சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan opposition parties line up behind US regime-change agenda

இலங்கை எதிர்க் கட்சிகள் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் பின்னால் அணிதிரண்டுள்ளன

 By K. Ratnayake
8
January 2015

Use this version to printSend feedback

இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏழு வாரங்கள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் இராஜபக்ஷவின் சீன-சார்பு கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க சார்பு வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு கட்சி மாறினர்.

அமெரிக்கா சீனாவுக்கு எதிரான தனது இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை தீவிரமாக்குகின்ற நிலையில், அது தனது "ஆசியாவில் முன்னிலை" ஆக்கிரமிப்பு கொள்கையை ஆதரிக்க இப்பிராந்தியத்தில் அனைத்து அரசாங்கங்களையும் நெருக்கி வருகின்றது. அதன்படி, அது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சமநிலையில் செயற்படும் இராஜபக்ஷவின் முயற்சிகளளுக்கு முடிவு கட்டி, இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்காக தனது பலத்தைப் பிரயோகித்துள்ளது. அமெரிக்கா, சீனாவுடனான போருக்கான அதன் தயாரிப்புகளுடன் ஒத்துழைக்கும் ஒரு அரசாங்கத்தை விட குறைந்த எதையும் கொழும்பில் ஏற்றுக்கொள்ளாது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட மறு நாளே, ஒரு மூத்த அமைச்சரும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) பொதுச் செயலாளருமான சிறிசேன, எதிர்க் கட்சிக்கு மாறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது கட்சி மாற்றம் கவனமாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின் பாகமாகும். இது இராஜபக்ஷவை வெளியேற்றுவததற்குத் தேவையான சக்திகளை பொருத்துவதற்கு, வாஷிங்டனின் ஆதரவுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாலும் அபிவிருத்திய செய்யப்பட்டதாகும். குமாரதுங்கவுக்கு கிளின்டன் மன்றத்தின் ஊடாக ஒபாமா நிர்வாகத்துடன் விரிவான உறவு உள்ளது.

சிறிசேன மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கும் ஆதரவளிக்கும் பிரதான அரசியல் கட்சி, வலதுசாரி யூஎன்பீயே ஆகும். அதனுடன் சிங்களம்-பெளத்த அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமய (JHU), மற்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் 2010ல் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியும் (DP) இணைந்து கொண்டுள்ளன.

முஸ்லீம்களை தளமாகக் கொண்ட இரண்டு முதலாளித்துவ கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் (ஸ்ரீலமுகா), அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசும் (ACMC) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA), மேலும் இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்துகொண்டன. ஸ்ரீலமுகா ஆனது பொதுபல சேனா, ராவணா பலகாய போன்ற இராஜபக்ஷவால் பராமரிக்கப்படும் பெளத்த அதி தீவிரவாத குழுக்களால் தூண்டிவிடப்பட்ட முஸ்லீம்-விரோத தாக்குதல்களுக்கு எதிராக வாஷிங்டனின் ஆதரவைப் பெற முயன்றது. தமிழ் முதலாளித்துவத் தட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்காக அமெரிக்க ஆதரவை நாடுகிறது.

தேர்தலை அறிவிக்க முன், இராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு விட அதிகமாக 161 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருந்தார். எட்டு அமைச்சர்கள் உட்பட இருபத்தி ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிசேன பிரச்சாரத்தில் சேர்வதற்காக வெளியேறிவிட்டனர். ஜனாதிபதி, இப்போது ஆளகும் கூட்டணிக்கு மாறிய இரண்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் - ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும்- 138 உறுப்பினர்களையே கொண்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து இன்னும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் ராஜபக்ச அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தப்படுத்தி அவர்களைத் தடுத்துவிட்டதாகவும் ஊடக அறிக்கைகள் குறிக்கின்றன.

முற்றிலும் முதலாளித்துவ மற்றும் வலது சாரி அமைப்புக்களாக உள்ள லங்கா சம சமாஜக் கட்சி (லசசக) மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் (CP), இராஜபக்ஷவின் ஸ்ரீலசுகயின் துணையுறுப்புக்களாக சேவையைத் தொடர்கின்றன. அவற்றின் தலைவர்கள், அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளனர். இரு கட்சிகளும் இப்போது உட் பூசல்களில் உள்ளன. அவற்றின் பிரிவுகள் வெளிப்படையாக சிறிசேனவின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றன.

சிறிசேனவுக்குப் பின்னால் எதிர்க் கட்சிகள் அணிதிரண்டுள்ளமை, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் கணிசமான பிரிவு நாட்டின் வெளியுறவு கொள்கையை வாஷிங்டன் பின்னால் திருப்புவதற்குத் தீர்க்கமாக முடிவு செய்துள்ளதை காட்டுகிறது. சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம், இலங்கை "சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைபட்டிருப்பதற்கு" முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்துள்ளார். சர்வதேச சமூகம் என்பது அமெரிக்க மற்றும் மேற்கத்தைய சக்திகளை குறிக்கும் வார்த்தையாகும். பெரும் வர்த்தக நிறுவனங்களின் கணிசமான பகுதியினர், சீனாவுடனான இராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தைகளை இழக்கச் செய்யும் என்ற அச்சத்தால் சிறிசேனவின் பிரச்சாரத்தை ஆதரிக்கிறன.

சீன எதிர்ப்பு உணர்வை முன்னிலைப்படுத்துவது எதிர்க் கட்சி பிரச்சாரத்தின் ஒரு அம்சமாகும். யூஎன்பி, ராஜபக்ச இலங்கையை "சீனாவின் செயற்கைக்கோள்" திருப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஒரு தொகை சீன முதலீட்டுத் திட்டங்கள் "மறு ஆய்வு" செய்யப்படும் என்று சிறிசேன உறுதியளித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனா, இலங்கையின் முதல் தர உதவி வழங்கும் நாடாகவும் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் மாறியுள்ளதுடன், பதிலுக்கு நெருக்கமான இராணுவ உறவுகளைக் கோருவது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் கவலையை தூண்டிவிட்டுள்ளது.

"இராஜபக்ஷவின் சர்வாதிகாரம்" மற்றும் "குடும்ப ஆட்சி" என்ற வஞ்சத்தனமான கண்டனங்கள் மூலம், தாம் அமெரிக்காவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளதை எதிர் கட்சிகள் மூடி மறைக்க முயன்று வருகின்றனர. இராஜபக்ஷ முக்கிய அரசியல் மற்றும் வணிக பதவிகளில் தனது குடும்ப உறுப்பினர்களை இருத்தியுள்ளார்.

2005ல் ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட, ஜனாதிபதி ஆட்சி முறையின் சர்வாதிகார அதிகாரங்களை நிச்சயமாக இராஜபக்ஷ தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராக, மற்றும் அனைத்துக்கும் மேலாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் சமூக போராட்டங்களை ஒடுக்க பயன்படுத்திக்கொண்டார். எனினும், அவர் எதிர்க் கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டுள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவுடனேயே அவ்வாறு செய்தார். உள்நாட்டுப் போரின் போது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்கவும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அடக்கவும் கொடூரமான வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு அவர்கள் முழுமையாக ஆதரவளித்தனர்.

நவ சம சமாஜக் கட்சி (NSSP), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP), முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) போன்ற போலி இடது மத்தியதர வர்க்க அமைப்புக்கள், பல கல்விமான்கள் மற்றும் கலைஞர்களுடன் சேர்ந்து அமெரிக்க-சார்பு எதிரணிக்குப் பின்னால் அணி திரண்டுள்ளனர்.

நவ சம சமாஜக் கட்சி வெளிப்படையாக சிறிசேனவுக்கு பிரச்சாரம் செய்கின்றது. ஐக்கிய சோசலிச கட்சி சிறிசேனவின் வரலாற்றை இலேசாக விமர்சித்தாலும், முதன்மையான பிரச்சினை "இராஜபக்ஷ சர்வாதிகாரத்தை" தோற்கடிப்பதே என்று வலியுறுத்துகிறது. முன்னிலை சோசலிச கட்சி, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று ஆக்ரோசத்துடன் கூறும் அதேவேளை, இராஜபக்ஷ சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சிறிசேனவின் வாக்குகள் "பிரிவதை" எதிர்க்கின்றார். ஏதாவதொரு வழியில், இந்த போலி இடது தட்டுக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு "ஜனநாயக" சான்றுகளைக் கொடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் போர் ஏற்பாடுகளுடனும் அணிதிரண்டுள்ளனர்.

இராஜபக்ஷ, இன்றைய தேர்தலில் பதவியில் ஒட்டிக் கொள்வதில் சமாளித்துக்கொண்டாலும், இந்த போலி-இடது அமைப்புக்கள், அடுத்த கட்ட அமெரிக்க ஆதரவு சூழ்ச்சிகளுக்கு துணை நிற்க "ஜனநாயகம்" என்ற மோசடியான பதாகையினைப் பயன்படுத்தும். இதில் வாஷிங்டன் மற்ற நாடுகளில் தூண்டிவிட்ட "வண்ணப் புரட்சி" வகையிலானொன்றைச் செய்வதற்கான சாத்தியத்தை உருவாக்கமும் இதில் அடங்கும்.

 நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக), அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தனவும் இலங்கையில் மட்டுமன்றி ஆசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கான ஒரு முன்னோக்குக்காகப் போராடுகிறது. "இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச முக்கியத்துவம்," என்ற உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான முன்னோக்கில், ஒரு சோசலிச சர்வதேசியவாத்தத்தின் அடிப்படையில், இராஜபக்ஷ மற்றும் சிறிசேன முகாம்கள் உட்பட, ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் அரசியல் சுயாதீனத்துக்காகப் போராடுவம் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் போர் ஆபத்துக்களை எதிர்த்துப் போராட முடியும் என வலியுறுத்தியுள்ள ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தனவுக்கு வாக்களிக்கவும்! போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடு!