சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The economic and political implications of deflation

நாணய செலாவணித்தளர்வின் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள்

By Nick Beams
10 January 2015

Use this version to printSend feedback

டிசம்பர் வரையிலான ஆண்டில் 0.2 சதவீத விலை வீழ்ச்சியைப் பதிவு செய்து யூரோ மண்டலம் நாணய செலாவணித்தளர்வினுள் சென்றுகொண்டிருப்பது என்பது உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆழ்ந்து-செல்லும் உடைவின் மற்றொரு வெளிப்பாடாகும். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தை விட மோசமான விளைவைக் காட்டி, ஐரோப்பிய மத்திய வங்கியின் வரம்பு விகிதமான 2 சதவீதத்திற்கும் கீழாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஒரு மீட்பு ஆண்டாக இருக்குமென கருதப்பட்டது. ஆனால் அது முற்றிலுமாக எதிர்நிலைமைக்குத் திரும்பி இருந்தது.

முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவு மற்றும் பெருமந்தநிலை என்று அறியப்படுவது தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு அதிகமாக ஆன பின்னரும், யூரோ மண்டலத்தின் பொருளாதார உற்பத்தி 2007இன் மட்டங்களுக்குத் திரும்பவில்லை என்பதோடு, அங்கே அவ்வாறு நடப்பதற்கான எந்த அறிகுறியும் கூட இல்லை. அதற்கு முரண்பட்ட விதத்தில், முதலீட்டில் வெட்டுக்கள், பல நாடுகளில் மந்தநிலைமை அளவுகளுக்கு வேலைவாய்ப்பின்மை, முன்பில்லாத அளவில் கீழிறங்கிவரும் வாழ்க்கை தரங்கள் என மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமைகளோ ஒரு நிரந்தர நிலைமையாக மாறியுள்ளன.

தெளிவான நாணய செலாவணித்தளர்வுப் போக்கிற்கு அப்பாற்பட்டு, உலகளாவிய பொருளாதாரத்தின் நிலையை எடுத்துக்காட்டும் மற்றொரு அறிகுறியாக இருப்பது அரசு பத்திரங்களின் வட்டிவிகிதங்கள் அதிஉச்சநிலைக்கு குறைந்து போயிருப்பதாகும். இந்த வாரம், ஐந்தாண்டுகால ஜேர்மன் அரசு கடன் மீதான இலாபங்கள் எதிர்மறையாக திரும்பின. ஒரு தலையங்கத்தில் பைனான்சியல் டைம்ஸ் கருத்துரைக்கையில்: “மக்கள் அவர்களது பணத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு அரசிடம் ஒப்படைக்கின்ற போதும், அது செழித்தோங்கும் பொருளாதார காலங்களுக்கு அரிதாகவே அறிகுறி காட்டுகிறது, என்று எழுதியது.     

குறைந்த சந்தை விகிதங்களானது, சந்தையின் பாகமாகவுள்ள ஒரு கோளாறான காலகட்டத்தை குறைத்துக் காட்டுவதை மிகவும் உறுதிப்படுத்துகின்றது என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. அவற்றை வெறுமனே பணவீக்கம் சரிந்ததால் ஏற்பட்டவை என்றோ அல்லது எண்ணெய் மற்றும் ஏனைய பண்டங்களின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியினால் ஏற்பட்டவை என்றோ சாட்டிவிட முடியாது. அந்த பத்திரிகை தொடர்ந்து குறிப்பிட்டது, மாறாக "இலாபங்கள் பலவீனமடைந்திருப்பதும் மற்றும் எண்ணெய் விலைகள் தோய்வுற்றிருப்பதும் நீடித்த மந்தநிலைமையை கவனத்திற்கு எடுக்க வேண்டிய அவசியமிருப்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். 

இலாபங்கள் குறைந்திருப்பது அடியிலிருக்கும் தேக்கநிலையை குறிக்கிறது, அது பொருளாதாரத்தில் நிலவும் அதீத கொள்திறனால் (overcapacity) குணாம்சப்பட்டது என்பதால், மூலதன முதலீட்டின் மீது குறைந்த இலாப விகிதங்களைக் கொண்டு வருகிறது, இதனால் தான் அரசு கடன் மீது வெறும் 2 சதவீத இலாபம் கிடைத்தாலும் கூட ஏற்றுக் கொள்ளதக்கதாக மாறிவிடுகிறது

ஐரோப்பிய மத்திய வங்கியின் முதன்மை பொருளியல்வாதி பீட்டர் ப்ரேட் ஒரு சமீபத்திய நேர்காணலில் அந்த நிகழ்வுபோக்கைச் சுட்டிக்காட்டினார்: “அங்கே நிஜமான பொருளாதாரத்தினது ஒரு துன்பியலான சுழற்சியின் அபாயம் உள்ளது: அதாவது முதலீடு குறைவது, அதையொட்டி அது சாத்தியமான வளர்ச்சியைக் குறைத்து, எதிர்காலம் இன்னும் மங்கிப் போய், இதனால் முதலீடு இன்னும் மேற்கொண்டும் குறைகிறது, என்று அவர் தெரிவிக்கிறார்.

தகுதிக்கு குறைந்த வேலைவாய்ப்பு சமநிலை" ஒன்று உள்ளே அமைக்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இந்த சொல் 1930களின் பெருமந்தநிலையின் போது நிலைமையை விவரிக்க கீன்ஸ் ஆல் பயன்படுத்தப்பட்டதாகும்.  

இதேபோக்கு, உற்பத்தியைக் குறைப்பதில்லையென சவூதியர்கள் முடிவெடுத்ததற்குப் பின்னர், வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகளில் பிரதிபலிக்கிறது. அவர்களது சந்தை பங்கை வெறுமனே அவர்களின் எதிராளிகள் கைப்பற்றிவிடுவார்கள் என்பதால் விலைகளை உயர்த்த முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லையென வலியுறுத்தி, சவூதி ஆட்சியின் பிரதிநிதிகள் உலகளாவிய தேக்கத்தில் எண்ணெய் விலை வீழ்ச்சிகளையும் அதனுடன் சேர்த்துவிட்டிருந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சந்தைகள் இன்னும் மேற்கொண்டும் சுருங்கினாலும், அவர்கள் அவர்களது போட்டியாளர்களை முட்டுச்சுவருக்கு தள்ளிச்செல்லும் முயற்சியாக அந்த முடிவை எடுத்துள்ளனர்

இந்த பொருளாதார இருப்புநிலை கணக்கின் சுருக்கமான மீளாய்விலிருந்து இரண்டு தீர்மானங்கள் வருகின்றன. முதலாவது, 2008 நெருக்கடி என்பது உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிலைமுறிவு என்பதற்கு குறைந்த ஒன்றுமில்லை என்பதும், மற்றும் ஒரு கீழ்நோக்கிய சுழற்சியின் தொடக்கம் என்பதும் ஆகும்.

இரண்டாவது உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் $10 ட்ரில்லியன் அளவிற்கு உட்செலுத்தப்பட்டமை உட்பட அப்போதிருந்து ஆளும் மேற்தட்டால் பின்தொடரப்பட்ட கொள்கைகள், எந்தவொரு நிஜமான பொருளாதார மீட்டெழுச்சிபையும் கொண்டு வரத் தவறியுள்ளது என்பதாகும்

ஆனால் நேர்மாறாக அவர்கள் இந்த நெருக்கடியைத் தூண்டிவிட்ட அதே குற்றகரமான மற்றும் பாதியளவிற்கு-குற்றகரமான நடவடிக்கைக்கு காரணமான வங்கிகள் மற்றும் முதலீட்டு அமைப்புகளின் நிலைப்பாட்டைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளனர், அதேவேளையில் தொழிலாளர் வர்க்கத்தின் முன்பினும் அதிக பிரிவுகளைப் திட்டமிட்டு வறுமைக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்ட பல நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர், அவை அவ்விதத்தில் பொருளாதார கீழ்நோக்கிய திருப்பத்தை இன்னும் அதிகரித்து வருகின்றன.   

உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடியில் நிலவும் நிலையைச் சுட்டிக்காட்டுவதில் நாணய செலாவணித்தளர்வும் பத்திரங்களில் குறைந்த இலாபங்களும் முக்கியத்துவம் பெறுவதைப் போலவே, மோசமடைந்துவரும் பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு நிதியியல் சந்தைகளின் விடையிறுப்பு உள்ளது. யூரோ மண்டல நாணய செலாவணித்தளர்வு புள்ளிவிபரங்களின் செய்திகள் வந்ததும் உலகெங்கிலும் உள்ள பங்கு விலை-நிர்ணய சந்தைகளும், மற்றும் அனைத்திற்கும் மேலாக வோல் ஸ்ட்ரீட்டும், உடனடியாக உயர்ந்தன, ஜனவரி 22இல் ஐரோப்பிய மத்திய வங்கியின் அடுத்த நிர்வாக குழு கூட்டத்தின் போது அந்த புள்ளிவிபரங்கள் பணத்தைப் புழக்கத்தில்விடும் கொள்கையைப் பெரிதும் விரிவாக்க அதன் கரங்களில் தூண்டுபொருளாக இருக்கும் என்று அவை எதிர்பார்க்கின்றன.    

நிதியியல் அமைப்புமுறைக்குள் மலிவு பணம் பாய்வதை விரிவாக்குவதற்காக அரசு கடன் வாங்குவதை உள்ளடக்க வேண்டும் என்றளவுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பணத்தைப் புழக்கத்தில்விடும்  திட்டத்தை விரிவாக்க நிதியியல் சந்தைகளும் அவற்றின் பிரதிநிதிகளும் கோரிவருகின்றனர்.

இது இன்றைய-காலத்திய முதலாளித்துவத்தின் மிகவும் அதிர்ச்சியூட்டும் அம்சங்களில் ஒன்றைக் குறித்துக் காட்டுகிறது: அதாவது நிதியியல் சந்தைகளில் ஊகவணிகத்திற்காக அதிமலிவு பணத்தைப் பாய்ச்சுவதை அடித்தளமாக கொண்டிருக்கும் நிதியியல் ஒட்டுண்ணித்தனம், எந்தளவுக்கு இலாப திரட்சியின் பிரதான உந்துசக்தியாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது

நிச்சயமாக பொருளாதார வரலாறு முழுவதிலும், ஊகவணிகம் எப்போதுமே இலாப திரட்சியின் ஒரு முக்கிய உட்கூறாக இருந்து வந்துள்ளது தான். ஆனால் இப்போது அது பெரிதும் மேலோங்கி நிற்கிறது என்ற உண்மை, நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களுடன் ஒரு பண்புமயமான மாற்றத்திற்குட்பட்டிருப்பதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது

அங்கே ஒட்டுண்ணித்தனத்தினால் இலாபம் திரட்சியடைவதற்கும் மற்றும் "வழமையான" முறைகளால் இலாபமீட்டுவதற்கும் இடையே மிக அடிப்படையான ஒரு வித்தியாசம் உள்ளது. நிதியியல் ஒட்டுண்ணித்தனம் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்தும் மற்றும் விரிவாக்கப்பட்ட உற்பத்தியிலிருந்தும் உபரி மதிப்பை எடுப்பதை உள்ளடக்கி இருக்கவில்லை, மாறாக உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் நிதியியல் சந்தைகளின் நடவடிக்கைகளிலிருந்து இலாபத்தைத் திரட்டுகிறது.

ஆனால், ஆய்வின் இறுதியில், மூலதனம் திரள்வதென்பது விரிவாக்கப்பட்ட மறுஉற்பத்தியைஅதாவது அதிகப்படியான உற்பத்தி நடவடிக்கைகள், பெரும் இலாபங்கள் மற்றும் மேற்படி முதலீடு ஆகியவற்றிற்கு இட்டு செல்லும் முதலீட்டை சார்ந்துள்ளது. ஆனால் ஒருகாலத்தில் நேரிய வட்டமாக இருந்த இது வக்கிரமான ஒன்றாக மாறியுள்ளது. முன்பில்லாத அளவில் அதிகரித்துள்ள ஊகவணிகம் நிதியியல் அமைப்புமுறையை சீட்டுக்கட்டு வீடுகளைப் போல மாற்றியுள்ளது, அது, மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, ஒரு வீடு வீழ்வதை நாம் காதுகளால் கேட்கும் போது ஈர்ப்பு விசையின் விதி தன்னைத்தானே நிரூபிப்பதைப் போல அதே விதத்தில் ஒரு பொறிவுக்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன

இந்த அபிவிருத்தியின் அரசியல் தாக்கங்களும் குறைந்த முக்கியத்துவம் கொண்டவை அல்ல. ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற அவரது சிறுபுத்தகத்தில் லெனின் விவரிக்கையில், நிதியியல் ஒட்டுண்ணித்தனமே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் போருக்கும் மற்றும் "அதன் போக்குகள் அனைத்திற்கும் அடியிலிருக்கும்" அரசியல் பிற்போக்குதனம் உருவாகுவதற்கும் உந்துசக்தியாகும்," என்று விவரித்தார். அது ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்ற போதினும், லெனினின் பகுப்பாய்வு முன்பினும் மேலதிகமாக இப்போது பொருத்தமாக உள்ளது.

ஊகவணிகம் மூலமாக திரட்டுவதற்கான முனைவுஅதாவது சந்தை மோசடிகள், சூழ்ச்சிகள் மற்றும் கொள்ளையடித்தல்கள் மூலமாக மற்றவர்கள் உருவாக்கிய செல்வத்தை அபகரிப்பது என்பதுஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மற்றும் போரில் அதன் இறுதி வெளிப்பாட்டைக் காண்கிறது.

அதேபோல, பிரான்சில் வர்க்க போராட்டங்கள் என்பதில் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, நிதியியல் ஒட்டுண்ணித்தனமானது "நிதிய ஓநாய்களின்" கோரிக்கைகளை பூர்த்தி செய்வதையே அரசு தொடரும் என்ற நம்பிக்கையில் தங்கியுள்ளது. இருந்த போதினும், வர்க்க போராட்டம் அபிவிருத்தி அடைகையில், இந்த நம்பிக்கை ஆடத்தொடங்குகிறது என்பதுடன் ஒட்டுமொத்த மாளிகையும் தலைகீழாக கவிழத் தொடங்குகிறது.

மார்க்ஸின் பகுப்பாய்வும் பொருத்தமாக இருப்பதிலிருந்து எதையும் இழந்துவிடவில்லை. அது வர்க்க போராட்டத்தைப் பலவந்தமாக ஒடுக்கும் நோக்கில் (இதனை நியாயப்படுத்தவே "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அனைத்து பிரதான நாடுகளாலும் கொண்டு வரப்பட்டது) முன்பினும் அதிகமாக சர்வாதிபத்திய ஆட்சி வடிவத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் அமைந்திருக்கும் உந்துசக்தியைச் சுட்டிக் காட்டுகிறது. உலக சோசலிச வலைத் தளம் முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போல, 2014இல் மிகச் சிறந்த சந்தை இலாபங்களை பதிவு செய்திருக்கும் நாடு, ஜெனரல் அல்-சிசியின் இரத்தந்தோய்ந்த இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கும் எகிப்தாகும் என்பது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் சூழ்நிலை, சோசலிசத்திற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தில் அமைந்த ஒரு செயல்பட்டுவரும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இடையே ஏதாவதொன்றை "தேர்ந்தெடுப்பது" அல்ல. அதற்கு மாறாக சோசலிசத்திற்காக போராடி "நிதிய ஓநாய்களைத்" தூக்கியெறிவது அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகள் அதிகளவில் காட்டுமிராண்டித்தனமான போர் மற்றும் சர்வாதிகார வடிவங்களை ஏற்கும் ஒரு பெருந்துயருக்குள் மூழ்குவது, இவையே அரசியல் மாற்றீடுகளாக உள்ளன.