சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Millions march in France after Charlie Hebdo shooting

பிரான்சில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் மில்லியன் கணக்கானோர் பேரணி

By Alex Lantier
12 January 2015

Use this version to printSend feedback

சார்லி ஹெப்டோ அலுவகங்களின் மீது சென்ற வாரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று பிரான்ஸ் எங்கிலும் உத்தியோகபூர்வரீதியாக மிகப்பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற பேரணி ஊர்வலங்களில் மில்லியன் கணக்கான மக்களும் ஏராளமான அரசுகளின் தலைவர்களும் பங்குபெற்றனர்.

தாக்குதல்கள் குறித்து அதிகரித்துச் சென்ற பீதி மற்றும் பிரான்சின் முக்கியமான அரசியல் கட்சிகள் மற்றும் ஊடக வழிகளில் இருந்து தேசிய ஒற்றுமைக்காய் அழைக்கும் வெறிகொண்ட அறைகூவல்கள் இவற்றுக்கு இடையே அழைக்கப்பட்டிருந்த இந்தப் பேரணிகள் ஒரு விசித்திரமான குணத்தைப் பெற்றிருந்தன. பாரிஸில் மட்டும் ஆயிரக்கணக்கில் போலிசாரும் படைவீரர்களும் திரட்டப்பட்டிருந்தனர். ஏறக்குறைய 50 வெளிநாட்டு அரச தலைவர்களது குழுவொன்று பேரணியில் கலந்து கொண்டதால் ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன, வெகுதூரத்தில் இருந்து குறிபார்த்து சுடும் வீரர்கள் கட்டிடங்களின் மாடிகளில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஒன்றுபட்ட முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது குறித்து விவாதிக்க முக்கிய சக்திகளது உள்துறை அமைச்சர்கள் பாரிஸில் கூடியிருந்தனர்.

கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராய் தேசிய மற்றும் சர்வதேச ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதற்குமான ஒரு நிகழ்ச்சியாக இந்தப் பேரணிகள் கூறப்பட்ட அதேநேரத்தில், பேரணியில் பங்குபெற்றவர்களே அரசியல் மோதல்களால் இழுபட்டிருந்தவர்களாய் இருந்தனர். சென்ற கோடையில் காஸா பகுதியில் நிராயுதபாணியான மக்கள் மீதான தாக்குதலில் 2,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த ஒரு மாத கால போரை நடத்தியிருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தெனியாகு உடன் ஒன்றாக பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஊர்வலத்தில் நடைபயின்றார்.

உக்ரேனில் 2014 பிப்ரவரியில் அமர்த்தப்பட்ட அதி-வலது, ரஷ்ய-விரோத ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி பெட்ரோ போரோஷெங்கோவும் பங்குபெற்றார். ரஷ்ய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பொருட்டு ஆட்சிகளை-மாற்றுகின்ற ஒரு கொள்கையை நேட்டோ பின்பற்றிக் கொண்டிருப்பதாக அறிவித்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவும் பங்கேற்றார்.

ஆபிரிக்காவில் உள்ள பல பிரெஞ்சு கைப்பாவை ஆட்சிகளின் தலைவர்களும் கூடப் பங்கேற்று, தமது நாடுகளில் பிரெஞ்சு அல்லது நேட்டோ இராணுவத் தலையீட்டை அதிகரிக்கக் கோரிக்கை வைத்தனர். லிபியாவில் ஒரு புதிய நேட்டோ போரை தொடக்குவது அவசரமாகும் என்று நைஜர் நாட்டின் ஜனாதிபதியான மகமதோ இஸவ்ஃபோ  i-Télé யிடம் கூறினார். லிபியாவின் தெற்குப் பகுதி பயங்கரவாதிகளின் ஒரு புகலிடமாக ஆகியிருக்கிறது, லிபியா ஒட்டுமொத்த சாகல் (Sahel) பிராந்தியத்தையும் ஸ்திரம்குலைத்துக் கொண்டிருக்கிறது என்று இஸவ்ஃபோ தெரிவித்தார்.

மாலி நாட்டின் ஜனாதிபதியான இப்ராஹிம் கெய்தா தனது நாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுடன் போரிட 2013 ஆம் ஆண்டில் தனது நாட்டிற்கு படையெடுத்து வந்ததற்கு பிரெஞ்சு துருப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் ஒரு வலது-சாரி, தேசியவாதத் தளத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வெகு அருகில் இவரது அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலும்கண்டமெங்கிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீர்குலைத்து விட்டிருக்கும் மக்கள்விரோத ஐரோப்பியஒன்றிய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளது மிக முதன்மையான ஆலோசகர் இவர் தான் அருகருகே நடந்து சென்றனர்.

எப்படியிருப்பினும், பயங்கரவாதத்தின் மீதான போருக்கு தலைமையாகக் கூறப்படும் நாடான அமெரிக்காவின் பிரதிநிதித்துவம் அங்கு இருக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தப் பேரணி குறித்து அலட்டிக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் அதிகரிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பாரிஸில் இருந்த அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டரும் கூட பேரணியில் பங்குகொள்ளவில்லை. உக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விலக்கலாம் என்று ஆலோசனை சொன்னதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டைத் தண்டிக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருந்திருக்கலாம் என்று சில ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டன.

பிரெஞ்சு அரசாங்கத்திலேயே கூட, தேசிய ஒற்றுமைக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குமான அதன் அறைகூவல்கள் எல்லாம், பிரதமர் மானுவல் வால்ஸ் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள பிரெஞ்சுக் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்த சமயத்தில் தீவிர இஸ்லாம் மீதான போர் (guerre contre l'islamisme radical) ஒன்றைக் குறித்து அவர் விடுத்த போர் உந்தல்மிக்க அறிவிப்பில் பொய்களாகிப் போயின.

பாரிஸில் 1.5 மில்லியன் மக்கள் பேரணியில் பங்குபெற்றனர், பிரான்சின் மற்ற இடங்களில் இரண்டு மில்லியன் பேர் ஊர்வலம் சென்றனர் என்று உத்தியோகபூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. Lyon இல் 300,000, Rennes இல் 115,000, Bordeaux இல் 100,000 மற்றும் Grenoble மற்றும் St Etienne இல் 70,000 ஆகிய எண்ணிக்கைகள் இதில் அடங்குவன. பிரான்சின் இரண்டாம் பெரிய நகரமும், பிரான்சில் மிக அதிக அளவிலான முஸ்லீம் மக்களைக் கொண்ட நகரமும் ஆன மத்தியத் தரைக்கடல் துறைமுகமான மார்சையில் (Marseille) வெறும் 60,000 பேர் மட்டுமே பேரணியில் சென்றனர்.

பேரணிகளில் பங்குபெற்ற மில்லியன் கணக்கான மக்கள், சார்லி ஹெப்டோ அலுவலகங்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டதில் சந்தேகத்திற்கு இடமின்றி அதிர்ச்சியும் பீதியும் அடைந்திருந்தனர் என்ற அதேநேரத்தில், இந்தத் துப்பாக்கிச் சூடுகளும் அதற்கு ஹாலண்ட் அரசாங்கம் அளித்திருந்த பதிலிறுப்பும் முன்வைக்கின்ற ஏராளமான அரசியல் பிரச்சினைகளை சிந்தித்துப் பார்க்க அவர்களுக்கு கால அவகாசம் இருக்கவில்லை.

துப்பாக்கிச் சூடு எழுப்பியிருக்கும் பிரச்சினைகளை மக்களின் பரந்த அடுக்குகள் சிந்தித்துப் பார்க்ககின்ற மட்டத்தில், சார்லி ஹெப்டோவின் நச்சுத்தனமான முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்களுக்கும் பிரான்சின் வெளிநாட்டிலான போர்களுக்கு அது ஆதரவளிப்பதையும் குறித்து பரவலான அதிருப்தியும் இன்னும் சொன்னால் எதிர்ப்பும் கூட நிலவுகிறது.

படுகொலைகளை தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் அரசுப் பள்ளிகளில் நிமிடங்களில் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டதற்குப் பின்னர், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பலரும் இந்தப் பத்திரிகையை விமர்சனம் செய்து ஊடகங்களில் பேசினர். அந்த உள்ளடக்கம் [கேலிச்சித்திரங்களுடையவை] எனக்குப் பிடிக்கவில்லை, ஆனாலும் இந்தத் தாக்குதலை நான் எதிர்க்கிறேன் ஆனால் கேலிச்சித்திரம் தீட்டுபவர்கள் இந்த விடயத்தில் அப்பாவிகள் அல்லர் என்று யாசின் Le Monde பத்திரிகையிடம் கூறினார்.

இரு தரப்பிலுமே தவறுகள் இருக்கின்றன என்று கூறிய எரிக்கா தான் ஒரு கத்தோலிக்கர் என்று தெரிவித்தார். 12 உயிர்களைக் காவுவாங்குவது என்பது மனிதகுலத்திற்கு எதிரானதொரு குற்றம் என்று கூறிய அவர், சார்லி ஹெப்டோவில் இருக்கும் கேலிச்சித்திரம் தீட்டுபவர்கள் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்கினார்கள் என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

சூழ்நிலை அபாயகரமாக இருந்தது என்று கூறிய ஆலென், அவர்கள் சார்லியைக் கொன்றார்கள் என்றால் அதன் காரணம் அது மதத்திற்கு மரியாதையளிக்கவில்லை என்பதாகும். அவர்கள் இஸ்லாமின் மீது தாக்கினார்கள்.... சார்லி இதையே தொடர்ந்து செய்யுமானால், இங்கேயிருக்கும் இளைஞர்கள் எதையேனும் செய்வார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் வெறித்தனமானதொரு சூழலை ஊதி விடுவதற்குப் பின்னால் ஒரு திட்டவட்டமான பிற்போக்குத்தனமான அரசியல் திட்டநிரலைத் திணிக்கும் முயற்சி ஒளிந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிரான்சின் மிகப்பெரும் மக்கள்விரோத ஜனாதிபதியாக பெயரெடுத்திருக்கும் ஹாலண்டின், வீழ்ச்சி கண்டு வரும் அதிர்ஷ்டங்களைத் தூக்கி நிறுத்துகின்ற ஒரு முயற்சியில், இரண்டு உலகப் போர்களையும் ஏராளமான புரட்சிகரப் போராட்டங்களையும் கண்டிருக்கக் கூடியதொரு நாட்டில், 12 பேரின் படுகொலையானது ஒரு முன்கண்டிராத தேசியப் பெருந்துயரம் என்பதான மட்டத்திற்கு தூக்கிப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பின்னால் தேசிய அளவில் ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுவதன் மூலமாக, தனது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் காரணத்தினால் கடும் வெறுப்புக்குள்ளாகி இருக்கும் ஒரு அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கு வலுவூட்டுவதற்கும், ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் அமெரிக்காவின் தலைமையிலான பிற்போக்குத்தனமான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் பங்கேற்பதை ஏற்புடையதாக்கவும், அரசை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு விரக்தியான முயற்சியில் வலது-சாரி அரசியல் கூட்டுச் சேர்க்கைகளுக்கு வழிவகை செய்து தருவதற்கும் ஹாலண்ட் முனைந்து கொண்டிருக்கிறார்.  

நவ-பாசிச தேசிய முன்னணியை (FN)  பிரான்ஸின் பிரதான முதலாளித்துவ அரசியல் நீரோட்டத்தில் மேலதிகமாய் ஒருங்கிணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை வெள்ளியன்று தேசிய முன்னணி (FN) தலைவரான மரின் லு பென்னை ஹாலண்ட் எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு விவாதிக்க அழைத்தது தெளிவாக்கி விட்டது. இது ஐரோப்பிய அரசியலின் எதேச்சாதிகார மற்றும் ஜனநாயக-விரோத பரிணாம வளர்ச்சியையும், அத்துடன் சோசலிசத்துக்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒன்றுபடுவதற்கான அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடுகளுடன் பிணைந்த அரசியல் பிரச்சினைகளை பரந்த மக்கள் சிந்திக்கத் தொடங்கும் போது, அதற்கான அரசியல் பொறுப்பு பிரெஞ்சு அரசாங்கத்திடமே இருப்பது அவர்களுக்கு உறைக்கும். இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சாய்த் மற்றும் செரிஃப் கௌச்சி ஆகிய இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகளுமே, உழைக்கும் மக்களின் பரந்த அடுக்குகளுக்கு எந்தவித நம்பிக்கையையும் வழங்க இயலாத முதலாளித்துவத்தின் தோல்வியின் குறிப்பிட்டதொரு நச்சு விளைபொருளே ஆவர்

முஸ்லீம் இளைஞர்கள் மிகப் பெரும் வேலைவாய்ப்பின்மை மட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர், பிரான்சின் சில புறநகர்ப் பகுதிகளில் இந்த விகிதம் சுமார் 40 சதவீதத்தின் அளவுக்கு அதிகம். அங்கே தான் கௌச்சி சகோதரர்கள் பொருளாதார வாழ்வின் விளிம்புகளில் மிக மலிவூதியம் கொண்ட சின்னச்சின்ன வேலைகளைப் பெற்றுக் கொண்டிருந்தனர். பர்கா மற்றும் முஸ்லீம் முக்காடுகள் போன்றவற்றுக்குத் தடை என்பன போன்ற தொடர்ச்சியான இஸ்லாமிய அச்ச நடவடிக்கைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க நேர்ந்தது. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த தனது முந்தைய நிலையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாய், ஆப்கானிஸ்தான் தொடங்கி லிபியா மற்றும் சிரியா மற்றும், மீண்டும், ஈராக் வரையிலுமான அமெரிக்கத் தலைமையிலான போர்களின் படை அணிவரிசையில் தன்னை நிறுத்திக் கொண்டதில் இந்தப் பதட்டங்கள் மேலும் தீவிரப்படுகின்றன.

இந்த நிலைமைகள் தான், மிகவும் நோக்குநிலை பிறழ்ந்த மற்றும் பின்தங்கிய கூறுகளை ஒடிந்து போவதற்கும் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு போன்ற கொடூரமான குற்றங்களை நிகழ்த்துவதற்கும் இட்டுச் செல்கின்றன