சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Pseudo-left USP plays double game in Sri Lankan presidential election

ஜனாதிபதி தேர்தலில் போலி இடது ஐக்கிய சோசலிசக் கட்சி இரட்டை வேடம் போடுகின்றது

By Vilani Peiris
5 January 2015

Use this version to printSend feedback

சர்வதேச தொழிலாளர்களுக்கான குழு என்ற போலி இடது கும்பலின் இலங்கை பிரிவான ஐக்கிய சோசலிச கட்சி (United Socialist Party -USP), ஜனவரி 8, நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் முற்றிலும் இரட்டை வேட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

ஐக்கிய சோசலிச கட்சி தனது தலைவரான சிறிதுங்க ஜெயசூரியவைசுயாதீன வேட்பாளராக நிறுத்திய போதிலும், உண்மையில் பொது எதிரணி வேட்பாளாரான மைத்திரிபால சிறிசேனவுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றது. அது மஹிந்த இராஜபக்ஷவையும் அவரின்சர்வாதிகார ஆட்சியையும் கண்டனம் செய்யும் அதேவேளை, ஒரு மாதத்துக்கு முன்னர் வரையும் அதே கொடூரமான அரசாங்கத்தின் பாகமாக இருந்த சிறிசேனவை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.

இராஜபக்ஷ, “மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேச விமர்சனம் மற்றும் உள்நாட்டில் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்களின் மத்தியிலேயே, ஜனாதிபதி தேர்தலினை இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். இராஜபக்ஷவை சீனாவில் இருந்து தூர விலக்குவதற்கு நெருக்குவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானஉச்சகட்டம் வரை வாஷிங்டனின் ஆதரவைப் பெற்ற- அதன் யுத்தத்தின்போது, இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அமெரிக்கா வஞ்சத்தனமான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

இராஜபக்ஷ தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்த உடனேயே, அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் (யூஎன்பீ) ஆதரவுடன் பொது எதிரணி வேட்பாளாராக தன்னை அறிவித்தார். வாஷிங்டனின் பச்சைக் கொடியுடன் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சாரத்தில் சகல எதிர்க்கட்சிகளும் ஏதாவதொரு வழியில் இணைந்துகொண்டன. கொழும்பில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கான வாஷிங்டன் உந்துதலானது பிராந்தியம் பூராவும் சீனாவை பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியில் கீழறுப்பதை இலக்காகக் கொண்ட, அதன் பரந்தஆசியாவின் முன்நிலை வேலைத் திட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக, ஐக்கிய சோசலிசக் கட்சியானது போலி இடது நவ சம சமாஜக் கட்சியுடன் இணைந்து, நன்கு அறியப்பட்ட வகையில் அமெரிக்க-சார்பு, வலதுசாரி யூஎன்பீயை இராஜபக்ஷவுக்கு எதிரானஜனநாயக மாற்றீடாக முன்னிலைப்படுத்தி வருகின்றது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (ஸ்ரீலசுக) ஈடாக, யூஎன்பீயும் அதன் ஆட்சிக் காலத்தில், இனவாத யுத்தத்தைத் தொடுப்பதிலும், உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அடக்குவதிலும் ஈவிரக்கமற்றதாக இருந்தது.

கடந்த வருடத்தில் வெளியிட்ட தனது முன்னோக்கு ஆவணத்தில், யூஎன்பீ உடனான தனது சந்தர்ப்பவாத கூட்டினை ஐக்கிய சோசலிச கட்சி நியாயப்படுத்தியது: “அரசாங்க அடக்குமுறை சூழலில், நாங்கள் ஐக்கியப்பட்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது, இராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக, சில நேரங்களில் முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போராட வேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அடிவருடியான முதலாளித்துவ யூஎன்பீ உடன் கூட, நாங்கள் ஒரே மேடையில் தோன்றி, சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக வீதிப் போராட்டங்களில் ஈடுபட நேரும்.”

இப்பொழுது யூஎன்பீ சிறிசேனவுக்குப் பின்னால் நிற்கின்ற நிலையில். நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் பொது எதிரணி வேட்பாளரின் பின்னல் அணிதிரண்டுள்ளன. தொழிலாளர்களின்  இங்கு வேலை பங்கிடப்பட்டுள்ளது. நவ சம சமாஜக் கட்சித் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண, சிறிசேனவுக்காக வெளிப்படையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதே வேளை, “சுயாதீனமான ஐக்கிய சோசலிசக் கட்சி, தனது பிரதான தாக்குதலை இராஜபக்ஷவுக்கு எதிராக குவிமையப்படுத்தியதோடு, பொது வேட்பாளரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விமர்சிக்கின்றது.

உழைக்கும் மக்கள் மத்தியில் அவரது பிரச்சாரத்தின் மீது குறிப்பிடத்தக்களவு  எதிர்ப்பு மற்றும் அவநம்பிக்கை உள்ள நிலமைகளின் கீழ், ஐக்கிய சோசலிசக் கட்சி சிறிசேனவிடம் இருந்து தூரவே நிற்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் மற்றும் ஸ்ரீலசுக பொதுச் செயலாளர் என்ற வகையில், தொழிலாள வர்க்கத்தின் மீது இராஜபக்ஷ ஆட்சி முன்னெடுத்த தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் அனைத்துக்கும் அவரும் பொறுப்பாளியாவார். உண்மையில், யூஎன்பீ மற்றும் மற்றைய எல்லா எதிர்க்கட்சிகளும் சிறிசேனவைச் சுற்றி ஒன்றுபட்டமை, அரசாங்கத்துடன் அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வேறுபாடுகளும் கிடையாது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இராஜபக்ஷவுடன் ஒப்பிடும்போது, “குறைந்த தீமையை அவர் பிரிதிநிதித்துவப்படுத்துகின்றார் என பரிந்துரைத்துக் கொண்டு, ஐக்கிய சோசலிசக் கட்சி இந்த எதிர்புக்களை சிறிசேனவின் பின்னால் முடிந்துவிட முனைகின்றது. ஐக்கிய சோசலிச கட்சியின் வலைத் தளத்திற்கு வழங்கிய ஒரு பேட்டியில், அதன் வேட்பாளரான ஜெயசூரிய கூறியதாவது: “தற்போதுள்ள ஆட்சியை நிராகரிப்பதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிப்பதற்காகவும் மற்றும் எல்லோருக்கும் சேவை செய்யும் ஒரு சிறந்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கான மக்களின் கோரிக்கைக்கு குரல் சேர்ப்பதற்காகவும் நான் சுயாதீன வேட்பாளராக நிற்கின்றேன்.”

ஐக்கிய சோசலிசக் கட்சி ஏன் பொது எதிரணியுடன நிற்கவில்லை என்று கேட்கப்ட்ட போது, சிறிதுங்க உடனடியாக தனது அரசாங்க-விரோத சான்றுகளையும் இராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காக கூட்டுச் சேரும் விருப்பத்தையும் முன்வைத்தார். ஐக்கிய சோசலிசக் கட்சியானது அதிகாரத்தில் இருக்கும் கொடூரமான ஜனநாய விரோதமான ஆட்சிக்கு எதிரான, எதிர்ப்பு போராட்டம் மற்றும் எல்லா வகையான நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக பங்கேற்கும். சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுபடுவதன் பேரில், கூர்மையான வேறுபாடுகள் இருந்த போதிலும், வெவ்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து வேலை செய்வதற்கு நாங்களை தயாராகவே உள்ளோம்,” என அவர் அறிவித்தார்.

உண்மையில், சிறிசேனவுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளுக்கும் மற்றைய போலி இடது அமைப்புக்களுடன் ஒரு தேர்தல் கூட்டினை ஏற்படுத்துவதே ஐக்கிய சோசலிசக் கட்சியின் முன்னுரிமையான விருப்பமாக இருந்தது. ஒரு பொது தேர்தல் மேடையில் ஒருமாற்று இடது வேட்பாளரை நிறுத்துவதற்காக, அது முன்நிலை சோசலிச கட்சி (முசோக), மாவோயிச கம்யூனிச கட்சி மற்றும் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து பிரிந்து போன ஒரு குழுவுடனும் கலந்துரையாடலை நடத்தியிருந்தது. சில தந்திரோபாய வேறுபாடுகள் சம்பந்தமான பிரச்சினையில் இந்த சூழ்ச்சி வீழ்ச்சியடைந்தபோது, ஐக்கிய சோசலிசக் கட்சி ஜெயசூரியவை வேட்பாளராக நிறுத்தியது.

சிறிசேன பற்றிய ஐக்கிய சோசலிசக் கட்சியின் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனம், அவரது நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்புக்குக்கும் அவருடைய ஜனாதிபதி காலம் எதனைக்கொண்டுவரும் என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சிறிசேன ஆட்சியில் பங்காளியாக இருந்தமை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, அவரை வேட்பாளாராக கொண்டுவருவதற்குப் பின்னால் இருந்து செயற்பட்ட, வாஷிங்டனின் சூழ்ச்சித் திட்டங்கள் பற்றி ஜெயசூரியா முற்று முழுதாக மௌனம் சாதிக்கின்றார்.

இந்த மௌனம் தற்செயலானதல்ல. பிராந்தியம் முழுவதும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிககள், தலையீடுகள் மற்றும் இராணுவ கட்டமைப்புகள் போன்றவற்றின் பின்னால், உலகம் முழுவதும் உள்ள போலி இடது அமைப்புக்களைப் போலவே, ஐக்கிய சோசலிசக் கட்சியும் அணிதிரண்டுள்ளது. கடந்த நவம்பரில் அதன் செய்திப் பத்திரிகையான செந் தாரகையில், அது சீனா அதேபோல் இந்தியாவையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சமமானவையாக இருத்தியிருந்தது. “இலங்கையானது தற்பொழுது, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் தேவைகளினால் விரைவாக பாதிக்கப்பட்டுவருகின்றது,” என்று அது பிரகடனம் செய்திருந்தது.

சீனா மற்றும் இந்தியாவினை ஏகாதிபத்திய நாடுகள் என பொய்யாக பண்புமயப்படுத்துவது, அவற்றின் சர்வதேச மற்றும் வரலாற்று சூழ்நிலை அடிப்படைகளில் இருந்து பிரித்தெடுப்பதாகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக அவற்றின் பொருளாதார விரிவாக்கங்கள், பிரதான பூகோள கூட்டுத்தாபனங்களுக்கான மலிவு உழைப்பு ஊற்றாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இதன் மூலமே சீனாவும் இந்தியாவும் முதலீடுகள் மற்றும் தொழில் நுட்பங்களுக்காக தங்கியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவை ஏகாதிபத்தியமாக பட்டம் சூட்டுவதானது, ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கத்திற்காக சேவை செய்கின்றது. சீனாவை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதன் மூலம், “ஆக்கிரமிப்பு”, “ஆத்திரமூட்டல் மற்றும்எழுச்சிபெறும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புக்களை நியாயப்படுத்துவதற்கான அதன் பிரச்சாரத்திற்கு, போலி இடதுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்குகின்றனர்.

ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் நவ சம சமாஜக் கட்சியினதும் முழுமையான ஆதவைக் கொண்ட, இலங்கை மீதான வாஷிங்கடனின் மனித உரிமைகள் பிரச்சாரம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள தீவை, அதன் யுத்த தயாரிப்புக்களுடன் ஒருங்கிணைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும். இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையில் எடுத்த முயற்சிகள், சீனாவுடனான உறவை துண்டித்துக் கொள்ளவேண்டும் இல்லையேல் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என இராஜபக்ஷவுக்கு விடுக்கும் அச்சுறுத்தலையும் உள்ளடக்கியிருந்தது. பர்மாவினைப் போல, கொழும்பு வாஷிங்டனுடன் அணிசேர்ந்தால், இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் மிகவிரைவிலேயே புதைக்கப்படும்.

 “சர்வதேச சதியில் அகப்பட்டுள்ளதாக கூறும் அவரது வாய்ச்சவடால்களின் மத்தியிலும், இராஜபக்ஷ அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு முயன்றார். தொடச்சியாக சீனாவிடமிருந்து பொருளாதார உதவிகளையும் முதலீடுகளையும் எதிர்பார்த்த போதிலும், அவர் அமெரிக்காவுக்கு விருப்பமான முறையில் நடக்கவும் தனது அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை கட்டுப்படுத்தவும் முயன்றார். இராஜபக்ஷ, சிறிசேன ஆகிய இருவரும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதில் பின்நிற்கப் போவதில்லை.

ஐக்கிய சோசலிசக் கட்சி, “இந்த தேர்தலில் போட்டியிடும் இராஜபக்ஷவும் பிரதான பொது எதிர்க் கட்சி வேட்பாளரும் நவ தாராளவாத பொருளாதாரத்தின் பிரதிநிதிகள்,” என அறிவிப்பதன் மூலம் தன்னை சுயாதீனமாக காட்டிக்கொள்கின்றது. எவ்வாறாயினும், “நவ தாராளவாதம் என்பதற்கு மாற்றீடாக அது சோசலிசத்தை முன்வைக்கவில்லை, மாறாக, பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தியினால் கீழறுக்கப்பட்ட, 1950 மற்றும் 1960 களின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மீளத் திரும்பும் ஒரு தேசியவாத முன்னோக்கையே பிரேரிக்கின்றது.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் வேலைத் திட்டம் முற்று முழுதாக தேசியவாதத்துக்குள் மூழ்கிப் போயுள்ளது. அதன் தேர்தல் அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது: “ஒரு புதிய நாட்டுக்காக, நாம் ஒரு இடைமருவு காலத்திற்கு, தேசிய தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதா முறைக்கு மாற வேண்டும்.”  “தேசிய தேவைகளின் அடித்தளத்தில் பொருளாதாரத்தை மீள் கட்டுமானம் செய்ய அழைப்பது, சர்வதேச போட்டிகளால் பாதிக்ப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத் தட்டுக்களுக்கான அழைப்பினை விட வேறொன்றும் அல்ல. இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தால், தேசிய அரச முறைமைக்குள், தாம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை தீர்க்க முடியாது அல்லது வளர்ந்து வரும் யுத்த அபாயத்தினை நிறுத்த முடியாது. மாறாக, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தின் ஒரு பாகமாக மட்டுமே அதைத் தீர்க்க முடியும்.

சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம் மட்டுமே, சகல முதலாளித்துவ பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் தூய்மையான அரசியல் சுயாதீனத்திற்காக போராடுவதற்கான அடித்தளமாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில், சகல வர்க்க கூட்டுக்களையும் நிராகரித்து யுத்தம் மற்றும் சமூக எதிர்ப் புரட்சிக்கு எதிராக ஒரு சர்வதேச ரீதியான போராட்டத்திற்காக, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை சுயாதீனமாக அணிதிரட்டப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். நாம் எமது வேட்பாளர் பாணி விஜேசிறிவர்த்தனவுக்கு வாக்களிக்குமாறும், எமது கட்சியில் இணைந்து சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புமாறும் அழைப்புவிடுக்கின்றோம்.