சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s State of Delusion

நாட்டின் நிலைமை தொடர்பான ஒபாமாவின் பொய்க்காட்சி  

Patrick Martin and Joseph Kishore
22 January 2015

Use this version to printSend feedback

“நெருக்கடியின் நிழல் கடந்துவிட்டது" என்ற அவரது அறிவிப்புடன் மகுடம் சூட்டப்பட்டு, உயர்ந்துவரும் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஓர் அதிகரித்துவரும் பொருளாதாரமாக அமெரிக்காவைச் சித்தரித்து காட்டி, செவ்வாயன்று ஒபாமா வழங்கிய நாட்டின் நிலைமை தொடர்பான உரையின் ஏமாற்றும் குணாம்சம், அனேகமாக ஊடகங்கள் மற்றும் ஜனநாயக கட்சி ஆதரவாளர்களின்  சித்தரிப்புக்கு மட்டுமே பொருத்தமாக உள்ளது.

அதன் பொதுவான தொனி நியூ யோர்க் டைம்ஸால் புதனன்று அதன் பிரதான தலையங்கத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. "மத்திய மற்றும் தொழிலாள வர்க்கம் தரைமட்டத்தில் கிடக்கையில் பொருளாதார நேர்மையைக் குறித்தும் மற்றும் வசதிபடைத்தவர்களான பெரும் வருமானம் ஈட்டுபவர்கள், பெரிய வங்கிகள், சிலிகான் பள்ளத்தாக்கு ஆகியவர்கள் சிறப்பான் நிலைமையில் இருப்பதாக குறிப்பிட்ட ஓர் எளிமையான, வியத்தகு சேதியாக" அந்த உரையை அது வர்ணித்தது.

ஒபாமாவின் கருத்துக்களை சமூக சமத்துவமின்மையைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்திற்கான ஓர் அறைகூவலாக சித்தரிக்கும் முயற்சி, அனைத்தினும் முதலாவதாக இந்த அழைப்பை விடுக்கும் தனிநபராக காட்டப்படும் அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசின் தலைவராக இருப்பவராவார் என்ற சங்கடமான உண்மையை நோக்கி செல்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளான பல ட்ரில்லியன் டாலர் வங்கி பிணையெடுப்புகள், ஊதியங்கள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதல், சமூக திட்டங்களின் மீது இரக்கமற்ற வெட்டுக்கள் மற்றும் ஒபாமாகேர் என்று அறியப்படும் மருத்துவ பராமரிப்பில் சமூக எதிர்புரட்சி ஆகியவற்றிற்கும் அமெரிக்காவில் மேலோங்கி உள்ள சாதனை அளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் போல டைம்ஸ் எழுதுகிறது.        

அந்த உரையின் தொடக்கத்தில் ஒபாமா எழுப்பிய கேள்வியை டைம்ஸ் எடுத்துக்காட்டுகிறது: “நம்மில் ஒருசிலர் மட்டும் மிதமிஞ்சி சிறப்பாக இருக்கும் ஒரு பொருளாதாரத்தை நாம் ஏற்றுக் கொள்வோமா? அல்லது வருமானங்களை அதிகரிக்க செய்யும் மற்றும் முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கும் ஒரு பொருளாதாரத்திற்கு நாம் பொறுப்பேற்க உள்ளோமா?”

அவரது ஜனாதிபதி ஆட்சிகாலத்தின் செயல்பாடுகளைக் குறித்த மேலோட்டமான அறிவுடன், அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த எவரொருவருமே கூட, ஒபாமாவைப் பொறுத்த வரையில் மற்றும் அவரது தலைமையில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தைப் பொறுத்த வரையில், தெளிவாக அந்த கேள்விகளில் முதலாவதுதான் பதிலாகும் என்பதை உடனடியாக பதிலாக கூறிவிடுவார்.    

அந்த பரிந்துரைகளைப் பொறுத்தவரையில் அரச கல்லூரிகள், குழந்தை பராமரிப்பு மற்றும் கல்லூரி கல்விக்கான நிதி உதவிகள், குறைந்தபட்ச ஊதியத்தில் ஓர் உயர்வு மற்றும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு உட்பட நேர்மையற்ற அரைகுறை நடவடிக்கைகள் பெருவணிகத்தின் நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டவையாக உள்ளபோது, அதுவும், அனைவரினும் குறைந்தபட்சம் ஒபாமாவுமே, யாருமே அது நிறைவேறுமென எதிர்பார்க்கவில்லை.    

டைம்ஸே கூட ஒப்புக்கொள்கிறது, “திரு. ஒபாமாவுக்கு தெரியும் அவரது திட்டங்கள் காங்கிரஸில் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு பூஜ்ஜியத்திற்கும் குறைவான வாய்ப்பே உள்ளன.” அவர் பரிந்துரைத்த முறைமைகள் கேபிடெல் ஹில்லில் ஏற்றுக்கொள்ளப்படுமென ஒபாமாவிற்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை என்பதை நாட்டின் நிலைமை தொடர்பான உரைக்கு முன்னதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் எவ்வித தயக்கமுமின்றி ஒப்புக் கொண்டனர். “இந்த காங்கிரஸ் எதை நிறைவேற்றும் என்பதோடு நாங்கள் மட்டுப்பட்டவர்களாக இருக்க மாட்டோம், ஏனென்றால் அது மிகவும் சலித்து போகும் இரண்டு ஆண்டுகளாக மாறிவிடும்,” என்று வெள்ளை மாளிகை மூத்த ஆலோசகர் டான் ஃபெய்பர் அந்த உரைக்கு முன்னதாக பத்திரிகைக்குத் தெரிவித்தார். 

முந்தைய நாட்டின் நிலைமை தொடர்பான உரைகளுமே, ஒபாமா ஒரு "முற்போக்கான" திட்டத்தை முன்னெடுக்க விரும்பினார் என்ற பிரமைகளை உருவாக்கும் நோக்கில், இதேபோன்ற விருப்ப பட்டியல்களை உருவாக்கி இருந்தன. அந்த பரிந்துரைகளும் ஜனாதிபதி புகைப்படத்திற்கு காட்சியளிக்கும் கடமைப்பாட்டு சுற்றுப்பயணங்களும் மற்றும் கல்லூரி வளாகங்களில் உரைகளும் முடிந்ததும் கைவிடப்பட்டன. 

அவரது 2014 நாட்டின் நிலைமை தொடர்பான உரையில், ஒபாமா வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றும்  பெருநிறுவனங்களின் வரி ஏமாற்றுக்களை முடிவுக்குக் கொண்டு வரவும், வேலைகளை உருவாக்குவதற்காக உள்கட்டமைப்பு திட்டங்களில் பத்து பில்லியன்களை முதலீடு செய்யவும், குடும்ப வருமானம் சாராமல் ஒவ்வொரு நான்கு வயது குழந்தைக்கும் கிடைக்கும் வகையில் மழலையர் பள்ளிகளை உருவாக்கவும், மற்றும் பெண்களுக்கும் சமமான சம்பளம் வழங்கவும் அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு மானிய முத்திரைகள் வெட்டப்பட்டன, நீண்டகால வேலைவாய்ப்பின்மை திடமாக உயர்ந்து இருந்தன, வறுமை அதிகரித்தது, மற்றும் ஊதியங்கள் தேக்கமடைந்தன. 

மறுபுறம் உள்நாட்டு கொள்கையில் ஒபாமாவின் ஒவ்வொரு பிரதான முனைவுகளான, 2009 ஊக்கப்பொதி, 2010 மருத்துவ பராமரிப்பு சீர்திருத்த சட்டத்திருத்தம், 2010 நிதியியல் நெறிமுறை மேற்பார்வையிடல், காங்கிரஸில் உள்ள குடியரசு  கட்சியினருடன் எண்ணிலடங்கா வரவுசெலவு கணக்கு உடன்படிக்கைகள், துல்லியமாக ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஆணை ஆகியவை பெருநிறுவன அமெரிக்காவின் தேவைகளுக்காக ஆணையிடப்பட்டன.மேலும், பல விடயங்களில், பெருநிறுவன தரகர்களாலே வரையப்பட்டன. 

உழைக்கும் மக்களுக்கான பின்விளைவுகளான மிகஅதிக நீண்டகால வேலைவாய்ப்பின்மை, வீடுகளை ஏலத்திற்குவிடுவது மலையளவு அதிகரிப்பது, அடிப்படை தொழில்துறையில் ஊதியங்களை வெட்டுதல், ஒட்டுமொத்தமாக வாழ்க்கை தரங்களில் சீரான வீழ்ச்சி ஆகியவை தற்செயலானவை அல்ல. அவை குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இரு தரப்புக்குமே, அரசாங்க கொள்கையின் திட்டமிட்ட நோக்கமாக இருந்தன. ஏனென்றால் தொழிலாளர் வர்க்கத்தின் பாரிய அவலங்கள் நிதியியல் பிரபுத்துவத்திற்குப் பிணையெடுப்பு வழங்க அவசியமான நிதிய வளங்களைப் பெற்றுக்கொள்ள அவசியமாக இருந்தன.

2016 தேர்தல்களில் ஜனநாயக கட்சியினரை ஊக்குவிப்பதற்காக ஜனநாயக கட்சியைச் சுற்றி வருகிற பல்வேறு பத்திரிகைகளான டைம்ஸ், தி நேஷன் இதழ் போன்றவை (இதன் கட்டுரையாளர் ஜோன் நிகோலஸ் அந்த உரையை "வருவாய் சமத்துவமின்மையைத் தீர்ப்பதற்கான ஒரு தீவிர முயற்சியாக" வர்ணித்திருந்தார்) மற்றும் தொழிற்சங்கங்கள், தம்மை சோசலிஸ்டுகளாக காட்டிக்கொள்ளும் போலி இடது அமைப்புகள் உள்ளடங்கிய வலைப்பின்னலுக்கு தீனி போடுவதே, ஒபாமாவினது கருத்துக்களின் முக்கிய நோக்கமாகும்.

இதனோடு பல்வேறு அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களின் உயர்தர மத்தியதட்டு வர்க்க ஆதரவாளர்களை இலக்குவைத்த மேற்கோள்களால் ஒபாமாவின் உரை தூவப்பட்டிருந்தது. (சான்றாக, திருநங்கைகள்-“transgender”-என்றவொரு வார்த்தையை அவரது உரையில் சேர்த்ததன் மூலமாக ஒபாமா "செவ்வாயன்று இரவு வரலாறு படைத்ததாக" டைம்ஸ் இதழ் உணர்ச்சி பொங்க எழுதியது.)     

எவ்வாறு ஜனநாயக கட்சியை முற்போக்கான நிறங்களில் வர்ணமிடுவது என்று இப்பிரிவினருக்கு அவர் எடுத்துக் கூறுகிறார். வெளிநாடுகளில் முடிவில்லா போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுடன் சேர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் மேலதிகமாக வலதுசாரி கொள்கைகளைக் கொண்டு வருவதில் குடியரசு கட்சியினருடன் அது இணைந்து வேலை செய்து வருகின்ற நிலையில், எவ்வாறு ஜனநாயக கட்சி அமெரிக்க மக்களை முட்டாளாக்க முனையும் என்பது தான் இங்கே இருக்கிறது.

எவ்வாறிருந்த போதினும், ஒபாமா மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் ஏமாற்றுத்தனங்களோ, சுய-ஏமாற்றுத்தனங்களோ மற்றும் பொய்களோ அமெரிக்க அரசியல் வாழ்வின் அடியிலுள்ள எதார்த்தத்தை, அதாவது ஒட்டுமொத்த அரசு அமைப்பிற்கும் மற்றும் பரந்த பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான இணைக்க முடியாத இடைவெளியை, மாற்றிவிடாது. இடைக்காலத்தேர்தல்களுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர் வழங்கப்பட்ட ஒபாமாவின் இந்த உரை பிரதானமாக “மாற்றத்திற்கான வேட்பாளரிடமிருந்து" வந்த ஆறு ஆண்டுகால வலதுசாரி கொள்கைகளால் வாக்காளர் ஆதரவு பொறிந்து போயிருந்தும் அத்தேர்தல்களில் ஜனநாயக கட்சி அடைந்த தோல்வியைக் குறித்து எந்த குறிப்பும் குறிப்பிடப்படவில்லை.    

ஒருசில தேனொழுகும் பொய் வார்த்தைகளைக் கொண்டு, எதிர்வரவிருக்கும் சமூக எதிர்ப்பின் பேரலையை அதனால் தடுக்க முடியுமென்று ஆளும் வர்க்கமும் மற்றும் அதன் பிரதிநிதிகளும் நம்புவதே, அனேகமாக அனைத்தினும் மிக பிரமிப்பூட்டும் ஏமாற்றுத்தனமாகும்.