சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF cuts growth forecast amid warnings of rising global unemployment

அதிகரித்துவரும் உலகளாவிய வேலைவாய்ப்பின்மை எச்சரிக்கைகளுக்கு இடையே சர்வதேச நாணய நிதியம் வளர்ச்சி முன்மதிப்பீட்டை குறைக்கின்றது

By Nick Beams
21 January 2015

Use this version to printSend feedback

சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான அதன் கடந்த அக்டோபர் மதிப்பீட்டிலிருந்து 0.3 சதவீத புள்ளிகளை வெட்டி, 2015 வளர்ச்சிக்கான அதன் முன்மதிப்பீட்டை குறைத்துள்ளது. அதேநேரத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) அடுத்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரிக்குமென எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய மந்தநிலை அறிகுறிகளின் காரணமாக 2012ஆம் ஆண்டுக்கான அதன் முன்மதிப்பீட்டை IMF 4 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக அவ்வாண்டின் ஜனவரியில் குறைத்த பின்னர் செய்யப்பட்ட மிகப்பெரிய மறுதிருத்தமான இது, ஆழமடைந்துவரும் உலகளாவிய கீழ்நோக்கிய திருப்பத்தின் ஒரு அறிகுறியாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட உலகளாவிய போக்குகள் மீதான உலக வங்கியின் அறிக்கையில் செய்யப்பட்ட இதேமாதிரியான மறுதிருத்தத்தைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மதிப்பிறக்கமும் வந்துள்ளது.

எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி, குறைந்தபட்சம் எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு, "நிதிய உந்துதலை கொடுத்தாலும்", இது "பல அபிவிருத்தி அடைந்த மற்றும் எழுச்சிபெற்றுவரும் சந்தை பொருளாதாரங்களில்,  திருத்தங்கள் செய்துகொள்வதற்கான எதிர்பார்ப்புக்களை நலிவடைய செய்வதுடன் இன்னும் முதலீட்டு பலவீனம் உட்பட இடைக்கால வளர்ச்சி தொடர்வது என்பதும் எதிர்மறைக் காரணிகளால் மேலும் பிரதியீடுசெய்யப்படும்,” என்று IMF தெரிவித்தது. 

IMF தலைமை பொருளியல் நிபுணர் ஒலிவியே பிளோன்சார்ட் கூறுகையில், உலக பொருளாதாரம் பலமான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்ட சிக்கலான போக்குகளை முகங்கொடுத்து வருவதாக தெரிவித்தார். பிரதான பொருளாதாரங்கள் எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து ஆதாயமடைந்து வருகின்ற போதினும், உலகின் பெரும் பாகங்கள் "பலமான அடிநகர்வின்" விளைவாக, நீண்டகால வாய்ப்புவளங்கள் குறைந்து போனதால் பாதிப்படைந்து வருகின்றன.     

மலிவு எண்ணெய்யிலிருந்து ஒரு ஊக்குவிப்பு கிடைக்குமென்ற அடித்தளத்தில் IMF அமெரிக்க வளர்ச்சி மீதான அதன் முன்மதிப்பீட்டை 3.1 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதத்திற்கு உயர்த்தி மறுதிருத்தம் செய்தது. ஆனால் உலகளாவிய பொருளாதாரத்தின் ஏனைய முக்கிய பகுதிகளுக்கான கீழ்நோக்கி இறக்க மறுதிருத்தங்களை எதிர்கொள்ள இது போதுமானதல்ல.

எண்ணெய் விலைகளின் சரிவால் கைதூக்கிவிடப்பட்டதற்கு இடையிலும், அது யூரோ பகுதிக்கான முன்மதிப்பீட்டை 1.3 சதவீதத்திலிருந்து 1.2 சதவீதத்திற்குக் குறைத்து மறுமதிப்பு செய்தது, ஏனென்றால் "முதலீடு பலவீனமடையும் சாத்தியக்கூறுகளால்" வளர்ச்சிக்கான வாய்ப்பு சுமையேற்றப்பட்டு இருந்தது. 

எவ்வாறிருந்த போதினும், எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி என்பது இருமுனை கத்தியாக இருப்பதுடன், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் குறிப்பிடத்தக்க இறுக்கங்களை உண்டாக்கும்.

மிகப்பெரும் பாதிப்பு ரஷ்யாவில் உணரப்பட்டு வருகிறது, அது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற அதன் அந்தஸ்தை இழந்துள்ளது. இந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட மறுகட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய வங்கியின் ஓர் அறிக்கை குறிப்பிடுகையில், கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் சராசரி வளர்ச்சி 2009க்குப் பின்னர் முதல்முறையாக எதிர்மறை பகுதிக்குள் வீழ்ந்து வருவதுடன் சேர்ந்து, ரஷ்ய பொருளாதாரமோ இந்த ஆண்டு 5 சதவீதத்திற்கு நெருக்கத்திற்கு சுருங்கக்கூடுமென அறிவித்தது.

சீனா 2015இல் 6.8 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியுறும் என்று மதிப்பிட்டு, IMF அது கடந்த அக்டோபரில் மதிப்பிட்ட 7.1 சதவீதத்திலிருந்து சீனாவிற்கான அதன் முன்மதிப்பீட்டை குறைத்தது. நேற்று சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள், 2014இல் வளர்ச்சி 7.4 சதவீதமாக, 24 ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருந்ததை எடுத்துக்காட்டியது, அது 2013இல் 7.7 சதவீத உயர்வை பதிவு செய்திருந்தது.

ஜப்பான் பொருளாதாரம் அதன் மூன்றாவது காலாண்டில் பின்னடைவிற்குள் சறுக்கிய பின்னர், அது "படிப்படியாக மீளுயரும்" என்ற அனுமானங்கள் இருந்தபோதினும், IMF அதன் முன்மதிப்பை 0.8 சதவீதத்திலிருந்து 0.6 சதவீதமாக வெட்டியது. “அபேனோமிக்ஸ்" என்றழைக்கப்பட்டது தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளும் விதத்தில், பிளான்சே கூறுகையில், தனியார் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் தேவை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய தவறியுள்ளதுடன் சேர்ந்து, ஜப்பானின் மிகக் குறைந்த வளர்ச்சி "2014இன் மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்றாகும்" என்றார்.

IMF இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் வளர்ச்சியையும் குறைவாகவே முன்மதிப்பீடு செய்துள்ளது.

அந்த புதுப்பிக்கப்பட்ட விபரங்களில் நிதியியல் சந்தைகளின் கொந்தளிப்பையும் சுட்டிக் காட்டியது. சந்தைகளின் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட அபாயங்கள் மற்றும் ஏற்ற-இறக்கங்களின் தாக்கங்கள் அதில் இன்னமும் அதிகரிக்கப்பட்டு இருந்தன. “பிரதான பொருளாதாரங்களின் நடவடிக்கையில் ஏற்படும் ஆச்சரியங்கள் அல்லது சமநிலையற்ற உலகளாவிய விரிவாக்கத்தின் உள்ளடக்கத்தில் அமெரிக்காவில் கொண்டு வரப்படும் செலாவணி கொள்கையை இயல்பாக்கும் பாதையில் ஏற்படும் ஆச்சரியங்கள், சாத்தியமான தூண்டுபொருள்களாக இருக்கக்கூடும்.” 

அதுபோன்றவொரு ஆச்சரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தான், கடந்த வாரம் சுவிஸ் தேசிய வங்கி பிரான்ங்க் மதிப்பு மீதிருந்த உச்சவரம்பை அகற்றுவதென்று எடுத்த முடிவால் வழங்கப்பட்டது, அது வங்கிகள் மற்றும் செலாவணி வர்த்தகர்களின் நூறு மில்லியன் கணக்கான டாலர்களின் இழப்பை விளைவாக கொண்டு வந்தது.

அந்த சுவிஸ் நடவடிக்கை கொந்தளிப்பிற்கு சாத்தியமான எதிர்கால ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டிவிகிதங்களை இறுக்குவதை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது, இது டாலர் அடித்தளத்திலான கடன்கள் அதிகரித்துள்ள எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் இருந்து மூலதனம் வெள்ளமென வெளியேறுவதைத் தூண்டிவிடக்கூடும் என்ற அச்சம் அங்கே நிலவுகிறது. அமெரிக்க வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் டாலர் மதிப்பு உயர்வின் தாக்கம், பெருநிறுவனங்களால் வாங்கப்பட்ட நிஜமான கடன் சுமையை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும்.

மூலதன ஓட்டம் திரும்பிசெல்லும் அபாயம் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் அதிகமாக இருந்து வருகிறது, அங்கெல்லாம் "வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இருப்புநிலை கணக்கு அறிக்கையின் பாதிப்புத்தன்மைகள் அதிகரித்துள்ளன,” என்று IMF குறிப்பிட்டது.

உலகளாவிய பொருளாதாரத்தின் மோசமடைந்துவரும் நிலைக்கு மற்றொரு அறிகுறியானது, நேற்று பிரசுரிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஆய்வறிக்கையிலும் வழங்கப்பட்டது. “மெதுவான வளர்ச்சி, விரிவடைந்துவரும் சமத்துவமின்மைகள் மற்றும் கொந்தளிப்பு ஆகியவற்றோடு சேர்ந்த ஒரு புதிய காலக்கட்டத்திற்குள் உலக பொருளாதாரம் நுழைந்துள்ளதால்" வரவிருக்கும் ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அது குறிப்பிட்டது.

2019 வாக்கில் 212 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையின்றி இருப்பார்களென்றும், அது தற்போதைய 201 மில்லியன் அளவை விடவும் அதிகமென்றும் அவ்வமைப்பு முன்மதிப்பீடு செய்கிறது. 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும் கூட, வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து உயரும் என்ற உண்மையானது, அது ஒரு வெறுப்பூட்டும் கீழிறக்கம் அல்ல மாறாக அது உலக பொருளாதாரத்தில் ஒரு அடிப்படை மாற்றம் என்பதைக் குறித்துக் காட்டியது. ILOஇன் பொது மேலாண்மை இயக்குனர் கே ரெய்டர் கூறுகையில், 2008இல் இருந்து 61 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலைகளை இழந்துள்ளதாக தெரிவித்தார்.   

தற்போது 2014இல் ஏறத்தாழ 13 சதவீதமாக இருக்கும் உலக இளைஞர் வேலைவாய்ப்பின்மை வரவிருக்கும் ஆண்டுகளில் மேற்கொண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் சேர்ந்து, குறிப்பாக 15 மற்றும் 24 வயதிற்கு இடைப்பட்ட இளம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகரித்துவரும் மற்றும் நீடித்த சமத்துவமின்மை மற்றும் நிச்சயமற்ற முதலீட்டு வாய்ப்புவளங்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை சிக்கலாகி விட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும் வருவாய் சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் சேர்ந்து, இத்தகைய போக்குகள் தொடரக்கூடும்.

“ஊதியக் குறைவால் மக்கள் நுகர்வைக் குறைத்து கொள்ள வேண்டியிருந்தால், மற்றும் முதலீடு குறைந்து கொண்டே வருவதாக இருந்தால், இது நிச்சயமாக வளர்ச்சியில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும்,” என்று ரெய்டர் தெரிவித்தார்.

தற்போதைய போக்குகள் கவலை அளித்து வருகின்ற போதினும், “குறிப்பாக, தொடர்ந்து அதிக தேவைப்பாடு இல்லாமை, யூரோ மண்டலத்தின் மந்தநிலைமை, உற்பத்தி முதலீட்டிற்கான நிச்சயமற்ற வாய்ப்புவளங்கள், அதுவும் குறிப்பாக சிறிய நிறுவனங்கள் மத்தியில், மற்றும் நிலவிவரும் சமத்துவமின்மை ஆகிய அடியிலுள்ள பலவீனங்களை நாம் சமாளித்தால், ஒட்டுமொத்த பொருளாதார சித்திரத்தை நம்மால் மேம்படுத்த முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், இத்தகைய நிலவிவரும் பொருளாதார மற்றும் சமூக நோய்களைக் கையாளுவது போன்ற மங்கலான  ஒரு கொள்கை, தொலைதூர காலத்தில் சாத்தியக்கூறாக கூட அறவே இல்லை.  

மாறாக அனைத்து பிரதான அரசாங்கங்களும் வேலைகளை வெட்டுவது, ஊதியங்களைக் குறைப்பது மற்றும் வேலையிட நிலைமைகளை மோசமாக்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்ட மறுசீரமைப்புடன் சேர்த்து, தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நிலைமையை மேற்கொண்டும் மோசமாக்கும் சிக்கன மற்றும் செலவின வெட்டுக்களைத் திணித்து வருகின்றன.

முக்கிய உலகளாவிய பொருளாதார கொள்கை, நிஜமான பொருளாதாரத்தில் தேவையை அதிகளவில் தூண்டுவதை நோக்கி இல்லை, மாறாக பணத்தைப் புழக்கத்தில் விடுவதன் மீது குவிந்துள்ளது—அதாவது ஊகவணிகங்களுக்கு நிதியளிப்பதற்காக நிதியியல் அமைப்புமுறைக்கு அதிதீவிர- வட்டிகுறைந்த பணத்தை செலுத்துவது, அதன்மூலம் நிதியியல் மேற்தட்டின் மேலே உள்ள அடுக்குகளின் செல்வ வளத்தை மற்றும் வருவாயை அதிகரிப்பதற்காக உள்ளது, அது இன்னும் அதிகமாக சமூக சமத்துவமின்மை விரிவடைவதற்கு இட்டுச் செல்கிறது.