சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan rewrites foreign aid rules to include military assistance

இராணுவ உதவிகளை உள்ளிணைக்க, ஜப்பான் வெளிநாட்டு உதவிகள் மீதான விதிமுறைகளைத் திருத்தி எழுதுகிறது

By Ben McGrath
21 February 2015

Use this version to printSend feedback

ஜப்பானிய அரசாங்கம் அதன் உத்தியோகபூர்வ மேம்பாட்டு உதவி (ODA) திட்டத்தின் மூலமாக முதல்முறையாக வெளிநாட்டு இராணுவங்களுக்கு உதவி வழங்குமென கடந்த வாரம் அறிவித்தது. இந்நகர்வு, குறிப்பாக ஆசியாவில், இராணுவம் உட்பட அனைத்து மட்டங்களிலும் ஜப்பானிய மேலாளுமை மற்றும் உறவுகளைக் கட்டமைப்பதற்கான பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் ஆக்ரோஷமான இராஜாங்க முயற்சிகளின் பாகமாக உள்ளது.

அதுபோன்ற முறைமைகளை நடைமுறைப்படுத்த, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் ஜப்பானிய மந்திரிசபை முதல்முறையாக அந்நாட்டின் வெளிநாட்டு உதவிக் கொள்கையை திருத்தி எழுதுகிறது. “புதிய கட்டமைப்பின் அடிப்படையில், நாங்கள் கூடுதல் மூலோபாய மேம்பாட்டு உதவியை ஊக்குவிப்போம். சமாதானம், சர்வதேச சமூகத்தின் ஸ்திரப்பாடு மற்றும் செல்வ வளமைக்கு கூடுதலாக பங்களிப்போம்,” என்று வெளியுறவுத்துறை மந்திரி புமியோ கிஷிடா தெரிவித்தார்.

சர்வதேச "சமாதானம்" மற்றும் "ஸ்திரப்பாடு" ஆகியவற்றிற்கு பங்களிப்பதிலிருந்து வெகுதூரம் விலகி, வெளிநாட்டு உதவி கொள்கையில் செய்யப்படும் மாற்றமானது, அபேயின் "செயலூக்கம் கொண்ட சமரசவாதம்" (pro-active pacifism) என்றழைக்கப்படுவதன் பாகமாக புதிய இராணுவ கூட்டு பங்காண்மையை நோக்கமாக கொண்டதாகும். வெளிநாட்டு இராணுவங்களுக்கு ஒத்துழைப்பற்காக ODA வரவு-செலவு திட்டக்கணக்கை பயன்படுத்துவதை, முந்தைய அன்னிய நாட்டு உதவி கொள்கை வெளிப்படையாக தடை விதித்தது.

ஜப்பான் கடந்த காலத்தில் வெளிநாட்டு இராணுவங்களுக்கு உதவிகள் வழங்கியுள்ளது, ஆனால் அது ஒருபோதும் அதன் உத்தியோகபூர்வ உதவி திட்டத்தின் மூலமாக வழங்கி இருக்கவில்லை. அன்னிய நாட்டு உதவிக்கான சுருங்கிவரும் வரவு-செலவு திட்டக்கணக்கிலிருந்து இராணுவ உதவி நீக்கப்படும். 16வது முறையாக தொடர்ந்து ஆண்டு வெட்டுகளுடன், வரவு-செலவு திட்டக்கணக்கில் வரவிருக்கும் நிதியாண்டிற்கான மொத்த உதவித்தொகை 542 பில்லியன் யென்னாக (4.5 பில்லியன் டாலராக) நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகை 1997 இன் 1.2 ட்ரில்லியன் யென் என்ற உச்சபட்ச அளவின் பாதியை விட குறைவாகும்.

போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு, அத்துடன் பேரிடர் நிவாரணம் போன்ற இராணுவம்-அல்லாத நடவடிக்கைகளில், இராணுவங்கள் தற்போது ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகின்ற நிலையில், நாங்கள் இராணுவம்-அல்லாத ஒத்துழைப்பு மீதான எங்களின் கொள்கையைத் தெளிவுபடுத்தி உள்ளோம்,” என்று கூறி மந்திரிசபையின் முடிவை கிஷிடா நியாயப்படுத்தினார்.

அதுபோன்ற உதவி இராணுவம்-அல்லாத நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற அரசாங்கத்தின் வாதங்கள் முற்றிலும் ஏமாற்றுத்தனமானதாகும். முதலாவதாக இராணுவம் மற்றும் இராணுவம்-அல்லாத உபகரணங்களுக்கு இடையிலான போக்கு மற்றும் உதவி என்பது தீர்க்கமாக வரையறுக்க முடியாதவையாகும். இரண்டாவதாக வெளிநாட்டு இராணுவங்களுக்கான எந்தவொரு உதவியும் அவர்களின் ஒட்டுமொத்த ஆதாரவளங்களை அதிகரிக்கும்.

பேரிடர் நிவாரணம் போன்ற படைத்துறைசாரா அல்லது இராணுவமல்லாத நோக்கங்களுக்காக உதவியை அபிவிருத்தி செய்வதில் எங்கேனும் இராணுவப் படைகளோ அல்லது சிப்பாய்களோ ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால், அங்கே ஒவ்வொரு இடத்திலும் நடைமுறை முக்கியத்துவத்தின் மீது ஒருமுனைப்புடன் பிரத்யேகமாக ஆய்வு செய்யப்படுகிறது,” என்று அறிவிக்கும் மறுதிருத்தம் செய்யப்பட்ட ODA சாசனத்தின் வெற்று வார்த்தைகள் மீது விமர்சகர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி உள்ளனர்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய மையத்தின் பொது இயக்குனர் ஈச்சி சதாமாத்சூ கூறுகையில், “அந்த வாசகம் முற்றிலும் வெற்றுத்தனமானது. 'நடைமுறை முக்கியத்துவம்' என்பது எதைக் குறிக்கிறது? ஒவ்வொரு இடத்தையும் ஆய்வு செய்வதற்கான தகுதிவகைகள் என்ன?” என்று குறிப்பிட்டார்.

அபே அரசாங்கம் ஏற்கனவே ஜப்பானிய இராணுவத்தை, அல்லது தற்காப்பு படைகளை (SDF), வெளிநாட்டு கொள்கைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. இயற்கை பேரிடர்களில் தலையீடுகள் செய்வதும் அதில் உள்ளடங்கும். பிலிப்பைன்ஸில் பேரழிவுகரமான ஹையன் (Haiyan) சூறாவளிக்குப் பின்னர், 2013இல், அது 1,180 SDF சிப்பாய்களை அங்கே அனுப்பியதுஇதுவொரு மீட்சி நடவடிக்கைக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய இராணுவத்தில் ஒன்றாகும்.

அந்நடவடிக்கையின் நிஜமான நோக்கம், பிலிப்பைன்ஸில் ஜப்பானிய நிலைநிறுத்தலை அதிகரிப்பதும், சீன செல்வாக்கிற்கு குழிபறிப்பதுமாக இருந்தது. ஓர் அரசாங்க ஆதார நபர் அச்சமயத்தில் Asahi Shimbunக்கு தெரிவிக்கையில், “அந்த விடையிறுப்பு சீனாவை இறுக்கி பிடிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது,” என்றார்.

இந்த புதிய "போர்-சாராத" உதவி "சட்டத்தின் ஆட்சியைப்" பாதுகாப்பதிலும் உதவும் என்று அறிவித்து, புதிய ODA சாசனத்தை அறிவிக்கையில், அபே சீனா மீது மிக பகிரங்கமான ஒரு பாய்ச்சலை எடுத்தார். ஜப்பான் மற்றும் ஏனைய அண்டை நாடுகளுடனான சீனாவின் கடல்வழிசார் பிரச்சினைகளில் சர்வதேச சட்டத்தை மதிக்க தவறுவதாக அபே அரசாங்கம் மீண்டும் மீண்டும் பெய்ஜிங்கைக் குற்றஞ்சாட்டி உள்ளது.

யதார்த்தத்தில், அமெரிக்காவின் ஆதரவுடன், ஜப்பான் தான் கிழக்கு சீனக் கடலின் சென்காயு/தியாவு தீவுகள் விவகாரத்தில் சீனா உடனான அதன் பிரச்சினையில் ஓர் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அந்த கடற்பாறை குன்றுகளைத் "தேசியமயமாக்கியதன்" மூலமாக, நடைமுறையில் இருந்ததை ஜப்பானிய அரசாங்கம் தன்னிச்சைப்படி மாற்றிய பின்னர், செப்டம்பர் 2012இல் சீனாவுடனான பதட்டங்கள் கூர்மையாக தீவிரமடைந்தன.

சீனா அதன் தென்கிழக்கு ஆசிய அண்டைநாடுகளுடன், குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுடன் எல்லை தகராறு கொண்டுள்ள தென்சீனக் கடலில், ஜப்பானிய வான்வழி மற்றும் கடல்வழி ரோந்து நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளைக் குறித்து ஜப்பான் சமீபத்தில் அறிவித்தது. சீன அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் வியட்நாம் மற்றும் சீனா இரண்டு நாடுகளாலும் உரிமை கோரப்படும் கடல்பகுதியில் ஓர் எண்ணெய் அகழ்வாலையை நிறுத்தியதும், கடந்த ஆண்டு அவ்விரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு எழுந்தது. மாதக்கணக்கில் நீடித்த அந்த முரண்பாட்டின் போது, சீன மற்றும் வியட்நாமிய வாகனங்கள் ஒரு பரந்த மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்தும் வகையில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.

சீனாவுடன் பதட்டங்களை மட்டுமே கொண்டு வரும் ஒரு நகர்வில் ஜப்பான் ஏற்கனவே பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு ரோந்து படகுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பிலிப்பைன்ஸிற்கு பத்து படகுகள் அனுப்பப்பட உள்ளன, வியட்நாமுக்கு ஆறு வழங்கப்படும். டோக்கியோ இந்தோனேஷியாவிற்கு ரோந்து படகுகள் வழங்கும் சாத்தியக்கூறையும் உயர்த்தி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்புடன் (ASEAN) ஜப்பானிய உறவுகளை அவரது வெளியுறவு கொள்கையின் ஒரு முக்கிய பாகமாக அபே ஏற்படுத்தி உள்ளார். டிசம்பர் 2012இல் பதவியேற்றதிலிருந்து, அவர் அனைத்து பத்து ஆசியான் நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளார், இவ்விதத்தில் இவ்வாறு செய்த முதல் ஜப்பானிய பிரதம மந்திரியாவார்.

சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ஒரு பரந்த இராஜாங்க தாக்குதல் மற்றும் இராணுவ கட்டமைப்பானஅமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஜப்பானிய அரசாங்கம் இந்த வெளியுறவு கொள்கை நிகழ்ச்சிநிரலைப் பின்தொடர்ந்து வருகிறது. இந்த உள்ளடக்கத்தில் தான், அபே ஜப்பானின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை அதிகரிப்பதற்காக அப்பிராந்தியத்தில் அதன் மேலாளுமையைப் பலப்படுத்தி வருவதுடன், அதை மீள்இராணுவமயப்படுத்தி வருகிறார்.

போர் தொடுப்பதிலிருந்து அந்நாட்டை உத்தியோகபூர்வமாக தடுத்து வந்த ஜப்பானிய அரசியலமைப்பிற்கு ஒரு சர்ச்சைக்குரிய "மறுவிளக்கத்தை" கடந்த ஜூலையில் அபே அறிவித்தார். “கூட்டு தற்காப்பு" என்று அழைக்கப்படும் அந்த முடிவு, அமெரிக்கா அல்லது ஏனைய நாடுகளுடன் அது கூட்டணியில் இருக்கும் வரையில் ஆக்கிரமிப்பு போர்களில் பங்கெடுக்க ஜப்பானுக்கு கதவுகளைத் திறந்து விடுகிறது.

அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஒட்டுமொத்தமாக அரசியலமைப்பு மறுதிருத்தத்தை இம்மாதம் அபே கொண்டு வந்தார்பெரும்பாலும் அனேகமாக இது 2016இன் மத்தியில் மேல்சபை தேர்தல்களுக்குப் பின்னர் நடத்தப்படும். அவர் ISIS ஆல் (ஈராக் மற்றும் சிரிசாவின் இஸ்லாமிய அரசு) இரண்டு ஜப்பானிய பிரஜைகள் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதை, போர்களில் இராணுவத்தை பயன்படுத்துவதன் மீதிருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவது உட்பட, மக்கள் விரும்பாத ஆழ்ந்த அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிக்காக சுரண்டி வருகிறார்.

வெளிநாட்டு இராணுவங்களுக்கு வழங்கும் ODA உதவிகளை அனுமதிக்கும் சமீபத்திய முடிவும், இதே இராணுமயப்பட்ட நிகழ்ச்சிநிரலின் ஒரு அம்சமாகும்.