சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Financial markets rocked by decision to abandon ceiling on Swiss franc

சுவிஸ் பிராங் மீதான உச்சவரம்பைக் கைவிட எடுக்கப்பட்ட முடிவால் நிதியியல் சந்தைகள் அதிர்ந்தன

By Nick Beams
16 January 2015

Use this version to printSend feedback

சுவிஸ் தேசிய வங்கி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்த சுவிஸ் பிராங் மதிப்பு மீதான அதன் உச்சவரம்பை அது நீக்கவிருப்பதாக அறிவித்ததும், வியாழனன்று நிதியியல் சந்தைகள் உற்சாகத்தில் துள்ளின.

செலாவணி சந்தைகளின் வரலாறில் இதுவரையில் பார்த்திராத மிகவும் வியத்தகு இயக்கங்களில் ஒன்றாக, யூரோவிற்கு 1.20 பிராங் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த சுவிஸ் பிராங் மதிப்பு ஒருசில நிமிடங்களிலேயே டாலர் மற்றும் யூரோ இரண்டிற்கு எதிராகவும் அதிகபட்சமாக 39 சதவீத அளவுக்கு உயர்ந்தது.

சர்வதேச நாணய நிதியமிடமோ (IMF) அல்லது ஏனைய பிற ஆணையங்களிடமோ தகவல் அளிக்காமலேயே சுவிஸ் மத்திய வங்கி இந்த முடிவை முன்னெடுத்தது. இந்த முடிவு "சற்றே ஆச்சரியமூட்டுவதாக" IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகார்ட் தெரிவித்தார்.

2011 யூரோ நெருக்கடிக்கு இடையே, நிதியியல் சந்தைகளுக்கு ஒரு "பாதுகாப்பான புகலிடமாக" கருதப்படும் சுவிஸ் செலாவணி உயர்வதை நிறுத்தும் முயற்சியாக மற்றும் அந்நாட்டின் ஏற்றுமதி சந்தைகளை பாதுகாப்பதற்காக செலாவணி கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

ஆனால் அடுத்த வியாழனன்று ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாக கவுன்சில் கூடுகையில் அது ஒருவகைப்பட்ட பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையைக் (QE) கொண்டு வரக்கூடும் என்ற நிலையில், இனியும் அந்த போக்கில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாதென்பதால் சுவிஸ் ஆணையங்கள் தெளிவாக இந்த முடிவை எடுத்தன. QEஐ நோக்கிய ECB இன் எந்தவொரு நகர்வும், ஏற்கனவே ஒன்பது ஆண்டுகாலங்களில் இல்லாதளவிற்குச் சரிந்திருக்கும் யூரோவை, இன்னும் மேற்கொண்டும் சரியச் செய்யும். சுவிஸ் தேசிய வங்கி அதன் உச்சவரம்புகளைத் தக்க வைப்பதற்காக பெருந்தொகையிலான அன்னிய செலாவணிகளை வாங்கி வந்திருந்தது. இதனால் இப்போது அதன் அன்னிய செலாவணி கையிருப்புகள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கு சமமாகும்.

இந்த முடிவின் முழு தாக்கங்களும் இனிமேல் தான் வரவிருக்கின்றன என்றாலும், அது ஏற்கனவே நிதியியல் சந்தைகளில் ஒரு பிரதான தாக்கத்தைக் கொண்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அங்கே உச்சவரம்புகள் தக்க வைக்கப்படும் என்று பந்தயம் கட்டியிருந்த வர்த்தகர்கள், பெரும் இழப்புகளைச் சந்திப்பார்கள்.

பைனான்சியல் டைம்ஸால் மேற்கோளிட்டுக் காட்டப்பட்ட ஒரு தனியார் முதலீட்டு நிதிய வர்த்தகரின் வார்த்தைகள் இது: "இதன் பிழையான பக்கத்தில் மாட்டிக் கொள்ளும் எவரும், மண்ணைக் கவ்வ வேண்டியதிருக்கும்," என்றார்.

அந்த முடிவின் விளைபலன் "அனேகமாக பிரமாண்டதாக" இருக்கக்கூடுமென Australian Business Spectator எச்சரித்தது. "நிஜமான பிரச்சினையில் தோல்வியடையும் தரப்பினர் சிலர் அவர்களது இழப்புகளை மூடிமறைக்க, பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற ஏனைய நிதியியல் சொத்துக்களை விற்க நிர்பந்திக்கப்படுவார்கள்" என்பதுடன் சேர்ந்து, சில வர்த்தகர்கள், வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதிய வர்த்தகர்களுக்கு அங்கே பெரும் இழப்புகள் இருக்கக்கூடும்." குறைந்த மதிப்பு பெருநிறுவன பத்திரங்கள் போன்ற அபாய சொத்துக்களாக கருதப்படுவனவற்றின் விற்பனையுடன் சேர்ந்து, அங்கே ஜேர்மன் பத்திரங்கள் மற்றும் அமெரிக்க கருவூலங்கள் போன்ற ஏனைய கண்டுணரப்பட்ட பாதுகாப்பான புகலிடங்களை நோக்கிய நகர்வுகளும் இருக்கும்.

சுவிஸ் தேசிய வங்கியால் எடுக்கப்பட்ட முடிவும் மற்றும் அதன் விளைவால் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களும் நிதியியல் சந்தைகளிலும் மற்றும் நிஜமான பொருளாதாரத்தின் அடியிலிருப்பதிலும் இரண்டிலும் ஆழமடைந்துவரும் நெருக்கடியைக் குறித்துக் காட்டும் அறிகுறியாக உள்ளன.

அடுத்த வாரம் வெளி வரவிருக்கும் உலகளாவிய பொருளாதாரம் மீதான IMF அறிக்கைக்கு முன்னதாக நேற்று அளித்த ஒரு முக்கிய உரையில், IMF நிர்வாக இயக்குனர் லகார்ட் கூறுகையில் தற்போதைய வளர்ச்சி போக்கு "மிகவும் குறைவாக, எளிதில் முறியக் கூடியதாய், மிகவும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாய்" உள்ளது என்று எச்சரித்தார். மலிவான எண்ணெய்யும் மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியின் அதிகரிப்பும் உலக பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு போதுமான அளவில் இருக்காது.

வாஷிங்டனில் உள்ள வெளியுறவுகள் கவுன்சில் கூட்டம் ஒன்றில் பேசுகையில், லகார்ட் தெரிவித்தார்: "எண்ணெய் விலையும் அமெரிக்க வளர்ச்சியும் ஏனைய இடங்களில் ஆழமாக நிலவும் பலவீனங்களுக்கு மருந்தாகாது. நிறைய நாடுகள் பெரும் கடன்சுமை மற்றும் உயர்ந்த வேலைவாய்ப்பின்மை உட்பட நிதியியல் நெருக்கடியின் வழிவந்த காரணிகளால் இன்னமும் சுமையேற்றப்பட்டு உள்ளன. பல நிறுவனங்களும் பல குடும்பங்களும் இன்று முதலீட்டையும், நுகர்வையும் குறைத்து வருகின்றனர் ஏனென்றால் அவர்கள் குறைவான எதிர்கால வளர்ச்சி குறித்து கவலை கொண்டுள்ளனர்."

உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை வழங்குவதற்கு மாறாக, வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகள் யூரோ மண்டலத்தில் பணச்சுருக்க அபாயத்தை அதிகரிக்கக்கூடுமென அவர் எச்சரித்தார். "இது கூடுதல் நிதிய ஊக்கப்பொதி விடயத்திற்கு முட்டுக் கொடுக்கிறது, நிதிய ஊக்கப்பொதி விடயத்தில் தேவையானால் உதவ தயாராக இருக்கிறது என்பதை ஐரோப்பிய மத்திய வங்கி சுட்டிக் காட்டியுள்ளது."

ஜேர்மன் வாரயிதழ் Die Zeit உடனான ஒரு நேர்காணலில் புதனன்று, ECB தலைவர் மரியோ திராஹி கூறுகையில், பணச்சுருக்க விளைவுகளைத் தடுக்கும் ஒரு முயற்சியாக அவ்வங்கி அரசு பத்திரங்களை வாங்கும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர்ந்து வருவதாக சுட்டிக் காட்டினார். நிதியியல் ஆணையங்களின் பிரதான கவலை என்னவென்றால் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் விலைகள் வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் நிலைமையை மோசமாக்கி வருகின்றன ஏனென்றால் அவற்றின் நிஜமான கடன் அளவும் மற்றும் செலுத்த வேண்டிய வட்டியும் அதுபோன்ற நிலைமைகளின் கீழ் உயர்கின்றன.

வங்கிகளின் நிலைமையை உயர்த்தும் முயற்சியானது, பணவீக்கத்தை 2 சதவீத மட்டத்திற்கு அருகில் ஆனால் அதற்கு கீழாக வைப்பதென்ற ECBஇன் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியமென்ற வாதத்தைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2009க்குப் பின்னர் முதல்முறையாக யூரோ மண்டலம் பணச்சுருக்கத்திற்குள் விழுந்துள்ளதை யூரோஸ்டேட்டால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. யூரோ மண்டலத்தில் நுகர்வுபொருள் விலைகள் நவம்பரில் 0.3 சதவீதம் உயர்ந்ததுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 2014இல் 0.2 சதவீதம் அளவுக்கு சரிந்தன.

"ECB நிர்வாக கவுன்சிலின் அனைத்து அங்கத்தவர்களும் எமது தீர்மானத்தை நிறைவேற்றி வைக்க தீர்மானகரமாக உள்ளனர்," என்று திராஹி Die Zeitக்கு தெரிவித்தார்.

எவ்வாறிருந்த போதினும் இந்த ஒற்றுமை காட்டும் பாவனை முற்றிலும் வெளிக்காட்சியில் தான் உள்ளது. உண்மையில் ECB நிர்வாக கவுன்சில் ஆழமாக பிளவுபட்டுள்ளது, இறையாண்மை பத்திரங்கள் வாங்கும் நகர்வுகள் ஏனைய நாடுகளின் கடன்களுக்கு ஜேர்மன் வங்கிகள் பொறுப்பேற்க செய்துவிடுமென அஞ்சி, ஜேர்மன் பிரதிநிதிகள் QE முறைமைகளை எதிர்த்தனர். ஜேர்மன் வங்கிகள் அவற்றின் சமதரப்பு அமெரிக்க மற்றும் ஏனைய போட்டியாளர்களைப் போலவே ஏற்கனவே மூலதனம் குறைந்து போயுள்ளன என்பதுடன், அவை 2007-2008இன் குறைந்த பிணையுள்ள அடமானக்கடன் (sub-prime) வீழ்ச்சியின் விளைவாக பெரும் பாதிப்புளை அடைந்துள்ள நிலையில், முழு அளவிலான QE கொண்டு வரப்பட்டால் அவற்றின் நிலைமை மேற்கொண்டும் பலவீனப்படுமென்று அஞ்சுகின்றன.

அதிகரித்துவரும் பணச்சுருக்க அச்சுறுத்தலுக்கு இடையே, ECBஇல் நிலவும் பிளவுகள் குறைவதாக இல்லை மாறாக அதிகரித்து வருகின்றன.

ஜனவரி 10இல் பிரசுரமான செய்தியிதழ் Der Spiegelக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ECBஇன் நிர்வாக கவுன்சின் ஒரு ஜேர்மனிய பிரதிநிதி சபின் லாடென்ஸ்லைடர் கூறுகையில், அவர் அரசாங்க பத்திரங்களைப் பெருமளவிற்கு வாங்குவதன் அவசியம் மீது முழுமையாக உடன்படவில்லை என்றார்.

கடந்த மாதங்களில் ECB போதுமான நிதிகளை உறுதிப்படுத்த பல தொடர்ச்சியான முறைமைகளை எடுத்திருந்த போதினும், தெற்கு ஐரோப்பாவின் கடன்-வழங்கு அமைப்புகள் பணப்புழக்கமின்மையால் பாதிக்கப்பட்டு வந்தன என்பது பிரச்சினை அல்ல என்று தெரிவித்த அவர், "மாறாக பல வங்கிகள் கடன்களை நீடிப்பதில் தயக்கம் காட்டுகின்றன ஏனென்றால் கடன்பெறுபவர்களால் அவற்றைத் திருப்பி அளிக்க முடியாமல் போவதற்கு அங்கே பெரும் அபாயம் இருப்பதாக அவை நம்புகின்றன," என்றார்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் "வெற்றிகரமான" பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டம் (இது நிதியியல் சந்தைகளுக்குள் சுமார் 4 ட்ரில்லியன் டாலர் செலுத்தி இருப்பதாக கருதப்படுகிறது) ஒரு "மறுயோசனையைக்" கொண்டு வருமா என்று கேட்ட போது, யூரோ பகுதியின் வேறுபட்ட பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் காரணமாக அதுபோன்ற எந்தவொரு ஒப்பீடும் தவறாக பாதைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று லாடென்ஸ்லைடர் பதிலளித்தார். அந்த நேர்காணலின் தொடக்கத்தில் "செலாவணி மண்டலத்தில் 19 இறையாண்மை அரசுகள் உள்ளடங்கி உள்ள" நிலையில், அதன் "தனித்தன்மைகள்" கருத்தில் எடுக்கப்பட வேண்டுமென்று அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஓர் ஒருங்கிணைந்த கொள்கையை முன்னுக்கு கொண்டு வருதல் என்பது எதிர்விரோத மற்றும் முரண்பட்ட தேசிய-அரசுகளுக்குள் நிலவும் பிளவு பகுதியின் மீது தத்தளித்து வருகிறது.

அதைக் கடந்து வருவதற்கு மாறாக, அடுத்த வியாழனன்று ECBஆல் எடுக்கப்படும் எந்தவொரு முடிவின் விளைவும் இத்தகைய பிளவுகளை ஆழப்படுத்தக் கூடும். எந்த நாட்டின் பத்திரங்கள் வாங்கப்படுகிறதோ அந்நாட்டின் மத்திய வங்கியே நிதியியல் உத்தரவாதமளிப்பவராக நிற்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் இறையாண்மை பத்திர கொள்முதல்களை நடைமுறைப்படுத்துவது என்பதும் பரிசீலனையில் இருக்கும் பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது.

திங்களன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸின் ஐரோப்பிய பொருளாதார பிரிவு விமர்சகர் வொல்ஃப்காங் முன்சௌவ் குறிப்பிடுகையில், அதுபோன்ற எந்தவொரு முடிவும் துல்லியமாக "ஒரே செலாவணி கொள்கையின் முடிவாக இருக்கக்கூடும்" மற்றும் அதை பரிந்துரைத்தவர்களே "அவர்கள் ஒருபோதும் முதலிடத்தில் QEஐ கோரி இருக்கக்கூடாது" என்று நினைக்குமாறு செய்துவிடும் என்று எழுதினார்.

சுவிஸ் முடிவின் முழுமையான துணை விளைவுகள் இன்னும் உணர வேண்டியுள்ளன. ஆனால் ஏற்கனவே அது நிதியியல் சந்தைகளின் அதிகரித்துவரும் பலவீனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது, அதேவேளையில் இதர நிதியியல் ஆணையங்களுக்கு எந்தவித தகவலும் வழங்காமல் அது நடைமுறைப்படுத்தப்படும் விதமானது, பொருளாதார நெருக்கடி ஆழமடைகையில் முரண்பட்ட தேசிய நலன்கள் அதிகளவில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் விதத்தை எடுத்துக்காட்டுகின்றன.