சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

The capitulation of Syriza and the lessons for the working class

சிரிசாவின் சரணடைவும், தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகளும்

International Committee of the Fourth International
23 February 2015

Use this version to printSend feedback

குட்டி முதலாளித்துவம், நாம் பார்க்கவிருப்பதைப் போல,  அதன் கரங்களில் தன்னைத்தானே ஒப்படைத்துவிட்ட எந்தவொரு இயக்கத்தையும் நாசப்படுத்துமே ஒழிய, வேறெதற்கும் தகைமையற்றதாகும். பிரெடெரிக் ஏங்கல்ஸ் (1852)

***

பிரதம மந்திரி அலெக்சாண்டர் சிப்ராஸ் தலைமையிலான கிரீஸின் சிரிசா அரசாங்கத்திற்கு, அதன் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான தேர்தல் வேலைத்திட்டத்தை கைதிறந்து அது அதிகாரத்திற்கு வர வாக்களித்த அந்த வறிய உழைக்கும் மக்களை, முற்றிலுமாக மற்றும் அப்பட்டமாக காட்டிக்கொடுப்பதற்கு ஒரு மாதத்திற்கும் குறைந்த நாட்களே ஆனது.

பிரதம மந்திரி சிப்ராஸின் போலித்தனம், சுயநலம் மற்றும் வெறுப்பு மற்றும் உண்மையான கோழைத்தனத்துடன் சரியாக பொருந்தக்கூடிய ஒரு சான்றை, இடது" குட்டி-முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த இழிந்த அரசியல் வரலாறில் கூட காண்பது கடினமாகும். நிச்சயமாக, அது தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் காட்டிக்கொடுத்ததற்கும் இடைபட்ட காலத்தின் அளவை கொண்டு பார்க்கையில், அனேகமாக சிரிசா அரசாங்கம் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திடம் முழுமையாக மண்டியிடுதல் என்பதற்கு குறைவில்லாத ஓர் உடன்படிக்கைக்குப் பின்னர் ஒருசில மணிநேரங்களிலேயே, சிரிசாவின் அடிபணிவின் அளவை மறுக்கும் விதத்தில் மற்றும் அவரது சொந்த அரசியல் திவால்நிலைமையை மூடிமறைக்கும் ஓர் அனுதாப முயற்சியில் சிப்ராஸ் மற்றொரு வார்த்தைஜால பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டார்.

எதார்த்தத்தை உணராத ஓர் அறிக்கையாக தோன்றிய ஓர் தொலைக்காட்சி அறிவிப்பில், நாங்கள் கிரீஸின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பேணியுள்ளோம், என்று சிப்ராஸ் அறிவித்தார். யூரோமண்டல நிதி மந்திரிகளுடனான உடன்படிக்கை "சிக்கன நடவடிக்கையை நீக்குகிறது" என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், ஒருசில நாட்களில் நாம் நிறைய சாதித்துள்ளோம், ஆனால் நாம் வெகுதூரம் போக வேண்டியுள்ளது. நாம் யூரோ மண்டலத்தின் போக்கை மாற்ற ஒரு தீர்க்கமான அடியெடுத்து வைத்துள்ளோம், என்றார்.

இதில் ஒரு வார்த்தை கூட உண்மை இல்லை. சிரிசாவினால் கையொப்பமிடப்பட்ட யூரோ குழும அறிக்கை, கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் ஒருதலைபட்சமான மாற்றங்கள் எதையும் திரும்ப பெறுவதைத் தவிர்த்துக் கொள்கிறது" என்பதற்கு அதன் அரசாங்கம் பொறுப்பேற்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரேக்க அரசாங்கம் அதற்கு முந்தைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்போதிருக்கும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதைத் தொடரும்.

அதற்கும் மேலாக, மறுத்தளிக்கப்படும் என்று முன்னதாக சிப்ராஸால் சூளுரைக்கப்பட்ட இந்த வெறுக்கப்பட்ட புரிந்துணர்வு குறிப்பிடுகிறவாறு, "தற்போதைய ஏற்பாட்டின் அடிப்படையில், மேற்கொண்டும் சீர்திருத்த முறைமைகளுக்கு" சிரிசா தயாரிப்பு செய்யும். மேலும் கிரீஸின் பெரும் கடனைத் தள்ளுபடி செய்யுமென சிரிசா வலியுறுத்தி இருந்த நிலையில், யூரோ குழுத்துடனான உடன்படிக்கையோ, அந்நாடு "அவர்களுக்கு கடன் வழங்கியவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட அவர்களது நிதியியல் கடமைப்பாடுகளை முற்றிலுமாக மற்றும் காலத்திற்கு உகந்த முறையில் மதிக்கும்" என்று குறிப்பிடுகிறது.

முக்கூட்டுடன்" உறவுகளை வெட்டுவதிலிருந்து வெகுதூரம் விலகி, அரசாங்கம் தற்போது "ஐரோப்பிய மற்றும் சர்வதேச அமைப்புகள் மற்றும் பங்காளிகளுடன், குறிப்பாக குறிப்பிடுவதானால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து முக்கூட்டாக உருவாகி இருக்கும் ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் சேர்ந்து, நெருக்கமான உடன்பாட்டுடன் இயங்க" வாக்குறுதி அளித்துள்ளது. தற்போதைய [ஐரோப்பிய நிதிய ஸ்திரப்பாட்டு நிதிய EFSF] திட்டத்தில் நிலுவையிலுள்ள பாக்கித்தொகையைத் எவ்விதத்தில் திரும்ப செலுத்துவதும்" முன்னரைப் போலவே, அந்த அமைப்புகளால்" ஒரு மீளாய்வு செய்யப்படுவதைச் சார்ந்துள்ளது. இவ்விதத்தில் கிரீஸ் அந்த முக்கூட்டின் இரும்பு பிடியில் தான் உள்ளது.

அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளில் சிறிய மாற்றங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதைத் தவிர, சிப்ராஸூம் பேரம்பேசுவதில் அவரது பங்காளியுமான நிதியியல் மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸூம், ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வேறெந்த விட்டுக்கொடுப்புகளையும் பெறவில்லை. அந்த விட்டுக்கொடுப்புகள் என்னவாக இருந்தாலும் நடைமுறையில் அவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

சிப்ராஸூம் சிரிசாவின் அனுதாபிகளும் அரசாங்கத்தின் மானக்கேடான காட்டிக்கொடுப்பை ஒரு வீரசாகச வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கின்ற அதேவேளையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ பத்திரிகைகளோ பிரதம மந்திரி எந்தளவிற்கு மண்டியிட்டார் என்பதைக் குறித்து ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை.

அதை ஜேர்மன் பொருளாதார மரபுக்கு விடுக்கப்பட்ட சவாலாக இருக்குமென கருதினால், அது தோற்றுவிட்டது, என்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் எழுதுகிறது. ஜேர்மனியர்கள் எல்லா முக்கிய விடயங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

Frankfurter Allgemeine Zeitung குறிப்பிடுகையில், இடதுசாரி சிரிசா கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கிரீஸ் அதன் முன்னைய பிணையெடுப்பு திட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாடு சீர்திருத்தங்களை முன்னெடுத்தால் மட்டுமே, நிதி வழங்கப்படும், என்றது.

கடன்வழங்கிய அமைப்புகளான முக்கூட்டால் திணிக்கப்பட்ட, ஆனால் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, ஏதென்ஸ் அதற்கு முந்தைய பழமைவாத அன்டோனிஸ் சமாராஸ் அரசாங்கத்தின் வேலையை நிறைவு செய்ய வாக்குறுதி அளிக்கிறது, என்று Le Monde அந்த உடன்பாட்டை அப்பட்டமாக விவரிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிப்ராஸ் மண்டியிட்ட காட்சியால் குதூகலித்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், மேற்கொண்டும் அவமானப்படுத்தல்களை அனுமானிக்கிறது. சிப்ராஸ் இன்னும் அதிக கருணையை எதிர்பார்ப்பார், என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், அமெரிக்க நிதி மூலதனத்தின் அந்த பிரதான குரல் எழுதுகிறது: திருவாளர் சிப்ராஸ் கடந்த வாரத்தில் பல பிரச்சினைகளில் மண்டியிட்டுள்ளார் ஆனால் யூரோ மண்டலத்தில் கிரீஸின் இடத்தைத் தக்க வைக்க அவர் அக்கறை கொண்டிருக்கிறார் என்றால், மீண்டுமொருமுறை சந்தேகத்திற்கு இடமின்றி, அவர் இன்னும் பலதடவை மண்டியிட வேண்டியதிருக்கும், என்றது.

தொழிலாள வர்க்க நலன்களின் நிலைப்பாட்டிலிருந்து, சிரிசா அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை ஒரு குற்றகரமான காட்டிக்கொடுப்பாகும். ஆனால் சிரிசா ஆட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நிஜமான சமூக மற்றும் பொருளாதார நலன்களின் நிலைப்பாட்டிலிருந்து அதாவது கிரேக்க ஆளும் மேற்தட்டு மற்றும் செல்வாக்கு மிகுந்த உயர்மட்ட மத்தியதட்டு வர்க்கத்தின் பிரிவுகளின் நிலைப்பாட்டில் இருந்து அந்த உடன்படிக்கை ஒரு ஏமாற்றம் என்பதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை. பிரதானமாக, கிரீஸின் உழைக்கும் மக்களை ஏமாற்றும் மற்றும் நோக்குநிலை பிறழ செய்யும் நோக்கம் கொண்ட சிப்ராஸின் வார்த்தைஜாலங்கள் என்னவாக இருந்தாலும், சிரிசாவின் பேரம்பேசும் மூலோபாயம் முற்றிலுமாக முதலாளித்துவ நலன்களுக்கு அது அடிபணிந்ததால் தீர்மானிக்கப்படுகின்றது.

கிரேக்கத்திற்கு சொந்தமான வணிகங்கள் நிதியியல் கடன்கள் பெறுவதைத் தடுக்கும் நிலைமைகளை தளர்த்த முடியுமென கிரேக்க ஆளும் வர்க்கமும், உயர்மட்ட மத்தியதட்டு வர்க்கமும் நம்பி இருந்திருக்கலாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய வங்கியாளர்களுடன் மோதலில் இறங்க அவர்களுக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை என்பதுடன், கிரீஸில் உள்ள அவர்களின் சொந்த பெருநிறுவன மற்றும் நிதியியல் நலன்களை அச்சுறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளை முற்றிலும் எதிர்ப்பதற்கும் கூட அவர்களுக்கு விருப்பமில்லை.

சிரிசா அரசாங்கத்தின் நிஜமான பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சிநிரல், யூரோ குழுமத்தின் பெப்ரவரி 11 கூட்டத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், யானிஸ் வாரௌஃபாகிஸால் அவரது கருத்துக்களில் முற்றிலும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் ஆழ்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு பொறுப்பேற்கிறோம், என்று அவர் அறிவித்தார். சிரிசா அரசாங்கம் "கிரேக்க நவீன வரலாறில் மிகவும் சீர்திருத்தம்-சார்ந்த அரசாங்கமாக இருக்கும் என்பதோடு, ஐரோப்பாவில் மிகவும் உத்வேகமிக்க சீர்திருத்தவாதிகளில் ஒன்றாக இருக்கும், என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

முதலாளித்துவ நலன்களின் பாதுகாப்பிற்கு சிரிசாவின் பொறுப்புறுதியைக் குறித்து எவ்விதத்திலும் தவறாக புரிந்துகொள்ள முடியாதவாறு, வாரௌஃபாகிஸ் அறிவித்தார்: பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்குவது மற்றும் அரசுடமையாக்குவதை பொறுத்த வரையில், அரசாங்கம் முற்றிலும் பிடிவாதமாக இருக்காது; நாங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் அதன் நிறேவேற்றக்கூடிய தன்மையை மதிப்பிட தயாராக உள்ளோம், அதையே விரும்புகிறோம். பிரேயுஸ் துறைமுக தனியார்மயமாக்கல் திரும்பப் பெறப்பட்டவுள்ளது என ஊடகங்கள் அறிவித்துள்ளமையில் எவ்வித உண்மையுமில்லை என்றார் [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

நாங்கள் முந்தைய சீர்திருத்தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும், அவற்றை எங்களது வரவு-செலவு திட்டக்கணக்கில் சேர்த்துவிட்டோம் என்றும் மறைமுகமாக குறிப்பிட்டு, எங்களது பங்காளிகளுடன் தவறான புரிதலை உண்டு பண்ணும்" பிழையான செய்திகளையும்" வாரௌஃபாகிஸ் கண்டித்தார்.

யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறுவது குறித்து சிந்திப்பதிலிருந்தே வெகுதூரம் விலகி, வாரௌஃபாகிஸ் அவரது "அன்பார்ந்த சகாக்களுக்கு" உறுதியளிக்கையில், ஐரோப்பா "முழுமையாக மற்றும் பிரிக்க முடியாததாக" இருக்க வேண்டுமென சிரிசா கருதுவதாகவும், "கிரீஸை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நமது நாணய ஒன்றியத்தின் ஒரு நிரந்தரமான மற்றும் பிரிக்கவியலாத உறுப்பினராக கிரேக்க அரசாங்கம் கருதுவதாகவும், அவர் தெரிவித்தார்.

இறுதியாக வாரௌஃபாகிஸ் யூரோ மண்டல நிதி மந்திரிகளுக்கு உத்தரவாதம் அளிக்கையில், அவர்கள் நிச்சயமாக சிரிசாவிடம் அஞ்ச வேண்டியதில்லை என்றார். அங்கே சிரிசாவின் வெற்றியால் சிலர் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பதற்காக வருத்தம் தெரிவித்தார். அவர்களுக்கு நான் கூற விரும்புவது இது தான், எங்களை விரோதிகளாக பார்ப்பதால் அதுவொரு வாய்ப்பை இழப்பதாக இருக்கும், என்று அறிவித்தார்.

உண்மையில், முக்கூட்டிற்கு சிரிசாவின் முழு அடிபணிவைக் குறித்து நம்பிக்கை ஏற்படுத்துவதில் வாரௌஃபாகிஸ் மிகவும் வெற்றி பெற்றுள்ளதால் இனிமேல் எந்த விட்டுகொடுப்பையும் வழங்க வேண்டியதில்லை என்று மந்திரிமார் கருதுகின்றனர். சிரிசா அரசாங்கத்திடமிருந்து எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதால், பெரிய வங்கிகள் வழக்கமாக தோல்வியடையும் சிறிய வணிகங்களைக் கையாள்வதில் காட்டும் அவமதிப்பு மற்றும் இரக்கமற்றதன்மை ஆகியவற்றுடன் அதேபோன்று அதை கையாண்டது.

கடந்த மாத சம்பவங்கள், கிரீஸிலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும் கூட தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மிகமுக்கிய அரசியல் அனுபவமாக உள்ளது. சிரிசா வகித்த பாத்திரம், 1960கள் மற்றும் 1970களின் தீவிர மாணவர் அரசியலின் அழிவுகளிலிருந்து அபிவிருத்தி அடைந்த, "இடது" மத்தியதர வர்க்க அரசியலின் இன்றியமையாத ஒரு பிற்போக்குவாத குணாம்ச வடிவத்தின் நாசகரமான வெளிப்பாடாகும். முன்னைய ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்த தொழிலாளர் அமைப்புகளால் தொழிலாள வர்க்கம் அடுத்தடுத்த தோல்விக்கு இட்டுச் செல்லப்பட்ட போது, மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தாட்சர் மற்றும் ரீகன் அதிகாரத்திற்கு வந்த பின்னர், அத்துடன் குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் சீனாவில் முதலாளித்துவத்தின் மீட்சிக்குப் பின்னர் நவ-தாராளவாத கொள்கைகளின் சர்வதேச வளர்ச்சியை தொடர்ந்து, உலகளாவிய பங்குச் சந்தைகளின் வெடிப்பார்ந்த உயர்விலிருந்து ஆதாயமடைந்தன.

அது அதிகளவில் செல்வாக்குடன் வளர்ந்தபோது, தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அந்த தனிச்சலுகை கொண்ட மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளினது சமூக மற்றும் அரசியல் மனோபாவம், கருத்து வேறுபாடு மற்றும் ஒதுங்கிக் கொள்வது என்பதிலிருந்து பெருமளவிலான விரோதம் என்ற நிலைக்கு சென்றது. இந்த சமூக-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கானது சித்தாந்தரீதியில் இந்த அடுக்குகளின் மார்க்சிச கைத்துறப்பில் பிரதிபலித்தது. அவர்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்துடனும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடனும் அவற்றை அடையாளம் காண்பதென்பது, முற்றிலும் ஏற்றுக்கொள்ளவியலாததாக மாறி இருந்தது.

பாட்டாளி வர்க்க போராட்ட அரசியலின் இடத்தில், இந்த செல்வாக்கு மிகுந்த மத்தியதர வர்க்கமானது, இனம், வகுப்பு, பாலினம் மற்றும் பாலியல் நிலைநோக்குகளின் "அடையாள நிகழ்ச்சிநிரலின்" கவசத்தை தழுவியது. அது அதன் நலன்களைப் பின்தொடர்வதற்கான அரசியல் வேலைத்திட்டத்திற்கு அடித்தளத்தை உருவாக்கியது. முதலாளித்துவ வர்க்க உறவுகளை மாற்றுவதற்கான எந்தவித விருப்பத்தில் இருந்தும் தொலைதூரம் விலகி, இந்த செல்வாக்கு மிகுந்த சமூக பிரிவும் மற்றும் அதன் அரசியல் கட்சிகளும், பிரதானமாக, சமூகத்தின் 10 சதவீத பெரும் பணக்காரர்களுக்குள் செல்வவளத்தை கூடுதலான சமநிலையில் பகிர்வதை முன்நிபந்தனையாக கொண்டுள்ளன. மிகப் பெரிய செல்வந்தர்கள் மீது பொறாமை கொண்டுள்ளதுடன், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை வெறுக்கிறார்கள் என்பதுடன், அதனைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

இந்த சமூக-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கை அடைகாத்த எண்ணற்ற அரசியல் அமைப்புகளில் வெறுமனே சிரிசா மிகவும் பிரசித்தமானது என்பது மட்டுந்தான். முதன்முதலில் ஒரு தேசிய அரசாங்கத்தின் தலைமையை அது ஏற்றது என்பதில் மட்டுந்தான், அது ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் ஸ்பெயினில் பெடெமோஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல இதேபோன்ற சிறிய குழுக்களைக் குறித்து கூற வேண்டியதே இல்லை என்ற நிலையில் அவ் அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது.

இத்தகைய கட்சிகளைப் போலி-இடது என்று உலக சோசலிச வலைத் தளம் குணாம்சப்படுத்துவது ஒரு வார்த்தையளவிலான நடைமுறையாக அல்ல, மாறாக ஒரு துல்லியமான அரசியல் வரையறையால் ஆகும். முதலாளித்துவ கட்சிகளான அவை, தொழிலாளர்கள் மீது கடுமையாக விரோதம் கொண்ட மத்தியதர வர்க்கத்தின் மேற்தட்டு பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை கூட்டாளிகள் அல்ல, மாறாக இரக்கமற்ற எதிரிகளாகும். உழைக்கும் மக்கள் அவற்றுடன் உடைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் மீது அவை கொண்டுள்ள எந்தவித அரசியல் செல்வாக்கையும் அழிக்க முனைய வேண்டும்.

சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருசில வாரங்களுக்கு முன்னர் "கிரேக்க மக்களுக்கான ஒரு புதிய விடியலாக" மற்றும் "ஒரு பலமான முன்னோக்கிய படியாக" பாராட்டிய சிரிசாவின் பல்வேறு அனுதாபிகளும், சந்தேகத்திற்கு இடமின்றி, வேறெதுவும் செய்யதிருக்க முடியாது என்று அறிவிப்பார்கள். சிரிசாவை ஆதரிப்பதில், அவர்கள் அவர்களது வர்க்க நலன்களை வெளிப்படுத்துகின்றனர்.

சிக்கன நடவடிக்கை மற்றும் பிற்போக்கான வேலைத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ள சிரிசாவைப் பொறுத்த வரையில், அது தன்னைத்தானே தொழிலாள வர்க்கத்துடன் நேரடியாக மோதலில் நிறுத்துகிறது. கிரேக்க வங்கிகளின் கட்டளைகளை திணிக்க அவர் முனைகின்ற நிலையில், சிப்ராஸ் முன்பினும் கூடுதலாக தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்க அரசு மற்றும் பொலிஸை நேரடியாக சார்ந்திருப்பார். சிரிசா அரசாங்கத்திற்கு ஆதரவளித்த போலி-இடது சக்திகளும் அதே போக்கில் அணிதிரளும்.

சிரிசாவினால் அல்லது ஏனைய போலி-இடது குழுக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து தொழிலாள வர்க்கத்தால் அதிக தீவிரமான கொள்கைகளை கோர முடியாது. அது முதலாளித்துவத்தை ஒழிப்பதை, தொழிலாளர்களின் அதிகாரத்தையும் மற்றும் ஓர் உலக சோசலிச சமூகத்தையும் ஸ்தாபிப்பதை நோக்கி திருப்பிவிடப்பட்ட ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிடமிருந்தும் முற்றிலுமாக சுயாதீனமான புதிய தொழிலாள வர்க்க கட்சிகளைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வரலாற்று கடமைக்குத் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பொறுப்பேற்றுள்ளது.