சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza forms coalition government with right-wing Independent Greeks

சிரிசா வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்கிறது

By Robert Stevens
27 January 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று கிரேக்க பொது தேர்தலில் அது வெற்றி பெற்றதற்குப் பின்னர், வெறும் சில மணி நேரங்களிலேயே சிரிசாவின் (தீவிர இடது கூட்டணி) இடதுசாரி பாசாங்குத்தனங்கள் அம்பலமாயின.

சிரிசா 2,246,064 வாக்குகள் பெற்று, 36.3 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது, ஆனால் 149 இடங்கள் என்ற அதன் இறுதி எண்ணிக்கை 300-பலமான நாடாளுமன்ற இடங்களில் ஒரு முழு பெரும்பான்மைக்கு அவசியமான 151 இடங்களை விட சற்று குறைவாகும்.

திங்களன்று காலை, சிரிசாவினது தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் வலதுசாரி மற்றும் புலம்பெயர்வு-விரோத சுதந்திர கிரேக்கர்கள் கட்சியின் (ANEL) தலைவர் பேனொஸ் கமெனொஸ் உடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கமெனொஸ் கிரேக்க அரசாங்கம் ஒரு சிரிசா-சுதந்திர கிரேக்கர்கள் கட்சி கூட்டணியாக இருக்குமென்று அறிவித்தார்.

அக்கூட்டணிக்கு பரந்த ஆதரவைப் பெற முயன்றுவரும் சிப்ராஸ், To Potami கட்சி தலைவர் ஸ்டாவ்ரோஸ் தேடோராக்கேஸ் (Stavros Theodorakis) உடன் திங்களன்று மாலை பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஒரு சிரிசா-தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெறுவதை தேடோராக்கேஸ் முன்னதாக நிராகரித்திருந்த போதினும், திங்களன்று அவர் ஒரு "தேசபற்றுமிகு செயல்திட்டத்திற்கான" அவசியத்தை வலியுறுத்தினார்.

ANEL உடனான கூட்டணியானது, கிரேக்க முதலாளித்துவ வர்க்க மற்றும் சர்வதேச மூலதனத்தின் பிரிவுகளினது நலன்களை எடுத்துக்காட்டும் தனிச்சலுகைமிக்க குட்டி-முதலாளித்துவ அடுக்குகளை அடித்தளமாக கொண்ட ஒரு முதலாளித்துவ வர்க்க கட்சியாக சிரிசாவின் குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது.

சிரிசா-ANEL அரசாங்கமானது, அவரது கடந்த வார இறுதி பேரணியில் சிப்ராஸ் சூளுரைத்த "புதிய தேசபற்றுமிகு கூட்டணியை" நிறைவேற்றி வைத்திருக்கிறது. அது பிரதியீடு செய்துள்ள மதிப்பிழந்த பழமைவாத புதிய ஜனநாயக கட்சி தலைமையிலான அரசாங்கத்தைப் போலவே, இதுவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உட்பட, முதலாளித்துவம் மற்றும் அதன் சர்வதேச அமைப்புகளைப் பாதுகாப்பதற்கு தான் பொறுப்பேற்றுள்ளது. ANEL கட்சி பெப்ரவரி 2012இல் புதிய ஜனநாயகம் (ND) கட்சியிலிருந்து ஒரு வலதுசாரி உடைவிலிருந்து உருவானதாகும். அது இந்த தேர்தலில் வெறும் 4.68 சதவீதம் (13 இடங்கள்) மட்டுமே வென்றிருந்தது.

அந்த தேர்தலுக்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்னர் சிரிசாவின் வேலைத்திட்டம் குறித்து கருத்துரைத்து, பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில், அரசாங்கம் அமைக்கும் கட்சி தொடக்கத்தில் வேண்டுமானால் கடந்த அரசாங்கத்தால் நீக்கப்பட்ட 595 துப்பரவாளர்களை மீளமர்த்துவது போன்ற "செலவில்லாத, அல்லது ஒப்பீட்டளவில் செலவு குறைந்த, பாசாங்கு அரசியலை" நடத்தலாம். ஆனால் அத்தகைய அடையாள பாசாங்குகளுக்குப் பின்னர், சிரிசா அரசாங்கத்தின் நிஜமான வேலை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் பெரியளவிலான தாக்குதலுக்கு அரசியல் மற்றும் சமூக அடித்தளத்தைத் தயாரிப்பதாக இருக்கும்.

ANEL உடனான சிரிசாவின் கூட்டணி முன்கூட்டியே நன்கு தயாரிக்கப்பட்டு இருந்தது. மார்ச் 2013இல், ஐரோப்பிய ஒன்றிய உதவியுடன் சைப்ரஸ் வங்கிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளின் அடிப்படையில் ANEL உடன் சிரிசா ஒரு "முன்னணிக்குள்" நுழைந்தது.

திங்களன்று நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், Protothema பத்திரிகை குறிப்பிடுகையில் "சிரிசாவும் ANELஉம் ஏற்கனவே கிரேக்க ஜனாதிபதி பிரச்சினை மீது ஒரு உடன்பாட்டை எட்டிவிட்டன என்பதோடு, தேசிய பிரச்சினைகள் மீதான ANELஇன் சிவப்பு கோடுகள் அதன் இடது கூட்டணி பங்காளியால் மதிக்கப்படும்,” என்று குறிப்பிட்டது.ANELஇன் "சிவப்பு கோடுகள்" என்பவை முற்றிலும் பிற்போக்குத்தனமான குணாம்சம் கொண்டவை ஆகும். பிரான்சில் உள்ள தேசிய முன்னணி மற்றும் அதேபோன்ற அதிதீவிர வலது அமைப்புகள் போலவே, ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகள் மீதான அதன் குறைகூறல் என்னவென்றால் அது கிரேக்க முதலாளித்துவத்திற்குக் குழிபறிக்கிறது என்பதே ஆகும். அதன் தேசியவாத மற்றும் இனவாத கொள்கைகளில், “தேசிய பாதுகாப்பு" என்ற வேஷத்தின் கீழ், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தண்டிப்பதற்கும் மற்றும் வெளியேற்றுவதற்குமான முறையீடுகளும் உள்ளடங்கும்.

ஊடகங்களும் மற்றும் அதன் பல்வேறு போலி-இடது அனுதாபிகளும் முறையிடுவதைப் போல சிரிசாவின் வெற்றி எவ்விதத்திலும் மக்களின் ஒப்புதலால் கிடைத்ததல்ல. வெறும் 63 சதவீதத்தினர் (9.9 மில்லியன் மொத்த வாக்காளர்களில் 6.3 மில்லியன்) மட்டுமே வாக்குபதிவு செய்துள்ள நிலையில், சுமார் 40 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கவே இல்லை.

தேர்தல் குறித்த ஊடங்களின் பூசிமொழுகிய செய்திகளும் மற்றும் கிரீஸின் நவீன வரலாற்றில் மிக முக்கியமானதாக அது சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், இது அசாதாரண சரிவாகும். மே 2012 தேர்தலில் சிரிசா முதன்முதலில் வாக்குப்பதிவில் திருப்புமுனையை (65.1 சதவீதம்) பெற்றிருந்த, அப்போதையதை விட இந்த வாக்குப்பதிவு மிகவும் குறைவாகும்.

குறிப்பாக 1967-1974 இராணுவ ஆட்சிக்குழுவின் வீழ்ச்சிக்குப் பின்னரில் இருந்து கிரீஸை ஆட்சி செய்து வந்துள்ள சமூக ஜனநாயக PASOK கட்சி மற்றும் புதிய ஜனநாயகம் கட்சி ஆகியவற்றின் மீதான பரந்த கோபத்திலிருந்து சிப்ராஸினது கட்சி தகுதியற்ற ஆதாயத்தைப் பெற்றுள்ளது.

PASOK கட்சியோ, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய அவசியமான 3 சதவீதத்திற்கு சற்று அதிகமாக 4.7 சதவீத வாக்குகளுடன் வெறும் 13 இடங்களை பெற்று தோற்றப்பாட்டளவில் துடைத்துக்கட்டப்பட்டுவிட்டது. சிரிசாவிற்கான பெரும்பாலான ஆதரவு, முன்னர் PASOKஐ ஆதரித்து வந்த அடுக்குகளிலிருந்து வந்திருந்தது.

ND 76 இடங்களுடன், 27.8 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அது நாடாளுமன்ற எதிர்கட்சியாக அமையும். பாசிச கோல்டன் டௌன் 17 இடங்களைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்து, 6.3 சதவீத வாக்குகள் வென்றது. புதிதாக உருவாக்கப்பட்ட வெகுஜன To Potami (The River) கட்சி 17 இடங்கள் மற்றும் 6.1 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திற்கு வந்தது. கிரீஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி 5.5 சதவீத வாக்குகள் வென்று 15 இடங்களைப் பெற்றது.

சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கீழ் ஜேர்மனியால் அறிவுறுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளில் முற்றிலுமாக அடித்தளமிட்டிருக்கும் பொருளாதார கொள்கைகளுக்கு உடன்படாத ஆளும் மேற்தட்டு பிரிவுகளுடன், மிக நெருக்கமாக சிரிசாவின் வேலைத்திட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் சிரிசாவினால் முன்வைக்கப்பட்ட Thessaloniki வேலைத்திட்டத்தில், அக்கட்சி, “ஜேர்மன் அரசாங்கத்துடன்" மட்டும் ஒரு கூட்டணியைக் கட்டமைக்கும் ND அரசாங்கத்தின் முன்னோக்கிற்கு எதிர்விரோதமாக, சிரிசா "பேரம்பேச தயாராக உள்ளது, நாங்கள் ஐரோப்பாவில் சாத்தியமான பரந்த கூட்டணிகளைக் கட்டியமைப்பதை நோக்கி வேலை செய்து வருகிறோம்,” என்று வலியுறுத்தியது.

ஜேர்மன் அரசாங்க அதிகாரிகளோ "முக்கூட்டு" என்றழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால் கிரீஸ் மீது சுமத்தப்பட்ட கடனைத் திரும்ப செலுத்தும் திட்டத்தின் நிபந்தனைகளில், எதையும் தளர்த்துவதை நிராகரித்துள்ளனர். தேர்தல் முடிவு அறிவிப்பைத் தொடர்ந்து, மேர்க்கெலின் செய்தி தொடர்பாளர் ஸ்ரெபன் சைய்பேர்ட் கூறுகையில், “கிரீஸ் ஏற்றுக் கொண்டுள்ள நிபந்தனைகளைக் தேர்தல் நாளுக்குப் பின்னர் மேசையிலிருந்து அகற்றிவிடாது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார். ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள கூறுகையில், “அங்கே விதிமுறைகள் உள்ளன, அங்கே உடன்படிக்கைகள் உள்ளன. இவற்றை யார் புரிந்துகொள்கிறாரோ அவர் அதன் மதிப்பை அறிந்தும், அந்த நிலைமையை அறிந்தும் தான் புரிந்து கொள்கிறார்,” என்றார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னில் மேற்கோளிடப்பட்ட ஒரு ஐரோப்பிய மத்திய வங்கி அதிகாரி கூறுகையில், “திருவாளர் சிப்ராஸ் அவற்றை செலுத்த வேண்டும். அதுதான் அந்த உடன்படிக்கையின் விதிமுறைகள். ஐரோப்பாவில் ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு இடமே இல்லை. கடன் தவணையை மாற்றியமைப்பதற்கு அங்கே விதிமுறையே இல்லை,” என்றார்.

அந்த கருத்துரைகள் ECB செயற்குழு உறுப்பினர் பெனுவா கூரேயால் ஆதரிக்கப்பட்டன, அவர் பிரெஞ்சு வானொலி நிலையத்திற்குத் தெரிவிக்கையில், “அவர் [சிப்ராஸ்] செலுத்தவில்லை என்றால், அது கடன் செலுத்த தவறுகை என்றாகும், அது ஐரோப்பிய விதிமுறைகளை மீறுவதாகும்,” என்றார்.

ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியின் பணப்புழக்க கொள்கைக்கு சிரிசாவின் ஆதரவும் மற்றும் குறிப்பிட்ட விதத்தில் கடன் மறுசீரமைப்புக்கு அது முறையீடு செய்வதும் பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஏனைய மூலதன பிரதிநிதிகளால் ஆமோதிக்கப்படுகின்றன.

புதிய அரசாங்கத்துடன் "நாங்கள் நெருக்கமாக வேலை செய்ய எதிர்நோக்கி உள்ளோம்" என்று குறிப்பிட்டு வெள்ளை மாளிகை ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டது. கிரேக்க தேர்தல் முடிவு செய்திகளை சார்ந்து டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு முதலில் சரிய தொடங்கிய பின்னர், சிரிசா-ANEL அரசாங்கத்தின் அறிக்கை வந்ததும் மூன்று நாட்களில் முதல் முறையாக அது உயர்ந்தது. FTSE 100 பங்குச்சந்தை குறியீடு 19.57 புள்ளிகள், அல்லது 0.29 சதவீதம் உயர்ந்து முடிவுற்றது.