சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Left Party votes for austerity measures in Greece

ஜேர்மன் இடது கட்சி கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்களிக்கிறது

By Peter Schwarz
26 February 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் நாடாளுமன்றத்தின் இடது கட்சி பிரிவு — பசுமை கட்சியினர் மற்றும் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து — கிரீஸில் "ஸ்திரப்பாட்டு உதவி" என்றழைக்கப்படுவதன் மீது வெள்ளியன்று வாக்களிக்கும். செவ்வாயன்று ஒரு வெள்ளோட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது, அதில் நாடாளுமன்றத்தின் 29 இடது கட்சி உறுப்பினர்கள் "ஆதரித்தும்", நால்வர் "மறுத்தும்" வாக்களித்தனர்; 13 பேர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.

இதற்கு முன்னர் இடது கட்சி எப்போதுமே கிரீஸிற்கான "உதவி திட்டங்களுக்கு" எதிராகவே வாக்களித்துள்ளது. பிணையெடுப்பு ஊக்கப்பொதிகளுக்கு பிரதி உபகாரமாக கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் கிரீஸின் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை மோசமடைய செய்துள்ளதுடன், அந்த திட்டங்களை மேற்பார்வையிடும் முக்கூட்டு (Troika) முற்றிலும் ஜனநாயக நியாயத்தன்மை இழந்துள்ளது என்ற உண்மையின் அடித்தளத்தில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு “உதவி திட்டம்" நீடிக்கப்பட உள்ளது என்பதும் உண்மையாகும், அதுவே நாடாளுமன்றத்தின் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்குரிய விடயமாக உள்ளது. அலெக்சிஸ் சிப்ராஸின் புதிய அரசாங்கம், புரூசெல்ஸிற்கு அது அனுப்பிய சிக்கன நடவடிக்கைகளின் பட்டியலில், "முந்தைய அரசாங்கங்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட எண்ணற்ற முந்தைய முறையீடுகளை செயல்படுத்துவதற்கு" அதுவே பொறுப்பேற்றுள்ளதாக Süddeutsche Zeitung தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷன், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் முக்கூட்டு என்று இப்போது அழைக்கப்படும் "அமைப்புகளின்" வல்லுனர்கள், முன்பு போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் வரையில், அந்த கடன்கள் நீடிக்கப்படாது.

ஒரேயொரு விடயம் மட்டுந்தான் மாறியுள்ளது: இப்போது பழமைவாத புதிய ஜனநாயகமோ (ND) அல்லது சமூக ஜனநாயக PASOK கட்சியோ கிரீஸை ஆளவில்லை, மாறாக இடது கட்சியின் கிரேக்க இணைப்புகளான சிரிசா கிரீஸை ஆள்கிறது.

நீண்டகால கடன் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலமாக, இடது கட்சி முக்கூட்டை மட்டும் நியாயப்படுத்தவில்லை, கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களையும் ஆதரிக்கிறது. அது ஜேர்மனியிலும் அதே பணியை முன்னெடுக்க ஆயத்தமாக இருப்பதை சமிக்ஞை செய்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அதுபோன்றவொரு முக்கிய விவகாரத்தில் உடன்படுகிறார்கள் என்பதுடன், அங்கே — பெயரளவிற்கு கூட — எதிர்ப்பு இல்லை என்ற உண்மையே, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் கொள்கையை சுற்றி ஐக்கியப்படுவதன் மூலமாக ஸ்தாபக கட்சிகள் சமூக பதட்டங்களின் வளர்ச்சிக்கு விடையிறுப்பு காட்டுகின்றன என்பதற்கு தெளிவான ஒரு சமிக்ஞையாக உள்ளது.

நான்கு வாரங்களுக்கும் குறைந்த காலத்தில் அதன் அனைத்து பிரச்சார வாக்குறுதிகளையும் முறித்துக் கொண்ட சிப்ராஸ் அரசாங்கத்தினது அடிபணிவை நியாயப்படுத்துவதற்காக, இடது கட்சியின் முன்னணி பிரதிநிதிகள் அவர்கள் வழியில் நடக்கின்றனர்.

அப்பிரிவின் தலைவர் கிரிகோர் கீசி, கிரேக்க சிக்கன நடவடிக்கைகளின் பட்டியலை வெளிப்படையாக வரவேற்றதுடன், யூரோ குழும தலைவர் ஜெரோன் திஜிஸ்செல்ப்லோம் மற்றும் ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள ஆகியோருடன் நெருக்கமாக ஒத்துழைப்பதையும் ஏற்றுக் கொண்டார்.

ஒரு பத்திரிகை செய்தியில், “கிரீஸால் சமர்பிக்கப்பட்ட சீர்திருத்த திட்டம்" “முதலில் முந்தைய சிக்கன நடவடிக்கைகளின் வெட்டுக்கள் மற்றும் வறுமைப்படுத்தல்களின் தர்க்கத்திலிருந்து வெளியேறுவதை" எடுத்துக்காட்டுவதாக கீசி தெரிவித்தார். “மிகவும் பேரழிவுகரமான சமூக மற்றும் மனிதாபிமான துணை-விளைவுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக" கீசி வாதிட்டார். இது உண்மையல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும் என்றபோதினும் அவ்வாறு வாதிட்டார்.

"இத்தகைய நாடுகள் அவற்றின் கடன்கள் முழுவதையும் திரும்ப செலுத்தும் நிலைமைக்கு வரும்" என்பதற்கு, புதிய கிரேக்க அரசாங்கத்தின் மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளி கட்சிகளின் அரசியல் மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும் என்ற கருத்துக்கு கீசி பெரும் பலம் கொடுத்திருந்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடது கட்சி உறுப்பினர் ஃபாபியோ டு மாசி வலியுறுத்துகையில், சிரிசாவின் சரணடைவு ஜேர்மன் கருவூலத்தை விடுவிக்க உதவும் என்றார். “கிரீஸால் கட்டுப்பாடில்லாமல் வெளியேறும் விடயத்தில், ஜேர்மன் வரிசெலுத்துவோரின் பணம் போய்விடும்,” என்று ஒரு பத்திரிகை செய்தியில் அவர் எழுதினார். அவர் சிப்ராஸ் அரசாங்கத்தை "நீடித்த அரசு நிதிகளில் ஆர்வம் காட்டும் முதல் ஏதென்ஸ் அரசாங்கம்" என்று பாராட்டினார்.

இடது கட்சியின் மத்திய நிர்வாகி மாத்தியஸ் ஹோஹ்ன் விவரிக்கையில், ஐரோப்பா "ஏற்கனவே புதிய கிரேக்க அரசாங்கத்திற்கு நன்றி" கூறி இருக்கலாம் என்றார். கடந்த சில வாராங்களின் விவாதங்களும், முடிவுகளும் ஐரோப்பிய அரசியலை மாற்றுமென அவர் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடது கட்சி பிரிவின் துணைத் தலைவர் Sahra Wagenknecht, இடது கட்சி பிரிவின் வலைத் தளத்தில் எழுதுகையில், “சிரிசா கடந்த சில வாரங்களில் பெரும் வெற்றிகளை எட்டியுள்ளது,” என்றார்.

புதிய அரசாங்கம் முதலில் "ஒருசில பிரச்சார வாக்குறுதிகளை" தியாகம் செய்ய வேண்டியதிருக்கும் என்பதோடு உடன்பட்ட அவர், “அதன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த பணமும் வழங்காது" என்றார். இருந்தபோதினும், “வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கலின் ஐரோப்பிய கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்" “கடன் திட்டம் நீடிப்பதோடு முடிந்து போய்விடாது, மாறாக அது வெறும் தொடக்கம் மட்டுமே ஆகும்!” என்றார்.

டு மாசியைப் போலவே, Wagenknecht உம் "ஜேர்மன் வரிப் பணம்" என்று குறிப்பிட்டு சிரிசாவின் கொள்கைகளுக்கு ஆதரவாக வாதிட்டார். யூரோ மண்டலத்திலிருந்து சிரிசா வெளியேறுவதும், ஒரு பலவீனமான கிரேக்க தேசிய செலாவணிக்குத் (ட்ராச்மா) திரும்புவதும் தீவிர எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்று அப்பெண்மணி வாதிட்டார்.

பின்னர், ஜேர்மனி அங்கே முதலீடு செய்துள்ள, வரிசெலுத்துவோரின் மொத்த 60 பில்லியன் யூரோ பணத்தையும் நாம் ட்ராச்மா வடிவத்தில் திரும்ப பெற முடியும் — அவ்வாறானால் நடைமுறையில் அது மொத்தமும் போய்விட்டது என்றாகும். நாம் மொத்த வரி பணத்தையும் அர்த்தமே இல்லாமல் சிதைத்துவிடுவோம்,” என்று அவர் போனிக்ஸ் தொலைக்காட்சி நிலையத்திற்குத் தெரிவித்தார்.

இடது கட்சி வெறுமனே ஒரு மோசமான சூழ்நிலையை சிறந்ததாக காட்ட முயற்சிக்கிறது என்றும், அதன் கிரேக்க சகோதரத்துவ கட்சி அடிபணிந்ததைக் குறைத்துக் காட்டுகிறது என்றும் நம்பினால் அது சிறுபிள்ளைத்தனமாகவும், அபாயகரமாகவும் போய்விடும். எதார்த்தத்தில், சிரிசாவைப் போலவே இடது கட்சியும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ உட்பட முதலாளித்துவத்தின் தேசிய மற்றும் ஐரோப்பிய அமைப்புகளைப் பாதுகாக்க தீர்மானகரமாக உள்ளது.

அது தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக ஜேர்மனி மறுஐக்கியத்தின் போது எச்சசொச்சங்களில் தங்களின் நியாயமான பங்கை பெற்றிருக்காதவர்களும் மற்றும் இப்போது ஆடம்பர நகரங்களை அணுவதற்கும் மற்றும் அதிகாரத்தில் தனிச்சலுகைகளை அனுபவிப்பதற்கும் முறையிட்டு வருபவர்களுமான DDR இன் முன்னாள் அதிகாரத்துவவாத பிரிவுகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் செல்வ செழிப்பான அடுக்குகளை அது பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஜேர்மனியில் பல மாநில அரசாங்கங்களில், இடது கட்சியும் மற்றும் அதன் முன்னோடி அமைப்பான ஜனநாயக சோசலிச கட்சியும் (PDS) ஏற்கனவே அவை என்ன செய்ய தகைமை கொண்டவை என்பதை எடுத்துக்காட்டி உள்ளன. 2002 மற்றும் 2011க்கு இடையே SPD உடன் இணைந்து பேர்லின் செனட்டிற்கு தலைமை கொடுத்த PDS மற்றும் இடது கட்சி, பொதுத்துறையில் வேலைகள் மற்றும் ஊதியங்களை வெட்டுவதிலும், கல்வி மற்றும் சமூக திட்டங்களின் செலவுகளைக் குறைப்பதிலும் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தன.

சிரிசா அடிபணிந்ததை பாதுகாப்பது மற்றும் நியாயப்படுத்துவதுடன் சேர்ந்து, இடது கட்சி மத்திய அளவில் அதேபோன்றவொரு பணியை நடத்த அது தயாராக இருப்பதை எடுத்துக்காட்டி வருகிறது.