சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: December 1-7

வரலாற்றில் இந்த வாரம்: டிசம்பர் 1-7

1 December 2014

Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்: பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி


பிலிப்பைன்ஸ் கிளர்ச்சி படைகள், 1989 டிசம்பர்

1989 டிசம்பர் 1, பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்குள் இருந்த கிளர்ச்சி படைகள், கொராசன் அக்கினோ அரசாங்கத்திற்கு எதிராக "கிறிஸ்துமஸ் சதி" என அறியப்பட்ட சதியைத் தொடங்கியது. இந்த ட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு, இராணுவப் படைகளை சீர்திருத்து (RAM) என்ற இயக்கத்தினாலும் மறைந்த அதிபர் பெர்டினாண்ட் மார்க்கோசுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளாலும் தலைமை தாங்கப்பட்டது. 1986 பெப்பிரவரியில் அகற்றப்பட்ட பெர்டினாண்ட் மார்க்கோஸ், பின்னர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, 1989 செப்டம்பரில் ஹவாயில் இறந்தார்.

பிலிப்பைன்ஸ் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகி, அமெரிக்காவிடம் இருந்து பெயரளவிலான சுதந்திரமடைந்த 1945-46 முதல், அந்த நாடு பசுபிக்கில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு கோட்டையாக இருந்தது. மார்கோஸ் ஊழல் மலிந்த இரக்கமற்ற ஆட்சிக்கு தலைமை வகித்தார். அது 1980களில் றீகன் நிர்வாகத்தின் போது அமெரிக்கவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்தது. ஒரு தோல்விகண்ட இடைத்தேர்தலும் மற்றும் மார்க்கோஸ் மீதான மக்கள் எதிர்ப்பும், அமெரிக்கா தொடர்ந்தும் அவரை ஆதரிப்பதை அது சாத்தியமற்றதாக்கியது.

லெப்டினன் கேணல் கிரிகோரி (கிரிங்கோ) ஹொனசன், பிரிகேடியர் ஜெனரல் எட்கார்டோ அபேனியா, ஓய்வு பெற்ற ஜெனரல் ஜோஸ் ஸுமெல் மற்றும் மார்கோஸ் விசுவாசிகளைச் சேர்ந்த பலரதும் தலைமையிலேயே அக்கினோவுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை RAM ஏற்பாடு செய்தது. அவர்கள் ஸிபூவில் உள்ள வில்லாமோர் விமானத்தளம், பொனிபாசியோ கோட்டை, சங்லே விமானத்தளம், மெக்டன் விமானத்தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதோடு அகுய்னால்டோ முகாமுக்காக மோதிக்கொண்டனர். எதிர்ப்புப் படைகள் பெருநகர மணிலாவில், நாட்டின் நிதி மையமான மகாத்தியையும் ஆக்கிரமித்தனர்.

அகினோவுக்கு விசுவாசமாக இருந்த இராணுவம், அவரது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் பிடல் ராமோஸின் கீழ் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், கிளர்ச்சியாளர்களின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மணிலாவில் இராணுவ தளங்களில் இருந்த நிலைகள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் நிலைகள் மீதும் தாக்குதல் தொடுத்தன. எதிர்ப்புப் படைகளுக்கு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதற்கு "உரிமை உண்டு" என்று கூறி, துணை ஜனாதிபதி சல்வடோர் லாரல், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் கண்டனம் செய்ய மறுத்தமை, அரசாங்கத்தின் அரசியல் பலவீனத்தின் அசல் அடையாளமாக இருந்தது.

அகினோ டிசம்பர் 2 அன்று அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடம் இருந்து விமான உதவியைப் பெற்றார். லூஸனில் கிளார்க் விமானத் தளத்தில் இருந்து எஃப்-4 ரக ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. கைப்பற்றப்பட்ட விமானத் தளங்களுக்கு மேலாக தாழ்ந்து பறந்தத ஜெட், தளங்களில் இருந்து வெளியேறவிருந்த விமானங்களை சுட்டு வீழ்த்த அச்சுறுத்தியது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடிக்க அமெரிக்கத் தலையீடு முக்கியமானது என்று ஆரம்பத்தில் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அதன் பாதையில் அடுத்து வந்த ஒரு தலைகீழ் மாற்றத்தில், மோதலின் ஐந்தாம் நாள், அமெரிக்க இராஜங்க அலுவலர் ரிச்சர்ட் பெளச்சர், "இது அடிப்படையில் (பிலிப்பைனியர்களால்) நடத்தப்படும் ஒரு போராட்டம்" என்று கூறினார். என்றாலும் சில நாட்களுக்கு பின்னர், கிளர்ச்சித் தலைவர்கள் சரணடைந்தனர்.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: பெர்க்லியில் பெருந்தொகை கலிபோர்னிய பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்


மாரியோ சவியோ

1964 டிசம்பர் 3, கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து பொலிஸ், வளாகத்தில் அரசியல் செயல்பாடுகளுக்கு நிர்வாகம் திணித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து உள்ளமர்வுப் போராட்டம் செய்துகொண்டிருந்த, பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழக மாணவர்கள் 796 பேரை கைது செய்தனர். முந்தைய நாள் பேச்சு சுதந்திர இயக்கத்தின் சுமார் 1,000 ஆதரவாளர்கள் பல்கலைக்கழக நிர்வாகம் கட்டிடத்தை ஆக்கிரமித்தனர். முந்தைய எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்வதில் பங்களிப்பு செய்தமை தொடர்பாக நான்கு மாணவர் தலைவர்களுக்கு எதிராக கல்லூரியால் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிரதிபலிப்பாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கலிபோர்னியா ஆளுநர் எட்மண்ட் ஜி பிரவுன், மாணவர்களின் நடவடிக்கைகள் "பெரும் குழப்பத்தை" பிரதிபலிக்கின்றது என்று கூறி இந்த கைதுகளுக்கு உத்தரவிட்டார். மாணவர்கள் கட்டிடத்திற்கு வெளியே இழுத்து செல்லப்பட்டு அத்துமீறியதாகவும் கைதுகளை தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். மொத்த பிணையெடுப்புக்கு 150,000 டாலர் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் தேவைகளுக்கு நிதித் திரட்டுவதற்கு அல்லது பல்கலைக்கழகத்துக்கு வெளியிலான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் பல்கலைக்கழக வளாகத்தைப் பயன்படுத்த தொடர்ந்தும் அனுமதிப்பதில்லை என நிர்வாகம் அறிவித்ததை அடுத்தே செப்டம்பரில் பெர்க்லியில் மாணவர்கள் எதிர்ப்புக்கள் தொடங்கின. கைதுகளுக்கு விடையிறுப்பாக, மாணவர் தலைவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்புக்கு அழைப்புவிடுத்தனர். மாணவர் பகிஷ்கரிப்பின் விளைவாக, வழக்கமாக செயல்படும் 85 பல்கலைக்கழக துறைகளில் 20 மட்டுமே இயங்குவதோடு அநேக வகுப்புகள் காலியாக உள்ளன என்று பல்கலைக்கழக அறிக்கை தெரிவித்தது.

500 கலிபோர்னியா பல்கலைக்கழக பீட உறுப்பினர்களின் கூட்டமொன்று கூட்டப்பட்டு, மாணவர் எதிர்ப்பு தலைவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இரத்துச் செய்யுமாறும் வளாகத்தில் அரசியல் நடவடிக்கைக்கான விதிகளை தளர்த்துமாறும் கோரி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பீட உறுப்பினர்களும் கூட வளாகத்தில் நெடுஞ்சாலை ரோந்துப் படையை பயன்படுத்தியதை கண்டித்து ஆளுநர் பிரவுனுக்கு ஒரு தந்தியை வரைந்தனர்.

முந்தைய ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக நடந்த அரசியல் காட்டிக் கொடுப்புகளின் காரணமாக, தீவிரமயமான மாணவர்கள் மத்தியில் மார்க்சிசம் கொஞ்சம் செல்வாக்கு செய்தது, அல்லது ஒரு சிதைந்த வடிவில் வந்திருந்தது. வளாகத்தில் போராட்டங்களுக்கு தலைமை வகித்த அமைப்புகளில் இன சமத்துவ காங்கிரஸ், ஸ்ராலினிச W.E.B. Du Bois கழகம், அதே போல் இளம் சோசலிஸ்டுகள் கூட்டணி மற்றும் திருத்தல்வாத சோசலிச தொழிலாளர் கட்சியின் இளைஞர் இயக்கமும் அடங்கும்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: ஸ்ராலின் பின்லாந்தில் பொம்மை ஆட்சியை ஸ்தாபித்தார்


ஹெல்சிங்கி இல் சோவியத் குண்டுத் தாக்குதல்

1939 டிசம்பர் 2 அன்று, நவம்பர் முடிவில் பின்லாந்து மீது ஒரு பாரிய செஞ்சேனை படையெடுப்பின் பின்னர், பின்னிஷ் ஜனநாயக அரசாங்கம் என்ற ஒரு பொம்மை ஆட்சி நிறுவப்பட்டது. ஒரு ஸ்ராலினிச கன்னையை சேர்ந்த O.W. குசினென் தலைமையிலான இந்த அரசாங்கம், சோவியத் இராணுவ படைகள் நாட்டை கைப்பற்றும் நிகழ்வில், எதிர்கால பின்லாந்து ஆட்சியாளர்களுக்கான வாய்ப்பாக அது அறிவிக்கப்பட்டது.

ஃபின்லாந்து அரசு அதிகாரிகள் தீவுகள் மற்றும் துறைமுகங்களை இராணுவத் தளங்களுக்காக சோவியத் ஒன்றியத்துக்கு விட்டுக்கொடுக்க மறுத்தபோது பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், ஸ்ராலின், அதிகாரத்துவ இராணுவ நடவடிக்கையால் பின்லாந்தை "சோவியத்மயமாக்குவதன்" மூலம் தனது குறிக்கோள்களை அடைவதற்கு முயன்றார். நவம்பர் 30 அன்று நிலம், வான் மற்றும் கடல் வழியாக 600,000 செஞ்சேனை படைகள் 14,000 சிறிய பின்லாந்து இராணுவத்துக்கு எதிராக, பின்லாந்து வளைகுடா முதல் ஆர்க்டிக் பெருங்கடல் வரை சோவியத்-பின்னிஷ் எல்லையில் மூலோபாய புள்ளிகளைத் தாக்கின.

ஆனால், சோவியத் படையெடுப்புக்கு பங்களிப்பு செய்வதற்காக ஃபின்னிஷ் தொழிலாளர்களின் கிளர்ச்சிக்கு ஸ்ராலின் விடுத்த அழைப்பு ஃபின்னிஷ் வெகுஜனங்களுக்கு மத்தியில் எடுபடவில்லை. லியோன் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியது போல், "ஃபின்னிஷ் பெரும்பான்மை விவசாயிகள் மட்டுமன்றி, பெரும்பாலான தொழிலாளர்களும் ஃபின்னிஷ் முதலாளித்துவத்தின் பக்கத்தில் நிற்பதை நிரூபித்தனர். அருகில் லெனின்கிராட்டிலும் முழு சோவியத் ஒன்றியத்திலும் தொழிலாளர்களை ஸ்ராலினிச அதிகாரத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடக்குமுறைக்குள்ளாக்குவதை அவர்கள் நன்கு தெரிந்துகொண்டிருந்த நிலையில், இந்தப் புறக்கணிப்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. "

ஃபின்னிஷ் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் Arvo Tuominen கூட குசினென் உடன் ஸ்ராலினின் பொம்மை அரசாங்கத்தின் பிரதமராக பங்கெடுக்க மறுத்துவிட்டார். ஃபின்னிஷ் தொழிலாளர்களுக்காக பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம், 1917ல் புரட்சிகர ஃபின்னிஷ் பாட்டாளி வர்க்கத்திற்கு பின்லாந்து முதலாளித்துவம் வழங்கிய சலுகையான எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையை எழுப்புவது போன்ற சில குருட்டுத் தவறுகளையும் செய்திருந்தனர்.

 ஃபின்லாந்தின் முதலாளித்துவத்துடன் தங்கள் சொந்த சூழ்ச்சிகளை நடத்தி வந்த பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், உடனடியாக சோவியத் படையெடுப்பை கண்டித்ததுடன், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஊடகங்கள் உலக அளவில் திரட்டப்பட்டன.

100 ஆண்டுகளுக்கு முன்பு: பாராளுமன்றத்தில் போர்க் கடன்களுக்கு எதிராக ஜேர்மனின் புரட்சிகர கார்ல் லீப்னெக்ட் வாக்களித்தார்


கார்ல் லீப்னெக்ட்

1914 டிசம்பர் 2, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இருந்து தோன்றியிருந்த, புரட்சிகர சர்வதேசியவாத போக்கின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவரான கார்ல் லீப்னெக்ட், பாராளுமன்றத்தில் போர்க் கடன்களுக்கு எதிராக வாக்களித்தார்.

அப்போது சமூக ஜனநாயகக் கட்சி ஜேர்மனிக்குள் சோசலிச சர்வதேசிய வாதத்தை காட்டிக் கொடுத்தது சம்பந்தமான மிகவும் பகிரங்கமான கண்டனமாக அவரது நிலைப்பாடு இருந்தது. இரண்டாம் அகிலத்தில் அநேகமானவர்களுடன் சேர்ந்து, சமூக ஜனநாயகக் கட்சியானது ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் அதன் முந்தைய கடப்பாட்டைக் கைவிட்டு, ஆகஸ்ட் 4 யுத்தம் வெடித்தபோது, அதன் "சொந்த" ஆளும் கும்பலுக்கு ஆதரவு கொடுத்தது.

லீப்னெக்ட், சமூக ஜனநாயகக் கட்சி போருக்கு ஆதரவு கொடுப்பதை எதிர்த்த போதிலும், ஆரம்பத்தில் கட்சி ஒழுக்கத்தை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் 4, ஜேர்மன் போர் கடன்களுக்காக வாக்களித்திருந்தார். சமூக ஜனநாயகக் கட்சியின் சரணடைவானது முழு அரசியல் ஸ்தாபனத்தினால் திணிக்கப்பட்ட தேசியவாத போர் உணர்வின் தீவிர அழுத்தத்தை பிரதிபலித்தது. கார்ல் காவுட்ஸ்கி உட்பட கட்சியின் மிகவும் அதிகாரம் கொண்ட தலைவர்களும் கூட விளைபயனுள்ள விதத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு நியாயம் கற்பித்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சி காட்டிக்கொடுத்த உடனேயே, ஆகஸ்ட் 4-5, ஏகாதிபத்திய போரை எதிர்த்த ரோசா லுக்சம்பேர்க் மற்றும் பிரான்ஸ் மேஹ்ரிங் உட்பட ஆறு புரட்சிகர எதிர்ப்பாளர்கள் சந்தித்து சர்வதேச குழுவை (Gruppe International) ஸ்தாபித்தனர். அடுத்த வாரம், லீப்னெக்ட்டும் அந்த குழுவில் சேர்ந்தார். செப்டம்பர் நடுப்பகுதியில், அவர் பெல்ஜியத்திற்கு பயணித்தார். அங்கு அவர் ஜேர்மன் இராணுவத்தால் சூறையாடப்பட்ட லியூவென் நகரத்திற்கு செல்ல முயன்றார். அதிகாரிகளால் திருப்பி விட்ட அவர், ஜேர்மனிக்கு திரும்பி, பெல்ஜியத்தில் ஜேர்மன் இராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து பகிரங்கமாக குரல் எழுப்பினார். அடுத்து வந்த வாரங்களில், அவரும் குழுவில் மற்ற உறுப்பினர்களும், ஏகாதிபத்திய போருக்கு ஆதரவு கொடுப்பதை எதிரத்து சமூக ஜனநாயகக் கட்சிக்குள் பிரச்சாரம் செய்தனர்.

டிசம்பர் 2, லீப்னெக்ட் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, போர் கடன்களுக்கான தனது எதிர்ப்பை சுருக்கிக் கூறினார். அதிகாரிகள் அதை படிக்க அனுமதி மறுத்தனர். அல்லது அது பாராளுமன்ற பதிவில் சேர்த்துக்கொள்ளப்படுவதை நிராகரித்தனர். அது பிரகடனம் செய்ததாவது:

"அக்கறையுள்ள எவராலும் விரும்பப்படாத இந்தப் போர், ஜேர்மன் மக்களது அல்லது வேறு எவரதும் பொதுநலனின் பேரில் வெடித்த ஒன்றல்ல. இது ஒரு ஏகாதிபத்திய போர், முதலாளித்துவவாதிகள் மற்றும் நிதியாளர்களின் சுரண்டலுக்காக முக்கிய நாடுகளின் மீது தொடுக்கப்படும் போர் ஆகும். யுத்தம் செய்பவர்களின் பகைமை கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, இந்த போரானது தமது எதிரிகளை நசுக்கி முன்னேறுவதற்காக, தெளிவற்ற அரை நிலப்பிரபுத்துவத்தில் மற்றும் இரகசிய இராஜதந்திரத்தில், ஜேர்மனிய மற்றும் ஆஸ்திரிய போர்க் கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட ஒரு யுத்தமாகும். அதே நேரம், போரானது தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி கண்டுவரும் இயக்கத்தை குழப்பி, பிளவுபடுத்தும் ஒரு பொனபாட்வாத முயற்சியும் ஆகும்."