சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Financial markets celebrate European Central Bank launch of €1 trillion quantitative easing program

ஐரோப்பிய மத்திய வங்கி 1 ட்ரில்லியன் யூரோ பணப்புழக்க திட்டம் தொடங்கியதை நிதியியல் சந்தைகள் குதூகலமடைகின்றன

By Nick Beams
23 January 2015

Use this version to printSend feedback

செப்டம்பர் 2016 வரையில், சாத்தியமானால் அதைக் கடந்தும், மாதந்தோறும் 60 பில்லியன் யூரோ அளவில் தேசிய அரசாங்கங்களின் கடனையும் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களையும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வாங்குமென வியாழனன்று அறிவித்து, குறைந்தபட்சம் இந்த பணப்புழக்க திட்டத்திற்கு (QE) அது 1.1 ட்ரில்லியன் யூரோ பொறுப்பேற்றுள்ளது.

அத்திட்டத்திற்கு ஜேர்மன் எதிர்ப்பை திசைதிருப்பும் நோக்கில் சமீபத்திய மாதங்களில் நடந்த தொடர்ச்சியான பேரங்கள் மற்றும் உத்திகளுக்குப் பின்னர் வந்திருந்த அந்த முடிவு, ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ திராஹியால் அறிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்பிற்கு விட்டுக்கொடுக்கும் வகையில், திராஹி அப்பிராந்தியத்தின் 19 மத்திய வங்கிகளும் 80 சதவீதத்தினை கொள்முதல் செய்யும் எனவும், அதில் எந்தவொரு அபாயங்களுக்கும் அந்தந்த வங்கிகளே பொறுப்பாகும் என்று அறிவித்தார்.

யூரோ மண்டலத்தில் கடந்த மாதம் பணவீக்க விகிதம் எதிர்மறையாக திரும்பி இருந்த நிலையில், பணச்சுருக்க அழுத்தங்களைக் கையாளவும் மற்றும் 2007இல் எட்டிய உற்பத்தி மட்டங்களை இதுவரை எட்டியிராத அப்பிராந்தியத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் இந்த பணப்புழக்க திட்டம் அவசியமாகும் என்பதே அந்த முடிவுக்கான உத்தியோகபூர்வ விளக்கமாக உள்ளது.

ஆனால் அந்த நடவடிக்கைகள், நிஜமான பொருளாதாரத்தில் சிறிய தாக்கங்களையோ அல்லது முற்றிலும் எந்த தாக்கத்தையுமோ கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு மாறாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை மோசமாக்க "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்றழைக்கப்படுவதற்கு அப்பிராந்தியமெங்கிலுமான அரசாங்கங்கள் அழுத்தம் அளித்து வருகின்ற நிலையில், இத்தகைய நடவடிக்கைகளானது நிதியியல் ஊகவணிகத்திற்கு மேற்கொண்டும் வட்டிகுறைந்த பண விநியோகங்கள் கிடைக்குமாறு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.

பணவீக்க விகிதங்களை 2 சதவீதத்திற்கு நெருக்கமாக ஆனால் அதற்கு குறைவாக தூக்கி நிறுத்துவதை நோக்கமாக கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக திராஹி தெரிவித்தார். ஆனால் அதுபோன்ற எந்தவொரு தாக்கமும் இருக்குமென்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை, அந்த அறிக்கை, ஒரு முடிவில்லா செலாவணி நீடிப்புக்குப் பொறுப்பேற்றிருப்பதற்கு ஒப்பானதாகும்.

கால அவகாசம் நீடிப்பு மற்றும் மாதந்தோறும் பத்திரம் வாங்கும் அளவு இரண்டுமே எதிர்பார்ப்புகளையும் விட மிதமிஞ்சி இருந்ததால் சந்தைகள் குதூகலமடைந்திருந்தன. மாதந்தோறும் 50 பில்லியன் யூரோ செலுத்தப்படுமென பொருளாதார நிபுணர்கள் அனுமானித்திருந்தனர்.

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏழு ஆண்டுகளின் புதிய உயரங்களை எட்டி, கடந்த சில நாட்களில் அவை தொடர்ந்து உயர்ந்துள்ளன. அமெரிக்காவில், அனைத்து மூன்று பிரதான பங்குச் சந்தையின் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன, அத்துடன் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 259 புள்ளிகள் உயர்ந்தது.

வீழ்ச்சி அடைந்துவரும் ஐரோப்பிய செலவாணி, ஏற்றுமதிகளை அதிகரிக்கும் என்று அக்கண்டம் முழுவதும் நம்பிக்கைகளைத் தூண்டிவிடும் வகையில், யூரோவின் மதிப்பு மேற்கொண்டும் வீழ்ச்சி அடைந்தது.

அந்த முடிவின் விளைபயனாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களில் இல்லையென்றாலும் பத்து பில்லியன் கணக்கான டாலர்களில் ஆதாயமடைய உள்ள நிதியியல் ஊகவணிகர்களின் மனோபாவம், மிகப்பெரும் தனியார் முதலீட்டு நிதியம் BlackRock இன் தலைமை செயலதிகாரி லாரன்ஸ் ஃபின்க் ஆல் தொகுத்தளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பில்லியனர்களின் ஆண்டு ஒன்றுகூடலான உலக பொருளாதார கலந்துரையாடல் கூட்டத்தில் (இங்கே இந்த ஆண்டின் கருப்பொருள் சமத்துவமின்மை என்பதாக உள்ளது) உரையாற்றுகையில், அவர் தெரிவித்தார்: “கடந்த சில ஆண்டுகளில் நாம் பார்த்திருக்கிறோம் என்பதால், நீங்கள் மரியோ மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சந்தை ஒருபோதும், நாம் இப்போது பார்ப்பதைப் போல இருக்கப்போவதில்லை, மரியோ மீது சந்தை ஐயப்பட வேண்டியதில்லை.”

QE திட்டத்தைத் தொடங்கும் முடிவு ஒருமனதான முடிவல்ல. ஜேர்மன் மத்திய வங்கி (Bundesbank) தலைவர் ஜென்ஸ் வைட்மானும், ஐரோப்பிய மத்திய வங்கி செயற்குழுவின் ஜேர்மன் பிரதிநிதி சபீன லொவ்டன்சால் உம் இந்த நகர்விற்கு அவர்களின் எதிர்ப்பை ஒலித்தனர். அத்துடன் ஆஸ்திரிய, டச் மற்றும் எஸ்தோனிய மத்திய வங்கி ஆளுநர்களும் தமது பின்னடிப்புகளை தெரிவித்ததாக செய்திகள் தெரிவித்தன.   

கடன்-குறைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்று வருகையில் அது ஐரோப்பிய அரசாங்கங்களைச் சிக்க வைத்துவிடும் என்பதால், வைட்மான் QE "இனிப்பான விஷம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்கியின் நிர்வாகக் குழு அத்தகைய பிரச்சினைகளை "கருத்தில்" எடுத்துள்ளதாகவும், “ஆகவே இந்த முடிவு அத்தகைய கவலைகளைச் சாந்தப்படுத்தும்" என்றும் திராஹி தெரிவித்தார். தேசிய மத்திய வங்கிகளால் செயல்படுத்தப்படும் 80 சதவீத கொள்முதல்களுக்கு அவையே அபாயங்களை ஏற்கும் என்பது ஜேர்மனிக்கும் மற்றும் ஏனைய விமர்சகர்களுக்கும் வழங்கப்பட்ட பிரதான விட்டுக்கொடுப்பாகும்.    

எதிர்ப்பின் ஆழம் பைனான்சியல் டைம்ஸ் செய்தியில் எடுத்துக்காட்டப்பட்டது, ஐரோப்பிய மத்திய வங்கி சுதந்திரம் குறித்து வாய் நிறைய பேசினாலும், “ஜேர்மன் அதிகாரிகள் தனிப்பட்டரீதியில்... அந்த வங்கி QE தொடங்குவதற்கு எடுத்த முடிவின் மீது சீறி இருந்தனர்.”

ஐரோப்பிய மத்திய வங்கியினது விட்டுக்கொடுப்பின் விளைவு, கொள்கை மீதான தேசிய பிளவுகளை அதிகரிக்கும் என்பதுடன், ஐரோப்பிய மத்திய வங்கி  ஒட்டுமொத்தமாக யூரோ மண்டலத்தின் நலன்களுக்காக செயல்படுகிறது என்ற கோட்பாட்டையும் பலவீனப்படுத்தக்கூடும். நீண்டகால ஓட்டத்தில், ஒட்டுமொத்த செலாவணி ஒன்றிய திட்டமும் உள்ளார்ந்து இயங்க முடியாது என்ற கவலைகளும் மற்றும் யூரோ செலாவணியே பொறியக்கூடுமென்ற கவலைகளும் அதில் சேர்ந்து விடுகின்றன

தேசிய வங்கிகள் கொள்முதல்கள் செய்வதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், யூரோ மண்டலம் கடனை பெரிதும் பரஸ்பரமாக்கும் திசையை நோக்கி நகர்ந்து வரவில்லை என்பதற்கு அதுவொரு சமிக்ஞையை அளிக்கிறது, இது நீண்டகால ஓட்டத்தில் ஒரு வெற்றிகரமான ஒரே செலாவணிமுறைக்கு அது அவசியாகும்" என்று தெரிவித்த ஒரு யூரோ மண்டல நிதியியல் மந்திரியின் கூற்றை பைனான்சியல் டைம்ஸ் பெயர் குறிப்பிடாமல் மேற்கோளிட்டது.

இம்மாத தொடக்கத்தில், ஜேர்மன் நிலைப்பாட்டிற்கு ஏற்ப விட்டுகொடுப்புகள் வழங்கப்படும் என்பது வெளிப்படையாகியுள்ள நிலையில், இத்தாலிய வங்கியின் ஆளுநர் இக்னாசியோ விஸ்கோ அபாயத்தைப் பகிர்ந்து கொள்வதைக் கைவிடுவதை எதிர்த்தார். “நமது அனைத்து செலாவணி கொள்கை தலையீடுகளிலும் [பயன்படுத்தப்படுகின்ற] நடைமுறைகளில், அபாயம் ஒட்டுமொத்தமாக யூரோ அமைப்புமுறை எங்கிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பது நமக்கு தெளிவாக கூறப்பட்டிருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்

ஜேர்மனிக்கு விட்டுகொடுப்புகளைச் செய்த அதேவேளையில், திராஹி தேசிய பிளவுகள் உண்டாகும் என்பதன் மீதான கவலைகளைத் தணிக்கவும் முயற்சித்தார். நிர்வாக குழு "அத்திட்டத்தின் அனைத்து வடிவமைப்பு அம்சங்களின் மீதும்" கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதுடன் ஐரோப்பிய மத்திய வங்கி கொள்முதலையும் ஒருங்கிணைக்கும், அதன்மூலமாக யூரோ அமைப்புமுறையின் செலாவணி கொள்கையின் ஒரேநோக்கத்தை பாதுகாக்கும்" என்று அவர் தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும், அவரது கருத்துகளால், நிலவிவரும் பிளவுகளையும் மற்றும் அவை இன்னும் பகிரங்கமாக மாறிவருவதையும் மறைத்துவிட முடியவில்லை.   

டாவோஸ் கூட்டத்தில் பேசுகையில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், மத்திய வங்கியின் சுதந்திரமான முடிவுகளை ஆதரிக்கும் ஒரு பாரம்பரியத்தை ஜேர்மன் கொண்டிருப்பதாக கூறி, திராஹி மீதோ மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மீதோ நேரடியான விமர்சனத்தைத் தவிர்த்துக் கொண்டார். ஆனால் யூரோ மண்டலம் முழுவதும் அவரது அரசாங்கம் ஊக்குவித்து வந்துள்ள சிக்கன நடவடிக்கை உந்துதலை ஆழப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். வளர்ச்சிக்காக அல்லாமல், ஜேர்மனியின் சொந்த காரணத்திற்காக அது சிக்கன நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், மேர்க்கெல் ஆரோக்கியமான நிதியுதவிகள் அவசியமானதாகும், ஆனால் கடன்கள் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.  

பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, அவரது உரையிலும் சரி அதற்குப் பிந்தைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலும் சரி, மேர்க்கெலின் சேதி என்னவென்றால் செலாவணியைக் கூடுதலாக தளர்த்துவதுடன் சேர்ந்து, அரசாங்கங்கள் "அவகாசங்களைப் பெறுவதற்கும் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்வதை தவிர்த்துக் கொள்வதற்கும்" முனையக்கூடும் என்பதைத் தெரிவித்தார். ஐரோப்பிய மத்திய வங்கியின் இன் முடிவு குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்காவது போட்டித்தன்மையற்ற நிறுவனங்கள் பிழைத்திருப்பதற்கு அனுமதிக்கிறது என்பதால் அது சர்ச்சைக்குரியதாக தான் கருதப்படும் என்பதில் அவருக்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்பதை மேர்க்கெல் தெரிவித்தார்

ஐரோப்பிய QE திட்டதின் கட்டமைப்பில் பிரதிபலித்த தேசிய பிளவுகளும் மற்றும் முரண்பாடுகளும் அப்பிராந்தியத்துடன் தடுக்கப்பட்டதில்லை, மாறாக அவை மிகவும் பரந்தளவில் வெளிப்பட்டுள்ளன. அந்த முடிவின் விளைவுகளில் ஒன்று, ஏற்கனவே 11 ஆண்டுகளில் இல்லாதளவில் குறைவாக இருக்கும் யூரோ மதிப்பு மேற்கொண்டு குறைய உள்ளது, அது அமெரிக்க டாலரின் மாற்றீட்டுவிகிதத்திற்கு சமமாக நெருக்கத்திற்குக் கொண்டு சென்று, அதன் விளைவாக அமெரிக்க வர்த்தக நிலைமையை மோசமாக்கக்கூடும்.    

கடந்த வாரத்தில், டென்மார்க், துருக்கி, இந்தியா, பெரு மற்றும் கனடாவின் மத்திய வங்கிகள் வட்டி விகித வெட்டுக்களை அறிவித்தன, அது அவற்றின் செலாவணிகளின் மதிப்பைக் குறைக்கும்.

வைப்புப்பத்திர கடன்கள் மீதான அதன் வட்டிவிகிதங்களை 0.25 சதவீத புள்ளிகள் வெட்டுவதென்று புதனன்று ஓர் ஆச்சரியமூட்டும் முடிவை கனடிய மத்திய வங்கி எடுத்தது. இது ஏறத்தாழ ஐந்தாண்டுகளில் செய்யப்படாத அதுபோன்ற முதல் குறைப்பாகும். எண்ணெய் விலைகளின் கூர்மையான வீழ்ச்சியானது, பணவீக்கம் மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மை மீதான அபாயங்களை கீழ்நோக்கி அதிகரித்திருப்பதாக அவ்வங்கி தெரிவித்தது. பொருளாதாரம் முழு வெளிப்பாட்டிற்குத் திரும்புவதற்கு ஒரு வட்டிவிகித வெட்டு அவசியமாகும் என்று அது குறிப்பிட்டது.

கனடாவைப் போலவே, ஆஸ்திரேலியாவும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாகும், ஆகவே கனடிய முடிவு வட்டிவிகிதங்களைக் குறைக்க ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் மீது அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஜப்பானின் QE திட்டங்களுடன் சேர்ந்து, இத்தகைய முறைமைகளின் விளைவு பல்வேறு செலாவணிகளின் மதிப்பைக் குறைத்து, அமெரிக்க டாலர் மீதான அழுத்தத்தைக் கூட்டுவதாக உள்ளது. நடைமுறையில், இந்த வாரத்தின் முடிவு ஒரு தீவிரப்பட்டுவரும் செலாவணி போரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, அதில் பங்குபெற்றிருப்பவர்கள் ஒவ்வொருவரும் பணச்சுருக்கத்தின் தாக்கங்களை அதன் போட்டியாளர்கள் மீது சுமத்த முயல்கின்றனர்.

நேற்றைய ஐரோப்பிய பணப்புழக்க திட்ட  முடிவு, பொருளாதார மீட்சியைக் கொண்டு வரப் போவதில்லை. அதற்கு மாறாக, அது எதிர்விரோத பொருளாதாரங்களுக்கு இடையே ஆழமடைந்துவரும் உலகளாவிய மோதலைத் தீவிரப்படுத்தும்.