சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Euro zone officially tips into deflation

யூரோ மண்டலம் உத்தியோகபூர்வமாக பணச்சுருக்கத்திற்குள் நிற்கிறது

By Stefan Steinberg
9 January 2015

Use this version to printSend feedback

2008 நிதியியல் நெருக்கடியின் பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்பட்ட யூரோ பகுதி, 2009க்கு பின்னர் முதல்முறையாக அப்பிராந்தியம் பணச்சுருக்கத்திற்குள் சரிந்துள்ளதாக புதனன்று யூரோஸ்டடினால் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

யூரோ பகுதியின் நுகர்வோர் விலைகள், நவம்பரில் 0.3 சதவிகித விலை உயர்வுடன் ஒப்பிடுகையில் டிசம்பர் 2014இல் 0.2 சதவிகித அளவிற்கு சரிந்தன. ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரம் ஜேர்மனியில், தற்போதைய நெருக்கடியின் உலகளாவிய பாதிப்பை பிரதிபலிக்கும் விதத்தில், வெறும் 0.2 சதவிகிதத்திற்கு பணவீக்கம் சரிந்தது.

யூரோஸ்டட் தகவலின்படி, எரிபொருள் விலைகள், குறிப்பாக ஜூன் மாதத்திற்கு பின்னர் பாதியாக குறைந்துள்ள எண்ணெய் விலைகளே கடுமையான 0.5 சதவீதம் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ரஷ்யாவிற்கு அழுத்தமளிப்பதற்கான அமெரிக்க பிரச்சாரத்தோடு சேர்ந்து, எண்ணெய் விலைகளின் மிகப்பெரிய சரிவு உலகந்தழுவிய பின்னடைவு போக்குகளின் பிடியை பிரதிபலிக்கிறது. நிதியியல் விமர்சகர்களில் சிலர் குறிப்பிட்டுள்ள "நீடித்த தேக்கநிலை", அதாவது நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்குறைவு, பணவீக்கம் ஆகியவை அனைத்து G7 நாடுகளிலும் 2015இல் 2 சதவிகிதத்திற்கும் கீழ் சரியுமென்று அவர்கள் ஏற்கனவே கணித்து வருகின்றனர். பெருமந்தநிலைக்கு நடுவே கடந்த முறை 1932இல் இதுபோன்ற ஒரு ஒப்பீட்டுக்குரிய சரிவு ஏற்பட்டது.

ஐரோப்பாவில் பணச்சுருக்கத்தின் தொடக்கம் என்பது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய நிதிய உயரடுக்குகளால் ஆணையிடப்பட்ட ஆண்டுக்கணக்கான சிக்கன கொள்கைகளினால் ஏற்கனவே துன்பப்பட்டு கொண்டிருக்கும் அக்கண்டத்தின் உழைக்கும் மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். வீழ்ந்துவரும் விலைகளுக்குரிய விடையிறுப்பாக நுகர்வோர் தேவைகள் சரிந்து வருவதுடன், வேலை வழங்குநர்கள் ஊதியங்களைக் குறைத்து வருகின்றனர், உற்பத்தி அளவுகள் வெட்டப்படுகின்றன, வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கின்றன மற்றும் சாதாரண தொழிலாளர்களின் சேமிப்புகள் மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றன.

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கை, அக்கண்டம் முழுவதும் பாரிய வேலையின்மை தொடர்ந்து நீடிப்பதை வெளிப்படுத்தியது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இத்தாலியில் வேலைவாய்ப்பின்மை 13.4 சதவிகிதம் என்ற அளவிற்கும், போர்சுக்கலில் 13.9 சதவிகிதமாக, பிரான்ஸில் 10.3 சதவிகிதமாக அதிகரித்தது. கிரீஸ் (50 சதவிகிதத்திற்கும் அதிகமாக) மற்றும் ஸ்பெயினில் (53.5 சதவிகிதமாக) இளைஞர் வேலையின்மை மிக அதிகமாக உள்ளதால், அங்கே சுமார் ஒரு கால் பங்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். சொல்லப்போனால், உத்தியோகபூர்வ யூரோஸ்டட் புள்ளிவிபரங்கள் ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மையின் உண்மையான அளவை பரந்த விதத்தில் குறைமதிப்பீடே செய்துள்ளது.

ஜேர்மனியின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களின் யூரோ வீழ்ச்சியிலிருந்து இலாபமீட்ட கூடியவையாக இருந்து கொண்டிருக்கின்றன, அதனால் அந்நாடு டிசம்பரில் பல்லாயிரகணக்கான வேலைகளைக் கூட்டியதோடு, அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய விதிவிலக்காக இருந்தது.

ஐரோப்பாவில் பணச்சுருக்கம் என்ற செய்திகளுக்கு வங்கிகள் மற்றும் நிதியியல் சந்தைகள் பெரியளவில் களிப்புடன் எதிர்செயலாற்றின. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராஹி, முன்னதாகவே கூட பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அவரது பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையை (QE) அறிமுகப்படுத்த உள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய QE திட்டங்களின் அடியையொட்டி, திராஹி அரசு பத்திரங்களை வாங்கும் பொருட்டு ஒரு ட்ரில்லியன் யூரோ அளவிற்கு ECBஇன் கையிருப்புகளை அதிகரிக்க திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் முக்கிய சந்தைகள் அனைத்தும் செய்திகளில் பொங்கி வழிந்தன. ஜேர்மனியின் வர்த்தக நாளிதழ் Handelsblattஇன் வியாழன் பதிப்பு, "DAX மீள்கிறது. முதலீட்டார்கள் ECBஇல் பண பரிவர்த்தனை செய்கிறார்கள்" என்று தலைப்பில் வந்திருந்தது.

ஜனவரி 22இல் ECB நிர்வாக குழுவின் அடுத்த கூட்டம் நடக்க உள்ளது, அந்நாளில் திராஹி அவரது QE திட்டத்தை தொடங்குவார் என்பதை சந்தைகள் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.

QE திட்டம் வழியாக கணிசமான இலாபமடையும் எதிர்பார்ப்பில், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை பெரும் எண்ணிக்கையில் வாங்கி வருகின்றனர், அவற்றின் வட்டிவிகிதங்கள் சாதனை அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.

முன்னெப்போதையும் விட முதல் முறையாக ஜேர்மனியின் ஐந்தாண்டுகால பத்திர இலாபங்கள், பூஜ்ஜியத்திற்கும் கீழே இறங்கி விட்டன, அதன் அர்த்தம் என்னவென்றால் நடைமுறையில் முதலீட்டாளர்கள் அவர்களது பணத்தை இந்த தசாப்தத்தின் எஞ்சிய காலத்தில் முதலீடு செய்ய ஜேர்மன் அரசிற்குள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். பிரிட்டனின் Daily Telegraphஇல் ஒரு விமர்சகர் இவ்வாறு எழுதுகிறார்: "14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பிய வரலாறு இதுபோன்று எதையும் பார்த்திருக்கவில்லை..."

ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) பத்திர கொள்முதல் திட்டத்தின் முக்கிய அரசியல் விளைவு, ஐரோப்பாவிற்கு உள்ளேயே தேசிய பூசல்களை தீவிரப்படுத்துவதாக இருக்கும். சிக்கன கொள்கையை மிக கவனமாக தேர்ந்தெடுத்தது நடைமுறைப்படுத்துவதுடன் இணைந்து, ECB பத்திர கொள்முதல் திட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் ஸ்பெயின், போர்சுக்கல், மற்றும் கிரீஸ் உள்பட தென் ஐரோப்பிய நாடுகளின் ஒத்து ஊதலில் இத்தாலி மற்றும் பிரான்ஸூம் சேர்ந்திருக்கின்றன.

அவரது பங்கிற்கு ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிள மற்றும் ஜென்ஸ் வைட்மான், ஜேர்மனியின் மத்திய வங்கியின் (Bundesbank) தலைவர் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பொதுக்குழுவில் உள்ள ஜேர்மனியின் பிரதிநிதி ஆகியோர் எந்தவொரு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தையும் அவர்கள் விடாப்பிடியாக எதிர்க்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

அரசாங்க பத்திரங்களைப் பாரியளவில் கொள்முதல் செய்வதென்பது, கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது அழுத்தத்தை குறைத்துவிடுமென அவர்கள் அஞ்சுகின்றனர். Handelsblatt பத்திரிகை உடனான சமீபத்திய பேட்டி ஒன்றில் திராஹி, ஒரு பத்திர கொள்முதல் திட்டத்திற்கு ECBக்கு உள்ளேயே கணிசமான எதிர்ப்பு இருந்தது என்பதைப் பதிவு செய்திருந்தார்.

ஜேர்மன் அரசியல் மற்றும் நிதியியல் வட்டாரங்களுக்கு உள்ளே உள்ள ECB திட்டத்தின் எதிர்ப்பாளர்களும், ஐரோப்பிய ஒன்றிய ஐயவாதிகளும், ஐரோப்பா தழுவிய அளவில் ஒரு நிதி கொள்கையை நடைமுறைப்படுத்தும் ECBஇன் எந்தவொரு நகர்வின் சட்டப்பூர்வத்தன்மையையும் அவர்கள் சவால் செய்வார்கள் என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளனர். அதுபோன்றவொரு எந்தவொரு கொள்கையும் ECBஇன் கையளிப்புடன் பொருந்தாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பாரம்பரிய அரசியல் உயரடுக்குகள் அதிகளவில் மதிப்பிழந்திருக்கும் சூழ்நிலையின் கீழ், ஐரோப்பிய பொருளாதாரத்தின் சமீபத்திய சரிவு அக்கண்டம் முழுவதும் வர்க்க பதட்டங்களை அதிகரிக்கும். எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் குறையாமல் தேசிய தேர்தல்கள் நடக்க உள்ள 2015இல், அரசியல் எழுச்சி ஏற்படுவது குறித்து முதலாளித்துவ விமர்சகர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள். இந்த தேர்தல்களில் முதலாவதாக, கடந்த ஐந்தாண்டு காலமாக ஐரோப்பிய சூறாவளியின் மையமாக இருந்துள்ள ஒரு நாடான கிரீஸில் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளது.