சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: NSSP leader campaigns for right-wing, Pro-US presidential candidate

இலங்கை: நவசமசமாஜக் கட்சியின் தலைவர் வலதுசாரி அமெரிக்க-சார்பு ஜனாதிபதி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்கின்றார்

By Pani Wijesiriwardena-SEP presidential candidate
27 December 2014

Use this version to printSend feedback

இலங்கையில் ஜனவரி 8 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில், அனைத்து போலி இடது அமைப்புக்களும், ஏதோ ஒரு வழியில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தற்போதைய அரசாங்கத்தில் சமீபகாலம் வரை சுகாதார அமைச்சராக இருந்த ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியான மைத்திரிபால சிறிசேனவுடன் அணிசேர்ந்துள்ளனர். அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இப்போது "பொது வேட்பாளராக" போட்டியிடும் சிறிசேனவை, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) உட்பட ஏறத்தாழ அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரிக்கின்றன.

போலி இடது நவ சம சமாஜ கட்சி (நசசக) சிறிசேனவுக்கு மிகவும் அப்பட்டமாக ஆதரவளிக்கின்றது. மிக ஆர்வமுடன் பிரச்சாரம் செய்யும் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிசேனவின் மேடைகளில் தோன்றி இராஜபக்ஷவின் "சர்வாதிகாரத்திற்கு" ஒரே மாற்றீடாக எதிர்க்கட்சி வேட்பாளரை பிரகாசமான தாராளவாத ஜனநாயக வண்ணங்களில் சித்தரிக்கின்றார்.

நவம்பர் கடைசி வாரம் வரை, யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த கருணாரட்ன பிரச்சாரம் செய்துவந்தார். எனினும், நவம்பர் 21 சிறிசேன வெளியேறி விக்கிரமசிங்கவின் ஆதரவுடன் வேட்பாளரான போது, நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விரைவில் தனது தாளத்தை மாற்றிக்கொண்டார்.

நவம்பர் 26 நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கருணாரத்ன புலம்பியதாவது: "நாங்கள் 2005ல் இருந்து ரணிலை வேட்பாளராக்க பிரச்சாரம் செய்து வந்தோம். எனினும், அவர்கள் சிறிசேனவை தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் அவருக்கு 'விமர்சனபூர்வமான' ஆதரவு கொடுப்போம். நவசமசமாஜக் கட்சியின் ஆதரவு பற்றி "விமர்சிப்பதற்கு" ஒன்றும் இல்லை. கட்சி தனது சொந்த ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ள போதும், அது "எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளருக்கு [சிறிசேனவுக்கு] பிரச்சாரம் செய்வதற்கே," என கருணாரத்ன விளக்கியுள்ளார்.

கருணாரட்ன சிறிசேன பற்றி ஏதாவது சந்தேகங்களைக் கொண்டிருப்பார் என்று எண்ணினால் அதுவும் உடனடியாக தெளிவாக்கப்பட்டது. மொத்தத்தில் அவரது நண்பர் விக்கிரமசிங்க, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் சேர்ந்து சிறிசேனவை வெளியில் கொண்டுவர சதி செய்வதில் முன்னிலையில் இருந்தார்.

மிகவும் அடிப்படையில், நவசமசமாஜக் கட்சியானது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக இராஜபக்ஷவுக்கு எதிராக இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட அமெரிக்காவின் போலித்தனமான "மனித உரிமைகள்" பிரச்சாரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முழுமையாக ஆதரித்த அமெரிக்கா, இப்போது சீனாவில் இருந்து இராஜபக்ஷவை தூர விலக்குவதற்கு அழுத்தம் கொடுக்க இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொள்கின்றது.

விக்கிரமசிங்கவும் குமாரதுங்கவும் வாஷிங்டனுக்கு தெரிந்து மற்றும் அதன் அங்கீகாரத்துடன் தேர்தலில் இராஜபக்ஷவை வெளியேற்ற சிறிசேனவை வேட்பாளராக்க செயற்பட்டனர். தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், குமாரதுங்க முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மற்றும் அவருடைய மனைவி ஹிலாரி கிளின்டனுடன், கிளின்டன் பூகோள முன்னெடுப்புகள் அமைப்பின் ஒரு ஆலோசகர் என்ற வகையில், நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டார். ஒபாமாவின் கீழ் இராஜாங்கச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன், சீனாவை கீழறுக்கும் மற்றும் அதை இராணுவரீதியாக சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்ட "ஆசியாவில் முன்னிலை" கொள்கையை உக்கிரமாக முன்னெடுத்தார்.

நவசமசமாஜக் கட்சியின் கருணாரத்ன வெட்கமின்றி சிறிசேனவுக்கு ஊக்குவிப்பாளராக செயல்படுவதோடு, சிறிசேனவை ஆதரிப்பதில் ஏனைய போலி-இடதுகள் வெளிப்படையாக இல்லை என்றும் விமர்சிக்கின்றார். அவர் சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் குமாரதுங்கவுடன் மட்டுமன்றி, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் அன்மையகாலம் வரை ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த சிங்கள-பெளத்த அதி தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் பிரதிநிதிகளுடன் கூட தேர்தல் களத்தில் தோன்றுகிறார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தொடர்பு கொள்ளப்பட்டபோது, நவசமசமாஜக் கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள், மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் பாணந்துறை உட்பட, நாடு முழுவதும் இதுவரை நடைபெற்ற சிறிசேனவின் ஒவ்வொரு முக்கிய தேர்தல் கூட்டங்களிலும் கருணாரத்ன உரையாற்றினார் என்று பெருமையாகப் பேசினர். சிறிசேனவின் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக சொந்தமாக சில சுயாதீனமான கூட்டங்களுக்கும் நவசமசமாஜக் கட்சி ஏற்பாடு செய்வதாக அந்த அலுவலர்கள் விளக்கினர்.

டிசம்பர் 4, மாத்தறையில் ஒரு கூட்டு தேர்தல் கூட்டத்தில் பேசிய கருணாரத்ன, பன்னாட்டு நிறுவனங்களுக்கு  எதிராகப் போராடிய ஒரு அரசியல் இராட்சதனாக சிறிசேனவை சித்தரித்தார். "நாட்டின் துரோகியான ஒரு தலைவரின் [இராஜபக்ஷ] கீழ் ஒரு அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றிக்கொண்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது ஒரு கொடிய துணிகரச் செயலாகும்," என்று அவர் அறிவித்தார்.

எவ்வளவு வெட்கக் கேடானது! பல்தேசியக் கம்பனிகளுக்கு எதிரான சிறிசேனவின் "போராட்டமானது" புகையிலை நிறுவனங்களின் எதிர்ப்பின் மத்தியில் சிகரெட் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் எச்சரிக்கை படத்தை அச்சிட சட்டம் ஒன்றை இயற்றியதாகும். கருணாரட்ன, ஸ்ரீலசுகயின் பொதுச் செயலாளர் மற்றும் இராஜபக்ஷவின் அமைச்சரவையில் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையில், தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை தாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளை சிறிசேன ஆதரித்தது மற்றும் புலிகளுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்திற்கு பங்களிப்பு செய்தது பற்றி முற்றிலும் மௌனமாக இருக்கின்றார்.

இராஜபக்ஷவை "துரோகி," என முத்திரையிடும் கருணாரட்ன வலதுசாரி பேரினவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார். மாத்தறை கூட்டத்தில், பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான சிறிசேனவின் "போராட்டம்" பற்றி பேசியமைக்காக ஹெல உறுமயவின் தலைவர் அதுரலியே ரத்தனேவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ஒரு பௌத்த துறவியான ரத்தனே அவரது சிங்கள-பெளத்த அதிதீவிரவாதத்தால் பேர் போனவராகும். அவரது பிற்போக்கு இனவாத நோக்கை ஏற்றுக்கொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர், "மைத்திரிக்கு [சிறிசேன] வாக்களிக்குமாறு" அனைத்து தேசப்பற்றுள்ள மக்களுக்கும் அறிவுறுத்தினார்.

பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான சிறிசேனவின் "போராட்டம்" பற்றிய கருணாரத்னவின் வாய்வீச்சு, எதிர்க்கட்சி வேட்பாளர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலை மூடி மறைப்பதற்கான ஒரு இழிந்த தந்திரம் ஆகும். சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் இலங்கையை அமெரிக்காவின் போர் உந்துதலில் மேலும் நெருக்கமாக சிக்கவைப்பதற்காக வெளிநாட்டு கொள்கையை பெய்ஜிங்கில் இருந்து வாஷிங்டன் நோக்கி மாற்றுவார். அவர் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்படும் இராஜபக்ஷவின் சிக்கனத் திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துவதோடு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதில் இராஜபக்ஷ போலவே ஈவிரக்கமற்றவராக இருப்பார்.

அதே சமயம், இலங்கை உட்பட நாடுகளில் ஜனநாயகத்தைக் காக்கும் உலக வல்லுனராக அமெரிக்க சித்தரிப்பதன் மூலம் வாஷிங்டன்-சார்பு நபருக்கான தனது ஆதரவை கருணாரத்ன பொய்யாக நியாயப்படுத்துகிறார். டிசம்பர் 5, சிலோன் டுடே பத்திரிகையில் தனது பத்தியில், இராஜபக்ஷ தனது மனித உரிமை வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதோடு, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் வழியைப் பின்பற்றியதால், அவர் "உலக முதலாளித்துவத்திற்கு ஒரு பிரச்சனையாக" இருக்கின்றார் என்று அறிவித்தார். "சமீப காலத்தில், அவர்கள் [ஏகாதிபத்தியவாதிகள்] நல்லாட்சிக்கான மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவுகொடுத்தும் மற்றும் ஆட்சியாளர்களின் இரத்தத்தை எடுத்தும் 'ஜனநாயக' வழியை நடைமுறைப்படுத்தியுள்ளனர்," என்று அவர் எழுதினார்.

இது "மனித உரிமைகள்" மற்றும் "நல்லாட்சி" ன்ற பெயரில் அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் முன்னெடுத்த அனைத்து தலையீடுகள் மற்றும் தூண்டுதல்களை இழிந்த முறையில் மன்னிப்பதைத் தவிர வேறில்லை.  இதில், லிபிய தலைவர் மும்மர் கடாபியை அகற்ற கொடூரமாக கொலை செய்தமை, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிரான அமெரிக்க ஆதவிலான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் மற்றும் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உக்ரேன் ஜனாதிபதியை கவிழ்க்க பெப்ரவரியில் பாசிஸ்டுகள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியும் அடங்கும். இவை அனைத்தையும் நவசமசமாஜக் கட்சி மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் போலி இடது சக சிந்தனையாளர்களும் ஆதரித்தனர்.

"சீனாவுடனான அவரது [இராஜபக்ஷவின்] சுமூகமான உறவானது மேற்கு மற்றும் இந்தியா உடனான [இலங்கையின்] இணைப்புகளைப் பலவீனப்படுத்தி இழப்பீடற்றதாக்கி உள்ளது" என்று கருணாரட்ன தொடர்ந்தும் குறிப்பிட்டார். அவர், பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே சமநிலையில் செயற்படும் இராஜபக்ஷவின் முயற்சிகள் இனியும் சாத்தியமற்றது என்று முடிவு செய்துவிட்ட விக்கிரமசிங்க மற்றும் குமாரதுங்க உட்பட இலங்கை ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் சார்பில் பேசுகிறார். பூகோள-அரசியல் பதட்டங்கள் உக்கிரமடைகின்ற நிலையில், யுத்தத்துக்குள் இழுபட்டுச் செல்வதை அர்த்தப்படுத்தினாலும் கூட, இலங்கை நிபந்தனையின்றி அமெரிக்க முகாமுக்குள் செல்வதைத் தவிர வேறு மாற்றீடு இல்லை என்று நம்புகின்றனர்.

நவசமசமாஜக் கட்சியானது இராஜபக்ஷ மற்றும் அவரது குழுவின் எதேச்சதிகார ஆட்சியை சுட்டிக் காட்டி, சிறிசேனவின் பிரச்சாரத்தின் பிற்போக்குத் தன்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறது. இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நடந்த ஜனநாயக உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் பொலீஸ்-அரச வழிமுறை நீட்டிப்புகளுக்கு நிச்சயமாக பொறுப்பாளியாவார். ஆனால். நவசமசமாஜக் கட்சி முன்னிலைப்படுத்துபவர்களும் நீண்டகால ஜனநாயக விரோத சாதனைகளைப் புரிந்தவர்களே -குறிப்பாக நாடளாவிய தமிழர் விரோத படுகொலைகளடுடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கிய யூஎன்பீ, இராணுவ ஆதரவிலான கொலைப் படைகளால் 1980களின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் பொறுப்பாகும். இதில் தீவின் தெற்கில் 60,000 கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

"பாசிச பாணியில் சர்வாதிகார தலைவர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு" எதிராக, "பல்தேசிய நிறுவன எதிர்ப்பு மற்றும் சூழல்-சார்பு, தொழிலாளர்-சார்பு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சார்பு இயக்கம் ஒன்று இருக்கும், சர்வாதிகாரி ஜனநாயக தேர்தல் நடவடிக்கைகளை மீறுவதாக இருந்தால் தீவு பூராவும் ஒரு வெகுஜனப் போராட்டத்துக்கு வேட்பாளர் [சிறிசேன] அழைப்பு விடுக்கின்றார்," என்று கருணாரட்ன பிரகடனம் செய்கின்றார்.

இது ராஜபக்ஷ மீதான பரவலான அதிருப்தியையும் மற்றும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமல்ல, கருணாரட்ன, சிறிசேன தோல்வியடைந்தால் உழைக்கும் மக்களின் ஒரு கிளர்ச்சியை அன்றி, அரசு சாரா நிறுவனங்களின் ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அந்த வகைப்படுத்தப்பட்ட தட்டில் உள்ள தாராளவாதிகளும் அடங்கிய மத்தியதர வர்க்கத்தின் கிளர்ச்சியையே முன்னறிவிக்கின்றார். இது, ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, குறிப்பாக முன்னாள் சோவியத் குடியரசுகளில் அமெரிக்க ஆதரவுடன் பல சமயம் திட்டமிடப்பட்ட "வண்ணப் புரட்சி" வகை சார்ந்ததாகும்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கும் மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் போருக்கான தயாரிப்புக்களுடன் அணிசேர்ந்திருக்கும் நவ சம சமாஜக் கட்சி போன்ற அனைத்து போலி இடது அமைப்புக்களுக்கும் இடையே ஒரு ஆழமான அரசியல் வேறுபாடு இருக்கிறது. நவசமசமாஜக் கட்சியானது பப்லோவாத செயலகத்தின் உத்தியோகபூர்வ இலங்கைப் பகுதியாகும் -அது 1953ல், ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்ட நான்காம் அகிலத்தின் பிரிவுகளின் கூட்டமைப்பாகும். 1964ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் லங்கா சமசமாஜக் கட்சி (லசசக) நுழைந்துகொண்டமை, பப்லாவாதத்தின் வர்க்கத் தன்மையை தீக்கமாக அம்பலப்படுத்தியது. கருணாரட்ன 1970களின் பிற்பகுதி வரை லங்கா சமசமாஜக் கட்சியிலேயே இருந்ததோடு நவசமசமாஜக் கட்சி வர்க்க ஒத்துழைப்பு அரசியலில் முற்றிலும் மூழ்கிப்போயிருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது (புகக), 1964ல் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் படிப்பனைகளையும் கிரகித்துக்கொண்டதன் அடிப்படையில், அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே கட்சி அது மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சி, வளர்ச்சி கண்டுவரும் உலகப் போர் அபாயத்துக்கு எதிராக அனைத்துலகக் குழுவின் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும்- இந்தத் தேர்தலில் இராஜபக்ஷ மற்றும் சிறிசேன மற்றும் அவர்களுடைய அனைத்து ஆதரவாளர்களுக்கும் எதிராக- தமது அரசியல் சுயாதீனத்துக்காக போராடுவதன் மூலம் மட்டும் தங்கள் நலன்களை காக்க முடியும் என்று நாம் வலியுறுத்துகிறோம். தொழிலாளர்கள் மற்றும் ஏழை வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிக்கான ஒரே தீர்வாக, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காகப் போராடுகிறது. நாம், எமது தேர்தல் அறிக்கைகளை வாசிக்குமாறும் எமது பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.