சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

German reaction to Paris shootings: State build-up and anti-Muslim agitation

பாரீஸ் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜேர்மன் எதிர்வினை: அரசினை பலப்படுத்தலும், முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டலும்

By Ulrich Rippert
12 January 2015

Use this version to printSend feedback

பாரீஸின் நையாண்டி பத்திரிகை சார்லி ஹெப்டோ பணியாளர்களது கொடூரமான படுகொலை ஜேர்மனியில் ஆழ்ந்த துயரமும், அதிர்ச்சியும் வெளிப்படுவதற்கு இட்டுச் சென்றது. இது குறித்த செய்திகள் அறிய வந்த உடனே, சில நூறு மக்கள் பேர்லினில் உள்ள பிராண்டன்பேர்க் நுழைவாயிலின் பிரெஞ்சு தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடினர். அவர்கள் அனுதாபம் மற்றும் துயரத்தைக் காட்டுவதற்கு அறிகுறியாக மலர்களை வைத்து, மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.   

அரசியல் ஸ்தாபகமும் ஊடகமும், அதன் பங்கிற்கு, உடனடியாக முற்றிலும் பிற்போக்குத்தனமான அவற்றின் அரசியல் நோக்கங்களுக்காக இந்த பரந்த சீற்றத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டன. இது இப்போது இரண்டு முறையீடுகளின் மீது குவிந்துள்ளது: முதலாவது, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கும் அழைப்புவிடுப்பது மற்றும், இரண்டாவதாக, உளவுத்துறை முகமைகள், அதிகரிக்கப்பட்ட பொலிஸ் பிரசன்னம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீள்ஆயுதமேந்துதல் ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலமாக பாதுகாப்பு எந்திரத்தை பலப்படுத்துவதற்கான அவசியத்திற்கு அழைப்புவிடுப்பது ஆகியவை.  

அந்த படுகொலைக்குப் பின்னர் உடனடியாக ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு நாட்டு மக்களுக்கு அளித்த உரையில், "அதன் எதிரிகளுக்கு எதிராக" பிரான்ஸ் "ஒன்றுபட்டுள்ளது" என்று உறுதியாக வலியுறுத்தியதைப் போலவே, ஜேர்மனியிலும், ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கில் இருந்து இடது கட்சியின் நாடாளுமன்ற பிரிவு தலைவர் கிரிகோர் கீசி வரையில் அரசியல்வாதிகள் அனைத்து ஜனநாயக சக்திகளும் இப்போது ஒன்றாக அணிதிரள வேண்டுமென அறிவித்தனர்.

அந்த பயங்கரவாத தாக்குதல் "சுதந்திரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும்" என்று தெரிவித்த கௌவ்க், தொடர்ந்து கூறுகையில், “நாம் காழ்ப்புணர்ச்சியால் பிரிந்துவிடக்கூடாது,” என்றார். இந்த "சுதந்திர உலகம்" அனைத்து அரசியல் கட்சிகளாலும் இப்போது பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். “நாம் பலவீனர்களோ அல்லது நிராதரவானவர்களோ கிடையாது,” என்று தெரிவித்த கௌவ்க், “வெறித்தனத்தையும் வன்முறையையும் எதிர்த்து போராட நம்மிடம் சட்டங்களும், அமைப்புகளும் உள்ளன,” என்று எச்சரித்தார்.

வியாழனன்று சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைவரும் துணை-சான்சிலருமான சிக்மார் காப்ரியேல் அனைத்து நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) தலைவருக்கும் ஒரு பிரத்யேக கடிதம் எழுதினார், அதில் அவர் "அனைத்து சமூக சக்திகளின் ஒரு கூட்டணிக்கு" அழைப்புவிடுத்தார். அவர் அனைத்து கட்சிகள், அனைத்து மத சமூகங்கள், தொழிற்சங்கங்கள், வணிக அமைப்புகள் "மற்றும் ஏனைய உள்நாட்டு சமூக அமைப்புகள்" அனைத்தினது ஒரு கூட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். Der Spiegel நாளிதழால் எடுத்துக்காட்டப்பட்ட அந்த கடிதத்தில் அவர் தொடர்ந்து எழுதி இருந்தார், “சமூகத்திற்குள் ஒரு பிளவை ஏற்படுத்தும் முனைவாக வஞ்சகமான பயங்கரவாத சதித்திட்டம் அனுமதிக்கப்படக் கூடாது.”     

உண்மையில் சமூக பிளவுகள் பாரீஸில் அந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீண்டகாலத்திற்கு முன்னரே தொடங்கி இருந்தன. பல வாரங்களாக ஜேர்மன் ஊடகங்கள் வெளிநாட்டவர் விரோத போக்கு மற்றும் இஸ்லாமிச-விரோதத்தின் இனவாத நச்சை ஊற்றி வந்துள்ளன. முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள் பெஹிடாவின் (Pegida) வலதுசாரி பேரணிகளை ஆதரித்து வருகின்றனர், அது தன்னைத்தானே "மேற்கினை இஸ்லாமியமயமாக்குவதற்கு எதிரான தேசபற்று மிக்க ஐரோப்பியர்கள்" என்று வர்ணித்துக் கொள்வதுடன், வெளிநாட்டவர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டிவரும் ஒரு இயக்கமாகும்.
சமூகத்தின் பாசிச கழிவுகளை ஒன்றுதிரட்டுவதென்பது அதிகளவில் இராணுவத்தை ஆயத்தப்படுத்துவதுடன் மற்றும் போர் தயாரிப்புகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோர் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜேர்மன் இராணுவ கட்டுப்பாடுகளின் காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதென அறிவித்ததிலிருந்து, அங்கே இராணுவ சாதனங்களை மேம்படுத்துவது மற்றும் இராணுவத்திற்கு கூடுதல் ஆதரவு ஆகியவற்றிற்கான முறையீடுகள் இல்லாமல் எந்தவொரு நாளும் அரிதாகவே கடந்து செல்கிறது

இராணுவவாதத்தின் இந்த மீள்வரவும் ஓர் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையும் சமூகத்தை பாழாக்குதல், பாரிய வறுமை மற்றும் பெருமளவிலான மக்களின் வாழ்க்கை தரங்களை வேகமாக அழிப்பதுடன் கை கோர்த்து செல்கின்றன. இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்திய அரசு நாடாளுமன்ற தேர்தல்களில், தகுதியுடைய அனைத்து வாக்காளர்களில் பாதிக்கும் சற்று குறைவானவர்களே பங்கெடுத்தனர், அவ்வாறு பங்கெடுத்த அந்த வெகு குறைவானர்களிலும் பெரும்பான்மையினர் அரசாங்க கட்சிகளுக்கு எதிராக வாக்களித்தனர்.    

அந்த இரத்தந்தோய்ந்த வன்முறை நடவடிக்கையை முன்னுக்குக் கொண்டு வந்த அதே அரசாங்க கொள்கையை ஆதரிப்பதற்காக, பாரீஸின் அந்த கொடூரமான தாக்குதல் இப்போது ஒற்றுமை என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஊடக செய்திகளின்படி, பாரீஸ் தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது. அல் கொய்தாவின் வளர்ச்சியும் செல்வாக்கும் மத்திய கிழக்கில் அமெரிக்க மற்றும் நேட்டோ போர் கொள்கையின் ஒரு நேரடி விளைபொருளாகும். ஏன் அல் கொய்தா கொண்டிருக்கும் மிக நவீன ஆயுதங்களே கூட பெரும்பாலும் அமெரிக்கா அல்லது நேட்டோவின் கிடங்குகளிலிருந்து வருகின்றன.

அக்டோபரின் இறுதியில் பிரிட்டனின் Daily Telegraph வெளியிட்ட செய்தியில், சிரியாவில் "மிதவாத பிரிவுகள்" என்று அழைக்கப்பட்டவைகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பரந்துபட்ட ஆயுதங்கள் அப்போது நுஸ்ரா முன்னணிக்கு கைமாறி இருந்ததாக அது குறிப்பிட்டது. இவற்றில் நவீன கைத்துப்பாக்கிகள் மட்டுமல்ல, மாறாக கவசவாகனங்களைத் துளைத்து செல்லும் குண்டுகள் மற்றும் பல்குழல் ராக்கெட்டுகள் போன்ற கனரக இராணுவ தளவாடங்களும் உள்ளடங்கி இருந்தன. “அவர்களிடமிருந்து அல் கொய்தாவிற்கு ஆயுத வினியோகங்கள் கைமாறியது அமெரிக்காவை பொறுத்த வரையில், ஒரு பெருங்கவலையாக இருந்தது" என்றும் Daily Telegraph கருத்துரைத்தது.

பாரீஸ் துப்பாக்கிச்சூட்டை அடுத்து ஒற்றுமைக்கு அழைப்புவிடுப்பதென்பது இந்த கொள்கையை தொடர்வதும், தீவிரப்படுத்துவதும் ஆகும்.

அந்த தாக்குதல்களை தொடர்ந்து ஜேர்மனி அதன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை அதிகரித்து வருவதாக உள்துறை மந்திரி தோமஸ் டி மெய்ஸியர் அறிவித்துள்ளார். “நாங்கள் [ஜேர்மன்] மாநிலங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளோம், நேரிடக்கூடிய அதுபோன்ற சம்பவங்களுக்கு நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்திருப்பதுடன், அதை நாங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம்,” என்று மேற்கொண்டு விபரங்களைத் தெரிவிக்காமல் வெள்ளியன்று ஹாம்பேர்கில் டி மெய்ஸியர் தெரிவித்தார்.
அவர் சந்தேகத்திற்குரிய மூன்று பயங்கரவாதிகளை வெள்ளியன்று கொன்ற பிரெஞ்சு பொலிஸின் வேலைகளின் பற்றி விரைவாக கருத்துதெரிவிப்பது குறித்து எதிர்த்து பேசினார். “ஜனநாயக கலந்தாலோசனைக்காக" எலிசே மாளிகைக்கு தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லு பென்னையும் பிரெஞ்சு அரசாங்கம் அனுமதித்திருந்தது. லு பென் அந்த தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக ஐரோப்பாவில் மரண தண்டனைகளை மீண்டும் கொண்டு வர அழைப்புவிடுத்துள்ளார்
.     

ஞாயிறன்று பாரீஸில் ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிமார் கூட்டத்திற்கு முன்னதாக டி மெய்ஸியர், “ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டுமானால் என்ன செய்வது என்பதை பரஸ்பரம் விவாதிப்பதே" அவரது திட்டமென அறிவித்தார். வலதுசாரி பெஹிடா இயக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் முதல் உயர்மட்ட ஜேர்மன் அரசியல்வாதிகளில் ஒருவரான இந்த உள்துறை மந்திரி, இந்த சூழ்நிலையை ஜேர்மன் அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கையை மேற்கொண்டு இறுக்குவதற்கும், ஒரு பொலிஸ் அரசைக் கட்டியமைப்பதை நோக்கி நகர்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள நோக்கம் கொண்டுள்ளார்

பாரியளவில் தரவு சேகரிப்பை பாதுகாப்பு சேவைகள் விரிவுபடுத்துவதற்கு அரசாங்க கூட்டணியின் பங்காளி கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தால் உயர்த்தப்பட்ட கோரிக்கைக்கும் டி  மெய்ஸியர் அவரது ஆதரவை வலியுறுத்தினார். இணையத்தில் குற்றகர வலையமைப்புகளை கண்டறிய இது மட்டுமே ஒரே வழியாகும் என்று அவர் தெரிவித்தார். ஜேர்மனியில் இஸ்லாமிக் அரசை (Islamic State) தடை செய்யவும் மற்றும் பலமாக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அந்த அரசாங்கம் ஏற்கனவே திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் பெருமையடித்தார்.   

செல்வாக்குமிக்க ஊடக நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஏற்கனவே இன்னும் மேலதிகமாக கடுமையான நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்து வருகின்றனர். “உபதேசங்களுக்கு பதிலாக கட்டுப்பாடுகள்" என்ற ஒரு கருத்துரை தலைப்பில் Frankfurter Allgemeine Zeitung இவ்வாறு குறை கூறுகிறது, “'இஸ்லாமிக் அரசு' மற்றும் மேற்கில் உள்ள அதன் அனுதாபிகளை பொறுத்த வரையில், அவர்கள் தாக்கும் குடிமக்கள் உள்ள நாடுகள், சீறியெழும் ஜனநாயகங்களாக தெரியவில்லை போலும், ஜிஹாதிஸ்டுகள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம் என்பதைப் போல தோன்றுகின்றன போலும்,” என்றது. Focus இதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் CDUஇன் முன்னாள் பொது செயலர் ஹாய்னர் கைய்ஸ்லெர், இஸ்லாமிஸ்டுகளை வெளியேற்றவும் மற்றும் இஸ்லாமிய அங்கி அணிவதற்கு தடைவிதிக்கவும் அழைப்புவிடுக்கிறார். அவர் தெரிவித்தார், ஜேர்மனியில் "இஸ்லாமிற்கு சிறப்பு அந்தஸ்துகள்" இருக்கக்கூடாது.         

இஸ்லாமிஸ்டுகள் "ஜனநாயகத்திற்கு முதிர்ச்சி அடையவில்லை, ஆனால் அதற்கு பதிலாக வன்முறை மற்றும் படுகொலைகளின் மீதே நம்பிக்கை வைத்துள்ளனர்" என்பதற்கு சார்லி ஹெப்டோ மீதான தாகுத்தல் சான்றாக உள்ளதென்று ஜேர்மனியில் உள்ள பெஹிடாவின் செய்தி தொடர்பாளர்கள் வர்ணித்துள்ளனர். அந்த வலதுசாரி மற்றும் நவ-நாஜி இயக்கம் சார்லி ஹெப்டோவிற்கும் மற்றும் "பாரீஸின் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கும்" திங்களன்று அனுதாபமாக பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மிகவும் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளில் ஒன்று என்னவென்றால் பிற்போக்குத்தனமான "ஒற்றுமை மற்றும் ஐக்கிய கொள்கைக்குள்" இடது கட்சி ஒருங்கிணைந்திருப்பதாகும். “நானே சார்லி சுதந்திரத்திற்கான கடின போராட்டம்" என்ற தலைப்பில் இடது கட்சியால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, “'சார்லியாக' இருப்பதற்கான சவால் பிரமாண்டமானதாகும்" என்று குறிப்பிடுவதுடன், “நமது சமூகத்தின் காயங்களுக்குள் மீண்டும் மீண்டும் நமது விரல்களை விட்டுக் குடைய நமக்கு தைரியமும், மன உறுதியும் இருக்கிறதா?” என்று அது கேள்வி எழுப்புகிறது

அடிப்படையில் அந்த அறிக்கை ஜேர்மன் அரசாங்கம் மற்றும்  பெஹிடாவை நோக்கி விடுக்கப்பட்ட ஒரு அழைப்பாகும். இடது கட்சி, சார்லி ஹெப்டோவின் முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்களை "சிந்தனை சுதந்திரத்திற்கான" போராட்டமாக பாதுகாக்கிறது என்பதுடன், "குற்றவாளிகளை பின்தொடர்வதில் விட்டுகொடுப்பு இருக்கக் கூடாது என்றும், நீதிமன்றங்களில் ஒரு பொருத்தமான தீர்ப்பிற்கும் மற்றும் தண்டனைகளுக்கும்" அழைப்புவிடுக்கிறது.