சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Financial Times points to US regime-change intrigue in Sri Lanka

பைனான்சியல் டைம்ஸ் இலங்கை ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க சூழ்ச்சியை சுட்டிக் காட்டுகிறது

By K. Ratnayake
30 December 2014

Use this version to printSend feedback

பிரிட்டிஷ் நிதிய உயரடுக்கின் ஒரு முன்னணி ஊதுகுழலான பைனான்சியல் டைம்ஸ், இலங்கையில் ஜனவரி 8 நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பற்றி கடந்த வாரம் வெளியிட்ட ஒரு சிறப்புக் கட்டுரை, தேர்தல் தொடர்பாக லண்டன் மற்றும் வாஷிங்டனால் மிக நெருக்கமாக அவதானிக்கப்படுகிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, அமெரிக்க-சார்பு கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் கூட்டணி ஒன்றினால் ஆதரிக்கப்படும், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுகூலமாக அமெரிக்கா செய்த சதியின் வழியை முழுமையாக பின்பற்றும் ஒரு அறிக்கையை அது டிசம்பர் 22 அன்று வெளியிட்டுள்ளது.

"இலங்கையின் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தால் சமாதானமான முறையில் ஆட்சியை ஒப்படைக்க வாக்குறுதியளித்துள்ளார்", என்ற தலைப்பில்,
கட்டுரையின் பக்கச்சார்பான தன்மை சுட்டிக்காட்டப்படுகிறது --பைனான்சியல் டைம்ஸ் நிருபருடனான பேட்டி ஒன்றில் இராஜபக்ஷவிடம் இருந்து இந்த வாக்குறுதி பெறப்பட்டிருந்தது
.

உள்நாட்டில் வளர்ச்சியடைந்து வரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் சர்வதேச ரீதியில் பெருகிவரும் அமெரிக்க தலைமையிலான "மனித உரிமைகள்" பிரச்சாரத்தின் மத்தியில், அதிகாரத்தின் மீது தனது பிடியை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய அனைத்துப் பிரச்சாரங்களையும் போலவே, அமெரிக்கா, ஆசியாவில் தன்னுடைய கொள்ளையடிக்கும் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, வாஷிங்டனின் முழு ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் இழைத்த குற்றங்களை இழிந்த முறையில் பயன்படுத்தி வருகின்றது.

இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்புவிடுத்த உடனேயே அவரது சொந்த சுகாதார அமைச்சர் சிறிசேன, தான் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதையே பைனான்சியல் டைம்ஸ் "எதிர்பாராத விதமாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்க்கட்சி பிரச்சாரம்," என குணாம்சப்படுத்தியிருந்தது.

வெளிப்படையான காரணங்களுக்காக, சிறிசேனவை வேட்பாளராக்கியது யார் மற்றும் எப்படி என்பதை கட்டுரை தெளிவாகக் கூறவில்லை. அரசாங்கத்தில் இருந்து சிறிசேன திடீரென வெளியேறியது இராஜபக்ஷவிற்கு ஆச்சரியமாக இருந்திருக்க கூடிய அதேவேளை, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு வாரங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாரத்தில் இருந்து அகன்றவுடன் கிளின்டன் மன்றத்துடனான தனது பணிகள் ஊடாக வாஷிங்டனுடன் உறவுகளை வளர்த்துக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே, சிறிசேன மற்றும் அமெரிக்க சார்பு எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (யூஎன்பி) இடையே தரகராக செயற்பட்டார்.

"அடுத்த நிர்வாகம் நாட்டின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் என்ற எதிர்பார்ப்போடு இலங்கையின் தேர்தலை மேற்த்தைய அரசாங்கங்கள் நெருக்கமாக அவதானித்து வருகின்றனஎன பைனான்சியல் டைம்ஸ் உறுதிப்படுத்துகிறது. இராஜபக்ஷ "போர்க்குற்றங்கள் பற்றிய பிரச்சினையில் இணக்கமற்ற குரலை எழுப்புகின்றநிலையில் செய்தித்தாள் மற்றும்மேற்கத்திய அரசாங்கங்களும்அவரது எதிரிக்கு பின்னால் அணிதிரண்டுள்ளமை தெளிவாக இருக்கிறது".

கட்டுரை, இராஜபக்ஷவுக்கு விரோதமான அமெரிக்காவின் எதிர்ப்புக்கான உண்மையான காரணங்களை சமிக்ஞை செய்கின்றது. வெற்றி பெற்றால், அவர் "சீனாவுடனான ஆழ்ந்த பொருளாதார உறவு உட்பட" ஒரு புதிய முதலீட்டு உந்துதலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அது குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகள் ஆயுதம், நிதி உதவி, முதலீடு மற்றும் அரசியல் ஆதரவுக்காக இலங்கை சீனாவைச் சார்ந்திருக்காமல் உறவை முறித்துக்கொள்ள செய்வதன் பேரில் இராஜபக்ஷவை நெருக்குவதற்காக, 2009ல் புலிகளின் தோல்வியை அடுத்து, "மனித உரிமை மீறல்" பிரச்சினைகளைப் பயன்படுத்தி இராஜபக்ஷவை இலக்குவைக்கத் தொடங்கின.

இராஜபக்ஷவுக்கு எதிராக பிரச்சாரமானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் தொடர்ந்து அமெரிக்க ஆதரவிலான தீர்மானங்களை கொண்டுவருவதன் மூலம் துரிதப்படுத்தப்பட்டது. அது இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை பரிந்துரைக்கக் கூடிய ஒரு சர்வதேச விசாரணையை இந்த ஆண்டு ஸ்தாபித்ததுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள், போருக்கான தயாரிப்பில் பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைக் கீழறுத்து அதை இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் மிகப் பரந்த "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் ஒரு பகுதியாகும். கடந்த ஐந்து ஆண்டுகள் பூராவும், அமெரிக்காவானது ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ்சுடன் மட்டுமன்றி, இந்தியா, வியட்னாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற ஆசியாவின் ஒவ்வொரு நாட்டுடனும் கூட்டணி அமைத்து திட்டமிட்டு மூலோபாய உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது.

2009ல் செனட் வெளியுறவுக் குழுவின் அறிக்கையின் இணை ஆசிரியர் என்ற வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி, வாஷிங்டனால் இலங்கையை "இழக்க" முடியது என தெளிவுபடுத்தினார் இது இந்தியப் பெருங்கடலில் தீவின் பிரதான மூலோபாய அமைவைப் பற்றிய ஒரு குறிப்பு ஆகும். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாஷிங்டனின் தலையீடானது இராஜபக்ஷ மீது நீண்ட கால அழுத்தம் கொடுப்பதை விட, இப்போது கொழும்பில் ஆட்சி-மாற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதையே சமிக்ஞை செய்துள்ளது.

வாஷிங்டன் விரும்பும் தேர்தல் முடிவு கிடைக்காவிட்டால் அடுத்து வரப்போவது என்ன என்பது பற்றிய மறைமுக அறிவிப்பை பைனான்சியல் டைம்ஸ் விடுக்கிறது. "நெருக்கமான போட்டி இடம்பெறும் நிலையில், ஒரு குறுகிய தோல்வியின் போது திரு. இராஜபக்ஷவின் குடும்ப மேலாதிக்கத்திலான ஆட்சி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயன்றால், ஸ்திரமற்ற தன்மை மற்றும் வன்முறையும் ஏற்படக் கூடும் என்ற அச்சம் காணப்படுவதாக உள்ளூர் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்" என அது பெயர் குறிப்பிடாமல் மேற்கோளிட்டுள்ளது.

இராஜபக்ஷவும் அவரது ஆளும் கூட்டணியும் மட்டுமன்றி, யூஎன்பீ மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளும் தேர்தல் மோசடி மற்றும் வன்முறைக்கு பேர்போனவையாகும். இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக மற்றும் அரசாங்க அமைச்சராக இருந்த சிறிசேனவும், போர் குற்றங்களுக்கு உடந்தையானவர் என்ற உண்மையை பைனான்சியல் டைம்ஸ் கவனமாக தவிர்த்துக்கொண்டுள்ளது. அவரும் தேர்தல் மோசடியில் மிகவும் அனுபவம் கொண்டவர்.

அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளும் இராஜபக்ஷவின் குறுகிய தோல்வியைப் பற்றி கவலை கொள்ளவில்லை, மாறாக, வாஷிங்டனின் அனைத்து சூழ்ச்சிகளின் மத்தியிலும் அவர் வெற்றிபெறக் கூடும் என்பதை பற்றியே மிகவும் கவலை கொண்டுள்ளன. இராஜபக்ஷ, எதிர்க் கட்சி வேட்பாளரை தோற்கடித்தால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற கூட்டாளிகளும் "உறுதியற்ற தன்மை மற்றும் வன்முறையை" தூண்ட விருப்பம் கொண்டுள்ளார்கள் என்ற அறிகுறியையே பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை குறிக்கின்றது.

முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆதரவிலான "வண்ணப் புரட்சிகளில்" இந்த வடிவங்கள் மிக தெளிவாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர்மோசடிதேர்தல் முடிவுகளை சவால் செய்வதோடு பல்வேறு அமெரிக்க அமைப்புகள் மற்றும் தேர்தலில் வெற்றிபெற்றவரை அச்சுறுத்தலாக சித்தரிக்கும் உலக ஊடக தாக்குதல்களின் மறைமுக ஆதரவுடன், அதிருப்திகண்ட மத்தியதர வர்க்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பார்.

பல மத்தியதர வர்க்க தாராளவாத குழுக்கள், அரச-சார்பற்ற நிறுவனங்களதும் மற்றும் நவ சமசமாஜக் கட்சி (நசசக), ஐக்கிய சோசலிச கட்சி (யூஎஸ்பீ) ஆகிய போலி இடதுகளினதும் ஆதரவுடன் அமெரிக்கா முன்னெடுக்கும் போலி "மனித உரிமைகள்" பிரச்சாரம், இலங்கையில் வண்ணப் புரட்சிக்கான அடித்தளத்தை ஏற்கனவே தயார் செய்துள்ளன. ஏதாவதொரு வழியில் இந்த அமைப்புக்கள் சிறிசேனவுக்கு பிரச்சாரம் செய்வதோடு, அவரையும் அவரது வலதுசாரிக் கூட்டணிக் கட்சிகளையும், இராஜபக்ஷவுடன் ஒப்பிடும்போது ஜனநாயகத்தின் சாம்பியன்களாகவும் அல்லது "குறைந்த தீமையானவர்கள்" என்றும் மேலும் மோசடியான முறையில் மிகைப்படுத்தி வருகின்றன.

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையானது வாஷிங்டன் தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின்னரும் தனது பிரச்சாரத்தை வலிமையாக் தயாராகின்றது என்று சுட்டிக் காட்டுகின்றது. .நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் உள்ளிட்ட மூத்த நிர்வாக பிரமுகர்கள், "மனித உரிமை மீறல்களுக்காக நாடுகளைப் பொறுப்புடைமையாக்குவதில் இலங்கையை ஒரு முக்கிய பரீட்சார்த்தமாக நோக்குகின்றனர்என்று அது குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் அமெரிக்காவின் சூழ்ச்சிகள், உலக யுத்தத்தை நோக்கி உந்தித் தள்ளும் உக்கிரமடைந்து வரும் பூகோள-அரசியல் பதட்டங்கள் பற்றி இலங்கை, அதே போல் தெற்கு ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஆசியா மற்றும் உலக அளவில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்க அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்க எந்த இடத்திலும் நிற்கப் போவதில்லை.

போருக்கான உந்துதலை ஒரு முதலாளித்துவ கட்சிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் அல்லது தேர்தல் மூலம் நிறுத்த முடியாது. மாறாக, போரின் மூல காரணமான முதலாளித்துவ முறைமையை தூக்கி வீச இலங்கையிலும் உலகம் பூராவும்  தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமே நிறுத்த முடியும். இராஜபக்ஷ மற்றும் சிறிசேனவும் ஏகாதிபத்தியத்துக்கும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான உண்மையான போராட்டத்தை முன்னெடுக்க முற்றிலும் இலாயக்கற்ற முதலாளித்துவத்தின் போட்டி பிரிவுகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்குக்காக இந்த தேர்தலில் போராடும் ஒரே கட்சி ஆகும். எமது வேட்பாளரான பாணி விஜேசிரிவர்தன, சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலக போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக, தொழிலாளர்களுக்கு கல்வியூட்டவும் அவர்களை தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திருப்புவதற்காக அணிதிரட்டவும் பிரச்சாரம் செய்கின்றார்.