சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Record global stock prices reflect growth of financial parasitism

சாதனையளவிலான உலகளாவிய பங்கு விலைகள் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன

By Nick Beams
27 February 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் அரசாங்கம் முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கையாக பத்திரங்களை எதிர்மறை இலாபத்தில் வெளியிட்ட நிலைமைகளின் கீழ், உலகளாவிய பங்கு விலைகளோ இந்த வாரம் சாதனையளவிற்கு உயரத்தை எட்டின. ஒன்டொன்று இணைந்த இரண்டு அபிவிருத்திகள் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் வெடிப்பார்ந்த வளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டுகின்றன.

FTSE அனைத்துலக குறியீட்டால் அளவிடப்பட்டபடி, உலக பங்கு விலை-நிர்ணய சந்தைகள் வரலாற்றிலேயே அவற்றின் மிக உயர்ந்த மட்டங்களுக்கு நெருக்கத்தில் உள்ளன. பிரிட்டனின் முன்னணி பங்குகளுக்கான குறியீடு FTSE 100, 1999இன் இறுதியில் டாட்.காம் பங்குச்சந்தை குமிழிக்கு முன்னர் எட்டிய அதன் முந்தைய உயர்தளவைக் கடந்து, சாதனை அளவில் உள்ள வோல் ஸ்ட்ரீட்டின் டோவ் மற்றும் ஜேர்மனின் DAX ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தின் மிகப்பரந்த பகுதிகள், மிக குறிப்பாக ஐரோப்பாவில் மற்றும் ஜப்பானில், தேக்கநிலையிலோ அல்லது பின்னடைவோ நிலவுகின்ற நிலையில்; உலகளாவிய வளர்ச்சியின் பிரதான மையமாக இருந்துள்ள "எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்" என்றழைக்கப்படுபவை மற்றும் சீனாவும் மெதுவாகி வருகின்ற நிலையில்; மற்றும் பெரிதும்-பெருமைப்படுத்தப்பட்ட அமெரிக்க வளர்ச்சி வரலாற்று போக்குகளை விட இன்னமும் கீழே இருக்கின்ற நிலையில்; அதுவொரு அசாதாரண நிகழ்வுபோக்காகும்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பிடமிருந்து (OECD) சமீபத்திய காலத்தில் வந்த உலக பொருளாதார நிலை மீதான பிரதான அறிக்கைகள் அனைத்துமே முந்தைய வளர்ச்சி முன்கணிப்புகளை மதிப்பிறக்கி இருப்பதுடன், பொருளாதாரம் பெரிதும் ஒரு வக்கிரமான சுழற்சியால் குணாம்சப்பட்டிருப்பதைக் குறித்து எச்சரித்தன.

தேவை மற்றும் இலாபத்திற்கான வாய்ப்புகள் இல்லாததால், முதலீடு வரலாற்றிலேயே மிகக் குறைந்தளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த முதலீட்டு வீழ்ச்சியானது, திரும்பவும், மேற்கொண்டு தேவை மற்றும் இலாப எதிர்ப்பார்ப்புகளில் சரிவுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இத்தகைய பலமான போக்குகள் இருந்த போதினும், பங்கு சந்தைகளோ தொடர்ந்து மேலே சென்று கொண்டிருக்கின்றன. இது உண்மையான உற்பத்தி நிகழ்முறையிலிருந்து பிரிந்து நிற்கின்ற, உலகளாவிய நிதியியல் மேற்தட்டுக்களினது செல்வவள திரட்சியின் அளவைச் சித்திரம் போல எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்க காங்கிரஸிற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் தலைவி ஜெனெட் யெலெனால் வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து, நிதியியல் சந்தைகளுக்குள் மலிவு பணம் தொடர்ந்து பாயும் என்பதை உறுதிப்படுத்தி, உத்தியோகப்பூர்வ வட்டிவிகிதங்களை மத்திய வங்கி உயர்த்த அவசரப்படவில்லை என்பதன் மீதான மதிப்பீடே, சமீபத்திய நாட்களில் வோல் ஸ்ட்ரீட்டை ஊக்குவித்துவரும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளது.

யெலெனின் கருத்துக்களில் இருந்து மையக்கருவை எடுத்துக் கொண்ட ஐரோப்பிய சந்தைகளும், அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள, ஐரோப்பிய மத்திய வங்கியின் பணத்தை அச்சடித்து "புழக்கத்தில் விடும்" (QE) திட்டத்தின் அணுகுமுறையால் ஊக்குவிக்கப்பட்டன.

இதற்கும் கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக போராடுவதென்ற தேர்தல் வாக்குறுதிகளை அந்த போலி-இடது கட்சி துறந்துவிட்டிருப்பது உட்பட, சிரிசா தலைமையிலான கிரேக்க அரசாங்கத்தின் கேடுகெட்ட அடிபணிவை, ஐரோப்பிய ஒன்றியமும் அது பிரதிநிதித்துவம் செய்யும் நிதியியல் செல்வந்த தட்டும் முயன்று பெற்றுள்ளதாக வரும் செய்தியால் அவை குளிர்காய்ந்தன. கிரேக்க தொழிலாள வர்க்கத்தை இன்னும் வறுமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் கிரேக்க அபிவிருத்திகள், கிரீஸில் ஏற்படும் அதன் தாக்கங்களை மட்டும் ஆதாரமாக கொண்டு திருப்திப்பட்டு கொள்ளவில்லை, மாறாக சிக்கன நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முறையீடும் அதே கதியைத் தான் சந்திக்கும் என்ற சேதியை அவை ஐரோப்பாவெங்கிலும் அனுப்பியதற்காகவும் திருப்தியாக உள்ளன.

பத்திரங்களிலிருந்து எதிர்மறை இலாபம் ஏற்படுவதென்பது, ஜேர்மன் அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால பத்திர வெளியீட்டில் ஓர் எதிர்மறை விகிதத்தை அடிகோடிட்டதுடன், பத்திர சந்தை ஒரு பிரமாண்டமான பொன்ஜி திட்டத்திற்குள் (Ponzi scheme) மாறி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய திட்டத்தில் பணமீட்டும் திறன், நிதியியல் அமைப்புமுறைக்குள் —மத்திய வங்கிகளிடமிருந்து பெரியளவில் ஊறிவரும்— தொடர்ச்சியான புதிய பண ஓட்டத்தைச் சார்ந்திருக்கிறது. அது அதிகளவில் "பெரும் முட்டாள்" கோட்பாட்டின்படி (“bigger fool” principle) செயல்படுகிறது. ஓர் எதிர்மறை இலாபத்தை அளிக்கும் உயர்ந்த விலை கொண்ட பத்திரத்தில் முதலீடு செய்வது முட்டாள்தனமானதாக தெரியலாம் என்றபோதினும், அதன் விலை இன்னும் மேற்கொண்டு உயரும் போது அதே பத்திரங்களை வாங்குபவர் இன்னும் பெரிய முட்டாளாக இருப்பார் என்று ஊக வணிகர்கள் பந்தயம் கட்டுகிறார்கள்.

எதிர்மறை இலாபங்கள் முதன்முதலில் தோன்றிய போது, அவை ஒரு மாறுதல்கால நிகழ்வுபோக்காக, அதாவது பணத்திற்கான "பாதுகாப்பான புகலிட" தேடலின் விளைவால் ஏற்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் இப்போதோ அவை நிதியியல் களத்தில் ஒரு நிரந்தர அம்சமாக மாறி வருகின்றன.

ஜேர்மனிக்கு அப்பாற்பட்டு, டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவால் வெளியிடப்பட்ட ஐந்தாண்டு-கால பத்திரங்களும், அத்துடன் நெஸ்டல் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்களால் வெளியிடப்பட்ட பெருநிறுவன பத்திரங்களும் கூட, எதிர்மறை இலாபங்களைக் கண்டன.

எதிர்மறை இலாபங்களின் வளர்ச்சியான உடனடி தூண்டுபொருள் என்னவென்றால், மார்ச் 1இல் இருந்து குறைந்தபட்சம் அடுத்த 16 மாதங்களுக்கு மாதத்திற்கு 60 பில்லியன் யூரோ விகிதத்தில் பத்திரங்கள் வாங்க தொடங்கும் ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவாகும்.

IFR சந்தைகளின் ஓர் உலகளாவிய மூலோபாயவாதி திவ்யாங் ஷாபைனான்சியல் டைம்ஸிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்: “ECB இன் QE திட்டம் தொடங்கியதும், ஜேர்மனின் 10-ஆண்டு கால பத்திரங்கள் மீதான இலாபங்கள் பூஜ்ஜியத்திற்கும் மற்றும் எதிர்மறை பகுதிக்குள்ளும் வியாபாரமாவதை நாம் காண்போம் என்பதை நிராகரித்துவிடக்கூடாது.” சுவிஸின் 14-ஆண்டு கால பத்திரங்கள் ஏற்கனவே எதிர்மறை இலாபங்களில் வியாபாரமாகி வருகின்றன, அந்தளவிற்கான ஒரு விளைவை உதறிவிட முடியாது என்று தெரிவித்த அவர், “பாதுகாப்பான புகலிடம் சார்ந்த தேவைக்கு பதிலாக நாம் QE சார்ந்த தேவைப்பாட்டைப் பெறுகிறோம்,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.

10-ஆண்டு கால ஜேர்மன் பத்திரம் மீதான இலாபம் நேற்று சாதனை அளவிற்கு குறைவாக 0.28 சதவீதத்தைத் தொட்டது, அத்துடன் பிரான்ஸ், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினின் 10 ஆண்டுகால பத்திர இலாபங்களும் சாதனை மட்டத்திற்கு வீழ்ச்சி அடைந்தன.

எதிர்மறை இலாப நிகழ்வுபோக்கில் வெளிப்பட்ட நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் நிஜமான வெடிப்பார்ந்த வளர்ச்சி, ஜேபிமோர்கன் சேஸிசால் தொகுக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் எடுத்துக்காட்டப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் எதிர்மறை-இலாபம் கொண்ட ஐரோப்பிய பத்திரங்களின் மதிப்பு அதிவேகமாக—அதாவது நூறு மடங்கு உயர்ந்து 20 பில்லியன் டாலரிலிருந்து 2 ட்ரில்லியன் டாலராக—அதிகரித்ததாக மதிப்பிடுகிறது. அனைத்து ஐரோப்பிய பத்திரங்களிலும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு இப்போது எதிர்மறை இலாபங்களைக் காட்டுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார வரலாற்றின் வெகுதூர காலத்தில் கூட இதற்கு ஒத்துபோகும் எதுவும் காணப்படவில்லை.

அதன் உடனடி விளைவுகளில் ஒன்று, ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் நிதியியல் செயல்பாட்டு முறையை அழிப்பதாக இருக்கும். அவற்றின் வரலாறு முழுவதும், நீண்ட காலத்தில் திரும்பி வருவதற்குரிய ஒரு சீரான மற்றும் பாதுகாப்பான விகிதத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பெரும்பாலும் அவ்வாறு செய்வதற்கான சட்டரீதியான தேவைகளின் கீழ், அவை அரசு கடனில் முதலீடு செய்துள்ளன. ஆனால் இந்த மூலோபாயம் பெரிதும் நீடித்து நிற்கவியலாததாக போய்விட்டது, மேலும் அவற்றின் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக, அவை அபாயகரமான முதலீடுகளைச் செய்யவோ அல்லது பத்திர சந்தை ஊக வணிகத்தில் இணையவோ நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன.

நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் அதிகரிப்பு தீர்க்கமான பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வரலாறும் எடுத்துக்காட்டுவதைப் போல, மற்றும் கடந்த தசாப்தத்தின் சம்பவங்கள் மீண்டும் எடுத்துக்காட்டி உள்ளதைப் போல, இந்த சீட்டுக்கட்டு வீட்டை எல்லையில்லா காலத்திற்கு தொடர்ந்து காப்பாற்ற முடியாது.

சான்றாக, (ஸ்விஸ் பிரான்க் மதிப்பில் ஏற்பட்ட வேகமான பாய்ச்சலுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்ததைப் போல) பிரதான செலாவணிகளில் ஏதாவதொன்றின் மதிப்பில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உருவாக்கப்படும் ஒரு பெரும் திவால்நிலைமையோ, பெருநிறுவனத்தின் கடன் செலுத்தவியலா நிலைமையோ, வட்டிவிகித உயர்வின் காரணமாக ஏற்படும் திடீர் மனோபாவ மாற்றமோ, அல்லது திடீர் சம்பவமாக கருதத்தக்க ஏதோவொன்றோ, இந்த இற்றுபோயிருக்கும் ஒட்டுமொத்த நிதியியல் மாளிகையையும் தரைமட்டத்திற்குக் கொண்டு வரும் ஒரு சங்கிலித்தொடர் போன்ற எதிர்வினையைத் தூண்டிவிட முடியும்.

அதற்கும் மேலாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய வங்கிகளால் நிதியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டுள்ளதால், செப்டம்பர் 2008இல் லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவைத் தொடர்ந்து வந்த விளைவுகளை விட சாத்தியமான அளவுக்கு இன்னும் மிகவும் தீவிரமான விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும்.

அதைத்தொடர்ந்து வரும் ஆலைமூடல்கள், வேலைநீக்கங்கள் மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக சேவைகள் மீதான தாக்குதலின் தீவிரப்பாடு ஆகியவை சமூக மற்றும் அரசியல் போராட்டங்களின் வெடிப்பைத் தூண்டிவிடும் என்பதோடு, அவை நிதியியல் செல்வந்த தட்டுக்களிடமிருந்து ஓர் உடனடியான மற்றும் இரக்கமற்ற விடையிறுப்பைச் சந்திக்கும். அதுதான் கிரீஸின் படிப்பினையாக உள்ளது.

இந்த இலாப அமைப்புமுறையின் நெருக்கடிக்கு அவர்களிடம் எந்த பொருளாதார தீர்வும் இல்லை என்பதை துல்லியமாக அறிந்துள்ள ஒவ்வொரு நாட்டின் ஆளும் மேற்தட்டும், தவிர்க்கவியலாத பாரிய போராட்டங்களின் வெடிப்பைக் கையாள பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆறு ஆண்டுகளைச் செலவிட்டுள்ளன.

அதேபோல சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தயாரிப்புகளைச் செய்தாக வேண்டும். அவர்கள் இந்த நிதியியல் செல்வந்த தட்டைத் தூக்கியெறிவதை நோக்கமாக கொண்ட ஒரு சுயாதீனமான சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை மையத்தில் வைத்து, அந்த போராட்டத்திற்கு தலைமை கொடுக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டமைக்க வேண்டும்.