சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Blood and capital

இரத்தமும் மூலதனமும்

Johannes Stern
3 January 2015

Use this version to printSend feedback

இங்கேயொரு கேள்வி உள்ளது: உலகெங்கிலுமான பங்குச்சந்தைகளில் கடந்த ஆண்டு பாரிய உயர்வு இருந்தபோதினும், எந்த நாடு சர்வதேச நிதி மூலதனத்தை மிகவும் ஈர்க்கத்தக்கதாக இருந்தது? அது பெரும் பொருள் உற்பத்தி அடித்தளத்தைக் கொண்ட ஒரு நாடா? அல்லது ஒருவேளை அது புதிய உயர் தொழில்நுட்ப துறையைக் கொண்ட ஒரு நாடா? அல்லது, அது மிக வேகமான விற்பனை தொழில்துறையைக் கொண்ட ஒரு நாடா?

மேலே கூறப்பட்டதில் ஏதாவதொன்றை நீங்கள் குறிப்பிட்டால், உங்கள் ஊகம் தவறாகிவிடும். அவர்களது மூலதனத்திற்கு உயர்பெரும் இலாபங்களை அளிக்க முதலீட்டாளர்களுக்கு பிரமாண்ட காந்தமாக இருந்த அந்நாடு எகிப்து ஆகும்!

சந்தைகளில் எளிதாக பணத்தைத் தேடுவோருக்கு இது நல்ல செய்தியாக இருக்கும். கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளிடையே தேர்ந்தெடுக்கையில், அங்கே பெருநிறுவன இருப்பு நிலைக்கணக்கு அறிக்கைகள், PE விகிதங்கள், 200-நாட்களின் தொடர்ச்சியான சராசரிகளைத் திரட்ட வேண்டிய அவசியமோ அல்லது சிக்கலான தொழில்நுட்ப வரைபடங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமோ இருப்பதில்லை. வெறுமனே எங்கே பொலிஸ் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளுகிறது, எங்கே அப்பாவி மக்கள் சிறைக்கூடங்களில் அடைத்துத் திணிக்கப்படுகிறார்கள், எங்கே கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றங்கள் நூற்றுக் கணக்கான தூக்குத்தண்டனைகளுக்கு தீர்ப்பளிக்கின்றன என்பதைக் கண்டால் போதுமானது. அங்கே இருந்து தான் பெரும் பணம் ஈட்டக்கூடியதாக உள்ளது.

பைனான்சியல் டைம்ஸில் ஜனவரி 1இல் வெளியான செய்தியின்படி, எகிப்தின் பங்கு விலை-நிர்ணய நிறுவன சந்தைகள் 2014இல்ஆதாயபங்குகள் (dividends) மற்றும் பங்கு விலை உயர்வுகள் உள்ளடங்கியமொத்த இலாபமாக 30 சதவீதத்திற்கும் கூடுதலாக இலாபமீட்டின. முஸ்லீம் சகோதரத்துவ ஜனாதிபதி மொஹமத் முர்சியின் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து, ஜூலை 2013இன் இரத்தந்தோய்ந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசி அதிகாரம் ஏற்ற பின்னர், எகிப்தின் பங்குச் சந்தை MSCI குறியீடு ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது.

மேற்கத்திய ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னரில் இருந்து, அல்-சிசி ஆட்சி ஆகஸ்ட் 2013இல் கெய்ரோவின் ரபா அல்-அதாவியா (Rabaa al-Adawiya) சதுக்கத்தை ஆக்கிரமித்திருந்த முஸ்லீம் சகோதரத்துவத்தின் 1,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் படுகொலை செய்தமை உட்பட, குறைந்தபட்சம் 3,000 மக்களை கொன்றுள்ளது. 2014இல், எகிப்திய நீதிமன்றங்கள் மூன்று பெரும் பொய் வழக்கு விசாரணைகளில் மொத்தம் 1,397 அரசியல் கைதிகளைக் குற்றவாளியென தீர்ப்பளித்தது. அந்த ஆட்சி அதன் இரத்தந்தோய்ந்த ஆட்சிக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் ஒடுக்குவதற்காக, அங்கீகாரமற்ற ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்களைத் தடுக்கும் ஒரு சட்டத்தையும் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அவரது ஆட்சி சுமார் 10,000 நபர்களைச் சிறையில் அடைந்திருந்ததை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அல்-சிசி தனிப்பட்டரீதியில் பெருமையோடு குறிப்பிட்டார். அவரது ஆட்சியின் கீழ் சுமார் 40,000 மக்கள் கைது செய்யப்பட்டு இருந்ததாகவும், அவர்களில் பலர் குற்றச்சாட்டுக்களே இல்லாமல் உளவுத்துறை எந்திரத்தால் நடத்தப்படும் இரகசிய சித்திரவதை மையங்களில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் மனித உரிமைகள் குழுக்கள் மதிப்பிடுகின்றன.

ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்எகிப்திற்குள்ளும் சரி, சர்வதேச அளவிலும் சரிஅல்-சிசி அதிகாரம் ஏற்றதற்குப் பின்னரில் இருந்து அவரால் நடத்தப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்றுள்ளன. அப்தெல் மொனிம் அல்-சயத், பொருளாதார மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான கெய்ரோ மையத்தின் தலைவரான இவர், முர்சியை வெளியேற்றியதற்குப் பின்னர் அவர்கள் "சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில்" இருந்தனர் என்று குறிப்பிட்டு, அந்த இராணுவ ஆட்சியின் பொருளாதார கொள்கைகளைச் சமீபத்தில் பாராட்டி இருந்தார்.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவிற்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனர் சான்தயானன் தேவராஜன், கெய்ரோவிற்கான ஒரு சமீபத்திய விஜயத்தில், பொருளாதார சீர்திருத்தத்திற்கான இராணுவ ஆட்சியின் முயற்சிகளை ஆதரித்தார்: “அவர்கள் சரியான விதத்திலேயே அதை அணுகி வருகிறார்களென நான் நினைக்கிறேன்... கொள்கைகள் மீது ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நிச்சயத்தன்மை அளிக்கும் வேலைத்திட்டங்களை முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகிறார்கள். முதலீட்டாளர்களுக்கு அரசியல் ஸ்திரப்பாடு தேவைப்படுகிறது.”

எகிப்தில் இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கும் "நிச்சயத்தன்மைகளில்" ஒன்று என்னவென்றால், அரசாங்கத்தைப் பகிரங்கமாக விமர்சிக்கின்ற எவரொருவரும் சிறையில் அடைக்கப்படுகின்ற அல்லது படுகொலை செய்யப்படுகின்ற பெரும் ஆபத்து உள்ளது என்பதே ஆகும். இந்த "அரசியல் ஸ்திரப்பாட்டை" தான் சர்வதேச நிதியியல் சந்தைகள் மிகவும் விரும்புகின்றன! அவற்றின் மொழியைப் பிரயோகித்து கூறுவதானால்அவை சர்வாதிகாரம் திணிக்கப்படுவதை ஓர் ஆக்கபூர்வமான குறியீடாக பார்க்கின்றன.

அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளிலும், வங்கிகளும், நிதியியலாளர்களும் மற்றும் ஊக வணிகர்களும் ஆர்வத்தோடு எகிப்தைப் பார்க்கின்றனர். எகிப்தில் செயல்பட்டு வரும், இலண்டன் மற்றும் நியூ யோர்க்கை மையமாக கொண்ட ஒரு மத்தியரக பங்கு-நிர்ணய நிறுவன சந்தை (frontier market) வங்கி Exotixஇன் கேப்ரியல் ஸ்டெர்ன், அல்-சிசி ஜனாதிபதியாக நியமனமாவதற்கு சற்று முன்னர் அவர்களின் கணக்கீடுகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்: “அனைத்தும் ஜனநாயகமாக தெரியவில்லை என்றாலும், அது மிகவும் ஸ்திரமானதாக உள்ளது, ஆகையால் எனது முதலீடும் பாதுகாப்பாக இருக்கும் என்று பெரும்பாலான முதலீட்டாளர்கள் கூறுவர் என்றே நான் நினைக்கிறேன்,” என்றார்.

இராணுவ ஆட்சி உள்நாட்டில் எதிர்ப்பை ஒடுக்கி வருகின்ற அதேவேளையில், ஏகாதிபத்திய சக்திகளோ அதன் தலைவருக்கு மதிப்புக் காட்டி வருகின்றன. 2014இல் அமெரிக்கா மற்றும் பிரான்ஸிற்கு விஜயம் செய்த அல்-சிசிக்கு, ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து பேர்லினுக்கு வருமாறு ஒரு அழைப்பு கிடைத்தது. எகிப்திய முதலீட்டுத்துறை அமைச்சக தகவலின்படி, எகிப்தில் அன்னிய நேரடி முதலீடு 2013-2014 நிதியியல் ஆண்டில் 100 சதவீதம் அளவில் 6 பில்லியன் டாலருக்கு உயர்ந்தது, மேலும் அது 2015-2016இல் 10 பில்லியன் டாலருக்கும் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்குள் 14 பில்லியன் டாலருக்கும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்திய அபிவிருத்திகள் முதலாளித்துவ விமர்சகர்களது பொய்களை அதிர்ச்சிகரமாக அம்பலப்படுத்துவதாக உள்ளன, அவர்கள் ஜனநாயகத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே ஏதோ வகையான இணைப்பு நிலவுவதாக வாதிடுகின்றனர். ஆனால் துல்லியமாக அதற்கு எதிர்விதமாக தான் உள்ளது. எகிப்தில் நடந்துள்ள எதிர்புரட்சிகர அபிவிருத்திகளானது நிதியியல் மூலதனத்திற்கும், எதேச்சாதிகாரத்தை நோக்கிய போக்கிற்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேச நிதியியல் மூலதனம் எகிப்திய இராணுவத்தை உற்சாகத்துடன் நோக்குகிறது என்றால், அது எகிப்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்காக அல்ல, மாறாக அதை ஒவ்வொரு நாட்டிலும் நிதியியல் சந்தைகளுக்கு ஆதரவான முன்மாதிரியாக நோக்கிறது.

ஏகாதிபத்தியம் என்பது நிதியியல் மூலதனம் மற்றும் ஏகபோகங்களின் சகாப்தமாகும், இவை எந்தவொரு இடத்திலும் மேலாதிக்க தாகத்திற்காக கொண்டு வரப்படுகிறதே அன்றி, சுதந்திரத்திற்காக அல்ல,” என்று லெனின் எழுதினார். “அரசியல் அமைப்புமுறை என்னவாக ஆயினும் இருக்கட்டும், இத்தகைய போக்குகளின் விளைபயன் எங்கும் பிற்போக்குத்தனமாகவே இருக்கிறது"

அதே ஒடுக்குமுறை, அதே வன்முறை, ஜனநாயக ஆட்சி வடிவங்கள் என்ற பாசாங்குத்தனத்தையே கூட அதே போல கைவிடுவதுஇவை தான் நிதியியல் மூலதனத்தின் அடிப்படை இயல்பு. எகிப்தில் அல்-சிசியின் அணுகுமுறைகள், ஏகாதிபத்தியத்தின் மையத்தில், CIAஆல் நடத்தப்பட்ட கொடூரமான சித்திரவதையில், NSAஆல் தலைமை கொடுக்கப்பட்ட பாரிய இராணுவ-வேவுபார்க்கும் உளவுத்துறை எந்திரத்தில், அமெரிக்காவிற்குள்ளேயே முடிவிலா பொலிஸ் வன்முறையினது ஆட்சிமுறையில் அவற்றின் சமாந்தரங்களைக் காண்கிறது.

பிரதான முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும், ஆளும் வர்க்கம் ஒரே சீராக ஒடுக்குமுறை இயங்குமுறைகளை கட்டமைத்து வருகிறது. 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து, “சந்தை" என்று அறியப்படும் மோசடி மற்றும் குற்றத்தன்மையின் பரந்த இயங்குமுறையைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள வங்கிகள் மற்றும் நிதியியல் ஊகவணிகங்களானது, வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான ஒரு முடிவில்லா தாக்குதல் மூலமாக விலை கொடுத்து, அவர்களது சொந்த பைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பரிவர்த்தனை செய்துள்ளன.

சர்வதேச நிதியியல் மூலதனம் அதன் சுரண்டும் அமைப்புமுறைக்கு எங்கெல்லாம் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்கிறதோ அங்கே அது தயாரிப்பு செய்து வரும் அணுகுமுறைகளையே எகிப்திய இராணுவ ஆட்சி எடுத்துக்காட்டுகிறது.