன் டாலரை நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சியதன் மூலமாக விடையிறுப்பு காட்டின.”

ஜேர்மனியின் மிகப் பணக்கார அடுக்கு, முன்னர் அறியப்பட்டதையும் விட அதிகமான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இக்கட்டுரையின் முதல் கருத்துக்களைத் திரும்பி பார்த்தால்: எந்த பிரமீடும் கவிழ்ந்து போகாமல்அல்லது அடிமட்டத்திலிருந்து தூக்கியெறியப்படாமல்நீண்டகாலத்திற்கு தலைகீழாக நிலைக்க முடியாது.