சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza capitulates to the EU

சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணடைகிறது

By Robert Stevens
21 February 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் "முக்கூட்டால்" ஆணையிடப்பட்ட சிக்கன திட்டத்தையும் மற்றும் நடப்பிலிருக்கும் கடன்களையும் நான்கு மாதங்களுக்கு நீடிப்பதற்கு வெள்ளியன்று ஒப்புக்கொண்டு, கிரேக்க அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் கைதுறந்தது.

ஐரோப்பிய வங்கிகளின் அரசியல் பிரதிநிதிகளுடனான சுமார் ஒரு மாத கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், முக்கூட்டால் கோரப்பட்ட நிபந்தனைகளை சிரிசா ஏற்றுக் கொண்டுள்ளது. "தற்போதைய ஏற்பாடுகளின் அடிப்படையில், சீர்திருத்த முறைமைகளின் முதல் பட்டியலை" கிரீஸ் திங்களன்று சமர்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை அந்த உடன்படிக்கையில் இடம் பெற்றிருந்ததாக யூரோகுழும அறிக்கை குறிப்பிட்டது.

அதற்கடுத்த நாள் சிரிசாவின் முன்மொழிவுகள் யூரோகுழுமம் மற்றும் முக்கூட்டால் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். “மீளாய்வை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஒரு மதிப்பார்ந்த தொடக்க புள்ளியாக இருக்கும் வகையில் அந்த பட்டியல் போதுமான விளக்கத்துடன் இருக்குமா என்பதன் மீது" அவை "அவற்றின் முதல் பார்வையை வழங்கும்.”

சிக்கன நடவடிக்கைகளின் இறுதி பட்டியலை முடிவு செய்ய கிரீஸிற்கு ஏப்ரல் மாதம் இறுதி கெடுவாக வழங்கப்பட்டது. அந்த பட்டியல் பின்னர் முக்கூட்டால் "மேற்கொண்டு திட்டவட்டமாக ஆக்கப்பட்டு, ஒப்புக்கொள்ளப்படும்.”

இத்தகைய நடைமுறைகளுக்கு கிரேக்கம் இணங்கவில்லையென்றால், அதன் 320 பில்லியன் யூரோ கடனில் திவாலாவதை தவிர்ப்பதற்கு தேவையான பில்லியன் கணக்கான கூடுதல் கடன்கள் அதற்கு கிடைக்காமல் போகும்.

ஐந்து மணிநேர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கூட்டத்தை தொடங்கி வைத்து யூரோகுழும தலைவர் ஜெரோன் திஜிஸ்செல்ப்லோம் கூறுகையில், "அவர்களது நிதியியல் கடப்பாடுகளை மதிக்க, அவர்களின் சந்தேகத்திற்கு இடமில்லாத பொறுப்புறுதியை" கடன் வழங்குனர்களுக்கு கிரீஸ் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். “பொருளாதார மீட்சியை ஆபத்திற்கு உட்படுத்த முடியாது, நாணய ஸ்திரப்பாட்டை ஆபத்திற்கு உட்படுத்த முடியாது, நிதியியல் துறை ஸ்திரப்பாட்டை ஆபத்திற்கு உட்படுத்த முடியாது,” என்றவர் வலியுறுத்தினார்.

யூரோகுழும கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டுடன் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை நடாத்தினார். முந்தைய புதிய ஜனநாயகம் தலைமையிலான அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டதைப் போல கடுமையான வெட்டுக்களை ஏற்பதில் கிரேக்க அரசாங்கம் இன்னும் போதுமானளவிற்கு நகரவில்லையென மேர்க்கெல் தெரிவித்தார்.

“சான்றாக அடுத்த வாரம் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அதற்கு நாங்கள் வாக்களிக்கும் விதத்தில், என்ன விவாதிக்கப்பட்டு வருகிறதோ அதன் சாராம்சத்தில் அங்கே கணிசமான மேம்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது,” என்று மேர்க்கெல் எச்சரித்தார்.

பேரங்கள் நடந்து கொண்டிருந்த போதே, எங்கே உடன்பாடு எட்டப்படாமல் போகுமோ என்ற அச்சத்தில் கிரீஸ் வங்கிகளிலிருந்து குறைந்தபட்சம் ஒரு பில்லியன் யூரோ எடுக்கப்பட்டு இருந்தன. கிரீஸின் SKAI தொலைக்காட்சியில் ஒரு செய்தியாளர் அறிவிக்கையில், “அவர்கள் ஓர் அரசியல் தீர்வைப் பெறும் தீர்மானத்தோடு இங்கே வந்துள்ளனர், இல்லெயென்றால் செவ்வாயன்று [கிரேக்க வங்கிகள் மீது] முக்கிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியதிருக்கும்,” என்றார்.

ஐரோப்பிய வங்கிகளின் கட்டளையின் கீழ் சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த சிரிசா உடன்பட்டிருப்பது, அதன் வர்க்க நிலைப்பாடு மற்றும் சமூக நலன்களினது தவிர்க்கவியலாத விளைபொருளாகும்.

சிரிசா சந்திக்க உள்ள அரசியல் மற்றும் சமூக பின்னடைவைக் குறித்து கருத்து தெரிவித்து, ஒரு கிரேக்க அரசியல் விமர்சகர் பாவ்லோ ஜிமாஸ் கூறுகையில், “பலமான விட்டுக்கொடுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன, அரசியல்ரீதியில் நச்சுத்தன்மையான அரசாங்கத்தின் விட்டுக்கொடுப்புகளாகும். அது உள்நாட்டு சாமானிய மக்களுடன் மோதிப் பார்க்கும் அரசாங்கத்தின் பரிசோதனையாக இருக்க போகிறது,” என்றார்.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்திற்கு பின்னர் உடனடியாக ஜேர்மன் நிதியியல் மந்திரி வொல்ஃப்காங் சொய்பிளவும் அதேபோன்ற மொழியில் பேசினார்: “அந்த உடன்படிக்கையைக் குறித்து அவர்களின் வாக்காளர்களுக்கு விளக்குவதற்கு, நிச்சயமாக கிரேக்கர்களுக்கு ஒரு கடினமான காலமாக இருக்கும். அத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படாத வரையில், அங்கே பணம் வழங்குவது இருக்காது,” என்றார்.

சிரிசா நடைமுறையில் எதையும் ஏற்க தயாராக இருப்பதாக கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் முன்னதாக சமிக்ஞை காட்டினார். அந்த நீட்சிக்கான அதன் முன்மொழிவில் ஏதென்ஸ் "கூடுதலாக ஒரு மைல் அல்ல, [மாறாக] கூடுதலாக 10 மைல் சென்றுள்ளது" என்றார். உடன்படிக்கையை எட்டுவதற்காக ஏனைய யூரோ மண்டல நாடுகளும் "பாதி பாதையை அல்லாவிட்டாலும், மாறாக பாதையின் ஐந்தில் ஒரு பங்கையாவது" கிரீஸிற்காக பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் முந்தைய கடன் உடன்படிக்கையை நீடிப்பதற்கான கிரேக்க அரசாங்கத்தின் ஒரு பரிந்துரையை ஜேர்மன் அரசாங்கம் உறுதியாக நிராகரித்த வெறும் ஒரு நாளுக்குப் பின்னர், இந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வந்தது.

“கடன் பேணும் தகைமை மற்றும் நிதியியல் ஸ்திரப்பாடு ஆகியவற்றை எட்டுவதுடன், நீடித்த வளர்ச்சியை மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புவளங்களை மேம்படுத்தும் நோக்கில், ஒரு பரந்த மற்றும் ஆழ்ந்த சீர்திருத்த நிகழ்வுபோக்கிற்கு புதிய அரசாங்கம் பொறுப்பேற்கிறது" என்று வாரௌஃபாகிஸ் ஆல் முன்வைக்கப்பட்ட அந்த முன்மொழிவில் கிரீஸ் வலியுறுத்தியது. வெற்று வார்த்தைகளில், அது "நிகழ்ந்துவரும் நெருக்கடிக்கு சமூகம் கணிசமானளவிற்கு விலை கொடுப்பதைக் குறைக்குமாறும், மற்றும் சமூக நேர்மைக்கும்" அழைப்புவிடுத்தது.

வாரௌஃபாகிஸின் பரிந்துரையில் இருந்த கருத்துக்கள் பகிரங்கமாக வெளியில் தெரிய வந்ததும், ஜேர்மன் நிதி அமைச்சகம் அதை நிராகரித்தது. பைனான்சியல் டைம்ஸ் எழுத்தாளர் பீட்டர் ஸ்பெகல் சுட்டிக் காட்டுகையில், “உடன்படிக்கை காலத்தை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான முறையீடு... நிதியியல் மற்றும் நிர்வாக வரையறைகளில் பரஸ்பரம் ஏற்புடைய உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டு, ஜேர்மனி குறிப்பாக “பிரதான புள்ளிகளைப் பேச்சுவார்த்தைக்கு விட்டுவைப்பதாக தெரியும்" அந்த மொழிநடையை எதிர்த்தது என்றார்.

ஐரோப்பிய ஆளும் மேற்தட்டைப் பொறுத்த வரையில், அங்கே "ஏற்றுக்கொள்ளத்தக்க பரஸ்பர நிதியியல் மற்றும் நிர்வாக வரையறைகள்" என்று எதுவும் கிடையாது, வெறும் நிபந்தனையற்ற சரணடைவு மட்டுமே உள்ளது.

வாரௌஃபாகிஸ் கடிதத்திற்கு விடையிறுப்பாக "ஜேர்மனியின் நிலைப்பாட்டை விவரிக்கும்" ஒரு ஆவணத்தை ராய்டர்ஸ் பிரசுரித்தது. கிரீஸின் முறையீடு "நிறைய குழப்பங்களுக்கு இடமளிக்கிறது" என்று குறிப்பிடும் அது, நடப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு தெளிவான பொறுப்புறுதி அதில் உள்ளடங்கவில்லை என்பதோடு, அது கிரேக்க நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துவதாக இல்லை என்கிறது.

அந்த ஆவணம் ஏற்புடைய துல்லியமான வார்த்தைகளை உச்சரித்தது. “எங்களுக்கு கிரீஸிடமிருந்து ஒரு தெளிவான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொறுப்புறுதி தேவை, அது வெறுமனே மூன்று சிறிய மற்றும் நன்கு புரியக்கூடிய வாக்கியங்களைக் கொண்டிருந்தாலும் போதுமானது: அதுவாவது, 'நாங்கள் உள்ளார்ந்து இருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பயன்படுத்தி, தற்போதைய திட்டத்தை நீடிப்பதற்கு விண்ணப்பிக்கிறோம். நாங்கள் இப்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருக்கும் முறைமைகளில், அமைப்புகளால் செய்யப்படும் எந்த மாற்றங்களுடனும் உடன்படுவோம். அந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுவதே எங்கள் நோக்கமாகும்'” என்று அது குறிப்பிடுகிறது.

இறுதியில், சிரிசா இதைத் தான் ஒப்புக் கொண்டது. அந்த வெறுக்கப்பட்ட "புரிந்துணர்வு ஒப்பந்தத்தை"—உண்மையில் கடன் உடன்படிக்கையின் பாகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட சிக்கன முறைமைகளின் பட்டியலாக உள்ள அதை—நடைமுறைப்படுத்துவற்கு வெளிப்படையாக அழைப்புவிடுத்த ஓர் உடன்படிக்கைக்கு திரும்புவதற்காக மட்டுமே அது பின்வாங்கியது. “முக்கூட்டு" என்பதற்கு பதிலாக "அமைப்புகள்" என்றும், “புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)" என்பதை "பிரதான நிதிய உதவி ஏற்பாட்டு உடன்படிக்கை" (Master Financial Assistance Facility Agreement – MFAFA) என்றும் வார்த்தையை மாற்றுவதற்கு சிரிசாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் கடன் உடன்படிக்கையின் உத்தியோகபூர்வ பெயரான MFAFA இல், “MoU இல் இருக்கும் முறைமைகளுக்கு கிரீஸ் உடன்படுகிறது", அதாவது ஐரோப்பிய வங்கிகளால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு அது உடன்படுகிறது என்பதைக் கோரும் வசனம் உள்ளடங்கி உள்ளது.

சிரிசா அரசாங்கத்தின் மானக்கேடான அடிபணிவு முற்றிலுமாக உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது அமைப்புகளின் முழு அரசியல் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகின்றன. அவை ஒருசில வாரங்களுக்கு முன்னர் சிப்ராஸின் தேர்தல் வெற்றியை பூமியையையே உலுக்கும் ஒரு நிகழ்வாக வரவேற்றன. சிரிசாவின் காட்டிக்கொடுப்பை பகிரங்கப்படுத்தாமல், இந்த குழுக்கள் அதை மன்னிப்பதற்காக மற்றும் அதன் நியாயப்பாடுகளுக்காக மன்றாட மிகை நேரம் வேலை செய்யும். ஆனால் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகள் அந்த உடன்படிக்கை என்னவென்பதைக் காணும்: அதாவது, அரசியல் துரோகத்தின் ஒரு ஆத்திரமூட்டும் மற்றும் கோழைத்தனமாக நடவடிக்கை என்பதைக் காணும்.