சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

US announces plans to deploy military advisers to Ukraine

உக்ரேனில் இராணுவ ஆலோசகர்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை அமெரிக்கா அறிவிக்கிறது

By Niles Williamson 
23 January 2015

Use this version to printSend feedback

வசந்த காலத்தில் உக்ரேன் தேசியப் படையின் (NGU) நான்கு பிரிவினருக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்க இராணுவத்தினரை கொண்ட குழு ஒன்று உக்ரேனுக்கு அனுப்பப்படும் என்று ஐரோப்பாவிற்கான அமெரிக்க இராணுவ தலைவர், லெப்டினண்ட் ஜெனரல் பென் ஹோட்ஜெஸ் புதன் கிழமையன்று அறிவித்தார். லெவோவின் மேற்கத்திய நகருக்கு வெளிப்பகுதியிலுள்ள யாவோரிவ் பயிற்சி மையத்தில் நியமிக்கப்படும் அமெரிக்க இராணுவத்தினரின் துல்லியமான எண்ணிக்கை இனிமேல்தான் தீர்மானிக்கப்பட இருக்கிறது.

போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்படுவது மற்றும் ரஷ்யாவுடனான இராணுவ மோதல் ஒன்றின் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த பெரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் கியேவ் அரசு உக்ரேனின் கிழக்கு டொன்பாஸ் பகுதியில் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான அதன் போரினை துரிதப்படுத்தும் நடவடிக்கைக்கு மத்தியில் வெளிவந்துள்ளது.

லெப்டினண்ட் ஜெனரல் ஹோட்ஜெஸ் முதல் முறையாக கியேவிற்கு விஜயம் செய்தபோது தனது அறிவிப்பினை வெளியிட்டார். அப்போது அவர் உக்ரேன் ஆயுதப்படைகளுக்கான லெப்டினண்ட் ஜெனரல் அனடோலீ புஷ்னெயாகோவ் மற்றும் உக்ரேன் தேசியப்படையின் தற்காலிக தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஓலெக்ஸாண்டர் க்ரிவ்யென்கோ ஆகியோரை சந்தித்து பேசினார். தனது சந்திப்பினையடுத்துமாற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கான இராணுவம் மற்றும் சிவில் தலைமைத்துவம் இரண்டின் தயார் நிலைமை தன்னை ஈர்த்திருப்பதாக செய்தியாளர்களிடம் ஹோட்ஜெஸ் தெரிவித்தார்.

உக்ரேனுக்கு அதன் சட்ட அமுலாக்க திறமைகளை வலுப்படுத்துவது, உள் பாதுகாப்பினை மேற்கொள்வது மற்றும் சட்ட விதிகளை பராமரிப்பது ஆகியவற்றில் உதவுவதற்கான இந்த பயிற்சித் திட்டமானது வெளிவிவகாரத்துறையின் முயற்சிகளின் ஒரு பகுதிதான் என்று பெண்டகன் செய்தித்தொடர்பாளர் லெஃப்டினெண்ட் கேர்னல் வனெஸ்ஸா ஹில்மேன் Defense News செய்தித்தாளிடம் தெரிவித்தார். உக்ரேன் தேசியப் படையினை கட்டமைக்க மற்றும் பயிற்சியளிக்க உதவுவதற்காக உலக பாதுகாப்பிற்கான அவசரகால நிதியத்திடமிருந்து ஒபாமா அரசாங்கம் இதுவரையில் 19 மில்லியன் டாலர்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது.

2000இல் தடைசெய்யப்பட்ட தேசிய பாதுகாப்புப்படை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு மற்றும் பாசிச-ஆதரவிலான படைகளின் சதியை  அடுத்து, கடந்த வருடம் மார்ச் மாதம் மறுநிர்மாணம் செய்யப்பட்டது. கிழக்கு டொன்பாஸ் பகுதியில் கியேவிற்கு எதிரான, ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளை ஒடுக்குவதற்கு உதவி செய்வதை குறிக்கோளாகக்கொண்ட இப்புதிய தேசியப்பாதுகாப்பு படையானது ஒரு இலகுவான ஆயுதம்தரித்த காலாட்படையாகவும், துரிதமாக செயல்படும் படை போன்றும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலோசகர்களை ஈடுபடுத்துவதையடுத்து, அமெரிக்கா பிரிவினைவாதிகளுடன் போரிடுவதற்கு தேவையான பயங்கர இராணுவ உபகரணங்களையும் உக்ரேனுக்கு வழங்கி வருகிறது. திங்களன்று கியேவில் இருக்கும் அமெரிக்க தூதரகம், அரச எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (SBGS) கவசமிடப்பட்ட Kozak நிலக்கண்ணி எதிர்ப்பு பீரங்கி வாகனம் விநியோகிக்கப்பட்டிருப்பதை அறிவித்தது.

அமெரிக்கா சமீபத்தில் 35 சிறிய ரக ஆயுதமேந்திய டிரக்குகளையும் ரஷ்யாவுடனான கிழக்கு எல்லைப்பகுதி மற்றும் பிரிவினைவாதிகள் பிடியிலுள்ள பகுதிகளுக்கு எதிராகவும் SBGSஇன் பயன்பாட்டிற்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கியிருக்கிறது. SBGS செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி டெம்செங்கோ Southeast European Times  செய்தித்தாளிடம், சோதனைச்சாவடிகளுக்கு இடையிலான காவலுக்காக கிழக்கு எல்லைப்பகுதிகளுக்கு ஆயுதமேந்திய வாகனங்கள் புறப்படும். அமைதியான பகுதிகளுக்கு ஆயுதமேந்திய வாகனங்கள் தேவையில்லை, எல்லை கண்காணிப்புத்திறனை அதிகரிக்கவும் (கிழக்கில்) அரச எல்லை பாதுகாப்பு சேவை பிரிவினரைப் பாதுகாக்கவும் எங்களுக்கு அவை தேவைப்படுகிறது என்றார்.

கடந்த வருட இறுதியில் மோதலுக்கு செல்லும் நடவடிக்கை ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உக்ரேன் சுதந்திர ஆதரவு சட்டத்தில் கையொப்பமிட்டார். காங்கிரஸின் இரு அவைகளிலும் இந்த மசோதா, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது மேலும் அடுத்த மூன்றாண்டுகளில் கியேவ் ஆட்சிக்கு இராணுவ உபகரணங்களில் 350 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த உதவியில் பீரங்கி-எதிர்ப்பு மற்றும் கவசம் வாகனங்கள், வெடி ஏவுகணை, மோட்டார்கள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை உள்ளடங்கும்.

கியேவ் ஆட்சிக்கான அமெரிக்க ஆதரவின் தீவிரப்படுத்தலும் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான அதன் செயல்பாடுகளும் தீவிர மோதலாகி வருவதுடன் மேலும் கிழக்கில், குறிப்பாக டொனெஸ்க் நகரிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதியிலும் குண்டுவீச்சு நடத்தப்பட்டிருக்கிறது,

அடையாளரீதியாகவும் வரலாற்றுரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த டொனெஸ்க் சர்வதேச விமான நிலையத்தின் மீதான சண்டை தொடர்ந்த வேளையில், பிரதான விமான நிலைய முனையப்பகுதி மீதான கட்டுப்பாடானது பிரிவினைவாதிகளுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது என்பதை உக்ரேன் அதிகாரிகள் அங்கீகரித்தனர். இந்த இழப்பினை ஒப்புக்கொண்டாலும், உக்ரேன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கொலோனல் ஆண்ட்ரி லிசென்கோ, விமான நிலைய ஓடுதளம் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் உக்ரேன் படையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை வலியுறுத்தினார்.

வியாழனன்று காலையில் பொதுப்போக்குவரத்து நிலையம் ஒன்றில் மோட்டார் குண்டுகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் பொதுமக்கள் 9 பேர் இறந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் மேலும் ஒரு டிராலி பேருந்தும் அருகிலிருந்த கார் ஒன்றும் சேதமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கர தாக்குதலுக்காக இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறினர். டொனெஸ்க் மக்கள் குடியரசு பிரதிநிதி கியேவ் அரசாங்கத்தினால் ஆதரவளிக்கப்படும் இரகசியமாக இயங்கும் பிரிவு ஒன்றினையும் அவர்கள் குற்றம்சாட்டினார், அப்படையானது நகருக்கு உள்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு பயண வண்டியின் பின் பகுதியிலிருந்து மோட்டார்குண்டு ஏவப்பட்டது எனவும் அவர்கள் கூறினர்.

உக்ரேன் நெருக்கடியை சமாதானமான முறையில் ஒழுங்குபடுத்தும் முயற்சியை சீர்குலைப்பதை நோக்கமாகக்கொண்டமனித நேயத்திற்கு எதிரான போர் என்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கீ லாவ்ரோவ் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

இதற்கிடையில் கியேவில் நடைபெற்ற ஒற்றுமை தின பேரணியில், பிரதமர் ஆர்செனி யட்ஸென்யுக் பேருந்து தாக்குதலுக்காக ரஷ்யாவை குறைகூறினார். இன்று ரஷ்ய தீவிரவாதிகள் மறுபடியும் மனிதநேயத்திற்கு எதிரான ஒரு பயங்கர செயலை செய்திருக்கின்றனர். இதற்கான பொறுப்புடையது ரஷ்யாதான் என்றார் அவர்.

வியாழனன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், உக்ரேன் இராணுவ செய்தித் தொடர்பாளர் விளாடிஸ்லேவ் செலெஸினோவ் ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதுடன் மேலும் 16 பேர் அவர்கள் பின்வாங்குவதற்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார். சண்டையில் குறைந்தபட்சம் 37 உக்ரேன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக பிற சமூக வலைத் தள செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

தேசிய தன்னார்வ உதவிக்குழுவான People’s Home Front எனும் சமூக ஊடகத்தின் தலைவரான ஜார்ஜ் டுகாவின் பதிவு ஒன்று, விமான நிலைய முனையத்தின் இரண்டாம் தளத்தின் கூரையின் ஒரு பகுதி அவர்கள் மேல் சரிந்து விழுந்ததில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கிறது. பல மாதம் போரிட்டதற்கு அடுத்து, பிரதான விமான நிலைய முனையமானது மோட்டார் குண்டுகள் மற்றும் கிராட் ராக்கெட்களின் குண்டு வீச்சுத் தாக்குதலால் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்து வருகிறது.

புதன் கிழமையன்று, பாசிச Right Sector அமைப்பின் தலைவரும், உக்ரேன் பாராளுமன்றத்தின் உறுப்பினருமான டிம்ட்ரோ யரோஷ், விமான நிலையத்திற்கு அருகில் நடந்த சண்டையின் போது கிராட் ராக்கெட்டிலிருந்து வந்த வெடித்துச்சிதறும் உலோகத் துண்டால் காயமடைந்தார். யாரோஷ், Right Sector இனால் அமைக்கப்பட்ட ஒரு தன்னார்வப் படையினை நடத்தி வந்தார். அப்படையானது, டொன்பாஸ் பகுதியில் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான இராணுவ செயல்பாடுகளின் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது.

இந்த வாரம் லுஹன்ஸ்கின் கிழக்கு பகுதி நகரத்திற்கு அருகில் சண்டையும் வெடித்திருக்கிறது. ரஷ்யாவுடனான எல்லையில், புதன்கிழமையன்று நன்கு பயிற்சிபெற்ற ரஷ்ய இராணுவத்தினரால சோதனைச் சாவடி- 31 தாக்கலுக்கு உள்ளானது என்று உக்ரேன் இராணுவம் கூறியது. அவர்கள் படைகளை தாக்கியதுடன் அதன் தொடர்ந்து காவல்நிலையத்தையும் கைப்பற்றினர்.

கிழக்கில் தற்போது பிரிவினைவாதிகளுடன் 9,000 ரஷ்ய இராணுவத்தினர் போரிட்டு வருவதாக ஆதாரமெதுவுமற்று கூறியதுடன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிடமிருந்து கூடுதல் இராணுவ உதவிக்காக கோரியிருப்பதாகவும் ஸ்விட்சர்லாந்து டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் அளித்த உரை ஒன்றில் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ கூறினார். NATO பொது செயலதிகாரி ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், உக்ரேனில் ரஷ்ய படைகளின் இருப்பு குறித்து உறுதியளிக்க மறுத்து மாறாக கிழக்கு உக்ரேனுக்கு உள்பகுதியில் ரஷ்ய தளவாடங்கள் அதிக அளவில் இருந்து வருகின்றன என்று வலியுறுத்தினார். முன்னரைப்போலவே, ரஷ்யா அதன் இராணுவம் கிழக்கு உக்ரேன் பகுதியில் சண்டையிட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.