சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza wins Greek elections

கிரேக்க தேர்தல்களில் சிரிசா வெற்றி பெறுகிறது

By Alex Lantier
26 January 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் மற்றும் பழமைவாத பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸினது வெளியேறும் அரசாங்கத்தின் கொள்கைகளை ஒரு பரந்த வாக்காளர்கள் மறுத்தளித்ததால், கிரீஸில் நேற்று சட்டமன்ற தேர்தல்களில் தீவிர இடது கூட்டணி (சிரிசா) முதலிடத்தைப் பெற்றது.

கிரேக்க உள்துறை அமைச்சகத்தின் ஆரம்ப முன்வரைவுகளின்படியே, சிரிசா 36.34 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது, இது அனுமானிக்கப்பட்டதையும் விட மற்றும் சமரஸின் புதிய ஜனநாயக (ND) கட்சியின் 27.84 சதவீதத்தையும் விட பெரிதும் அதிகமாகும். மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் கட்சிக்கு வழங்கப்படும் 50 கூடுதல் இடங்களுக்கும் நன்றி கூற வேண்டும், நாடாளுமன்றத்தில் NDஇன் 76 இடங்களுடன் ஒப்பிடுகையில் சிரிசா நாடாளுமன்றத்தில் 149 இடங்களைப் பெற்றிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மையைப் பெற 151 இடங்கள் தேவை என்பதால் இது இரண்டு இடங்களின் பற்றாக்குறையில் உள்ளது, ஆகவே ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க சிரிசா பங்காளிகளைக் காண வேண்டியிருக்கும்.

நவ-நாஜி கோல்டன் டௌன் கட்சி 6.30 சதவீத வாக்குகளுடன் (17 இடங்கள்) மூன்றாவது இடத்தையும், To Potami (River) கட்சி 6.03சதவீதமும் (16 இடங்கள்) மற்றும் ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) 5.47 சதவீதமும் (15 இடங்கள்) எடுக்குமென கணிக்கப்படுகிறது. சமூக-ஜனநாயக PASOK வெறும் 4.72 சதவீதமும் (13 இடங்கள்) மற்றும் NDஇல் இருந்து பிரிந்து வந்த Independent Greeks கட்சி 4.68 சதவீதமும் (13 இடங்கள்) பெற்றன.

1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் ஐரோப்பாவில் முன்கண்டிராத ஒரு மிகப்பெரிய பொருளாதார பொறிவிற்கு இட்டுச் சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளை வாக்காளர்கள் தேர்தல்களில் கண்டித்துள்ளனர். 2009க்குப் பின்னரில் இருந்து, வேலை மற்றும் வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் மில்லியன் கணக்கான கிரேக்கர்களை வேலைவாய்ப்பின்மைக்குள் வீசியுள்ளது; மருத்துவ பராமரிப்புகளை அவர்கள் இழக்குமாறு செய்துள்ளது; கிரீஸின் பொருளாதார வெளியீடு 25 சதவீத அளவுக்கும் மற்றும் ஊதியங்கள் அதனினும் கூடுதலாகவும் வெட்டப்பட்டதுடன், இளைஞர் வேலைவாய்ப்பின்மை 60 சதவீதத்திற்கு தள்ளப்பட்டது.

கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சிகளான PASOK, ND ஆகியவற்றை வாக்காளர்கள் மறுத்தளித்திருப்பது வங்கிகளால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீதிருந்த மக்களின் கோபத்தை பிரதிபலிக்கிறது. இருப்பினும் சிரிசாவுமே, ஐரோப்பிய ஒன்றியம், யூரோ மற்றும் முதலாளித்துவ பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்றுள்ள ஒரு முதலாளித்துவ கட்சியே ஆகும். கிரேக்க வாழ்வை மேம்படுத்துவது குறித்து ஒருசில வெற்று வாக்குறுதிகளை அது அளித்துள்ள போதினும், அது ஐரோப்பிய வங்கிகளுடன் ஓர் இணக்கத்திற்கு வரும் நோக்கில் திரைக்குப் பின்னால் ஆழ்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.   

வெற்றி பெற்றதன் மீது ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் அளித்த உரையில், சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் கூறுகையில் கிரீஸ் மற்றும் ஐரோப்பாவிற்கான ஒரு "புதிய நம்பகமான தீர்வை" கண்டறிய இருப்பதாக அறிவித்தார். ஏதென்ஸின் அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து சிக்கன கொள்கைகளை ஏற்பாடு செய்த ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சிப்ராஸ் கூறுகையில் “முக்கூட்டு (Troika), அது கடந்த காலமாகிவிட்டது, என்றார்.  

ஆனால் அந்த "முக்கூட்டை" உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புகளின் மிக முக்கியமான கிரேக்க கடன்வழங்குனர்களுடன் வேலை செய்ய காலந்தாழ்த்தாமல் சிப்ராஸ் வாக்குறுதி அளித்தார். கிரேக்க அரசாங்கம் "நமது கடன் வழங்குனர்களுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பரஸ்பர தீர்வை பேரம்பேச தயாராக" இருக்கும், அத்துடன் அது "காஸன்ட்ரா குறித்த அனைத்தும் தவறு என்பதையும் நிரூபிக்கும். பங்காளிகளுடன் அங்கே எந்த மோதலும் இருக்காது.

சிரிசா அரசாங்கம் "ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கைப் பேணும், பண்புரீதியிலான இலக்குகளுக்குப் பொறுப்பேற்கும்" என்ற முந்தைய வாக்குறுதிகளை இத்தகைய கருத்துக்கள் எதிரொலித்தன.

கிரேக்க கடனைத் திருப்பி அடைக்கும் வரையறைகளில் ஒரு மறுதிருத்தம் உட்பட, ஐரோப்பிய வங்கிகளுடன் ஏதோவொரு வகைப்பட்ட உடன்பாட்டை எட்டுவதே சிப்ராஸின் பிரதான நோக்கமாக உள்ளது. உண்மையில் அங்கே அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், கிரேக்க கடன்பத்திரங்களுக்குப் பணம் திரும்ப செலுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அதுபோன்றவொரு மறுதிருத்தம் அவசியமானதென அக்கறை கொண்டுள்ளன

சிக்கன நடவடிக்கைகளில் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை கொடுத்து வரும் ஜேர்மனியில் உள்ள அதிகாரிகளோ, கிரேக்க தொழிலாளர்கள் மீதான தாக்குதலில் எந்தவித குறைப்பும் இருக்கக் கூடாதென வலியுறுத்தினர். ஜேர்மனியின் பலம் பொருந்திய மத்திய வங்கியின் (Bundesbank) தலைவர் ஜென்ஸ் வைட்மான் வலியுறுத்துகையில், அந்நாட்டால் தாங்க முடியாத அளவுக்கு" கிரேக்க அரசாங்கம் "வாக்குறுதிகளை அளிக்க" கூடாது என்றார்.   

கொள்கை போக்கின் அனைத்து விவாதங்களும் கிரேக்கத்திலும் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கட்டமைப்பிற்குள் நடந்து வருகின்றன. அதிகபட்சமாக, சிப்ராஸ் தொழிலாள வர்க்கத்தின் மீது மேலதிகமான தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்வதற்காக அல்லது கால அவகாசத்தைப் பெறுவதற்காக, ஒரு வெற்றியாக பெருமையடித்துக் கொள்ளக்கூடிய ஒரு விட்டுக்கொடுப்பைப் பெற முடியுமென நம்பிக்கை கொண்டுள்ளார்.

கிரீஸ் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் முக்கிய சவால், அதற்கு முன்னால் திறக்கப்பட்டுவரும் அரசியல் போராட்டத்தின் முழு பரிமாணத்தையும் கவர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது. ஒரு சிரிசா அரசாங்கத்தில், தொழிலாளர்கள் ஒரு தீர்க்கமான எதிரியை முகங்கொடுக்கின்றனர். சிரிசாவின் சொந்த Thessaloniki வேலைத்திட்டமே கூட, அதிலிருந்து அது அதன் ஐரோப்பிய "பங்காளிகளுடனான" பேச்சுவார்த்தைகளில் ஒரு துரிதமான பின்வாங்கலைப் பெற தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், புதிய சமூக செலவினங்களுக்காக வெறும் 2 பில்லியன் யூரோ மட்டுமே செலவிட வாக்குறுதி அளித்தது, அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியமோ 2009இல் இருந்து கிரேக்க வரவு-செலவு திட்டக்கணக்கிலிருந்து 60 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாக வெட்டியுள்ளது.

சிரிசாவின் வெற்றி வங்கிகளுக்கு ஒரு அபாயத்தை முன்நிறுத்தாது என்பதை இதழாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மறுஉத்தரவாதம் அளிப்பதில், தேர்தல்களுக்கு முன்னதாக சிரிசா அதிகாரிகள் திரைக்குப் பின்னால் மிகவும் மும்முரமாக இருந்தனர். ஐரோப்பிய செய்தித்தளம் EurActiv எழுதியது: 2012இல் ஐரோப்பாவின் மிகவும் ஆபத்தான மனிதர்களில் சிப்ராஸின் பெயரை Der Spiegel எடுத்துக்காட்டும் அளவுக்கு இருந்த தீவிர இடது பிரஸ்தாபங்களை மிதப்படுத்திய ஒரு திட்டமிட்ட முயற்சியே, சிரிசாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகும் என்று கட்சி நிர்வாகிகள் தனிப்பட்டரீதியில் தெரிவிக்கின்றனர்.     

சிரிசாவின் முன்னாள் தலைவர் அலேகோஸ் அலவனோஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் இலண்டனின் பைனான்சியல் டைம்ஸிற்கு அளித்த ஒரு நேர்காணலில், அக்கட்சி வங்கிகளுக்கு அச்சுறுத்தலை முன்னிறுத்தாது என்று வலியுறுத்தினார். திரு சிப்ரஸிற்கு முன்னர் இருந்த சிரிசாவின் தலைவர் அலேகோஸ் அலவனோஸே கூட, கட்சியின் வாய்ஜால பரப்புரைகள் அதன் நோக்கங்களுக்கு பொருந்துகிறதா என்று கேள்வி எழுப்புகிறார், என்று குறிப்பிட்ட FT, சிரிசா "தற்போது ஒரு மிதவாத கட்சியாகும்" என்ற அலவனோஸின் கருத்துக்களை மேற்கோளிட்டுக் காட்டி முடித்திருந்தது

பொருளாதார வல்லுனர் ஜோன்-மார்க் டானியல், செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் பங்குபத்திர சொத்துக்களுக்கு நீண்டகால பாதிப்பு வருமாறு சிரிசா எதையும் செய்யாது என்று பிரான்சின் 20 Minutesக்கு மறுஉத்தரவாதம் அளித்தார். பங்குச் சந்தைகள் வழக்கமாக 'இடது' அரசாங்கங்கள் வருவதை விரும்புவதில்லை, ஆனால் அவற்றின் வேலைத்திட்டங்களை அவை கைவிடுகையில் அது படிப்படியாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அலெக்சிஸ் சிப்ராஸ் குறித்து மிகவும் வியப்பூட்டுவது என்னவென்றால், அவர் ஏற்கனவே அவரது வேலைத்திட்டத்தைக் கைவிட்டு வந்துள்ளார், என்று டானியல் குறிப்பிட்டார்.

நிதியியல் மூலதன அரசின் பிரதிநிதிகள் இந்தளவுக்கு பகிரங்கமாகவும், மற்றும் சிரிசா அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று இந்தளவுக்கு நம்பிக்கையோடும் இருக்கிறார்கள் என்றால், அது வங்கிகள் மற்றும் உளவுத்துறை முகமைகளால் சிரிசா முழுவதுமாக கூர்ந்து ஆராயப்பட்டுள்ளது என்பதனாலேயே ஆகும். 2012இல் கிரீஸில் சிரிசா ஒரு பிரதான வாக்காளர் சக்தியாக எழுச்சி பெற்ற போதிருந்து, சிப்ரஸ் பகிரங்கமாகவே கிரேக்க இராணுவத்துடன் சந்திப்புகளை நிகழ்த்தி உள்ளார், அத்துடன் மீண்டும் மீண்டும் யூரோ மண்டலத்தின் பிரதான தலைநகரங்களுக்கு பயணித்துள்ளார், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளைப் பாராட்டும் ஒரு நபர் என்று தன்னைத்தானே அறிவித்து கொண்ட பின்னர் வாஷிங்டனுக்கும் பயணித்துள்ளார்

கிரேக்க தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் நெருக்கடிக்கு முதலாளித்துவ-சார்பு கட்டமைப்புக்குள்ளோ அல்லது சிரிசாவின் தேசியவாத வேலைத்திட்டத்திற்கு உள்ளேயோ எந்தவொரு தீர்வையும் காண முடியாது. என்ன அவசியமாகிதென்றால் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.