சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Twelve dead in terrorist shooting at Paris offices of Charlie Hebdo

சார்லி ஹெப்டோவின் பாரீஸ் அலுவலக பயங்கரவாத துப்பாக்கிச்சூட்டில் பன்னிரெண்டு பேர் பலி

By Alex Lantier and Bill Van Auken
8 January 2015

Use this version to printSend feedback

வன்தாக்குதலுக்கு உரிய துப்பாக்கிகளும் ராக்கெட் குண்டுவீசிகளும் ஏந்திய, குண்டு துளைக்காத கவசமணிந்து முகமூடி தரித்த நபர்கள், நேற்று காலை பாரீஸில் உள்ள வாராந்திர நையாண்டி பத்திரிகை சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது ஒரு படுகொலை தாக்குதல் நடத்தியதில், பன்னிரெண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர், அதில் நான்கு பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். கேலிச்சித்திர ஓவியர்கள் சார்ப், காபு, தினூஸ் மற்றும் வொலன்ஸ்கி ஆகியயோர் இறந்தவர்களுள் உள்ளடங்குவர்.

பாரீஸ், துலூஸ், ஸ்ட்ராஸ்பூர்க், மற்றும் ஏனைய பிரெஞ்சு நகரங்களிலும், அத்துடன் இலண்டன், பேர்லின் மற்றும் ரோம் உட்பட ஐரோப்பாவெங்கிலும் உள்ள நகரங்களில் அப்படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பாரீஸ் பொலிஸ் புதனன்று இரவு அந்த தாக்குதலில் சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களை அடையாளம் கண்டிருப்பதாக அறிவித்துள்ளது. பிரான்ஸை சேர்ந்த 30களின் தொடக்கத்தில் இருக்கும் சாய்த் கௌச்சி மற்றும் செரிப் கௌச்சி ஆகிய இரண்டு சகோதரர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய ஹமீட் மூராட் ஆகியோர் சந்தேகத்திற்குரியவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். மூராட் அதற்கடுத்து பாரீஸில் இருந்து சுமார் 145 கிலோமீட்டரில் இருந்த ஒரு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததால், இப்போது அவர் காவலில் உள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்களாக குற்றஞ்சாட்டப்படுபவர்களை அடையாளம் கண்டிருப்பது, பதில்களை விட நிறைய கேள்விகளையே எழுப்புகின்றன. குறிப்பாக செரிப் கௌச்சி பிரெஞ்சு மற்றும் அமெரிக்க உளவுத்துறை மற்றும் பொலிஸ் அமைப்புகளுக்கு நன்கு பரிச்சயமானவர். 2005இல், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், அவர் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளர்ச்சியில் இணைவதற்காக ஈராக்கிற்குப் பயணிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் பிரான்சில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டது. 2008இல் அவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் பிரெஞ்சு நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரெஞ்சு முஸ்லீம்களை ஈராக்கிற்கு அனுப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டுகளுக்காக மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் அசோசியேடெட் பிரஸிற்குக் கூறுகையில், அபு கிரைப் அமெரிக்க சிறையின் சித்திரவதை படங்களே அவரை அவ்வாறு நடந்துகொள்ள தூண்டியதாக தெரிவித்தார்.

கௌச்சி அவரது தண்டனையில் 18 மாதங்களை அனுபவித்த பின்னர், பிரெஞ்சு இரகசிய சேவைகளின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இருந்து வந்தார். அவர்தான் துப்பாக்கிதாரி என்று பொலிஸ் வாதிடுவது உண்மையானால், இம்மாதிரியான ஒரு நபரால் எவ்வாறு ஒரு ராக்கெட் குண்டுவீசி மற்றும் தானியங்கி ஆயுதங்களைப் பெற முடிந்தது, அவரைத் தடுக்க முடியாதவாறு அல்லது கண்டு பிடிக்க முடியாதவாறு பாரீஸின் மத்திய பகுதியில் எவ்வாறு உயர்ந்தளவில் நிபுணத்துவத்துடன் உயிர்பறிக்கும் தாக்குதலை ஒழுங்கமைக்க முடிந்தது என்பதற்கு பிரெஞ்சு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

அனைத்திற்கும் மேலாக, தாக்குதல் நடந்த இடமே கூட ஒரு இலக்கில் வைக்கப்பட்ட இடம் என்பது பிரெஞ்சு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். அருட்தூதர் நபிகள்நாயகத்தின் கேலிச்சித்திரங்களை பிரசுரித்த பின்னர், 2011இல் அப்பத்திரிகையின் தலைமையகம் மீது குண்டுவீசப்பட்டதிலிருந்து, அது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருந்தது. சார்ப் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருந்தார், ஏனெனில் அவர் அல் கொய்தாவின் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இவ்வாறு இருந்த போதினும், துப்பாக்கிதாரிகள் அந்த அலுவலகத்தின் பணியாளர்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, காலை 11 மணிக்கு சற்று முன்னதாக அக்கட்டிடத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் இருந்து இப்போதையது வரையில், நடைமுறையில் சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தின் ஒவ்வொரு பிரதான நடவடிக்கையின் வடிவமைப்பிற்கு பொருந்திய விதத்தில் பாரீஸ் அட்டூழியமும் அமைந்துள்ளது. அவை பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு வட்டத்திற்கு வெளியே இருந்தவர்களால் நடத்தப்பட்டுள்ளவை அல்ல, மாறாக குற்றஞ்சாட்டப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்ட நன்கறிந்த நபர்களாலேயே நடத்தப்பட்டவை ஆகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த அட்டூழியங்கள் "புலனாய்வுத்துறை தவறுகளால்" தடுக்க முடியாமல் போய் இருந்ததாக இடைவிடாமல் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டன.

அத்தகைய நடவடிக்கைகளை இயக்கத்திற்கு கொண்டு வரும் அரசியல் சக்திகள், தவிர்க்க இயலாமல் அவை முதல் பார்வையில் தெரிவதையும் விட மிகவும் சிக்கலாகவும் மிகவும் வஞ்சகமாகவும் உள்ளன என்பதையே நீண்டகால அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இந்த சமீபத்திய அட்டூழியத்தின் அரசியல் நோக்கங்கள், அதை செய்தவர்களை அடையாளம் கண்டு விட்டதாக யாரும் வாதிடுவதற்கு முன்னரே அது தயாராக வெளிப்படையான இடத்தில் சரியாக பொருத்தப்படும். அது ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளைப் பலப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கைக்காக பற்றப்பட்டது.

சான்றாக நியூ யோர்க் டைம்ஸின் உடனடி விடையிறுப்பு இதுவாகும்: அந்த பாரிய படுகொலை "நிச்சயமாக ஐரோப்பாவில் இஸ்லாமிய-விரோத உணர்வு அதிகரிப்பதை தூண்டிவிடும் என்பதுடன், அது பிரான்சின் தேசிய முன்னணி போன்ற வலதுசாரி தேசியவாத கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும்,” என்று வலியுறுத்தியது.

"மேற்கில் இஸ்லாமியமயத்திற்கு எதிராக தேசபற்று மிக்க ஐரோப்பியர்கள்" எனும் பதாகையின் கீழ் ஜேர்மனியில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரிய பேரணிகளிலிருந்து பிரிட்டனில் UKIP போன்ற வலதுசாரி தேசியவாத கட்சிகளின் வளர்ச்சி வரையில், அக்கண்டம் முழுவதும் வலதுசாரி, இனவெறி, புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருகின்ற சூழலில்தான் பாரீஸில் இந்த தாக்குதல் கட்டவிழ்ந்தது. ஊடகங்களின் எதிர்வினை தெளிவுபடுத்துவதைப் போல, பாரீஸில் நடந்த படுகொலைகள் அத்தகைய பிற்போக்குத்தனமான போக்குகளைப் பலப்படுத்த சுரண்டிக் கொள்ளப்படும்.

நவ-பாசிச தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லு பென் அந்த தாக்குதலை அவரது நச்சுத்தன்மை நிறைந்த பேரினவாத அரசியலை நியாயப்படுத்துவதற்கு ஒரு வழிவகையாக சுரண்டிக் கொண்டார். “பயத்தைக் கடந்து வர வேண்டுமென கூறுவது எனது பொறுப்பாகும், அதன் எதிர்விதமாக இந்த தாக்குதல் நாம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் குறித்து எவ்வாறு பேசுகிறோமோ அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும்,” என்று அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை மறைமுகமாக புலம்பெயர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத வெறியை தூண்டிவிடும் விதத்தில் இருந்தன.

இந்த படுகொலையை யார் நடத்தியிருந்தாலும், அதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் வெறுமனே அரசின் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளின் கரங்களில் எடுத்துக் கொள்ளப்படும், அத்துடன் வெளிநாடுகளில் இராணுவ தலையீடுகளை அதிகரிக்கவும் மற்றும் உள்நாட்டில் பொலிஸ்-அரசு முறைகளை அதிகரிக்கவும் ஆளும் மேற்தட்டின் வளர்ந்துவரும் செல்வாக்கெல்லையால் கையாளப்படும். 9/11க்குப் பின்னர் திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களைப் பீதியூட்டி நோக்குநிலை பிறழச் செய்கின்றன, மேலும் அங்கே பரந்த அளவில் மக்கள் ஆதரவு இல்லாத கொள்கைகளை (பயங்கரவாத நடவடிக்கைகளுக்கானவை நீங்கலாக) நடைமுறைப்படுத்த, அரசுக்கு ஒரு சந்தர்ப்பை வழங்குகின்றன.

பரந்தளவில் மதிப்பிழந்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், அனுமானிக்கக்கூடிய வகையில், ஒரு பெரியளவிலான பொலிஸ் நடவடிக்கையை அறிவிக்க மற்றும் தேசிய ஒற்றுமைக்கு முறையிட துப்பாக்கிசூடு நடந்த அந்த இடத்திற்கு மதியம் 12.30க்கு வந்தார். மத்திய கிழக்கு போர்களில் அவரது அரசாங்கம் ஈடுபாட்டை அதிகரித்து வருவதுடன் சேர்ந்து, பிரெஞ்சு மக்களிடையே கடுமையான கோபம் நிலவுவதற்கு இடையிலும், ஹோலாண்ட் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் பிரான்சின் மிக மதிப்பிழந்த ஜனாதிபதி அவரது அரசியல் பயன்பாட்டிற்காக அந்த தாக்குதலை பற்றிக் கொண்டார்.

புதன்கிழமை தாக்குதலின் எல்லா மதிப்பீடும் அது உயர்ந்தளவில் ஒழுங்கமைக்கப்பட்டு, இரக்கமற்ற பாணியில் நடத்தப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

அப்பத்திரிகையின் கேலிச்சித்திர ஓவியரான கோரின் ரேய் L’Humanitéக்கு கூறுகையில், “நான் குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து என் குழந்தையை அழைத்து வர சென்றிருந்தேன். நாங்கள் பத்திரிகை தலைமையகத்திற்கு முன்னால் வந்தபோது, முகமூடி அணிந்த ஆயுதமேந்திய மனிதர்கள் முரட்டுத்தனமாக எங்களை அச்சுறுத்தினார்கள். அவர்கள் என்னையும் உள்ளே சென்று, படிகளில் ஏறுமாறு வற்புறுத்தினார்கள். நானும் அதன்படி நுழைந்தேன். அப்போது அவர்கள் வொலன்ஸ்கி, காபுவைச் சுட்டார்கள் அது ஐந்து நிமிடங்கள் நீடித்தது. நான் ஒரு மேசைக்கடியில் ஒளிந்து கொண்டேன்... அவர்கள் மிக துல்லியமாக பிரெஞ்சு பேசினார்கள், அவர்கள் அல் கொய்தா உடன் இருந்ததாக தெரிவித்தார்கள்,” என்றார்.

அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் செயல்பாடுகளைக் குறித்து தகவல்கள் அறிந்திருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “புதனன்று காலை 10 மணிக்கு வாராந்திர ஆசிரியர் குழு கூட்டம் இருந்தது என்பதைக் குறித்து தாக்குதல் நடத்தியவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அவ்வாறு இல்லையென்றால், ஏனைய வார நாட்களில், அங்கே அதிகம் பேர் இருக்க மாட்டார்கள்,” என்று சார்லி ஹெப்டோவின் மற்றொரு இதழாளர் Le Mondeக்குத் தெரிவித்தார்.

அந்த துப்பாக்கிதாரிகள் பொறுமையாகவும், முறையாகவும் நகர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் சுடத் தொடங்குகையில், “அல்லாஹூ அக்பர்" என்று கூச்சலிட்டனர். அவர்கள் சுட்டபோது இதழாளர்களைக் கண்டறிந்து சுட்டனர், அத்துடன் பெண்களை அவர்கள் கொல்ல போவதில்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்தனர். அவர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறுகையில், பொலிஸூடன் ஒரு தொடர்ச்சியான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அப்போது தான், கட்டிடத்திற்கு உள்ளே இருந்தவர்களில் 10 பேரும், இரண்டு பொலிஸ்காரர்கள் உட்பட வெளியே இருந்த இருவரும் கொல்லப்பட்டனர்.

அவர்கள் தப்பிக்கையில், “அல்லாஹ் அக்பர்" என்று கூச்சலிட்டுக் கொண்டே, பல பொலிஸ் கார்களைத் தாக்கினர். காயமடைந்திருந்த ஒரு பொலிஸ்காரரை கொல்வதற்காக, அவர்கள் நின்று அவரது தலையில் சுட்டு கொன்றனர். பின்னர் பொலிஸிடமிருந்து தப்பிக்க போக்குவரத்து நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டதோடு, போர்ட் டு பான்டன் அருகில் அவர்களது காரைக் அப்படியே விட்டோடினர். அவர்கள் துப்பாக்கி முனையில் ஒரு சாரதியை பிடித்து கட்டளையிட்டு ஒரு புதிய வாகனத்துடன் பாரீஸின் வடக்கு புறநகர் பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.

BFM-TVஇன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அந்த துப்பாக்கி சண்டையை நியூ யோர்க் நகரத்தின் மீதான செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுடன் ஒப்பிட்டதுடன், ISIS (சிரியா மற்றும் ஈராக்கிற்கான இஸ்லாமிய அரசு) அதற்கு பொறுப்பாக இருக்கலாம் என்றும் அனுமானங்களை வெளியிட்டனர். சார்லி ஹெப்டோ துப்பாக்கி சூட்டிற்கு "முந்தைய காலகட்டம் மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டம்" இவற்றிற்கு இடையிலான பெரும் மாற்றம் என்று ஊகித்து அவர்கள் தொடர்ந்து கூறுகையில், “துரதிருஷ்டவசமாக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜனவரி 7 பிரான்சை குறிப்பதாக இருக்கும்,” என்றார்கள்.

அந்நாளில், 3,000க்கும் மேற்பட்ட பொலிஸ்காரர்கள் அந்த துப்பாக்கிதாரிகள் மறைந்துகொண்ட வடக்கு பாரீஸ் புறநகர் பகுதியில் மனிதவேட்டைக்காக ஒன்று திரட்டப்பட்டனர். இரயில் நிலையங்களிலும், பொதுமக்கள் ஒன்றுகூடும் கட்டிடங்களிலும் மற்றும் பாரீஸின் நினைவிடங்களிலும் மற்றும் பிரான்ஸ் எங்கிலும் கனரக ஆயுதமேந்திய பொலிஸ் நிலைநிறுத்தப்பட்டனர்.

புறநகர் பாதுகாப்புக்கான பிரான்சின் Direction Général de la Sécurité Extérieure (DGSE) இயக்குனர் அலென் சுவெட் Atlantico க்கு கூறுகையில், “இவர்கள் அடையாளம் காணக் கூடாது என்பதற்காக பனிச்சறுக்கு விளையாட்டு முகமூடிகளுடன் கருப்புநிற உடையணிந்து நிபுணத்துவத்துடன் செய்துள்ளனர். அவர்கள் நன்கு பயிற்சிபெற்ற குற்றவாளிகளின் பாணியில் செயல்பட்டிருக்கின்றனர்,” என்றார்.

இப்போது பிரான்சில் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்களுடன் IS போன்ற இஸ்லாமிய குழுக்கள் வேலை செய்து வருவதை இது குறிக்கிறதா என்று கேட்ட போது அவர் இவ்வாறு விடையிறுத்தார்: “தாக்குதல் நடத்தியவர்களுக்கு எந்தவொரு வெளிநாட்டு தொடர்புகளும் இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... நிபுணத்துவத்துடன் வன்முறையில் இறங்கும் இரண்டு விதத்தில் ஒன்றை சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கலாம்: அதாவது குற்றம் செய்பவர்களில் ஒருவிதத்தினர் ஏதோவொரு காரணத்திற்காக இம்மாதிரியான நடவடிக்கையை நடத்துவார்கள், அல்லது நிபுணத்துவத்துடன் வெளிநாட்டில் பயிற்சி பெற்று இந்த நோக்கத்திற்காக பிரான்சிற்குள் அனுப்பப்படுவார்கள். எவ்வாறிருந்த போதினும், இஸ்லாமிக் அரசு தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் இந்த நடவடிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்றால், அது மிக நேரடியாக பிரெஞ்சு அரசை பிரதிநிதித்துவப்படுத்த, மேலதிக ஒரு அடையாள இலக்காக அதை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம்,” என்றார்.

இந்த கட்டத்தில், அந்த தாக்குதலைக் குறித்தும் மற்றும் அதை நடத்தியவர்கள் குறித்தும் ஊடகங்களும் அல்லது பிரெஞ்சு அரசும் கூறும் எந்த கூற்றுகளையும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த தாக்குதல், சமூகரீதியில் அன்னியப்பட்ட மற்றும் ஆழமாக நோக்குநிலை பிறழ்ந்த பிரெஞ்சு-முஸ்லீம்களால் நடத்தப்பட்டு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது, அவர்கள் பிரான்சில் நிலவும் வருந்தத்தக்க நிலைமைகள், முஸ்லீம்-விரோத பாகுபாடு, அதிகாரிகளால் அவர்கள் கையாளப்படும் முறை, மத்திய கிழக்கில் ஆண்டாண்டுகளாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவ நடவடிக்கையின் இரத்தந்தோய்ந்த விளைவுகள் ஆகியவற்றால் வெறுத்து போயுள்ளனர். ஆனால் இந்த சம்பவம், உண்மையான குற்றவாளிகளுக்கே தெரியாமல் சில நலன்களுக்காக மற்றும் அமைப்புகளால் அவர்களது நடவடிக்கைகளுக்கு உதவி செய்யப்பட்டு, தூண்டிவிடப்பட்டதாக இருக்கவும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது என்பதையும் தவிர்க்க முடியாது.

அந்த விடயம் என்னவாக இருந்தாலும், அதன் அரசியல் உள்நோக்கமும், தாக்குதலின் விளைபலனும் தெளிவாக உள்ளன: அதாவது தேசிய, இன மற்றும் மதரீதியில் சமூகத்தைத் துருவமுனைப்படுத்துவது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவது மற்றும் போர், சமூக பிற்போக்குத்தன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கான முனைவைப் பலப்படுத்துவது என்பதாகும்.

இந்த பயங்கரமான தாக்குதலில் இருந்து எழும் பிரதான அபாயமே, அது எதற்காக பயன்படுத்தப்பட இருக்கிறதோ அந்த அரசியல் நோக்கம் தான். அந்த அர்த்தத்தில், சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டை செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் தொடக்கத்திலேயே ஊடகங்கள் ஒப்பிடுவது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையாக உள்ளது. அந்த துயரம் [செப்டம்பர் 11 தாக்குதல்] மத்திய கிழக்கு எங்கிலும், அனைத்திற்கும் மேலாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும், மக்கள் வெறுப்புக்குள்ளாகி இருந்த அந்த போர்களைக் குறித்து அவர்களைக் குழப்பவும், மற்றும் ஒரு பாரிய உள்நாட்டு உளவு எந்திரமாக அமெரிக்க உளவுத்துறை முகமைகளைக் கட்டமைக்கவும், அத்துடன் சேர்ந்து துணை இராணுவப்படைகள் கணக்கில்லா உலகளாவிய வலையமைப்பில் சித்திரவதை மற்றும் டிரோன் படுகொலைகளில் செயல்படுவதற்கும் சுரண்டிக் கொள்ளப்பட்டது.

ஈராக், சிரியா, மற்றும் மத்திய கிழக்கில் அதிகரிக்கப்படும் போர்களை நியாயப்படுத்துவதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொண்டும் தாக்குதலை நடத்துவதற்கும் சார்லி ஹெப்டோ படுகொலைகளை சுரண்டுவதற்கு முனையும் அரசின் எந்தவொரு முயற்சியையும் வர்க்க-நனவுள்ள தொழிலாளர்கள் எதிர்ப்பார்கள்.