சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Unions betray contract workers’ strike

இந்தியா; ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தன

By Arun Kumar and Moses Rajkumar 
21 November 2014

Use this version to printSend feedback

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) பணிபுரியும் 11,000 வறுமையில் வாழும் ஒப்பந்த தொழிலாளர்களின் சமீபத்திய 53 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தன.

வேலைநிறுத்தக்காரர்கள் அவர்களது வேலை நிரந்தரம் மற்றும்  என்.எல்.சி நிரந்தர ஊழியர்களுக்கு சமமான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்தனர் அவர்கள் அதிகமான போனசும் கோரினார்கள். என்.எல்.சி, தென் மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும்..

இந்தவேலைநிறுத்தம் பத்து தொழிற்சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவால் திரும்ப பெறப்பட்டது. இதில் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அதிமுக உடன் சேர்ந்த அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், எதிர் கட்சியான திராவிடமுன்னேற்ற கழகத்தைச்சேர்ந்த (திமுக) தொழிலாளர் முற்போக்கு முன்னணி (எல்பிஎப்), ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் உடன் சேர்ந்த இந்திய தொழிற்சங்க மையமும்(சிஐடியு) உள்ளடங்கும்.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை உடனயாக நிறுத்துவதில் அவ்வளவு அவசரம் காட்டின, அதனால் என்எல்சியுடன் சம்பிரதாயரீதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரே அக்டோபர் 24 இல் ஜேஏசி வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றது. மாத சம்பளத்தில் போனஸ் 8.33 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கு உயர்த்துவதற்கான கோரிக்கையுடன் சேர்த்து முக்கியமான கோரிக்கையான ஒப்பந்த வேலைகளை நிரந்தரப்படுத்துதல் முற்றிலும் கைவிடப்பட்டது,

காட்டிக்கொடுக்கப்பட்ட பேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளத்தில் 110 ரூபாய் உயர்த்தப்படும், இந்த சம்பள உயர்வு கூடஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அதற்கு காரணம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்துடன் 2010ல் போடப்பட்ட முந்தைய ஒப்பந்தம் இன்னும் முடிவடையாமல் 2015 வரை உள்ளது என்று என்எல்சி குறிப்பிடுகிறது. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஜேஎசியுடைய ஒரு அங்கம் அல்ல, அது  ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையிலான அனைந்திந்திய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்த்து.

இதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயர்ந்த பட்ச மாத சம்பளமாக ரூபா 15,000 வரை கிடைக்கும். இது மிகவும் குறைவானது, தொழிலாளர்கள் உடனடியாக குறைந்த பட்ச சம்பளமாக 25,000 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது நிரந்தர தொழிலாளர்களின் கடைநிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமாகும்.

புதிய சம்பள ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் வரை, என்எல்சி உயர்த்தப்பட்டதில் பாதி சம்பளத்தை இரண்டு தவணையாக, முதல் தவணை நவம்பர் 1லும், இரண்டாவது இந்த வருடத்திற்கு பிறகும் ‘’வழங்கப்படும்’’ என்று அறிவித்தது. இந்த ஏமாற்றை தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்தனர், எவ்வாறாயினும் சம்பள உயர்வை அமுல்படுத்துதற்கான காலகெடுவை மாற்றுவதற்கு நிர்வாகத்துடன் ஒரு பேரத்தில் தொழிற்சங்கம் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டன, என்எல்சி இன் பிடிவாதமான நிலைப்பாட்டினால் புதிய ஒப்பந்தத்தில் சம்பிரதாய கையெழுத்திடுவது அக்டோபர் 24 இலிருந்து இழுத்தடிக்கப்பட்டது.

கோபம் அடைந்துள்ள தொழிலாளர்களை தணிப்பதற்காக, மொத்தமாக 10,000 ரூபாய் வழங்க என்எல்சி முன் வந்தது, வேலைநிறுத்த காலத்திற்கு 3,500 ரூபாயும், கருணைத் தொகையாக 3000 ரூபாயும் மற்றும் ஒரு போனசாக 3,500 வழங்கப்படும். ,ஆக இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

இந்தக்காட்டிக்கொடுப்புக்கு தொழிலாளர் மத்தியில் பரந்தளவில் எதிர்ப்பு உள்ளதை உணர்ந்த, ஜேஎசி இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேலை நிறுத்த தொழிலாளர்களின் பொது கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.

‘’இது தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்’’ என்று ஒரு ஒப்பந்த தொழிலாளர் உலக சோசலிச வலை தளத்திடம் குறிப்பிட்டார். ‘’ அவர்கள் மிகவும் பதட்டத்துடன் உள்ளனர். என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் செய்துள்ள ஒப்பந்தத்தினால் அவர்கள் பெரிதும் காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணருகின்றனர்’’ என்றார். ‘’53 நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தியும், தொழிலாளர்கள் மிகவும் குறைந்த பலனைத்தான் பெற்றனர். தொழிலாளர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். எங்களுடைய முதன்மை கோரிக்கையானஒப்பந்த வேலையை நிரந்தரப்படுத்துதல் மற்றும் ,ஊதிய உயர்வுநிராகரிக்கப்பட்டுள்ளது. நானும் இதர சில தொழிலாளர்களும் உணர ஆரம்பித்தோம் எங்களுடைய கோரிக்கைக்கு போராட எங்களுக்கு தேவை புதிய வேலைத்திட்டம்.’’

மற்றொரு என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் கூறினார்; ’’இந்த ஒப்பந்தத்தை கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எங்களை எல்லா தொழிற்சங்கங்களும் காட்டிக்கொடுத்துவிட்டன. இனிமேல் தொழிற்சங்கங்களை நம்ப போவதில்லை. அவை தொழிலாளர்களுக்கு விரோதியாக மாறிவிட்டன.

 தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி அடையும் அமைதியின்மையை கட்டுப்படுத்தவே ஜெஏசி சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன என்று ஆரம்பத்திலிருந்தே உலக சோசலிச வலை தளம் எச்சரித்தது, ‘’ஏனென்றால் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இழப்பது பற்றி அச்சமடைந்தனர், தொழிற்சங்கங்கள்.மீண்டும் மீண்டும் காட்டிக்கொடுத்த போதிலும் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் தங்களது உரிமைகளுக்காக போராடுவதற்குள்ள அக்கறையான ஆர்வத்தை எடுத்துக் காட்டியுள்ளனர்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் முந்தைய வேலைநிறுத்தத்தை போல  வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களுக்கு அழைப்புவிட தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன. இந்த துரோகத்திற்காக என்எல்சி நிர்வாகம் வேலைநிறுத்தத்தின் பொழுது அவர்களை புகழ்ந்தனர் அதேநேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தனர்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கம் என்எல்சிக்கு ஆதரவளித்த பொழுதும் வேலைநிறுத்தக்காரர்களின் சார்பில் தலையிடுமாறு அதே அரசாங்கம் அதேபோல் மாநில அரசாங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பயனற்ற விண்ணப்பங்களை விடுப்பதுடன் சங்கங்கள் மட்டுப்டுத்திக் கொண்டன.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் மற்றும் நிரந்தர வேலை என்பது சமீபத்தில் நடந்த பல வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புகளில் முக்கிய பிரச்சனைகளாக இருந்தன, அதில் பாக்ஸ்கான், பிஒய்டி எலக்ட்ரானிக்ஸ், சான்மீனா, ஹூண்டாய், தமிழ்நாட்டில் போர்ட்மற்றும் ஹரியானாவில் மாருதி சுசிகி கர்நாடகாவில் டொயட்டா மற்றும் போஸ் உள்ளடங்கும். ஒவ்வொரு சம்பவத்திலும்,மத்திய, மாநில அரசாங்கங்கள், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் ஆதரவுடன் தொழில் முனைவோர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடாவடியாக நிராகரித்தனர்.

மோடி அரசாங்கத்தின் ‘’இந்தியாவில் உருவாக்கு’’ பிரச்சாரம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணமாக பூகோள போட்டி கடும் உழைப்பு தளமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாக கொண்டதாகும். பெருநிறுவன கோரிக்கைகளை திருப்தி பண்ணும் பாகமாக தீவிரமான முறையில் தொழிற் சட்டங்களை கடுமையாக மாற்றம் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன, அதன் மூலம் நிரந்தர தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குதல் மற்றும் ஆலைகளை மூடுதல் எளிதாக்கப்படும். வேறு வார்த்தையில் கூறுவதாயின், ‘’நிரந்தர தொழிலளர்களின்'’’ நிலைமைகளை மிக அதிகளவில் சுரண்டப்படும் ஒப்பந்த தொழிலாளர்களின்  நிலைமைக்கு குறைப்பதாகும்.

ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்திற்கு அனைத்து ஆளும் ஸ்தாபனம்,,அதன் நீதிமன்றங்கள் மற்றும் போலீஸ் இவற்றுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைதிட்டத்தில் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது தேவையாக உள்ளது.