சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP presidential campaign underway in war-ravaged northern Sri Lanka

யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட இலங்கையின் வடக்கில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம்

By our correspondents
3 January 2015

Use this version to printSend feedback

ஜனவரி 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனதிபதி தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்த்தனவுக்கு ஆதரவாக, இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (ஐவைஎஸ்எஸ்ஈ) இணைந்து சக்திவாய்ந்த பிரச்சாரத்தினை முன்னெடுத்தன.

ஊர்காவற்துறை, காரைநகர் மற்றும் யாழ்ப்பாண மாநகரம் ஆகிய இடங்களில் முறையே டிசம்பர் 26, 27, 28 ஆகிய தினங்களில் விஜேசிறிவர்த்தன உரையாற்றியிருந்தார். அந்தக் கூட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்ஈ அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண மாநகரம், குரநகர், ஊர்காவற்றுறை, வேலணை, துறையூர், திருநெல்வேலி மற்றும் காரைநகரில் உள்ள வலந்தலை, ஊரி உட்பட பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பிரதேசங்களில் சுமார் 2000 வரையான தேர்தரல் விஞ்ஞாபனத்தினை விநியோகித்திருந்தனர்.

http://www.wsws.org/asset/29c34e0c-778e-4a03-a92d-48d8545fe5fP/Pani+Wijesiriwardena+speaking+in+Kayts.jpg?rendition=image480
ஊர்காவற்துறையில் பாணி விஜேசிறிவர்த்தன பேசுகிறார்

இலங்கையின் வடக்கில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்துவந்த கொழும்பு அரசாங்கங்களுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத் திட்ட அடிப்படையில் சளைக்காமல் போராடிய நீண்ட வரலாறு சோசலிச சமத்துவக் கட்சிக்கு உள்ளது. சோசக அங்கத்தவர்கள், இராணுவ-பொலிஸ் ஓடுக்குமுறை மற்றும் புலிகள் உட்பட ஆளும் மஹிந்த இராஜபக்ஷவின் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாய கட்சி என்வற்றின் உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களுடன், மக்கள் பேசும்போது மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான தங்களின் பரந்த வெறுப்பினை வெளிப்படுத்தினார்கள். ஐக்கிய தேசியக் கட்சி உட்பட (ஐதேக) பல எதிர்கட்சிகளின் பின்னணியில், மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிபொது வேட்பாளராக சவால் விட்டுக் கொண்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன மீது கூடுதலானவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை.     

ஒரு மீனவர் கூறினார்இராஜபக்ஷ எப்போதும் அதிகாரத்தில் இருப்பதற்கு முயற்சி செய்கின்றார். யுத்தத்தினை ஆரம்பித்து வைத்த ஐதேக தற்போது சிறிசேனவை சிபார்சு செய்கின்றது. நாம் யாரையும் நம்ப முடியாது. நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கின்றீர்கள். உங்களுடைய சிந்தனை நல்லது, உங்களுடைய அமைப்பினைப் போல ஒரு தனியான இயக்கம் கட்டியெழுப்பபட வேண்டும்.” என்றார்

இராஜபக்ஷவினால் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் நடத்தப்பட்ட முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்திருக்கும் மற்றொரு மீனவர் கூறும்போது, “முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற யுத்தத்தின் போது எனது மனைவி மரணமானார். நான் எனது பிள்ளைகளுடன் உறவினர் வீட்டில் வசிக்கின்றேன். நாங்கள் எப்போதும் இப்படியே வாழமுடியாது. இங்கு ஒரு குடும்பத்தினை பராமரிப்பது கஸ்ட்டமாக உள்ளது. இராஜபக்ஷவுக்கும் மற்றும் சிறிசேனவுக்கும் இடையில் என்னால் எந்தவிதமான வேறுபாட்டினையும் காணமுடியவில்லை.” என்றார்.

இராஜபக்ஷ நிர்வாகத்தினால்புனர்வாழ்வு முகாமுக்குள் தள்ளப்பட்டிருந்த ஒரு முன்னாள் விடுதலைப் புலி போராளி கூறினார்எனக்கும் மற்றும்புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களுக்கும். தொழிலைத் தேடிக் கொள்வதற்கும் அல்லது வியாபாரத்தினை ஆரம்பிப்பதற்கு கடன் திட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் உத்தரவாதமளித்தது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக எங்களுடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொலிஸ் புலனாய்வாளர்களை நிறுத்தியுள்ளது. அந்தப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ச்சியாக எங்கள் வீட்டுக்கு வந்து கண்காணிக்கின்றார்கள். ஆகவே எங்களால் அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் வேலைகளைச் செய்ய முடியாதுள்ளது.”

இராஜபக்ஷவினை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தனது நண்பர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், ஏற்கனவே சிறிசேனவுக்கு வாக்களித்துவிட்டதாக யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஒரு ஆசிரியர் கூறினார். ஆனால் நேற்று நான் சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தினை வாசித்தேன்- அதில் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் கூறப்படவில்லை என்றார். “ததேகூ [தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டமைப்பு] ஏன் சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குகின்றது என்று எனக்கு தெரியவில்லை.

உங்களுடன் கலந்துரையாடிய பின்னர் நான் நிலமையை புரிந்து கொண்டுள்ளேன். தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த்தின் போது சிறிசேன, இராஜபக்ஷவுடன் இருந்தார். ஆம், சிரிசேனாவின் நடவடிக்கைக்கு பின்னால் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா, தமிழ் மக்களின் மனித உரிமை பற்றிப் பேசுகின்றது, ஆனால் யுத்தத்தின் போது அது இராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது. நான் வாக்களிப்பதற்கு முன்னால் உங்களைச் சந்தித்திருந்தால், உங்களுக்கே வாக்களித்திருப்பேன்.

ஊர்காவற்துறையை சேர்ந்த ஒரு சிறிய கடை உரிமையாளர் கூறினார். “உங்களுடைய கட்சி, தொடர்ச்சியாக சோசலிசத்திற்காகப் போராடி வருவதை நான் அறிவேன். நான் இராஜபக்ஷவையோ அல்து சிறிசேனாவையோ நம்பவில்லை. ததேகூ, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கின்றது. இது மிகப் பெரிய நகைச்சுவை. அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொன்றுதள்ளியது. ஆசியாவில் இராணுவத் தயாரிப்புக்களுக்கு இலங்கை பூகோள ரீதியில் மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதை அமெரிக்கா நன்கு அறியும்.”

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் கூட்டத்தில், பொதுத்துறை தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், குடும்பப்பெண்கள் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உட்பட 50 பேர், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்.

ஜனவரி 8 தேர்தலுக்காக இதுவரையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஒரேயொரு அரசியல் கூட்டம் இது மட்டுமே, என விஜேசிரிவர்த்தன சுட்டிக் காட்டினார். இது மற்றைய சகல கட்சிகளினதும் அரசியல் வங்குரோத்தினை பிரதிபலிப்பதாக அவர் வலியுறுத்திக் கூறினார். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு எதிராக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தபோதிலும், நீங்கள் எங்களுடைய முன்னோக்கினை அறிந்து கொள்வதற்காக இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கின்றீர்கள்

விஜேசிறிவர்த்தன தொடர்ந்தார்: சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் பேரில், அவருடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, மேலும் மக்கள் எதிர்ப்பு அபிவிருத்தியடையும் என்ற பீதியினாலேயே இராஜபக்ஷ இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதி தேர்தலினை நடத்துவதற்கு திட்டமிட்டார்.”

2013 வடமாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தலின் பின்னர், யாழ்ப்பாணத்தின் மாகாண நிர்வாகத்தினால், தமிழ் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் நிலைமைகளை ஸ்திரப்படுத்த முடியாது என, சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டியது நிரூபணமாகியுள்ளது என விஜேசிறிவர்த்தன சுட்டிக் காட்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் தொடர்ந்தார், “அதே பாதையில், ஜனவரி 8 தேர்தலில் இராஜபக்ஷ அல்லது சிறிசேன யார் வெற்றி பெற்றாலும், உங்களுடைய பிரச்சினைகள் மேலும் மோசமடையும். யார் ஆட்சிக்கு வந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளின் அடிப்படையில், சிக்கன நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். இதுமட்டுமல்ல, மற்றொரு உலக யுத்தத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான யுத்த தயாரிப்பு என்ற வாஷிங்டனின் நீர்ச் சுழிக்குள் நாட்டினை இழுத்து விடுவார்கள்.”

வளர்ந்து வரும் யுத்த அச்சுறுத்தல் பற்றி இந்த தேர்தலில் எந்தக் கட்சியும் பேசவில்லை. அவர்கள் உங்களை இருட்டில் வைத்துள்ளார்கள். அமெரிக்க தலமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் உலக யுத்த தயாரிப்புக்கள் பற்றி தெளிவுபடுத்துவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். வாஷிங்டன், அதன்ஆசியாவின் முன்நிலை வேலைத் திட்டத்தின் கீழ், இராணுவ ரீதியில் சீனாவைச் சுற்றி வளைத்து வைத்திருக்கின்ற போதிலும், அதே நேரத்தில் ரஷ்யாவுடன் ஆத்திர மூட்டும் முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நாஅஅகு) தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் பூராவும், சர்வதேச சோசலிசத்தின் அடித்தளத்தில் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தினை கட்டியெழுப்பி, யுத்தத்திற்கு மூல காரணாமாக உள்ள முதலாளித்துத்தினை தூக்கி வீசுவதற்காக போராடுகின்றது.

யாழ்ப்பாணக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சோசலிச சமத்துவக் கட்சி மத்திய குழு அங்கத்தவர் பரமு திருஞானசம்பந்தர் உரையாற்றும்போது இராஜபக்ஷ மற்றும் சிறிசேன, ததேகூ உட்பட தமிழ் உயர் தட்டுக்கள் உட்பட முழு கொழும்பு அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிராக சிங்கள், தமிழ், மற்றும் முஸ்லீம் தொழிலாள வர்க்கத்தினை சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் அணிதிரட்டுவதற்காக போராடிவருவதை தெளிவாக விளங்கப்படுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், மூன்று தாசாப்த கால யுத்தத்துக்கு எதிராகவும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினை முற்றாக வெளியேற்றுமாறும் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாகவும், கோட்பாட்டுரீதியாகவும் நடத்திய அரசியல் போராட்டத்தை, அரசியல் குழு அங்கத்தவர் எம் தேவராஜா விளக்கினார்.

சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் யாழ்ப்பாண கிளையின் அங்கத்தவர் எஸ் ஜனனி, உரையாற்றும் போது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இளைஞர்கள் முகம் கொடுக்கும் துன்பகரமான நிலமைகளை சுட்டிக் காட்டியதுடன், தேர்தலுக்குப் பின்னர் இந்த நிலமைகள் மேலும் மோசமாக்கப்படும் என எச்சரித்தார். சோசலிசத்துக்காக போராடுவதிலேயே இளைஞர்களின் எதிர்காலம் தங்கியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பங்குபற்றியவர்கள், பின்னர் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களுடன் உரையாடினர். ஆனந்தா என்ற ஆசிரியர், “உலகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலை இருப்பதாக எனக்கு தெரியும். எவ்வறாயினும், உங்கள் கட்சியைத் தவிர வேறு யாரும் இதைப் பற்றிப் பேசவில்லை என்றார்.

ஒரு ஊடக கல்வி கற்கும் மாணவர் கூறும்போது; “அடுத்த உலக யுத்தம் சம்பந்தமாக நான் அறிந்திருக்கவில்லை. உங்களுடைய கூட்டத்துக்கு வந்த பின்னரே நான் அதைப் பற்றி அறிந்து கொண்டேன். என்னால் இதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இங்கு இடம்பெற்ற பேச்சுக்களைக் கேட்ட பின்னர் நான் அதை நம்புகின்றேன். நாங்கள் ஏற்கனவே ஒரு உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம். பல நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. எனவே ஒரு உலகப் போர் பேரழிவினை ஏற்படுத்தும்.”

ஒரு கட்டிடத் தொழிலாளி கூறினார்; “சோசலிச சமத்துவக் கட்சி ஊடாக ஒரு சர்வதேச யுத்த அச்சுறுத்தலைப் பற்றி அறிந்து கொண்டோம். நாங்கள் அனுபவித்த உள்நாட்டு யுத்த அழிவினைவிட இது கூடுதலான பேரழிவினைக் கொண்டதாக இருக்கும். ஆம், யுத்த தயாரிப்புக்களை எதிர்க்க தொழிலாளர்கள் கட்டாயம் அணிதிரட்டப்பட வேண்டும்.”