சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

IYSSE at Humboldt University begins seminars on the return of German militarism

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் IYSSE ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு குறித்து கருத்தரங்குகளைத் தொடங்குகிறது

By our reporters
7 January 2015

Use this version to printSend feedback

திங்களன்று IYSSEஇன் தொடர்ச்சியான கருத்தரங்குகளில் முதலாவது ஒன்று பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் "ஜேர்மன் இராணுவவாதமும் வரலாற்று பொய்மைப்படுத்தலும்" என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. IYSSE ஜனவரி 20-21இல் நடைபெற உள்ள மாணவர் சங்க தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதுடன், அதன் பிரச்சாரத்தின் பாகமாக பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியான கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

http://www.wsws.org/asset/903f2125-91ea-4e6b-b69d-69f868d0197K/humboldt2.jpg?rendition=image480 
ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கூட்டம்

திங்கட்கிழமையானது கிறிஸ்துஸ் விடுமுறைக்குப் பின்னர் முதல் நாள் என்றபோதினும், சுமார் ஐம்பது மாணவர்களும் தொழிலாளர்களும் அந்த விரிவுரையில் கலந்து கொண்டதுடன், அதை பெரும் ஆர்வத்துடன் கவனித்தனர். உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மனிய தேசிய பொறுப்பாசிரியர் பீட்டர் சுவார்ட்ஸை, “போர் குற்ற விவாதமும் ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் தொடர்ச்சியும்" என்ற தலைப்பில் விரிவுரை வழங்க IYSSE அழைப்பு விடுத்திருந்தது.

கூட்டத்தை தொடங்கி வைத்த ஹம்போல்ட் பல்கலைக்கழக IYSSE தலைவர் ஸ்வென் வோர்ம் விவரிக்கையில், மாணவர் சங்க தேர்தல்களில் அவ்வமைப்பு ஏன் நான்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது என்பதைக் குறித்து விளக்கமளித்தார். கடந்த காலத்தில், இத்தகைய தேர்தல்களில் மிகவும் குறைவாகவே ஆர்வமிருந்தது, மாணவர்களில் 10 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே வாக்களித்தனர். இது முக்கியமாக, வேட்பாளர்கள் அலட்சியமான குழுக்களால் நிறுத்தப்பட்டதனால் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவுக்கு எதிராக போராடுவதற்காக மாணவர் சங்க தேர்தல்களில் நிற்கிறோம், அத்துடன் "போர் பிரச்சாரத்திற்கு பதிலாக, படிப்புதவித் தொகை" என்ற முழக்கத்தின் கீழ் எமது பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம். சில பேராசிரியர்கள் எவ்வாறு வரலாறையும் மற்றும் நாஜி சர்வாதிகாரத்தின் போர் குற்றங்களையும் திருத்தி எழுத முயற்சித்து வருகிறார்கள் என்பதையும் வோர்ம் விவரித்தார். “ஹிட்லர் ஒரு மனநோயாளியோ, மூர்க்கமானவரோ கிடையாது. அவருக்கு முன்னால் யூதர்கள் படுகொலையைக் குறித்து பேசுவதை அவர் விரும்பவில்லை,” என்று ஓராண்டுக்கு முன்னர் Der Spiegelக்குத் தெரிவித்திருந்த ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியை அவர் மேற்கோளிட்டுக் காட்டினார்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகம் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான ஒரு சித்தாந்த மையமாக மீண்டுமொரு முறை மாற்றப்படுவதைத் தடுக்க விரும்புகிறோம்,” என்று உர்ம் தெரிவித்தார்.

இந்த புள்ளியை விளங்கப்படுத்தி தொடங்கிய பீட்டர் சுவார்ட்ஸ், கடந்த காலத்தைக் குறித்த ஒரு புரிதலின் அடித்தளத்தில் மட்டுமே வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் மற்றும் போர் பிரச்சாரங்களை எதிர்க்க முடியும் என்று விவரித்தார். டேவிட் நோர்த்தின்ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்" நூல் இந்த இளவேனிற்காலத்தில் ஜேர்மன் மொழிபெயர்ப்பில் பிரசுரமாக உள்ளதை சுவார்ட்ஸ் சுட்டிக் காட்டினார். அந்நூலின் முன்னுரையிலிருந்து அவர் மேற்கோள்களை எடுத்துக்காட்டினார், அதில் நோர்த் எழுதுகிறார், “வரலாறு ஒரு போர்களமாகி உள்ளது. ... இருபத்தோராம் நூற்றாண்டின் முன்பினும் கூட அதிகமாகி வரும் மோதல்களும் நெருக்கடிகளும், இருபதாம் நூற்றாண்டின் வரலாறு மீதான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கின்றன. தற்கால அரசியல் போராட்டங்கள் வரலாற்று பிரச்சினைகளைத் தூண்டுகிற நிலையில், அத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வது மேலும் மேலும் அரசியல் பரிசீலனைகளால் வெளிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றன. நிகழ்காலத்திய அரசியல் பிற்போக்குத்தன நலனுக்காக கடந்தகாலம் பொய்மைப்படுத்தப்படுகின்றது. ... வரலாற்று ஆராய்ச்சி முன்பில்லாத வகையில் ஆளும் வர்க்கத்தின் நிதியியல் மற்றும் அரசியல் நலன்களுக்கு அடிபணிய செய்யப்பட்டுள்ளது."

பின்னர் கடந்த நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் வெடித்த கூர்மையான முரண்பாடுகள் மீதான வரலாற்று விவாதங்களை சுவார்ட்ஸ் விவரித்தார். முதலாவது "பிஷ்ஷர் சர்ச்சை" என்றழைக்கப்படுவதாகும். 1961இல் "முதலாம் உலக போரில் ஜேர்மனியின் நோக்கங்கள்" (“Griff nach der Weltmacht: die Kriegszielpolitik des Kaiserlichen Deutschland, 1914–18”) என்ற அவரது நூலில், வரலாற்றாளர் பிரிட்ஸ் பிஷ்ஷர் முதலாம் உலக போரில் ஜேர்மன் பேரரசின் புவிசார் அரசியல் அபிலாஷைகளுக்கும் இரண்டாம் உலக போரில் ஹிட்லரின் போர் நோக்கங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டினார்.

இரண்டாவது விவாதம் என்னவென்றால்வரலாற்றாளர்களின் விவாதம் (Historikerstreit) என்பது. இது ஏர்ன்ஸ்ட் நோல்ட்டவின் ஒரு கட்டுரையால் 1986இல் தூண்டிவிடப்பட்டது, அவர் அக்டோபர் புரட்சி, 1918-1921இன் ரஷ்ய உள்நாட்டு போர் மற்றும் சோவியத் போல்ஷிவிசத்தின் காட்டுமிராண்டித்தனம் என்று கூறப்பட்டவை இவற்றிற்கு ஒரு புரிந்து கொள்ளத்தக்க விடையிறுப்பாக நாஜி குற்றங்களைக் காண வேண்டுமென வாதிட்டார்.

நாஜிக்களது நடவடிக்கைகளை "ரஷ்ய புரட்சியின் பேரழிவுகரமான நிகழ்ச்சிபோக்கின் அச்சத்தால் எழுந்த எதிர்வினையாக" நோல்ட்ட வர்ணித்ததையும், "மூன்றாம் பேரரசை அசுரத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென" நோல்ட்ட வலியுறுத்தியதையும் சுவார்ட்ஸ் எடுத்துக்காட்டினார்.

அவ்விரு உலக போர்களுக்கும் பிரதான பொறுப்பில் ஜேர்மனியின் பங்கு இல்லை அல்லது அவற்றிற்கு அது வழிகோலவில்லையென வாதிட்ட வரலாற்றாளர்களே அவ்விரு சர்ச்சைகளிலும் மேலோங்கி இருந்தனர். பிரிட்ஸ் பிஷ்ஷர் வரலாற்றாளர்களின் ஒரு இளம் தலைமுறையிடையே செல்வாக்கு பெற்றிருந்தார், பின்னர் அவர்கள் அப்போது கணிசமான அளவிற்கு முதலாம் உலக போரையும் அதன் காரணங்களையும் புரிந்து கொள்வதற்கு பங்களிப்பு செய்திருந்தனர். இரண்டாவதாக, ஏர்ன்ஸ்ட் நோல்ட்டவின் எதிர்ப்பாளர்கள், நாஜி குற்றங்களை நியாயப்படுத்துவதையோ, அது தவிர்க்கவியலாது இருந்தது என்பதையோ, அதை வேறு எதனுடனும் சார்புபடுத்துவதையோ நிராகரித்தனர்.

இவை எல்லாம் இப்போது மாறிவிட்டன,” சுவார்ட்ஸ் கூறினார். வரலாறு மீதான பார்வை ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் புதிய நோக்கங்களுக்கு பொருந்திய வழியில் கொண்டு வரப்பட்டு வருகின்றன என்றவர் தெரிவித்தார்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் தத்துவவியல் போராசிரியர் ஹெர்பிரட் முன்ங்லெர், பிஷ்ஷரைத் தாக்கும் பணியை ஏற்றுள்ளார் என்று கூறிய சுவார்ட்ஸ், அதேவேளையில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறை தலைவராக உள்ள ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி நோல்ட்டவிற்கு மறுவாழ்வளிக்க ஒருமுனைப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். பெப்ரவரியில் பார்பெரோவ்ஸ்கி "நோல்ட்ட தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். வரலாற்றுரீதியில் அவர் சரியாகவே இருந்தார்,” என்று Der Spiegelக்கு தெரிவித்தமை ஏதோ தற்செயலாக பொருந்தி வந்ததல்ல.

பின்னர் சுவார்ட்ஸ், பிஷ்ஷர் சர்ச்சை மீது கவனமெடுத்து, ஹெர்பிரட் முன்ங்லெரின் வாதங்களை ஒவ்வொரு புள்ளியாக மறுத்தளித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலிய வரலாற்றாளர் கிறிஸ்டோபர் கிளார்க் வலியுறுத்திய, ஜேர்மனி முதலாம் உலக போரில் "சறுக்கி விழுந்தது" அல்லது "தூக்க-நடையில் அதற்குள் நுழைந்தது" என்ற வாதம் பல உண்மைகளால் மற்றும் பிஷ்ஷர் சேகரித்த ஆவணங்களால் மறுத்தளிக்கப்பட்டு உள்ளன.

சுவார்ட்ஸ் எடுத்துக்காட்டினார்: இவற்றிற்கு மத்தியில் 1905இல் இருந்து கெய்சர் வில்ஹெல்மின் வழிகாட்டு நெறி, இராணுவவாதம் மற்றும் போர் தயாரிப்புகள் ஒரு உள்நாட்டு செயல்பாட்டைக் கொண்டிருப்பதுடன், அதிகரித்துவரும் வர்க்க பதட்டங்களை திசைதிருப்பவும் மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்கவும் சேவை செய்கின்றன என்பதையும் தெளிவுபடுத்துகிறது. ரஷ்ய புரட்சி ஜேர்மனிக்கு பரவி விடுமோ என்று கெய்சர் வில்ஹெல்ம் அஞ்சினார், அவர் 1905இல் "முதலில் சோசலிஸ்டுகளை சுட்டுத் தள்ளுங்கள், அவர்களது தலையைத் துண்டியுங்கள், தீங்கற்றவர்களாக செய்யுங்கள், அவசியமானால் ஒரு இரத்தக்களரியின் ஊடாக செய்யுங்கள், பின்னர் அன்னிய நாட்டில் போரை நடத்துங்கள்,” என்று அவரது சான்சிலர் புலோவிற்கு (Bülow) செய்தி அனுப்பினார்.

சுவார்ட்ஸ், பிஷ்ஷரின் நூலில் எடுத்துக்காட்டப்பட்டு இருந்த மிகவும் விமர்சனபூர்வ ஆதாரங்களைக் குறிப்பிட்டார். 1912இல் இராணுவ வரலாற்றாளர் பிரெட்ரிக் வொன் பெர்ன்ஹார்டி "ஜேர்மனியும் அடுத்த போரும்" என்ற தலைப்பில் நல்ல விற்பனையான ஒரு நூலை பிரசுரித்தார். பிஷ்ஷரைப் பொறுத்தவரையில், அந்நூலில் இருந்த பரிசீலனைகளும் முறையீடுகளும், “பெரிதும் துல்லியமாக, உத்தியோகபூர்வ ஜேர்மனியின் உள்நோக்கங்களை" மறுபதிப்பு செய்திருந்தது.

ஓர் உலக சக்தியாக ஜேர்மனி வெடிப்புடன் மாறுவதைப் பாதுகாப்பதற்காக, பெர்ன்ஹார்டி முன்று நோக்கங்களை பட்டியலிடுகிறார்: பிரான்ஸை ஓரங்கட்டுவது, ஜேர்மன் தலைமையின் கீழ் அரசுகளின் மத்திய ஜேர்மன் ஒன்றியம் என்ற ஒன்றை ஸ்தாபிப்பது, மற்றும் புதிய காலனி நாடுகளை வென்றெடுப்பதன் மூலமாக ஓர் உலக சக்தியாக ஜேர்மனியை விரிவாக்குவது.

இது போர் வெடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னராகும்,” என்று கூறிய சுவார்ட்ஸ், தொடர்ந்து தெரிவித்தார், “தூக்கத்தில் நடந்து வந்தவர்களாக கூறப்பட்டவர்கள் தெளிவாக அவர்களது மனதில் உறுதியுடன் ஜேர்மனியின் போர் நோக்கங்களை கொண்டிருந்தார்கள்.”

முடிவுரையில் சுவார்ட்ஸ் தெரிவித்தார், “பிஷ்ஷர் மீதான முன்ங்லெரது தாக்குதல்கள், இன்றைய வெளியுறவுக் கொள்கையின் அடியிலிருக்கும் வரலாற்று முன்மாதிரிகளைக் குறித்து ஆய்வு செய்வதையும், புரிந்து கொள்வதையும் தடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. அவை புத்திஜீவித சூழலை நஞ்சூட்டவும் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான எதிர்ப்பை திணறடிக்கவும் சேவை செய்கின்றன.”

துல்லியமாக இந்த அபிவிருத்தியைத் தான் IYSSE எதிர்க்கிறது என்றவர் தெரிவித்தார்.

அந்த விரிவுரை பார்வையாளர்களிடையே கணிசமாக ஆர்வத்தை ஈர்த்திருந்ததுடன், பல கேள்விகளையும் முன் கொண்டு வந்தது. இது, ஏன் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவது அவசியமாக உள்ளது என்பது குறித்த ஒரு விவாதத்திற்கும் இட்டுச் சென்றது.

இந்த தொடர் கருத்தரங்கம் அடுத்த திங்கட்கிழமை "ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நாஜி குற்றங்களின் இடைத்தொடர்பு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையுடன் தொடர உள்ளது. ஒருசமயம் திடமான எதிர்ப்பைத் தூண்டிய கண்ணோட்டங்கள் இன்று ஏன் கல்வித்துறை உலகில் பரவலாக விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன? என்ற கேள்விக்கு அந்த கருத்துரை பதிலளிக்கும்.