சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The 70th anniversary of the liberation of Auschwitz

அவுஸ்விட்ச் விடுவிக்கப்பெற்ற  70ஆம் ஆண்டு நிறைவு

Bill Van Auken
28 January 2015

Use this version to printSend feedback

1945 ஜனவரி 27 அன்று சோவியத் ஒன்றியத்தின் செஞ்சேனையின் சக்திகளால் கடூழியச்சிறை முகாம் விடுவிக்கப்பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு, அரசு நிகழ்வாக அவுஸ்விட்ச்சில் செவ்வாய் அன்று நடைபெற்றது. தெற்கு போலந்தில் உள்ள இந்த நாஜி மரண முகாமின் பெயர்தான் 20ம் நூற்றாண்டின் மாபெரும் குற்றங்கள் மற்றும் பயங்கரங்களுடன் ஒத்தபொருளுடையதாக, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் அதிதீவிர வடிவத்துக்கான ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

1942ன் தொடக்கத்திற்கும் 1945ன் இறுதிக்கும் இடையில், நாஜி ஆக்கிரமிப்பு ஐரோப்பா முழுவதிலும் இருந்து இரயில்கள் அவுஸ்விட்ச் வாயிலில் யூதர்களை இறக்கிவிட்டன, அது “Arbeit macht frei” (“வேலை [உன்னை] விடுதலை செய்யும்) என்ற இழிபுகழ் பெற்ற முழக்கத்தை தாங்கியிருந்தது. அவுஸ்விட்ச்சில் 1.1 மில்லியனுக்கும் மேலானவர்கள் சாகடிக்கப்பட்டார்கள், அவர்களில் நூறாயிரக் கணக்கானவர்கள் உடனடியாக விஷவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள், ஏனையோர் பட்டினியாலும், அளவுக்கு மீறிய வேலைச்சுமையாலும், நோயாலும் அல்லது “மரண தேவதை என்று அறியப்படும், ஜோசப் மெங்கல போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய மருத்துவ பரிசோதனைகளாலும் கொல்லப்பட்டார்கள்.

முகாமில் கொல்லப்பட்டவர்களுள் 90 சதவீதம் பேர் யூதர்களாக இருக்கும் அதேவேளை, அரசியல் கைதிகள் உள்பட 1,50,000 பேர் போலந்தியர், 23,000 ரோமானியர் மற்றும் சிந்திகள் (ஜிப்சிகள்), 15,000 போரில் சிறைப்பிடிக்கப்பட்ட சோவியத் கைதிகள், மற்றும் ஏனைய தேசிய சிறுபான்மையர், ஜெகோவா சாட்சிகள் மற்றும் ஒருபாலியர் ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

நாஜி ஆட்சியின் “யூதப் பிரச்சினைக்கு இறுதித்தீர்வு, “கிழக்கிற்கான பொதுத்திட்டத்தின் பகுதியாக இருந்தது, அது கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் பட்டினி மற்றும் பெரும்திரளான மக்களை நாடுகடத்தல் இவற்றின் மூலம் சுமார் 30 மில்லியன் அளவில் மக்கள் தொகையைக் குறைப்பதை திட்டமிட்டது. இத்திட்டம் நகரங்களை இடித்தல் மற்றும் ஜேர்மன் காலனித்துவவாதிகளுக்கு நிலத்தைக் கொடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. யுத்தத்தின் முடிவில், சோவியத் ஒன்றியம் அதன் மக்கட்தொகையில் 14 சதவீதத்தை, சுமார் 27 மில்லியன் பேரை இழந்தது, அதேவேளை போலந்து அதன் மக்கள் தொகையில் சுமார் 5.8 மில்லியன் பேரை, 16 சதவீதத்தை இழந்தது.

அவுஸ்விட்ச் மற்றும் தொடர்புடைய நாஜி குற்றங்கள், நாட்டின் சோசலிச தொழிலாளர் இயக்கத்தினை நசுக்குவதற்காகவும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ஜேர்மன் முதலாளித்துவ நெருக்கடியை சமாளித்து வரவும் ஜேர்மன் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட ஆட்சியால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்ட நிறைவு நிகழ்வு கடைப்பிடிப்பு, மரண முகாமில் தப்பிப்பிழைத்து ஒரு சில நூற்றுக்கணக்கானவர்களாக குன்றிவரும் எண்ணிக்கையினரால், அவர்களில் பெரும்பான்மையினர் தொன்னூறு வயதாகின்ற நிலையில், பங்கேற்கப்பட்டது. அடுத்த பெரிய ஆண்டுவிழாவில் தாங்கள் வருவிக்கப்பட மாட்டோம் என்று நனவான வகையில் அவசரத்துடனும், இரக்கத்துடனும் அறிக்கைகளை விடுத்தனர்.

“அவுஸ்விட்ச் என்றால் என்ன என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள், அது என்னை அச்சுறுத்துகிறது, ஏனெனில் அது எந்தவகை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என நான் அறிவேன், 85 வயது நிரம்பிய ரோமன் கெண்ட் கூறினார். “எமது கடந்தகாலம் குழந்தைகளின் எதிர்காலமாக ஆவதை நாம் விரும்பவில்லை என்று கூறியதன் மூலம் விழாவில் அவரது கருத்துக்களை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்த வார்த்தைகள் எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது ஏனெனில் விழாவானது உலக யுத்தத்தை நோக்கிய ஒரு புதிய உந்துதல் மற்றும் வரலாற்றைப் பொய்ம்மைப்படுத்தல் வழியாக நனவாக தயாரிக்கப்பட்டு வரும் பயங்கரங்கள், வரவிருக்கும் வரலாற்றுக் குற்றங்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விழாவை ஐரோப்பாவில் ரஷ்ய எதிர்ப்பு உணர்வை தட்டி எழுப்புதற்கும் அமெரிக்கா தலைமையிலான “பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை முன்னிலைப்படுத்துதற்குமான ஒரு வாகனமாக மாற்றுவதற்காக திட்டமிட்டப்பட்டு செய்யப்பட்ட முயற்சிகளில் இது தெளிவாகியது.

இந்த நிகழ்வின் போது, போலந்து அரசாங்கம் உக்ரேனில் உள்ள நேட்டோ ஆதரவு ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவை ஒரு கொளரவத்திற்குரிய விருந்தினராக வரவேற்கும் அதேவேளை, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கத்தை மட்டம் தட்டுவதற்கு, அதற்கே உரிய வழியில் சென்றது. புட்டின் தொடர்பாக வார்சோவின் அணுகுமுறை சிறுபிள்ளைத்தனமானது, வெளிவிவகார அமைச்சர் Grzegorz Schetyna, ரஷ்ய ஜனாதிபதியின் இருப்பு மிகையானது ஏனெனில் அவுஸ்விட்ச் “முதலாவது உக்ரேனியன் முன்னணி மற்றும் உக்ரேனியர்களால் விடுவிக்கப்பட்டிருந்தது என பதிலளித்தார்.

அவுஸ்விட்ச்சின் வரலாற்றுடன் மிகச்சிறிது பரிச்சயம் உடைய எவரும் அது சோவியத் ஒன்றியத்தின் செஞ்சனையின் பிரிவால் விடுவிக்கப்பட்டது என்று அறிவர். அவுஸ்விட்ச் மற்றும் அடுத்துள்ள போலந்து நகரை விடுவிக்கும் சண்டையில் 200க்கும் மேற்பட்ட சோவியத் துருப்புக்கள் இறந்தனர். “உக்ரேனியன் முன்னணி (Ukrainian Front) என்று அழைக்கப்படுவது அதன் துருப்புக்கள் தேசிய அளவில் சேர்க்கைக்காக பெயரிடப்படவில்லை, ஜேர்மன் ஆக்கிரமிப்பாளர்களை திரும்ப ஓடச்செய்ததில் கடைசியாக அது போரிட்டிருந்த இடத்திற்காக பெயரிடப்பட்டது.

இந்த விசித்திரமான வரலாற்று ரீதியான திருத்தல்வாதம், இந்த மாத தொடக்கத்தில் உக்ரேனிய பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் ஜேர்மன் தொலைக்காட்சியில் செய்யப்பட்ட அறிக்கையுடன் ஒரு துண்டைக் கொண்டிருந்தது, அதில் அவர் இரண்டாம் உலகப் போரில் “உக்ரேன் மற்றும் ஜேர்மன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை கண்டித்திருந்தார்.

விழாவில் கௌரவத்திற்குரிய இடம் கொடுக்கப்பட்டிருந்த தற்போதைய உக்ரேனிய ஆட்சியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகியன கூடிச்சேர்ந்து குழுவிசைத்த, ஸ்வொபோடா பாசிச கும்பல் மற்றும் ஹிட்லரின் SS  மற்றும் மனித இனஒழிப்பில் பங்கேற்ற உக்ரேனிய பாசிச பிரிவுகளின் மரபுரிமையைப் போற்றி வணங்கும் ரைட் செக்டார் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட, ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அரசு தலைவர்களுள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் இருந்தார், அவர்தான் பாரிசில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து மரின் லு பென்னை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார். அவ்வம்மையாரின் தேசிய முன்னணியானது, விச்சி ஆட்சியின் பிரெஞ்சு நாஜி ஒத்துழைப்பாளர்களின் அரசியல் வாரிசாகும். ஹோலண்டின் சைகை குறிப்பு பாசிசத்தை முறைமை ஆக்குவதற்கும் புணருத்தாரனம் செய்வதற்குமான ஐரோப்பிய அரசாங்கங்களால் செய்யப்படும் உந்தலில் இன்னொரு அடி எடுத்து வைப்பதைக் குறிக்கிறது.

இன்னும் வந்திருந்தவர் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் ஆவார், இவர் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீழெழுச்சிக்கும் மற்றும் முதலாம்  இரண்டாம் உலக யுத்தங்களின் பேரழிவுகளுக்கு இட்டுச்சென்ற ஏகாதிபத்திய வல்லரசு அரசியலுக்கு திரும்புதலுக்குமான ஒரு தராதர அளவீட்டினராக சேவை செய்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு அத்தியாவசிய பகுதியாக, ஜேர்மன் கல்வியலாளர்கள் வரலாற்றை திருத்தி அமைக்கின்றனர், முந்தைய உலக யுத்தங்களுக்கு ஜேர்மன் அரசின் மையப் பொறுப்பை மறைக்கின்றனர், மூன்றாவது ரைஹ்கின் குற்றங்களை ஒப்பீட்டளவில் குறைத்துக் காட்டுகின்றனர். ஜேர்மன் வரலாற்றியலில் இந்தப்போக்கின் பிரதான பிரதிநிதியான ஏர்ன்ஸ்ட் நொல்ட்ட ஒரு மாபெரும் வரலாற்றாளர் என்று வழிபடப்படுகிறார். 2014 பிப்ரவரியில், பேர்லினை தளமாகக் கொண்ட வரலாற்றாளர், நோல்ட்டவை கடுமையாக ஆதரிப்பவருமான ஜோர்க் பாபெரோவ்ஸ்கி, Der Spiegel இதழிடம் கூறியதாவது: ஹிட்லர் மனநிலை திரிந்தவர் அல்லர், அவர் நேர்மைக் கேடானவரும் அல்ல. யூதர்களை அழித்துக் கட்டுவதைப் பற்றி தனது மேசையில் மக்கள் பேசுவதை அவர் விரும்பவில்லை.

செவ்வாய் அன்று அந்நிகழ்வில் புட்டின் கலந்துகொள்ளாமை பற்றி அதிகம் எழுதப்பட்ட அதேவேளை, வாஷிங்டனை பிரதிநிதித்துவப்படுத்த, ஒப்பீட்டளவில் அதிகம் அறிந்திராத கருவூல செயலாளர் ஜாக் லீ வை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா எடுத்த முடிவு பற்றியும், அதேவேளை அவரும் அவரது அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்பின் உயர் அதிகாரிகளும், சவுதி மன்னர் அப்துல்லாவின் மறைவை அடுத்து, முடியாட்சியுடன்  மத்திய கிழக்கு போர்த்திட்டங்களை கலந்தாய்வதற்கு சவுதி அரேபியா பறந்தததைப் பற்றியும் சிறிதே ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐரோப்பாவில் பாசிசம் தோன்றுவதற்கும் இரண்டாம் உலக யுத்தம் வெடித்ததற்கும் வழிவகுத்த காலகட்டத்தில் போலவே, பகை கொண்ட ஏகாதிபத்திய அரசுகள் வெளிநாடுகளில் இராணுவ வலுச்சண்டைக்கு போதல் மூலமும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதன் மூலமும் தங்களின் தீர்வைப் பெற முயலுவதற்கு உந்துதல் செய்கின்ற, ஆழமான மற்றும் முழுமையாய் பாதிக்கின்ற நெருக்கடியால் மீண்டும் ஒருமுறை உலக முதலாளித்துவம் பற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.

அது விடுவிக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவுஸ்விட்ச், “தீமைக்கான மனித ஆற்றலின் ஏதோ ஒரு வகை அருவமான அடையாளமாக நிற்கவில்லை, மாறாக நெருக்கடியில் உள்ள முதலாளித்துவம் மனிதகுலத்தின்மீது குற்றங்களையும் அழிவுகளையும் செலுத்தும் திறமுடையாக இருக்கிறது என்ற ஒரு உறுதியான மற்றும் அவசரமான எச்சரிக்கையாக நிற்கிறது.

மீண்டும் ஒருமுறை, உலகத் தொழிலாள வர்க்கமானது, அதாவது சோசலிசமா அல்லது அணு ஆயுத மூன்றாவது உலக யுத்தத்தில் நாஜிக்குற்றங்களையும் கூட காணாதவாறு மறைக்கும் காட்டுமிராண்டித்தனமா என்ற மூடி மழுப்பமுடியாத மாற்றீடுகளை எதிர்கொள்கின்றது