சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Arrests follow terror raids across Europe

கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஐரோப்பா எங்கிலும் பீதியூட்டும் திடீர் சோதனைகள்

By Chris Marsden
17 January 2015

Use this version to printSend feedback

சார்லி ஹெப்டோ அலுவலகங்கள் மீதான ஜனவரி 7 தாக்குதலுக்குப் பின்னர் பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் பீதியூட்டும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

பெல்ஜியத்தில், ஜேர்மனியின் எல்லையோர வேர்வியே நகரில் சந்தேகத்திற்குரிய இருவர் பொலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றொருவர் கடுமையாக காயமடைந்தார். பதிமூன்று கைது நடவடிக்கைகள் நடந்தன, மொலெம்பெக்கின் சோதனைகளில் சந்தேகத்திற்குரிய ஒன்பது பேரும், புருசெல்ஸில் இருவரும், பேர்ஹேமில் ஒருவரும், வேர்வியேவில் ஒருவரும், மற்றும் பிரான்சில் இருவரும் பிடிக்கப்பட்டனர். வேர்வியே துப்பாக்கிதாரிகள் மூவரும் சமீபத்தில் சிரியாவிலிருந்து திரும்பி இருந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

வேர்வியேவின் மையப்பகுதியும் மற்றும் அதன் இரயில் நிலையமும் வியாழனன்று கனரக ஆயுதமேந்திய பொலிஸால் சுற்றி வளைக்கப்பட்டது, அவர்கள் ஒரு பேக்கரியின் மேலே இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றனர். நேரில் பார்த்தவர்கள் மாலை 5:45 மணிக்கு தொடர்ச்சியான வெடிச்சத்தத்தை மற்றும் நீண்ட நேரம் துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டதாக தெரிவித்தனர்.

சிறப்பு பொலிஸ் பிரிவுகள் நான்கு மாவட்டங்களின் ஏனைய இடங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மேலோங்கிய அண்டைப்பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு டஜன் சோதனைகளை நடத்தினர். தேடுவதற்குரிய உத்தரவாணைகள் மொத்தம் 10 வழங்கப்பட்டு இருந்தன. லியேஜ் நகரில் ஒரு காரை விரட்டிப்பிடித்தும் மற்றும் துப்பாக்கி சண்டைக்கு பின்னர் சந்தேகத்திதற்குரிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்தது.

பெல்ஜியத்தில் பொலிஸ் அதிகாரிகளையும் மற்றும் பல்வேறு கட்டிடங்களையும் இலக்கில் வைத்து ஒரு தாக்குதல் "நிகழ்த்துவதற்காக" திட்டம் தீட்டி வந்த, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அளவிற்கு பரந்த செயல்பாட்டில் இருந்த ஒரு பயங்கரவாத பிரிவைக் கலைக்க அவர்கள் அங்கே நகர்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெடரல் நீதியரசர் எரிக் வொன் டெர் சைஜ்ப்ற் கூறுகையில், “அந்த சந்தேகத்திற்குரியவர்களைச் செயலிழக்கச் செய்வதற்கு முன்னதாக அவர்கள் பெடரல் பொலிஸின் சிறப்பு படைகள் மீது இராணுவ ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு உடனடியாகவும், பல நிமிடங்களுக்கும் தாக்குதல் நடத்தினர்,” என்றார்.

இருவாரங்களுக்கு முன்னர், அதாவது சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு முன்னரே, சிரியா சண்டைகளிலிருந்து சமீபத்தில் திரும்பியவர்களின் வீடுகள் மற்றும் கார்களை ஊடுருவிய பின்னர், முன்னதாக அவர்கள் முன்கூட்டிய நடவடிக்கையைத் தொடங்க தீர்மானித்திருந்ததாக பொலிஸ் ஆதாரங்கள் தெரிவித்தன. “பாரீஸ் தாக்குதல்களுக்கு முன்னரே இந்த புலனாய்வை நாங்கள் தொடங்கி இருந்தோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று வொன் டெர் சைஜ்ப்ற் தெரிவித்தார். பாரீஸ் தாக்குதலுடன் இதற்கு எந்த தொடர்பையும் ஸ்தாபிக்க வேண்டியதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த தாக்குதல்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்படும் சதித்திட்டங்களுக்கு முன்னரே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உளவுவேலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு, சார்லி ஹெப்டோ தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரிகள் உட்பட, குற்றவாளிகள் குறித்து கிடைத்திருந்த வளமான தகவல்களை அதிகாரிகளும் மற்றும் ஊடகங்களும் திட்டமிட்டு குறைத்துக் காட்ட முயல்கின்றன அல்லது மூடிமறைத்து வருகின்றன.

சார்லி ஹெப்டோ மற்றும் கோஷர் மளிகைக்கடை தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட கிளாசினிக்கோவ்கள் (எந்திர துப்பாக்கிகள்) மற்றும் ராக்கெட் ஏவும் கருவிகள், அத்துடன் கோஷர் அங்காடி தாக்குதலின் துப்பாக்கிதாரி அமெடி குலிபாலியால் பயன்படுத்தப்பட்ட Tokarev கைத்துப்பாக்கி ஆகியவை பெல்ஜிய குற்றகர கும்பல்களிடமிருந்து வாங்கப்பட்டு இருந்ததை இந்த வாரம் பெல்ஜிய பொலிஸ் ஒப்புக் கொண்டது. அது உயர்மட்டத்திலிருந்து வந்த திட்டவட்டமான தகவலாகும். குலிபாலி புருசெல்ஸில் Gare du Midi க்கு அருகில் அந்த ஆயுதங்களை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சார்லெறுவா இல் இருந்து நீத்தன் ஃபராசுலா செவ்வாயன்று பொலிஸில் சரணடைந்ததை அடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் குலிபாலி உடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொள்கிறார்.

எல்லைக் கடந்த நடவடிக்கைகளுக்கு மற்றொரு சான்றாக, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மெஹ்டி நெமூஷ், கடந்த ஆண்டு சிரியாவில் சண்டையிட்டு திரும்பிய பின்னர், கடந்த மே மாதம் புருசெல்ஸில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் நான்கு நபர்களைக் கொன்றார். பின்னர் அவர் மார்சைய்யில் பிரெஞ்சு பொலிஸால் பிடிக்கப்பட்டார்.

அண்ட்வேர்ப்பில் 43 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் மீது Sharia4Belgium இன் அங்கத்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசுடன் தொடர்புபட்டதாகும்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளினது முகமைகளிடமிருந்து சந்தேகத்திற்குரிய 2,500 இஸ்லாமியர்களின் பெயர்கள் சேகரிப்பட்டிருப்பதாக இந்த வாரம் யூரோபோல் இயக்குனர் Rob Wainwright பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.

பிரான்சில், குலிபாலி உடன் தொடர்புபட்டவர்களை இலக்கில் வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சோதனை வேட்டையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். பாரீஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் ஒரு பெண் செய்தி தொடர்பாளர் Agnes Thibault-Lecuivre கூறுகையில், அந்த கைது நடவடிக்கைகள் வியாழனன்று நள்ளிரவில் தொடங்கி, வெள்ளியன்று காலை வரையில் மூன்று நகரங்களில் தொடர்ந்தது. குலிபாலிக்கு ஒரு கார் வழங்கியவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவார், அவர் காரில் காணப்பட்ட DNA அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டு இருந்தார்.

பாரீஸில் Gare de l’Est இரயில் நிலையத்தில் ஒரு வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்ததும் வெள்ளியன்று காலை ஒரு மணி நேரத்திற்கு அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது, சார்லி ஹெப்டோ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவாஞ்சலி பேரணியில் ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்ளாததற்குப் பின்னர் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உடன் உறவுகளைச் சீரமைத்துக் கொள்வதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி பாரீஸிற்கு வந்திருந்த அந்த நாளில் நடந்ததாகும்.

பாரீஸின் ஒரு புறநகர் பகுதியான கொலொம்ப் இன் தபால் நிலையத்தில் இரண்டு பேரை பிணைக்கைதிகளாக ஒரு துப்பாக்கிதாரி பிடித்து வைத்த ஒரு சம்பவம் வெள்ளியன்று மதியம் நடந்தது. அந்த நபர் பிணைக்கைதிகளைக் காயமின்றி விடுவித்து, அவரே பொலிஸிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்ததாக பொலிஸிடம் கூறிய ஒரு இராணுவ ஆயுதமும் கிளாசினிக்கோவ் (Kalashnikov) ஆகும் என்று செய்திகள் தெரிவித்தன.

L’Express, Le Parisien மற்றும் France Inter உட்பட பல பிரெஞ்சு ஊடக வலைத் தளங்கள், தொழில்நுட்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக முக்கிய ஊடக செய்திகளை வெள்ளிக்கிழமை கண்டது, இதை ஆராய்ந்து பார்த்தால் இவை பொதுவாக Oxalide சேவை வழங்குனரோடு சம்பந்தப்பட்டிருந்தன. பிரெஞ்சு இராணுவத்திற்கான இணைய-பாதுகாப்புத்துறை தலைவர் Arnaud Coustilliere அளித்த தகவலின்படி, பாரீஸ் துப்பாக்கிச்சூட்டை அடுத்து சுமார் 19,000 பிரெஞ்சு வலைத் தளங்கள் இணையவழி தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இராணுவ அதிகாரிகள் அரசு வலைத் தளங்களை பாதுகாக்க இரவு பகலென்று கண்காணிப்பைத் தொடங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளியன்று காலை, பேர்லினில், 11 இடங்களில் 250 பொலிஸ் அதிகாலை சோதனைகளில் ஈடுபட்டனர், அது சிரியாவின் இஸ்லாமிக் அரசில் ஆட்களை நியமிப்பதற்கு உதவியதாக சந்தேகத்திற்குரிய இருவரை கைது செய்ய இட்டு சென்றது. 41 வயதான Ismet D எனும் ஒருவர் "செசன்யா மற்றும் டாஜெஸ்டனிலிருந்து துருக்கி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களின் ஒரு இஸ்லாமிய தீவிரவாத குழுவுக்கு தலைமை வகித்து வந்தார்" என்று பொலிஸ் தெரிவித்தது.

வியாழனன்று பேர்லினிலிருந்து மேற்கே சுமார் 200 கிலோமீட்டரில் உள்ள Wolfsburgஇன் பொலிஸ், 26 வயதான ஜேர்மன்-துனிசிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற Ayub B , சிரியாவிற்கான இஸ்லாமிக் அரசில் இணைந்து 2014இல் அவர் சண்டையிட்டு இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைத்தது.

மேற்கொண்டும் ஒடுக்குமுறை அரசு அதிகாரங்களுக்கான முறையீடுகளை நியாயப்படுத்தவும் மற்றும் பீதியூட்டும் ஒரு சூழலைத் தூண்டிவிடவும், ஆளும் மேற்தட்டுக்கள் இந்த சோதனைகளை பயன்படுத்துவதில் சிறிதும் காலந்தாழ்த்தவில்லை.

புருசெல்ஸ் மற்றும் ஆண்ட்வேர்பில் உள்ள யூத பள்ளிகள் தாக்குதலுக்கான "சாத்தியமான இலக்காக" உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்த பின்னர், அவை மூடப்பட்டு வகுப்புகள் இரத்து செய்யப்பட்டன. நெதர்லாந்தில் உள்ள ஒரே பாரம்பரிய யூத பள்ளியான The Cheider பாடசாலையும் மூடப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பது சட்டத்தால் தண்டிக்க தக்கதாக செய்யும், மற்றும் ஒரு பயங்கரவாத அபாயமாக கருதப்படும் இரட்டை குடியுரிமையை இல்லாது செய்வதற்காக பெல்ஜிய குடியுரிமை பெறுவதற்கான காரணங்களை விரிவாக்கும், மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவியதாக சந்தேகப்படுபவர்கள் மீதான சொத்துக்களை முடக்கும், மற்றும் மிக முக்கியமாக, உள்நாட்டிலேயே இராணுவத்திற்கு அழைப்பு கொடுப்பதை அங்கீகரிக்கும் புதிய சட்டமசோதாவை பெல்ஜிய பிரதம மந்திரி சார்லஸ் மைக்கேல் அறிவித்தார்.

பிரான்சில், பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியோ அல்லது ஆதரித்தோ கருத்து வெளியிட்டதற்காக அல்லது பதிப்பித்ததற்காக, தற்போது 100 பேர் வரையில் விசாரணையின் கீழ் உள்ளனர்—சிலருக்கு சிறை தண்டனைகள் உடனுக்குடன் ஏற்கனவே வழங்கப்பட்டும் விட்டன.

ஜேர்மனியில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் மந்திரிசபை, தீவிரவாதிகள் என்று சந்தேகத்திற்குரியவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் அவர்களது தேசிய அடையாள அட்டைகளைத் திரும்ப பெற அனுமதிக்கும் ஒரு வரைவு சட்டமசோதாவிற்கு புதனன்று ஒப்புதல் வழங்கினார்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK) பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அவரது சொந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் தொகுப்பை ஜனாதிபதி ஒபாமா ஆதரிக்குமாறு கோரி வருகிறார். அவரது விஜயத்திற்கு முன்னதாக முன்னாள் தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயர் 300 குடியரசு செனட்டர்களின் ஒரு தனிப்பட்ட மூலோபாய அமர்வில் பேசி இருந்தார். செனட்டர் ஜோன் மெக்கெயினால் முன்மொழியப்பட்ட அவர், முஸ்லீம்களின் "ஒரு கணிசமான மற்றும் விளிம்பில் அல்லாத ஒரு சிறுபான்மை" அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது, அது "படைகளால்" எதிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.