சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police attack estate workers protesting police killing

பொலிஸ் கொலைக்கு எதிரான தோட்ட தொழிலாளரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இலங்கை பொலிஸ் தாக்கியது

By M. Devarajah and A. Shanthakumar
18 February 2015

Use this version to printSend feedback

மத்திய மலைநாட்டின் தலவாக்கலை நகரத்திற்கு அருகாமையில் ஒரு இளைஞன் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் மரணமானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது இலங்கை பொலிஸ் நடத்திய கொடூர தாக்குதலுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான மோசமான தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கம் பொறுப்பாகும்.

http://www.wsws.org/asset/261cfd43-8b12-45cd-b276-02db488a7bbN/Manoj+Marimuththu.jpg?rendition=image240
மனோஜ்
மாரிமுத்து

ஜனவரி 31, ஹட்டனுக்கு அருகில் தலவாக்கலை நகரத்தில் கைது செய்யப்பட்ட  கிரேட் வெஸ்டன் தோட்டத்தின் கல்கந்தை பிரிவைச் சேர்ந்த 21 வயது மனோஜ் மாரிமுத்துவின் மரணத்தை அடுத்தே, இந்த பொலிஸ் ஒடுக்குமுறை தொடர்கின்றது. பாபுல் என்ற வெற்றிலையுடன் கலந்த சிறிது போதையேற்றும் பொருள் ஒன்றை அவர் வைத்திருந்தாக பொலிஸ் கூறுகின்றது. பொலிசின் படி, இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மனோஜை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றபோது, அவர் ஓடிச் சென்று அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பாய்ந்து மூழ்கினார்.

இந்தக் கதை மிகவும் சந்தேகத்திற்கிடமானது. மனோஜ் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படும் வியாபார நிலையத்தில் இருந்து பொலிஸ் நிலையம் 200 மீற்றர் தூரத்திலேயே உள்ளது. ஆனால் நீர்த்தேக்கம் சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ளது. உள்ளூர்வாசிகளின் படி, பொலிசார் கைது செய்ததை எவரும் பார்த்திருக்கவில்லை.

இந்தச் செய்தியை கேட்டவுடன், கிரேட் வெஸ்டன் மற்றும் னை தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் நகரத்தில் உள்ள இளைஞர்களும் அடுத்த நாள் நீர்த்தேக்கத்தை சூழ்ந்துகொண்டு, இளைஞனின் மரணத்திற்கு பொலிசாரைக் குற்றம் சாட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது சடலம் மாலை 5 மணிக்கே கண்டுபிடிக்கப்பட்டது. ஜனக் கூட்டம் பிரமாண்டமாக இருந்ததினால் அந்தப்பிரதேசத்தில் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது. அங்கு அணிதிரட்டப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் கண்ணீர் புகை வீசியதோடு, தொழிலாளர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர்.

மக்களின் எதிர்ப்பின் காரணமாக இரண்டு உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்வதாக பொலிஸ் அறிவித்தது. ஆனால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வேட்டையாடலும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது. வீடியோ காட்சிகள் மூலம் 84 பேரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது. பெப்ரவரி 2 அவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன் பிணை வழங்க மறுக்கப்பட்டது, தோட்டக் கோயில் ஒன்றில் வேலை செய்த மருதை இராஜலிங்கம் பின்னர் கைது செய்யப்பட்டார். பொலிசில் சரணடையுமாறு வலியுறுத்தப்பட்ட மேலும் 14 பேர் இந்தவாரம் சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள்.

திங்கட் கிழமை, நுவரேலியா மாவட்ட நீதிமன்றத்தில், தனிப்பட்ட விபரங்களை  தெரியப்படுத்தவில்லை எனக் காரணம் காட்டி, அதனை தெரியப்படுத்தியும் கூட, ராஜலிங்கத்திற்கு பிணை வழங்குவதற்கு பொலிசார் எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களும்,சரணடைந்தவர்களுமாக ஏனைய 19 பேரும் 5,000 ரூபா காசுப் பிணையிலும் மற்றும் 1,00.000 ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்கள். மார்ச் 2 அடுத்த தவணைவரையிலும் அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பொலிசில் பதிவு செய்ய வேண்டும்.

20 பேரையும் சிறை வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. நீதவான் விசாரணையை தடுத்தமை, சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை, புகையிரத பயணத்தை தடுத்தமை மற்றும் குற்றவியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

http://www.wsws.org/asset/562d28e5-2b7f-4683-b7bb-ac500a4dd84I/Manoj%27s+parents.jpg?rendition=image480
மனோஜின்
பெற்றோர்

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய மனோஜின் தந்தை மாரிமுத்து கூறியதாவது:  ‘’ஏன் என் மகனை கைது செய்தார்கள் என எனக்குத் தெரியாது. அவர் போதைப் பொருள் எதனையும் உபயோகிப்பது கிடையாது. அவருடைய மரணத்திற்கு பொலிஸ் பொறுப்பேற்க வேண்டும். அவர் எனது ஒரே மகன். அவர் தொலைத் தொடர்பு கோபுரம் கட்டும் ஒப்பந்தக் காரரிடம் வேலை செய்தார். நானும் எனது மனைவியும் ஓய்வு பெற்றுள்ளோம். நாம் அவரின் வருமானத்தில்தான் தங்கியிருந்தோம். அவர் கைது செய்யப்பட்ட தினத்தன்று கோழித்தீன் வாங்குவதற்காக நகரத்திற்கு சென்றிருந்தார்.’’

சம்பவம் நடந்த தினத்தன்று பொலிஸ் நிலையத்திற்கு மாலை 7 மணியளவில் மனோஜ் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரின் அப்பா அங்கு சென்றிருந்த போதே, அவருடைய மகன் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக பொலிசார் கூறினார்கள்.

அடுத்த நாள் நடந்தது பற்றி ஒரு இளைஞர் தெளிவுபடுத்தினார்: ‘’செய்தியை கேள்விப்பட்டவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு மக்கள் சென்றார்கள். நாங்கள் அந்த இடத்திற்கு சென்றபோது மனோஜின் உடலை வெளியில் எடுப்பதபற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுப் புறத்திலுள்ள தோட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காணோர் படிப்படியாக அவ்விடத்தில் கூடினார்கள். அங்கு பாரிய கூட்டத்தைப் பார்த்து புகையிரதம் நிறுத்தப்பட்டது. பொலிஸார் கூறுவது போல் எவரும் புகையிரதத்தை நிறுத்தவில்லை. பொலிஸார் மக்களை தாக்கியதன் மூலம் அவர்களை ஆத்திரமூட்டினார்கள்’’.

பெருந் தோட்ட தொழிற்சங்கங்கள் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவில்லை, பதிலாக பொலிசாருக்கே உதவினர். கிரேட் வெஸ்டன் தோட்டத்தில் வசிப்போர் உள்ளுர் தலைவர்கள் ஊடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சருமான றுமுகன் தொண்டமானை உதவி கேட்டு சந்தித்தார்கள். அவர் உதவி செய்ய மறுத்ததுடன், ஆரம்பத்திலேயே தமது பிரதிநிதி ஒருவருக்கு அறிவித்திருந்தால்தான் தாவது செய்திருக்க முடியும் என வலியுறுத்தினார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சருமான பி.திகாம்பரத்தையும் தொழிலாளர்கள் சந்தித்தார்கள். பொலிசாரினால் குறிப்பிடப்பட்ட 22 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் கொடுக்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார். கைது செய்யப்படும் ஆபத்தை உணர்ந்து 14 தொழிலாளர்கள் அவருடைய ஆலோசனையை நிராகரித்தார்கள். அதற்கு பதிலாக திங்கட்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.

தோட்டங்களில் ஒடுக்குமுறை நிலைமைகளை திணிப்பதற்கு உதவுவதற்காக பொலிசார் தோட்ட இளைஞர்களை வழமையாக துன்புறுத்துகின்றார்கள். தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் குறைந்த சம்பளத்தை பெறுபவர்களாவர். அவர்கள் புவியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தலவாக்கலை நகரத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்திலேயே கிரேட் வெஸ்டன் தோட்டம் உள்ளது. அண்மையில்தான் போக்குவரத்து சேவையை பெற்றது. அதுவும் தனியாருக்கு சொந்தமான வான்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை சேவையில் ஈடுபடுகின்றன.

தொழிலாளர் மத்தியில் உள்ள கோபத்தை தணிப்பதற்காக, சிறிசேன அரசாங்கம் பொலிஸ் விசாரணைக்கு கட்டளையிட்டுள்ளது. நுவரெலிய மாவட்டத்தில் உள்ள இரண்டு பொலிஸ் உயர் அதிகாரிகள் மனோஜின் அப்பாவிடம் சென்று வாக்குமூலம் எடுத்துள்ளார்கள். எப்படியிருந்த போதிலும், அத்தகைய ஒரு விசாரணை மரணத்தை தற்கொலை என வகைப்படுத்துவதுடன், தற்பாதுகாப்புக்காக பொலிசார் தொழிலாள்ரகள் மேல் தாக்குதல் தொடுத்தார்கள் என நியாயப்படுத்தும்.

இலங்கை பொலிசார் கைதிகளை கொல்வதில் பேர் போனவர்கள். சந்தேக நபர்கள் ஆற்றில் அல்லது கால்வாயில் பாய்ந்தார்கள், அல்லது சந்தேக நபர்கள் கைது செய்த அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய முயற்சித்தார்கள் என்ற போர்வையில் கடந்த பல வருடங்களில் பல டசின் கணக்காணோர்  பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போது மரணமடைந்துள்ளார்கள். அத்தகைய அறிக்கைகள் சட்டத்தின் மூன் சவால் செய்யப்படவில்லை. சந்தேக நபர்கள் பாதாள உலக குற்றவாளிகள் என்று ஊடகங்களும் இத்தகைய கொலைகளை நியாப்படுத்தின.

பதவிக்கு வந்த அரசாங்கங்களினால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தத்தின் போது, பொலிசாரும் பாதுகாப்பு படைகளும் பல சட்டவிரோத கொலைகளை செய்ததுடன் பலரை காணாமலும் ஆக்கினர்.

சகல தொழிலாளர்களும் கிரேட் வெஸ்டன் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறையை எதிர்ப்பதுடன், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். சிறிசேன அரசாங்கம், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என வாய்சவடால் விடுத்தாலும், முன்னய மகிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே, இதுவும் எத்தகைய எதிர்ப்புகளுக்கும் எதிராக பொலிஸ்-அரச வழிமுறையையே பயன்படுத்தவுள்ளது.