சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Who are the Independent Greeks?

யார் இந்த சுதந்திர கிரேக்கர்கள்?

By Robert Stevens
28 January 2015

Use this version to printSend feedback

சிரிசா மற்றும் சுதந்திர கிரேக்கர்களுக்கு (ANEL) இடையிலான ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுவது, சிரிசா ஒரு இடதுசாரி கட்சி என்ற சிரிசாவினது பல அனுதாபிகளால் கூறப்பட்ட வாதங்களை மறுத்தளிக்கிறது.

அந்த கூட்டணி பேரம்பேசல்களின் போது, ANEL தலைவர் பேனொஸ் கமெனொஸ் விதித்த பல "சிவப்பு கோடுகளை" சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஏற்றுக் கொண்டதார். இதில் பாதுகாப்பு அமைச்சகத்தை ANEL கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் என்பதும் ஒன்றாகும்.

நேற்று சிப்ரஸால் பெயரிடப்பட்ட புதிய மந்திரிசபையில், கமெனொஸிற்கு அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டது. மாசிடோனிய பிராந்தியத்தின் துறைகள், சுற்றுலாத்துறை, கிராம அபிவிருத்தி மற்றும் அரசு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் கீழ்நிலை பதவிகளையும் ANEL பெற்றது.

கமெனொஸிற்குக் கிரேக்க இராணுவ படைகளுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில், அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் மீதான நிலைக்குழுவிலும், அத்துடன் ஆயுத தளவாட திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குழுவிலும் சேவை செய்தவராவார். கடந்த அக்டோபரில் அவர் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அதன் வலைத் தள செய்திகளின்படி, செயல்படும் முறை மற்றும் இராணுவ படைகளின் செயல்பாடு குறித்து தேசிய பாதுகாப்பு மந்திரி டிமிட்ரிஸ் அவ்ராமோபௌலொஸ் மற்றும் இராணுவ தலைமைகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இராணுவ படைகளின் மீது படைத்துறைசாரா கட்டுப்பாட்டுக்கு கமெனொஸ் ஓர் எதிர்ப்பாளர் ஆவார். பாதுகாப்புத்துறை செய்தி வலைத் தளம் On Alert உடனான ஒரு நேர்காணலில், கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: பாதுகாப்பு மந்திரி ஓர் அரசியல் ஆலோசகராக செயல்பட வேண்டும், ஆனால் இராணுவத்தின் ஓட்டத்தில் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். பாதுகாப்பு மந்திரி அலுவலகம் [பல்வேறு பதவிகளுக்கு] அதிகாரிகளின் நியமன பொறுப்பாளராக  இருப்பது சாத்தியமில்லை, என்றார்.

சிரிசாவிற்குள் இருக்கும் சில வித்தியாசமான மனோபாவங்களிலிருந்து இராணுவ படைகளைப் பாதுகாப்பதற்கு, அவர் உறுதியளித்தார்.

இந்த சுதந்திர கிரேக்கர்கள் கட்சி பெப்ரவரி 2012இல் கமெனொஸால், அப்போது ஆட்சி செலுத்தி வந்த பழமைவாத புதிய ஜனநாயகத்திலிருந்து (ND) ஒரு வலதுசாரி உடைவாக உருவாக்கப்பட்டது. அது பெருந்திரளான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை, ஞாயிறன்று தேர்தலில் 13 இடங்களை வென்று வெறும் 4.68 சதவீத வாக்குகளைக் கொண்டிருந்தது.

1993இல் இருந்து கமெனொஸ் NDஇன் ஒரு சட்டமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரண்டாவது புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அவர் ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதால் NDஇன் நாடாளுமன்ற குழு மற்றும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்த சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் ஒரு சிறிய குழுவுடன் அவர் NDஇல் இருந்து வெளியேற்றப்பட்டார்

கிரீஸின் கப்பல்துறை அதிபர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளன. 2007இல் இருந்து 2009 வரையில், வர்த்தகம் மற்றும் கப்பல்துறையின் துணை-மந்திரியாக இருந்த அவர், அந்நாட்டின் பிரதான பிரேயஸ் (Piraeus) துறைமுகத்தை மையப்படுத்தி சீனாவுடன் தளிர்த்துவந்த கிரீஸின் பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்வதில் கருவியாக இருந்தார்.

ANEL ஒரு தேசியவாத சுதந்திர சந்தை வேலைத்திட்டத்தை அறிவுறுத்துகிறது. அதன் டிசம்பர் 2012 ஸ்தாபக காங்கிரஸில், கமெனொஸ் அறிவிக்கையில், நமது இயக்கத்தின் ஒரே சித்தாந்தம் தேசப்பற்று ஆகும், என்றார்.

இந்த தேர்தலுக்கு முன்னதாக இதேபோன்ற மொழி சிப்ரஸால் பயன்படுத்தப்பட்டது, அப்போது ஒரு "புதிய தேசப்பற்றுமிகு கூட்டணி" அவசியமென்று அவர் அறிவித்தார்.

கமெனொஸ் உரையின் ஒரு செய்தி குறிப்பிட்டது, அவர் "மத்திய-வலது வட்டாரம், PASOKஇன் தேசப்பற்றாளர்கள் மற்றும் தேசப்பற்றுமிகு இடது ஆகியவற்றின் ஆதரவாளர்களுக்கு, திட்டமிட்ட தேசப்பற்றுமிகு மையத்தில் இணையுமாறு அழைப்புவிடுத்தார்."

அவர் தெரிவித்தார், எங்களை ஓர் அரசியல் பரப்பெல்லைக்குள் ஏற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் நாங்கள் கூற விரும்புவது, நாங்கள் கிரீஸைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.

நெருக்கடிகால அதிகாரங்களைக் கொண்டிருக்கும் மற்றும் அந்நாட்டின் தலைவிதியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு கட்சி-சார்பற்ற குழுவை அமைக்க கமெனொஸ் அழைப்புவிடுத்தார். என்ன தேவைப்படுகிறதென்றால் ஒரு "தேசிய விழிப்புணர்வும் எழுச்சியும்" ஆகும் என அவர் தெரிவித்தார். தன்னைத்தானே பன்முக-கலாச்சாரமயமாக்கலின் ஓர் எதிர்ப்பாளராக அறிவித்துக் கொண்ட ANEL, கிரேக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின்" தனித்தன்மையை வலியுறுத்துகிறது.

கிரேக்க பாரம்பரிய தேவாலயத்தை அங்கத்தவர்கள் ஆதரிக்கிறார்கள் மற்றும் "பாரம்பரியத்தின் மதிப்புகள் மற்றும் ஆச்சாரத்தை" நம்புகிறார்கள் என்று அதன் ஸ்தாபக அறிக்கை அறிவிக்கிறது.

அதன் புலம்பெயர்வு-விரோத அடித்தளமே அதன் வேலைத்திட்டத்தின் மையத்தில் உள்ளது. தேசிய பாதுகாப்பு" பிரச்சினையாக ANEL அறிவித்துள்ள, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களை தண்டிப்பதை மற்றும் வெளியேற்றுவதை இது கோருகிறது. பலவந்தமாக தாயகத்திற்குத் திரும்ப அனுப்பும் ஒரு கொள்கைக்கு ஒப்பானதாக உள்ள ANELஇன் அறிக்கை, அந்நாட்டின் மக்கள்தொகையில் அதிகபட்சம் 2.5 சதவீதம் புலம்பெயர்ந்தவர்களை உள்ளடக்கலாம் என்றும், அதைக் கடந்து புலம்பெயர்ந்தவர்கள் "பொருளாதாரரீதியில் மற்றும் சமூகரீதியில் நிலைக்கக் கூடியவர்களாக" இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கிறது.

கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டு தங்குபவர்களால், கிரீஸில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க ANEL பரிந்துரைக்கிறது.

வெளிப்படையாக அரசியல்ரீயிலும் மற்றும் தனிப்பட்டரீதியிலும் தீவிர வலது சக்திகளுடன் உறவுகளைக் கொண்ட ஒரு வலதுசாரி தேசியவாத கட்சியான ANEL, கிரேக்க சமூகத்தில் மிகவும் இழிபெயரெடுத்த சில அடுக்குகளுக்காக பதவியேற்கிறது. 2012இல் ANELஇன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வசிலிஸ் காபெர்னாரோஸ், ஒரு சுயேட்சையாக சேவை செய்ய மே 2014இல் அதை துறந்தார். அவருக்கு, பாரம்பரிய தேவாலயம், பாதுகாப்பு சேவைகள் மற்றும் இராணுவ படைகளை" அடிப்படையாக கொண்ட Rizes (வேர்கள்) என்றழைக்கப்படும் ஒரு தீவிர வலது கட்சியை ஸ்தாபிக்க முனைந்து வருகின்ற, கிரேக்க பிரதம மந்திரி அன்டோனிஸ் சமராஸின் முன்னாள் மந்திரிசபை செயலர் பனாயொடிஸ் பால்டாகொஸ் உடன் நெருக்கமாக தொடர்பு உள்ளது.

Rizes ஸ்தாபிக்கப்பட்டால் அவர் அதன் பாகமாக இருக்க காபெர்னாரோஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் உறுதியளித்தார்.

2012இல் ANEL உடன் தேர்ந்தெடுக்கப்பட்ட Chrysoula Giatagana, மார்ச் 2014இல் தன்னைதானே ஒரு சுயேட்சையாக அறிவித்தார். மே 2014இல் நடந்த ஒரு நாடாளுமன்ற விவாதத்தின் போது, அப்பெண்மணி மரண தண்டனை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டுமென அழைப்புவிடுத்தார். 1967-1974 இராணுவ ஆட்சிக்குழு வீழ்ந்ததைத் தொடர்ந்து, 1975 அரசியலமைப்பால், போர்காலத்திய தேசதுரோகத்தைத் தவிர, சமாதானகால குற்றங்களுக்கும், பின்னர் 2004இல் அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனை கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு, ஒரு சுயேட்சையாக இருந்த Giataganaஐ ஜனவரி பொது தேர்தலில் சிரிசாவின் வேட்பாளராக நிற்குமாறு சிப்ரஸ் அவரை அணுகி இருந்தார். அப்பெண்மணியின் Thessaloniki உள்ளூர் சட்டமன்றத்திற்கு பதிலாக சிரிசாவின் தேசிய வேட்பாளராக அவர் நிற்குமாறு சிரிசா பரிந்துரைத்தது என்ற அடித்தளத்தில், இம்மாத தொடக்கத்தில் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார்.

கமெனொஸ் அவரது சொந்த வலதுசாரி உதிரிதிட்டங்களை பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பரித்துள்ளார். வெளியேறும் ND அரசாங்கம் "பிணத்தை எரியூட்டுவது, ஓரினச்சேர்க்கைக்கு பொது கூட்டமைப்பு மற்றும் பாரம்பரிய மதங்கள் மீதான வரிகள் போன்ற கிரீஸ் தேவாலயத்திற்கு எதிராக பெரும்பாலான முடிவுகளை எடுத்தது. புத்த மதத்தினர், யூதர்கள், முஸ்லீம்கள் மீது வரிவிதிக்கப்படவில்லை..." என்று அவர் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அறிவித்தார்.     

இது கிரீஸில் யூத சமூகங்களின் அமைப்பால் ஒரு "தீவிர யூத எதிர்ப்பு நடவடிக்கையாக" வர்ணிக்கப்பட்டது.

ANELஇன் பிற்போக்கு நிகழ்ச்சிநிரலில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒருசில ஜனரஞ்சக வார்த்தைகளும் தூவப்பட்டுள்ளன. ஆனால் இந்த சொல் அலங்காரத்திற்கு அப்பாற்பட்டு, சீனா மற்றும் ரஷ்யா உடனான பொருளாதார கூட்டணிகளின் அடித்தளத்தில், கிரேக்க முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்கு நல்லதொரு நிலைமைகளை உருவாக்குவதே அதன் நோக்கமாக உள்ளது

கிரிஸூம், பட்டுச்சாலை பொருளாதார பகுதியும்" என்ற தலைப்பில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஜேர்மனியின் ஷில்லெர் பயிலகத்தில் வழங்கிய ஓர் உரையில், கமெனொஸ் அறிவித்தார்: நேட்டோ மற்றும் [ஐரோப்பிய ஒன்றியத்தில்] நமது அங்கத்துவம், குறிப்பாக நாம் வரலாற்றுரீதியில் தொடர்புகள் கொண்டுள்ள ரஷ்யா மற்றும் சீனா போன்ற ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைப் பேணுவதைத் தடுக்கவில்லை.  

பிரான்ஸில் உள்ள தீவிர வலது தேசிய முன்னணியைப் போலவே, ANEL உம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் தேசிய அளவில் முதலாளித்துவத்தை பலவீனப்படுத்தி விட்டது என்ற அடித்தளத்தில் அவற்றை எதிர்க்கிறது. ஜேர்மனி "கிரீஸை ஒரு கூட்டாளியாக அல்ல எஜமானரைப் போல கையாளுகிறது" என்று முன்னதாக கண்டித்திருந்த கமெனொஸ், சுதந்திர அரசுகளின் ஐரோப்பாவை, ஜேர்மனியின் மேலாளுமையின் கீழ் இருக்கும் ஓர் ஐரோப்பாவாக மாற்ற" அது முயற்சிப்பதற்காக அவரது உரையில் குற்றஞ்சாட்டினார். உலகின் சில மிகவும் செயல் விரைவு கொண்ட பொருளாதாரங்களுடன் இணைப்பை ஸ்தாபிக்க மற்றும் அதன்மூலமாக பொருளாதார ஆதரவின் புதிய ஆதாரவளங்களைக் காண ஒரு மூலோபாய நிலைநோக்கு எடுக்கப்பட்டால், கிரீஸின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ரஷ்யாவிற்கு அப்பாற்பட்டு, அதுபோன்ற நாடுகளில் சீனாவும் ஒன்றாகும், என்றார்

தரைவழியிலும் சரி கடல்வழியிலும் சரி பட்டுச்சாலை மறுமலர்ச்சி பெறுவதை இன்று நாம் கண்டு வருகிறோம், என்று அறிவித்த அவர், தொடர்ந்து இதையும் சேர்த்துக் கொண்டார், ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளுக்கும், அரேபிய தீபகற்பம் மற்றும் வட ஆபிரிக்காவிற்கும் சீன ஏற்றுமதிகளைக் கொண்டு செல்வதற்கு கிரீஸ் சிறந்த பொருளாதார போக்குவரத்து பாதையாக உள்ளது.

சீனா ஏற்கனவே கிரீஸில் உள்ளது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவேன், என்று வலியுறுத்தி அவர் தொடர்கையில், பிரேயஸ் துறைமுக சரக்கு பெட்டக நிலையத்தின் பாகமாக, 30 ஆண்டுகால விட்டுகொடுப்புக்காக பிரேயஸ் துறைமுக ஆணையத்திற்கும் சீன COSCO குழுமத்திற்கும் இடையிலான ஓர் உடன்படிக்கையில், நான் நவம்பர் 2008இல் கையெழுத்திட்டேன், என்றார்.

ANELஇன் வேலைத்திட்டம் "புதிய சந்தைகளைத் திறந்து விடுவதையும் மற்றும் … எதார்த்தமான மற்றும் சாத்தியமாகக் கூடிய பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் மூலமாக முதலீட்டாளர் நலன்களை.... ஈர்ப்பதையும்" ஆதரிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைவாய்ப்பற்றோரை நியமிப்பதற்காக என்றவொரு மதிப்பற்ற வாக்குறுதிக்கு பிரதியீடாக "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருக்கும் முதலீட்டாளர்கள்" குறைந்த வரி விகிதங்களின் அடிப்படையில் … செயல்படாமல் இருக்கும் தொழில்துறை பகுதிகளை அணுக அனுமதி வழங்கப்படுவார்கள்.