சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Who is responsible for the French terrorist attacks?

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு?

Peter Symonds
13 January 2015

Use this version to printSend feedback

சென்ற வாரத்தில் பாரிஸில் சார்லி ஹெப்டோ அலுவகங்களின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரான்சினால் மட்டுமல்லாது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளாலும், ஒரு முற்றிலும் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்காய் சிடுமூஞ்சித்தனமாக சுரண்டப்படுகின்றது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுடன்  (பிரெஞ்சு போலிஸின் மற்றும் இப்போது துருப்புகளின் பெருந்திரள் குவிப்பால் ஏற்கனவே இது வெளிப்படையாகியிருக்கிறது வெளிநாடுகளில்  (முதல் முன்னுரிமையாக மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் போரை அதிகரிப்பதற்கான தயாரிப்புகளும் கைகோர்த்துச் செல்கின்றன.

துப்பாக்கிச் சூடுகள் குறித்த பொதுமக்களது அதிர்ச்சி மற்றும் அச்சத்தை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கும், எந்த விமர்சனரீதியான கேள்விகளையும் ஒடுக்குவதற்குமான இந்த ஒத்திசைந்த ஏற்பாட்டு பிரச்சாரத்தில் பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அடிமைத்தனமிக்க ஸ்தாபக ஊடகங்கள் அத்தியாவசியமான உடந்தையாளர்களாய் இருக்கின்றன. முஸ்லீம்-விரோத மனோநிலையை தூண்டிவிடுவதற்கான குரூரமான முயற்சிகள் தொடங்கி பயங்கரச் செயல் புரிந்தோரை மேற்கத்திய சுதந்திரங்களின் எதிரிகளாக சித்தரிப்பதற்கான சிடுமூஞ்சித்தனமான முயற்சிகள் வரையிலும் (காணவும்: சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் கருத்து சுதந்திரம் என்னும் பாசாங்குத்தனம்), இந்த வெளிப்பாடுகள், அனைத்துக்கும் மேல், இந்த துப்பாக்கிச் சூடுகளுக்கான பிரதான அரசியல் பொறுப்பு யாருக்குரியது என்பதான எந்த ஆராய்ச்சியும் நடந்து விடாமல் தடுக்கின்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன.

முக்கிய கயவர்கள் பலரையும் ஞாயிறன்று பிரான்சில் நடந்த உத்தியோகபூர்வ பேரணிக்குத் தலைமை கொடுத்த உலகத் தலைவர்கள் இடையேதான் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் பங்குபெற்றிருந்த அமெரிக்க தலைமையிலான பயங்கரவாதத்தின் மீதான போரும் பெரும்பாலும் முஸ்லீம் நாடுகளிலான அட்டூழியங்களும் தான், மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும் மற்றும் ஆசியாவிலும் இளைஞர்களது ஒரு தலைமுறையை அந்நியப்படுத்தி ஆவேசத்துக்குள்ளாகியிருந்தது.

பிரான்ஸ்க்கு உள்ளேயே கூட, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோரது கொள்கைகள் புலம்பெயர் சமூகங்களில் அதீத மட்டங்களுக்கு வேலைவாய்ப்பின்மையையும் ஏழ்மையையும் உருவாக்கி விட்டிருக்கிறது. இதனுடன் பர்கா மற்றும் முஸ்லீம் முக்காடுகள் மீதான தடை உள்ளிட்ட இஸ்லாமிய-அச்ச நடவடிக்கைகளும் சேர்ந்து வலது-சாரி இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆட்சேர்க்க வளமான ஒரு களத்தை உருவாக்கி விட்டிருக்கின்றன.

இருப்பினும் கூட, சென்ற வாரத் தாக்குதல்களுக்கு பிரான்சின் அரசு எந்திரம் குறைகூறத்தக்கது என்பதான ஒரு மிக உடனடியான உணர்வு நிலவவே செய்கிறது. சார்லி ஹெப்டோ மற்றும் ஒரு கோஷர் மளிகைக் கடை மீதான தாக்குதலை நடத்திய சதிகாரர்கள், அவர்களுக்கு விரித்திருந்த வலையில் இருந்து எப்படியோ தப்பி விட்டார்கள் என்று போலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள் அளிக்கும் விளக்கங்கள் ஒருவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

சார்லி ஹெப்டோ அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்திய செரிஃப் மற்றும் சாய்த் கௌச்சி சகோதரர்கள் இருவருமே பிரெஞ்சு அதிகாரிகளுக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாய் அறியப்பட்டிருந்தவர்களே ஆவர். அவர்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனாலும் கூட பின்தொடரப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர்.

இருவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பாக அநேகமாக பின்தொடரப்பட்டிருந்தார்கள் என்று சென்ற வாரத்தில் ஒப்புக் கொண்ட பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பேர்னார்ட் கசெனேவ், ஆனாலும் அவர்கள் ஒரு தாக்குதல் நடத்தவிருந்ததற்கான எந்த அறிகுறிகளும் இருந்திருக்கவில்லை என்பதாகக் கூறிக் கொண்டார். செரிஃப் 2005 இல் கைது செய்யப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவில் சேர்வதற்காக அவர் ஈராக்கிற்கு பயணம் செல்ல சதித்திட்டம் தீட்டிய குற்றம் உறுதி செய்யப்பட்டது. சாய்த் 2011 இல் ஏமன் பயணம் மேற்கொண்டு அரேபியத் தீபகற்பத்தில் அல்கெய்தாவிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதாக பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்தான தகவல்கள் கூறுகின்றன.

கோஷர் மளிகைக்கடையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அஹமெட் குலிபாலி, ஆயுதங்களைக் கொண்டு வழிப்பறி செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தார் என்பதுடன் பாரிஸில் தீவிர இஸ்லாமிய வட்டங்களில் சேர்ந்து விட்டிருந்தவராகவும் அறியப்பட்டிருந்தார். 2009 இல், சப்வே குண்டுவெடிப்புக் குற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்த ஸ்மெயின் எய்த் அலி பெல்காசெம்மை - இவர் அல்ஜீரிய ஆயுத இஸ்லாமியக் குழுவின் ஒரு உறுப்பினர் - தப்புவிக்க சதிசெய்ததாய் குற்றம்சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் செரிஃப் கௌச்சியும் கூட விசாரிக்கப்பட்டார், ஆனாலும் கூண்டிலேற்றப்படவில்லை. 2014 மார்ச் மாதத்தில் தான் குலிபாலி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.   

பயங்கரவாதத்தின் மீதான போரில் வழக்கமாய் காணக்கூடிய ஒரு நிகழ்வுவரிசையே சென்ற வார பாரிஸ் துப்பாக்கிசூடுகளது விடயத்திலும் தொடர்கிறது. 9/11 தாக்குதல்கள், போஸ்டன் நெடுந்தூர ஓட்ட குண்டுவெடிப்புகள் தொடங்கி இலண்டன் சுரங்கப்பாதை இரயில் மற்றும் மாட்ரிட் இரயில் நிலைய குண்டுவெடிப்புகள், சென்ற மாதத்தில் சிட்னியில் நடந்த காப்பி சிற்றுண்டி விடுதி முற்றுகை வரையிலும் முக்கிய ஏகாதிபத்திய மையங்களில் நடந்திருக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட அல்லது அவற்றுடன் தொடர்புடைய ஏறக்குறைய எல்லோருமே அந்தந்த நாடுகளது பாதுகாப்பு முகமைகளுடன் விளக்கப்படாத மற்றும் சந்தேகத்துக்குரிய உறவுகளை கொண்டிருந்தவர்களாய் இருந்திருக்கின்றனர்.

"சார்லி ஹெப்டோ படுகொலைகளை சுற்றிய முக்கிய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் போகின்றன என்ற தலைப்பிலான யூரோநியூஸ் கட்டுரை ஒன்று பிரெஞ்சு பாதுகாப்பு முகமைகள் சதிகாரர்களை நெருக்கமாய் கண்காணித்து வந்ததைத் தவறவிட்டது எப்படி என்று வினவுகிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்கலாம் என்றால் என்று அதுவே சொல்கிறது, கடந்த காலத்தில் பலமுறை கண்டிருப்பதைப் போல, பிரெஞ்சுக்காரர்கள் பயங்கரவாதிகளை அவர்கள் முயற்சி செய்வதன் பக்கம் திரும்பச் செய்வதற்கு விரும்புகிறார்கள். கௌச்சி சகோதரர்களும் கூட இத்தகையதொரு அணுகுமுறையை பெற்ற நபர்களாக இருந்திருக்கலாம், ஆனாலும் கூட பாரிஸில் எவரொருவரும் இதனை ஒருபோதும் ஒப்புக் கொள்ளத் தயாராய் இருப்பதாகத் தெரியவில்லை, இத்தனைக்கும் இது ஒற்றுவேலையை எதிர்கொள்வதன் ஒரு ஏற்புடைய வடிவமாகவே இருக்கின்றபோதிலும். இப்போதில்லை.

அரசு எந்திரத்திலான கூறுகளது செயலூக்கமான பங்கேற்பில்லை என்றாலும் கூட, அவை ஓசையெழுப்பாமல் உடந்தையாகவேனும் இல்லாமல் இந்த மூன்று பேர் மட்டும் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எல்லாம் கொண்டான ஒரு மிகப்பெரும் சதித்திட்டத்தை தீட்டி நடத்தியிருக்க முடியும் என்பது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை. குலிபாலியின் நண்பியான ஹயாத் பூமேடியன் - இவரும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தேடப்படுபவர் - தப்பித்தது இன்னும் விசித்திரமாய் இருக்கிறது. விவரங்கள் தெளிவின்றி இருக்கின்ற அதேநேரத்தில், அவர் பிரான்ஸில் இருந்து ஸ்பெயினுக்குத் தப்பி ஓடி, அங்கேயிருந்து துருக்கிக்கு விமானத்தைப் பிடித்து, பின் அங்கிருந்து எல்லை கடந்து சிரியாவுக்குள் சென்றுசேரும் வரைக்கும் கண்டுபிடிக்கப்படாமல் தப்ப முடிந்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் சேர்ந்து வேலை செய்வதென்பது ஒரு நெடிய வரலாறைக் கொண்டதாகும். இதில் மிகப் பயங்கரமானதென்றால் 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக ஒசாமா பின் லாடன் மற்றும் அல்கெய்தாவின் முன்னோடிகள் உள்ளிட்ட ஜிகாதிஸ்டுகளுக்கு நிதியும், ஆயுதங்களும் மற்றும் பயிற்சியும் அளித்த சிஐஏ இன் மிகப்பெரும் நடவடிக்கையைக் குறிப்பிடலாம். நன்கறியப்பட்ட அல்கெய்தா ஆட்கள் நாட்டிற்குள் நுழைந்து, பயிற்சியெடுத்து 9/11 தாக்குதலை நடத்தி முடிக்க முடிந்ததான சூழ்நிலைமைகள் இன்றைய நாள் வரையிலும் முழு விளக்கமில்லாமலேயே தான் இருந்து கொண்டிருக்கின்றன.

வட ஆபிரிக்காவிலும் மற்றும் மத்திய கிழக்கிலுமான தனது காலனியாட்சி அபிலாஷைகளை பின்தொடரும்விதமாக, பிரெஞ்சு ஏகாதிபத்தியமானது 2011 முதலாக லிபியாவிலும் பின் சிரியாவிலும் அமெரிக்காவின் தலைமையிலான ஆட்சிகளை-மாற்றுகின்ற நடவடிக்கைகளில் முன்வரிசையில் இருந்து வந்திருக்கிறது. அல்கெய்தா தொடர்புடைய இஸ்லாமியப் போராளிகள் தான், நேட்டோ வான் படையின் ஆதரவுடன், லிபியத் தலைவர் மும்மார் கடாபியை பதவியை விட்டு அகற்றி படுகொலை செய்த தரைப் படைகளின் மையமாக இருந்தவர்கள், அவர்கள் தான் இப்போது சூழ்ந்திருக்கும் குழப்பத்தில் மேலாதிக்கத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களும்.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை அகற்றப் போர் புரிந்து கொண்டிருக்கும் போராளிகள் என்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கு -இவர்களில் மிகப் பெருவாரியானோர் இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள்- நிதி, ஆயுதம் மற்றும் பயிற்சியளிக்கும் அமெரிக்க தலைமையிலான பிரச்சாரத்தில் பிரான்ஸ் செயலூக்கத்துடன் பங்குபற்றி வந்திருக்கிறது. பயங்கரவாதத்தின் மீதான போரில் சமீபத்திய அத்தியாயத்தின் இலக்காயிருந்த ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) சிரியாவில் ஒரு பினாமிப் போருக்கான உருவாக்கமே ஆகும்.

லிபியா மற்றும் சிரியாவிலான பிரெஞ்சு நடவடிக்கைகளானவை, காலனி நாடுகளில் தனது அசிங்கமான வேலைகளை செய்யும் பொருட்டு வெளிநாட்டுக்கான படையில் (Foreign Legion) மிகவும் பிறழத்தக்க மனநிலையும் மற்றும் வன்முறையும் கொண்டதான கூறுகளைச் சேர்க்கக் கூடிய பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நெடிய, குற்றவியல் பாரம்பரியத்தின் வரிசையில் வருபவையாகும். சென்ற வார துப்பாக்கி சூடுகளில் அரசு எந்திரத்தின் பொறுப்பு எந்த மட்டத்திற்கு இருந்தது, ஏன், செயலூக்கத்துடனா அல்லது செயல்படாமல் இருந்ததன் மூலமா என்பதெல்லாம் நிச்சயமாக மூடி மறைக்கப்பட்டு விடும். தாக்குதல்கள் குறித்த எந்த உருப்படியான விசாரணையும் இருக்காது, ஏனென்றால் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும் இராணுவ-உளவு எந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் புதிய போர்களுக்காய் தயாரிப்பு செய்வதற்குமாய் இத்தாக்குதல்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றன என்பதையே அப்படியானதொரு விசாரணை தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்துவதாக இருக்கும்.