சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece’s Syriza government proposes list of social cuts to European Union

கிரேக்கத்தின் சிரிசா அரசாங்கம் சமூகசெலவின வெட்டுக்களுக்கான பட்டியலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்வைக்கிறது

By Johannes Stern
25 February 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளுக்கு சரணடைந்த பின்னனான சிலநாட்களில், கிரேக்கத்தின் சிரிசா தலைமையிலான அரசாங்கம் அதன் வார்த்தைகளை செயலுடன் பொருத்திக் கொண்டது. செவ்வாய்க் கிழமை காலை, அது உறுதிப்படுத்தப்பட்ட “சீர்திருத்தங்களின்” பட்டியலை, அதாவது, பிரஸ்ஸெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்டவாறு, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை முன்வைத்தது.

இதற்குப் பதிலாக, யூரோ மண்டலத்து நிதி அமைச்சர்களின் யூரோ குழுவானது, “உதவி திட்டம்” என்று அழைக்கப்படுவதன் கீழ் கிரீசுக்கு ஜூன் இறுதி வரைக்கும் கடன் கொடுப்பதை நீட்டிப்பதற்கு உடன்பட்டது. நேற்று பிற்பகலிலான அவர்களின் விரைந்த உடன்பாடானது, கிரேக்க அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட வெட்டுக்கள் பிரஸ்ஸெல்ஸ் மற்றும் பேர்லின் தேவைகளை பரந்த அளவில் நிறைவேற்றக்கூடியதாக உள்ளன என்று காட்டுகின்றது.

கிரேக்க நிதி அமைச்சர் யானிஸ் வாரௌஃபாகிஸ் ன் ஏழு பக்கங்கள் கொண்ட பத்திரமானது பழமைவாத ஜேர்மன் நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள ஆல் எழுதப்பட்டிருக்கக்கூடும். அதில், சிரிசா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெறுப்புக்கொண்ட ஆணைக்கு அதன் பூரண அடிபணிவை மட்டும் உறுதி செய்யவில்லை, முந்தைய பழமைவாத மற்றும் சமூக ஜனநாயக அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவற்றுக்கு அப்பாலும் செல்லக்கூடிய வகையில் அதன் சமூக வெட்டுக்களை அறிவித்துள்ளது.

யூரோகுழு தலைவர் டச்சு நிதி அமைச்சர் ஜெரோன் திஜிஸ்செல்ப்லோமுக்கான அவரது கடிதத்தில், வாரௌஃபாகிஸ் பகட்டாரவாரத்துடன் எழுதினார்: “அதன் சமூக சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை முறைப்படுத்துவதுடன் கூட, கிரேக்க பாராளுமன்றத்திற்கு வழங்கிய பிரதமர் (அலெக்சிஸ்) சிப்ராஸ் இன் வேலைத்திட்ட அறிக்கையுடன் ஒத்துப்போகும் வகையில், கிரேக்க  அரசாங்கமானது ஐரோப்பிய பங்காளர்களுடனும், நிறுவனங்களுடனும், அதேபோல சர்வதேச நாணய நிதியத்துடனும் நெருங்கிய ஒத்துழைப்பில் வேலைசெய்வதற்கும் கூட அர்ப்பணித்துக் கொண்டுள்ளது, மற்றும் நிதிய தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும், நிதிய ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதமிடவும், மற்றும் பொருளாதார மீட்சியை முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கின்றது.”

ஜேர்மன் ஊடகம் மொழிமாற்றம் செய்தவாறு, “கிரேக்க சேமிப்பு பட்டியல்” வெட்டுக்குப்பின் வெட்டாக முன்மொழிவைக் கொண்டிருக்கிறது.

பொது செலவினப் பகுதி” குறிப்பிடுவதாவது:” கிரேக்க அதிகாரிகள் அரசு செலவினப் பகுதி ஒவ்வொன்றிலும் (கல்வி, பாதுகாப்பு, போக்குவரத்து, உள்ளூர் அரசாங்கம், சமூக அளிப்புக்கள்) செலவினங்களை மறு ஆய்வுசெய்து கட்டுப்படுத்தும்” அவை “ஒவ்வொரு அமைச்சகத்தாலுமான செலவினங்களை முழுக்க ஆய்வு செய்வதன் மூலம் பணத்தை சேமிக்கும் நடவடிக்கைகளை அடையாளம் காட்டவும்” செய்யும்.

சமூகப் பாதுகாப்பு முறைகளின் சீர்திருத்தம்” மீதானவற்றில், சிரிசா “ஓய்வூதிய திட்டத்தை நவீனப்படுத்துவதை தொடர்வதற்கு” உறுதி அளிக்கிறது. அதிகாரிகள் முன்கூட்டி ஓய்வுபெறுபவர்களின் அதிகப்படியான வீதத்தை தோற்றுவிக்கும் ஓட்டை வழிகளையும் ஊக்கத்தொகைகளையும் அகற்றுவர் (மற்றும்) சேமிப்பைப் பெறுவதற்கு ஒட்டுமொத்த ஓய்வூதிய நிதிகளையும் அகற்றுவர்.”

பொதுச்சொத்துக்களை நிர்வகித்தல் மற்றும் தனியார்மயமாக்கல்” பகுதியில், சிரிசா “முற்றுப்பெற்ற தனியார்மயமாக்கலை திரும்பப்பெறாது” என்று உறுதி அளிக்கிறது. மேலும் “எங்கு கேள்விப்பத்திர நிகழ்ச்சிப்போக்கு தொடங்கப்பட்டுள்ளதோ அங்கு, அரசாங்கமானது சட்டத்தின்படி அதனை மதிக்கும்.”

இது “முக்கிய துறைகளில் முதலீட்டை ஈர்க்கவும், அரசு சொத்துக்களை திறமாகப் பயன்படுத்தவும்” நோக்கங்கொண்டுள்ளது மற்றும் மேலும் தனியார்மயமாக்கலை தடுக்காது. தனியார்மயமாக்கல் முற்றுப்பெறாத நிலையில் உள்ளவை “சிறந்த நிலைமைகளையும் வருவாயையும் பெறுவதற்கு” மற்றும் “போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கு” ஏற்றாற்போல் மாற்றி அமைக்கப்படும்.

அப்பத்திரம் “உழைப்பு சந்தை சீர்திருத்தங்கள்” “சிறந்த வணிக நிலைமைகளை” உருவாக்குவதற்காக நோக்கங்கொண்டுள்ளது என குறிப்பிடுகிறது. இதனை அடைவதற்கு அரசாங்கமானது அதன் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான, குறைந்த பட்சக் கூலி அதிகரிப்புக்கான அழைப்பை சக்திமிக்க வகையில் கைவிடுகிறது. “குறைந்தபட்ச கூலி தொடர்பான மாற்றங்களின் நேரமும் பரப்பெல்லையும் சமூகப் பங்காளர்கள் மற்றும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான  கலந்தாலோசனையில் செய்யப்படும். வேறு வகையில் சொல்வதானால், பலதொழிலாளர்களுக்கு 50 சதவீதம்! அளவுக்கு கூலிகளைக் குறைத்த பின்னர், கிரீஸில் கூலிகள் உயர்த்தப்படுமா இல்லையா என்பதை வங்கிகளே முடிவு செய்யும்.

பத்திரத்தில் உள்ள இதர தலைப்புக்கள் “ஊழலுக்கு எதிராக போராடுதல்,” வரிக் கொள்கை, கிரேக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் ஆரோக்கிய நிலைமை ஆகியனவாகும்.

சிரிசாவின் அரசியலைப் பின்பற்றுபவர்களுக்கு வாரௌஃபாகிஸ் இன் பத்திரம் வியப்பைத் தராது. அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஐரோப்பிய முதலாளித்துவத்தையும் பாதுகாப்பதை ஆரம்பத்திலிருந்தே தங்களின் பணியாகப் பார்த்த ஒரு மனிதனிடம் இருந்தும் ஒரு அரசாங்கத்திடம் இருந்தும் அதன் மூலத்தைக் கொண்டிருக்கிறது. அதன் முன்னோடிகளைப் போலவே, சிரிசா அரசாங்கம் ஐந்து வருடகால கடுமையான கெடுபிடிக்கொள்கைக்கு பின்னும் கூட, கிரேக்க மக்களிடம் இருந்து என்றும் இராத வகையில் இன்னும்நிறைய தியாகங்களைக் கோரும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதிய சந்தைகளுக்கு அடிபணிந்துள்ளது.

Kathimerini செய்தித்தாளில் வெளியிடப்பட்ட கிரீஸ் வங்கியினால் செய்யப்பட்ட கணக்கீடுகளின்படி, மார்ச்சில் கிரீசுக்கு இன்னொரு பத்து பில்லியன் யூரோக்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை  வங்கிகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பைகளுக்குள் நேரடியாக செல்லக் கூடியதாகும். மார்ச் 6ல், அரசாங்கப் பத்திரங்கள் 1.4 பில்லியன் யூரோக்கள் பாக்கி செலுத்த வேண்டிய நிலையில் வீழ்ந்துள்ளன; மார்ச் 20ல், மேலும் 1.6 பில்லியன் யூரோக்கள் திரும்ப செலுத்தப்பட்டாக வேண்டும். இத்துடன், 1.6  பில்லியன் யூரோக்கள் பன்னாட்டு நிதியத்திற்கு கடன் திரும்ப செலுத்த வேண்டிய பாக்கியாக உள்ளது.

அண்மையில்தான், கிரேக்க பொருளாதார வலைப்பதிவு Macropolis, கிரீசுக்கான இரண்டாவது “உதவிப் பொதி” என்று அழைக்கப்படுவதின் பதினொரு சதவீதம் மட்டுமே கிரேக்க அரசாங்கத்தற்கு செல்லும் என்று கணக்கிட்டுள்ளது. பிணை எடுப்பின் எஞ்சியவை கடன் நிதியத்திற்காகப் பயன்படுத்தப்படும் அதாவது, அது வங்கிகளுக்கு நேரடியாகப் பாயும்.

எதேன்சின் சமூகவெட்டுக்களின் புதிய பட்டியலானது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் பற்றிய செயல் நடவடிக்கை குறிப்பை முன்னெடுத்துச்செல்கிறது, நிதி மூலதனத்தின் சார்பில் கிரேக்க மக்களை தொடர்ந்து இரத்தம் சிந்தவைக்கிறது. வரும் கிழமைகளில், வரவு-செலவு திட்ட வெட்டுக்களுக்கான மேலும் ஸ்தூலமான முன்மொழிவுகள் எதேன்சிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் கார்ட் அம்மையார், எதேன்சின் திட்டங்கள் உதவித் திட்டத்தை தொடர்வதற்கு போதுமானவை என்று செவ்வாய் அன்று உறுதிப்படுத்தினார். ஆயினும், அவர் சிரிசாவின் முன்மொழிவுகள் மிகக் குறிப்பிடும்படியாக இல்லை என்று விமர்சித்தார். “ஒருவேளை மிக முக்கியமானவை உள்ளடங்கலாக” பல பகுதிகளில், தாம் மனக்கண்ணால் கருதுகின்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நோக்கங்கொண்டுள்ளது என்ற தெளிவான உறுதிப்பாடுகள்” இல்லாதிருக்கின்றன என்று சர்வதேச நாணய நிதிய தலைவர் புகார் கூறினார்.

எதேன்சால் அளிக்கப்பட்ட முன்மொழிவுகள் “ஒரு முதலாவது பட்டியல்” மற்றும் சிப்பிராஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்த இருக்கும் வெட்டுக்களின் ஒரு “அறிகுறி” மட்டுமே என்று திஜிஸ்செல்ப்லோம் கூறினார். ஆயினும், புதிய கிரேக்க அரசாங்கம் வெட்டுக்களை மேற்கொள்வது பற்றி “மிக அக்கறை” கொண்டதாக இருந்தது என்று நம்புகிறார்.

சிரிசா முந்தைய கிரேக்க அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளை தொடர்வதற்கு நகர்கையில், எவ்வாறாயினும் அது அதன் முன்னோடிகளிடம் இருந்து “முற்றிலும் வேறுபட்ட அரசியல் காட்சி” என்று திஜிஸ்செல்ப்லோம் கூறினார்.

பிரஸ்ஸெல்ஸ் மற்றும் எதேன்சிற்கும் இடையிலான சமீபத்திய உடன்பாடானது, சிரிசாவின் “அரசியல் காட்சியை” அதாவது, போலி இடது சொற்றொடர்களுக்குள் உடுத்தப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு மற்றும் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளை கோடிட்டுக்காட்டுகின்றது என்ற உண்மையானது, ஐரோப்பிய ஆளும் செல்வந்தத் தட்டின் வளர்ந்து வரும் பகுதியால் கிரீசில் சிக்கன நடவடிக்கைகளை தொடர்வதற்கானதொரு மூலோபாயமாக பார்க்கப்படுகின்றது.

ஆகையால் முன்னணி பொருளியலாளர்கள் சிரிசாவுக்கு குறைந்த பட்சம் வார்த்தை அளவிலான சலுகைகளுக்காவது அழைப்பு விடுத்தனர், எனவேதான் போலி இடது கட்சி அதன் பிற்போக்கு நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்கையில் விரைவில் தாமே  மதிப்பிழந்துவிடாது இருக்கும்.

Die Welt க்கான கருத்தை உரைக்கையில், பொருளாதார ஆய்வுக்கான ஜேர்மன் நிறுவனத்தின் (DIW) இயக்குநர் Marcel Fratzscher, “சீர்திருத்தங்களின் உடைமையை நாடு எடுக்கும்பொழுது நடக்கும் நெருக்கடிகளில் இருந்து கிரீசானது எழவே செய்யும். கிரீசில் உள்ள அரசாங்கமானது பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு வெற்றியாளராக நன்றாக எழ முடியுமானால் மட்டுமே இது அடையப்பட முடியும்” என்று எச்சரித்தார்.

கடந்த 30 வருடங்களில் அபூர்வமாக, நாட்டில் ஒரு அரசாங்கத்திற்காக ஆதரவு பெற்றிருப்பது மிக மகத்தானது” என Fratzscher கூறினார். “ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, கிரேக்க அரசாங்கம் குறைந்தபட்சம் அதன் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு அதனை அனுமதிப்பதன்மூலம், அதன் செல்வாக்கை ஆக்கபூர்வமான சீர்திருத்த வேலைத்திட்டமாக மாற்றுவதற்கு அதற்கு உதவ வேண்டும்.” என்றார்.